நம் உடலின் ஒவ்வொரு அணுவிலும் DNA இருப்பதை அறிவோம்.ஆனால் ரத்த தானத்தின் பொது தானமளித்தவரின் DNA தானம் பெற்றவரின் DNA யோடு கலப்பது இல்லை.
ரத்தம் plasma,வெள்ளையணுக்கள்,சிவப்பணுக்கள்,மற்றும் தட்டணுக்களால் (platelets) ஆனது.அவற்றில் வெள்ளையணுவில் மட்டுமே உட்கரு (nucleus) மற்றும் DNA இருக்கும்.சிவப்பணுக்களும் தட்டணுக்களும் (பிளேட்லெட்) எலும்பு மஜ்ஜையில் உற்பத்தியாகும்போதே உட்கருவை (nucleus and DNA) இழந்துவிடுகின்றன.
ரத்ததானத்தின் போது centrifuge மூலம் வெள்ளையணுக்கள் நீக்கப்பட்டு மற்றவை தான் செலுத்தப்படுகிறது. அதனால் DNA கலப்பதற்கு வாய்ப்பு இல்லை.
ரத்தம் பிரிக்கப்படாமலேயே செலுத்தினால் febrile என்ற வகை காய்ச்சல் ஏற்படும். ரத்தத் தானம் பெறுபவரின் ரத்த வெள்ளையணுக்கள் அயல் டி.என்.ஏ.வை அழிக்கும் செயல்பாட்டால் உருவாகும் காய்ச்சல்தான் இது.
Source Hindu