தோல் நோயை குணப்படுத்தும் பாக்டீரியாக்கள்

ஆரோக்கியமான மனித தோலில் எப்போதுமே பாக்டீரியாக்கள் இருக்கும். சொல்லப்போனால் மனித உடலில் எத்தனை செல்கள் இருக்கின்றதோ அதை விட அதிகமாக பாக்டீரியாக்கள் இருக்கும். பெரும்பாலான பாக்டீரியாக்கள் மனிதனுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுத்தாமல் வாழும். ஆனால் சில பாக்டீரியாக்கள் மனிதனுக்கு எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்தும், உயிருக்கு ஆபத்தை கூட விளைவிக்கும்.

சான் டியாகோ மருத்துவ கல்லூரியின் (UC San Diego School of Medicine) டாக்டர் ரிச்சர்ட்  கல்லோ (Richard Gallo) மற்றும் தெருக்கி நகட்சுஜி (Teruaki Nakatsuji) தலைமையிலான ஆராய்ச்சியாளர் குழு, மனித தோலில் உள்ள நுண்ணுயிர் கொல்லி பெப்டைடுகளை (antimicrobial peptides) உற்பத்தி செய்யும்  நல்ல பாக்டீரியாக்களை பிரித்தெடுத்து எக்சீமா (eczema) என்ற தோல் நோய் உடையவரின் தோலில் பதித்தார்கள். நல்ல பாக்டீரியாக்கள், தோல் நோய் உண்டாக்கும் ஸ்டாஃபிலோகாக்கஸ் ஆரியஸ் (Staphylococcus aureus), என்ற கெட்ட பாக்டீரியாக்களை அழித்தன.

இயற்கையான இந்த நுண்ணுயிர் கொல்லிகள் மற்ற ஆண்டிபயொடிக் மருந்துகளை (Antibiotic medicines) விட சிறந்தது, ஏனென்றால் இந்த முறையில் நல்ல பாக்டீரியாக்கள் அழிவது இல்லை.

Source UCSD news

நீரிழிவை குணப்படுத்தும் டயட் உணவு

நோண்பு உணவின் மூலம் கணயத்தை புதுப்பிக்க முடியும் என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் ஒரு மகத்தான சிகிச்சை முறையை கண்டுபிடித்திருக்கிறார்கள்

எலிகளுக்கு ஒரு விதமான நோண்பை ஒத்த உணவை மாதத்தில் தொடர்ச்சியாக ஐந்து நாட்களுக்கும், மற்ற 25 நாட்களுக்கு சாதாரண உணவையும் கொடுத்து பரிசோதித்தார்கள் இந்த வகை டயட் உணவினால் எலிகளின் கணையத்தில் பீட்டா செல்கள் புதுப்பிக்கப்படுவதை அறிந்தனர். இந்த பீட்டா செல்களே ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமானால் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும் செல்களாகும். ஐந்து நாட்கள் கிட்டத்தட்ட பட்டினி நிலைக்கு தள்ளப்படுவதால் எலிகளின் கணையம் மறு சீரமைப்புக்கு தயாராகி செல்கள் தூண்டப்படுகிறது, மற்றும் செயல்படாமல் இருந்த பகுதி மறு உருவாக்கம் பெறுகிறது.

இந்த பரிசோதனையில் எலிகளின் டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு குணமானது.

170223124259_1_900x600

இதுவரை மனிதர்கள் சிலருக்கு மட்டும் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்கு ஒரு நாளைக்கு சுமார் 800 கலோரிகள் உள்ள உணவு மட்டுமே கொடுக்கப்பட்டது. (சராசரி மனிதனுக்கு ஒரு நாளைக்கு சுமார் 2500 கலோரி தேவை). விளைவு, அவர்களின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கணிசமான அளவு குறைந்தது. மேலும் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

Source BBC

பந்து விளையாடும் தேனீ

தேனீக்கள் புத்திசாலியான பூச்சி ஆகும். இது பூவின் எந்த பாகத்தில் தேன் கிடைக்கும் என்று ஆராய்ந்து தேனை எடுக்கும்.லண்டனின் க்வீன் மேரி பல்கலைகழகத்தை (Queen Mary University) சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஓல்லி லூக்கோலா (Olli Loukola) தேனீக்களை பற்றி ஆராய்ந்ததில், நாய்கள், பூனைகள்,குரங்குகள் போன்று தேனீக்களும் ஒரு செயலை செய்து காட்டினால் அதை திருப்பி செய்யும் திறன் கொண்டது என்று கண்டுபிடித்தார். தான் செய்த செயலுக்கு பரிசையும் எதிர்பார்க்கிறது.

பரிசோதனையில் ஒரு பந்தை உருட்டி ஒரு குழியில் போட்டு காட்டியபோது தேனீயும் அதே போல் பந்தை குழியில் போட்டது.அதற்கு சன்மானமாக சர்க்கரை தண்ணீர் கொடுக்கப்பட்டது. மேலும் அது செய்து காட்டப்பட்டதை விட மேம்படுத்தியும் செய்தது. அதனால் அதற்கு பிரச்னைக்கு தீர்வு காணும் அறிவு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

Source The Guardian

பிராக்ஸிமா பி (Proxima-B)

நம் சூரியன் அருகில் இருக்கும் நட்சத்திரம் ப்ராக்சிமா சென்டாரி (Proxima Centauri). அதன் அருகில் இருக்கும் மற்றொரு பிரகாசமான இரட்டை நட்சத்திரங்களான ஆல்பா சென்டாரி AB ( Alpha Centauri AB), ப்ராக்சிமாவின் ஒளியை மங்க செய்வதால், அதை நாம் வெறுங்கண்ணால் பார்க்க முடியாது. இந்த நட்சத்திரத்தை அராய்ச்சி செய்யும் திட்டத்திற்கு பேல் ரெட் டாட் (Pale red dot) என்று பெயர். லண்டனின் குயின் மேரி  பல்கலைக்கழகத்தைச் (Queen Mary University of London) சேர்ந்த வானியலாளர் கில்லம் அங்லாடா எஸ்க்யூட்(Guillem Anglada-Escudé) தலைமையிலான வானவியலாளர்கள் ஆகஸ்ட் மாதம் 2016 ஆண்டு, பிராக்ஸிமா பி (ProximaB) என்ற கோள் ஓன்று இந்த நட்சத்திரத்தை சுற்றி வருவதை ESO தொலை நோக்கி (ESO telescope) மூலம் கண்டுபிடித்து அதை பற்றிய விரிவான அறிக்கையை வெளியிட்டனர்.

  1. பிராக்ஸிமா பி பூமியிலிருந்து 25 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள பிராக்ஸிமா சென்டாரி எனும் நட்சத்திர மண்டலத்தில் அமைந்துள்ளது
  2. பூமியைவிட 3 மடங்கு பெரியதாக உள்ள பிராக்ஸிமா, பாறைக் கோளமாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.
  3. தன் நட்சத்திரத்திலிருந்து 75 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான தொலைவில் இது 5 சதவிகிதத்திற்கும் குறைவானதாகும். முழுமையாக சுற்றி முடிக்க 2 நாட்களை எடுத்துக்கொள்கிறது. அதாவது இந்த கோளில் ஒரு ஆண்டு என்பது 11.2 நாட்கள்.
  4. தன் நட்சத்திலிருந்து பல லட்சம் ஆண்டுகள் தள்ளியிருப்பதால் பிராக்ஸிமா குளுமையாக இருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
  5. கோளின் வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸிலிருந்து -40 டிகிரி செல்சியஸ் வரை இருப்பதால், திரவநிலையில் நீர் இருப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன என்கிறார்கள். அதனால் அங்கு உயிர்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறு உள்ளது

நம் சூரிய குடும்பத்திலிருந்து அல்லாமல் பிற நட்சத்திர மண்டலத்தில் அமைந்துள்ள கோள்களை எக்சோபிளானெட் (Exo Planet) என்று சொல்வார்கள். பிராக்ஸிமா பி தான், இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட எக்சோபிளானெட்களில் பூமிக்கு அருகில் இருப்பது.

Source ESO.org and Space

மூளை நினைப்பதை டைப் செய்யும் கம்ப்யூட்டர்

பக்கவாத நோயாளிகளுக்கு உதவ மூளையில் நினைப்பதை டைப் செய்யும் கம்ப்யூட்டர்களை அமெரிக்காவில் உள்ள ஸ்டேன்போர்டு பல்கலைக்கழக (Stanford University) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

தீவிர பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கை-கால்கள் செயலிழந்து விடும். வாய் பேசவும் முடியாது. எனவே, இதுபோன்று பாதிக்கப்பட்டவர்களால் தகவல் பரிமாற்றங்களை செய்ய முடியாது. தீவிர பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட இயற்பியல் வல்லுநர் ஸ்டீபன் ஹாக்கிங் (Stephan  Hawking) திரையில் தெரியும் எழுத்துக்களை தலை,முகம்,கண், இவற்றின் அசைவை கொண்டு தேர்வு செய்து வார்த்தையாக மாற்றினார்.

maxresdefault.jpg

அமெரிக்காவில் உள்ள ஸ்டேன்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மூளையில் நினைப்பதை டைப் செய்யும் வகையில் கம்ப்யூட்டரை உருவாக்க அவர்கள் முயற்சித்தனர். மூளையில் சிறிய மாத்திரை அளவுள்ள எலக்ட்ரோடுகள் பொருத்தினர். அது மூளையின் கார்டெக்ஸ் பகுதியிலிருந்து வரும் சிக்னல்களை பதிவு செய்து தலையின் மேல் பகுதியில் பொருத்தப்பட்ட கருவி மூலம் கணினிக்கு அனுப்பும். அங்கு அது கணினி மொழியாக மாற்றப்பட்டு பின் திரையில் தெரியும் எழுத்துக்களை சுட்டிக்காட்டி தேர்வு செய்யும் (Point and click) முறையில் வார்த்தையாக டைப் செய்து தருகிறது

3D7E789900000578-0-image-a-61_1487706558654.jpg

இப்போது இம்முறையில் நிமிடத்திற்கு ஏழு வார்தைகள் வரை டைப் அடிக்க முடிகிறது. இதன் வேகத்தை அதிகரிக்க முயற்சி நடப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

Source Daily Mail

ஆர்டிக் விதை களஞ்சியம்

பூமியில் போரினாலோ இயற்கை பெரழிவுகளாலோ உணவு பயிர்கள் அழியாமல் பாதுகாக்க ஸ்வால்பார்ட் உலக விதை களஞ்சியம் (Svalbard doomsday global seed vault ) நிரந்தர பனிமண்டலமான அர்டிக்கில் 2008 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.

இங்கு நிலவும் நிரந்தர பனி ( -5 degrees Centigrade) காரணமாக, உலகின் எனய கிடங்குகளில் விதைகள் அழிந்துபோனாலும் இங்கு அவை உயிர்ப்புடன் இருக்கும். உலகின் மிக முக்கிய உணவு ஆதாரங்களான உருளைக்கிழங்கு,நெல்,கோதுமை,பார்லி,கடலை,பருப்பு,முதலியவற்றின் விதைகள் இந்த களஞ்சியத்தில் பிராதானமாக சேமிக்கப்படுகிறது. இது வரை 100 நாடுகளில் இருந்து 20000 வகையான விதைகள் சேமிக்கப்பட்டிருக்கின்றன

web-seed-vault-2-getty.jpg450px-storage_containers_in_svalbard_global_seed_vault_01

யுத்தத்தால் சீரழிந்த சிரியாவின் அலெப்போவில் ( Aleppo) 141,000 விதைகள் கொண்ட விதை வங்கி பாதிக்கப்பட்ட போது,  ஸ்வால்பார்ட் உலக விதை களஞ்சியத்திலிருந்து விதைகளை சர்வதேச ஆராய்ச்சி மையம் 2015ல் சிரியாவிற்கு வழங்கியது. அவற்றில் 15000 விதைகள் உலக களஞ்சியத்தில் திரும்ப சேர்க்கப்பட்டன.

பிப்ரவரி 22, 2017 அன்று  பெனின் (Benin), இந்தியா, பாகிஸ்தான், லெபனான், மொரோக்கோ, நெதர்லாந்து, அமெரிக்கா,மெக்ஸிக்கோ, பெலாரஸ் (Belarus) போஸ்னியா,ஹெர்சிகோவினா (Herzegovina),  மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளிலிருந்து புதிதாக சேர்க்கப்பட்ட 50000 விதைகளையும் சேர்த்து இப்போது உலக களஞ்சியத்தில் இருக்கும் விதைகளின் எண்ணிக்கை 940000 ஆகும். இதன் மொத்த கொள்ளளவு 4.5 மில்லியன் விதைகள்.

Source CNBC

டைனோசர் காலத்தில் வாழ்ந்த மாபெரும் பென்குவின்கள்

நியூசிலாந்து நாட்டில் வாய்பரா நதி (Waipara River) அருகில் கிடைத்த         61 மில்லியன் வயதான புதைபடிவம் (fossil) ஒரு மாபெரும் விலங்கினுடயது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். தொல்லுயிரியல்  வல்லுனர்களின் (palaeontologist) தொடர் ஆராய்ச்சியில் அது ஒரு மிகப்பெரிய பென்குவினுடைய புதைபடிவம் என்று தெரிந்தது. இந்த பென்குவின் 150 சென்டிமீட்டர் அதாவது ஒரு மனிதனின் உயரமுடையது

3d90393700000578-4252274-the_newly_described_penguin_lived_around_61_million_years_ago_an-a-17_1487848129321

இந்த பென்குவின்கள் டைனோசர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்திருக்கின்றன. ஆனால் டைனோசர் போல் அல்லாது பென்குவின்கள்  குறுங்கோள்களின் (asteroids) தாக்குதலையும், அதனால் விளைந்த காலநிலை மாற்றத்தையும் தாக்குப்பிடித்து வாழ்த்திருக்கின்றன. அதற்கு முக்கிய காரணம் பென்குவின்களின் உணவு நிலத்தில் அல்லாது கடலில் கிடைத்ததால் என்கின்றனர் வல்லுனர்கள்.

இதற்கு முன்பு அண்டார்டிகாவில் கிடைத்த 37 மில்லியன் வயதான 1.6 மீட்டர் உயரமுள்ள பென்குவின் புதைபடிவமே பழமையானது.

Source Daily Mail

அம்பரில் டைனோசர் வால்

அம்பர் (Amber) அதன் பொன்னிற அழகுக்காக மட்டுமல்ல அதன் உள்ளிருக்கும் மில்லியன் ஆண்டு பழமையான சிறிய உயிரினங்களுக்காகவும் விலை மதிப்புமிக்கதாகுகிறது. அது ஒரு மகத்தான புதைபடிவம்.

ஜூராசிக் பார்க் படத்தில் அம்பரில் டைனோசரை கடித்த கொசு இருப்பதாக காட்டியதை தொல்லுயிரியல் வல்லுநர்கள் (paleontologist )  கிண்டலடித்தார்கள். ஆனால் இப்போது டைனோசரின் ஒரு சிறிய பகுதியே அம்பருக்குள் கிடைத்திருக்கிறது

ep_xingmckellar_maniraptora_amber-by-cheung-chung-tat_jpg_16x9
மரப்பிசினில் டைனோசரின் வால் இப்படி மாட்டியிருக்கலாம்

தொல்லுயிரியல் வல்லுநர்கள், தொல்லுயிர்களை புதைபடிவங்களிலும், எலும்புகளிலும்  தேடிக்கொண்டிருந்த போது, சீன பல்கலைகழகத்தில் தொல்லுயிரியல் வல்லுநராக இருக்கும் லிடா ஜின்க் (Lida Xing) அம்பர்களில் தேடிக்கொண்டிருந்தார். மியான்மர் கடையில் கிடைத்த ஒரு சிறிய அப்ரிகாட் அளவு அம்பரை, சி.டி. ஸ்கேன் மற்றும் நுண்ணுயிர் நோக்கி கொண்டு ஆராய்ந்த போது அது 99 மில்லியன் பழமையான ஆம்பர் என்றும் அதனுள் ஒரு சிறிய டைனோசரின் ரத்தத்துடன் கூடிய வால் பகுதி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. வால் பகுதியில் மெல்லிய இறகுகள் இருந்தாலும் அவை பறவையுடையது அல்ல என்றும் உறுதி செய்தனர். இறகுகளின் பரிணாம வளர்ச்சியை அறிய இந்த ஆராய்ச்சி உதவும் என்கின்றனர்.

Source National Geographic

டிராப்பிஸ்ட் 1

பிப்ரவரி 22 ம் தேதி 2017, நாசா (NASA), வின்வெளி ஆய்வில் மைல்கல்லான ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. நாசாவின் ஸ்பிட்சர் விண்வெளி தொலைநோக்கி மூலம் கண்டுபிடிக்கப்பட்ட நம் சூரிய குடும்பத்தை (Solar system) தாண்டி உள்ள ஒரு நட்சத்திரத்தை சுற்றி வரும் பூமியை ஒத்த ஏழு புதிய கோள்களை ( exo planets) பற்றிய அறிவிப்பு அது.

நம் சூரிய குடும்பத்திற்கு அப்பால் இருக்கும் கிரகத்திற்கு எக்சோபிளானெட் என்று பெயர், அதாவது நம் சூரியன் அல்லாது பிற நட்சத்திரத்தை சுற்றி வரும் கிரகம்.

1_main_pia21423-png
‘டிராப்பிஸ்ட் 1f  என்ற கோளின் மேற்பரப்பு இப்படி இருக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்

ஏழு புதிய எக்சோபிளானெட்களிலும் தண்ணீர் இருந்தாலும், பூமியை போன்ற சரியான வளிமண்டல நிலைமைகள் அதாவது மக்கள் வாழ ஏற்ற சூழல் மூன்று கோள்களில் இருப்பதை நாசா கண்டுபிடித்துள்ளது.

பூமியிலிருந்து 40 ஒளி ஆண்டுகள், அதாவது 235 டிரில்லியன் மைல்கள் தொலைவில் உள்ள இந்த கோள்களுக்கு, ‘டிராப்பிஸ்ட் 1’ என்று நாசா விஞ்ஞானிகள் பெயர் சூட்டியுள்ளனர்.

விஞ்ஞானிகள் முதன்முதலில் எக்சோபிளானெட்டை 1990 வருடம் கண்டுபிடித்தனர்.இது வரை 3400 எக்சோபிளானெட்களை கண்டுபிடித்திருக்கிறார்கள்.இருந்தாலும் வானியல் ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் குறைந்தபட்சம் ஒரு கோள் என்ற கணக்கில் டிரில்லியன்கணக்கான எக்சோபிளானெட்கள் இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் என்று நம்புகிறார்கள்.

Source NASA

விண்வெளியில் தூக்கம்

விண்வெளியில் புவியீர்ப்பு விசை சுத்தமாக இருக்காது. இதனால் விண்வெளி வீரர்-வீராங்கனைகளால் நிற்கவோ, நடக்கவோ முடியாது. எப்போதுமே காற்றில் மிதக்கவே செய்வார்கள்.

சர்வதேச விண்வெளி நிலையத்திலும் விண்கலங்களிலும் ஈர்ப்பு விசை சுத்தமாக இருக்காது (Microgravity). இதனால் அங்கே வாழும் விண்வெளி வீரர்-வீராங்கனைகள் தினசரி தூங்க வேண்டுமென நினைத்தால் உறங்கும் பைகளில் (Sleeping bag) உள்ளே நுழைந்து, தங்களைத் தாங்களே கட்டிப் போட்டுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், தூக்கத்திலும் அவர்கள் அலைபாய்ந்துகொண்டே இருப்பார்கள். அது மட்டுமில்லாமல் பூமியில் உறங்குவதைப் போல, விண்வெளியில் இடைத் தொந்தரவு இல்லாமல் தொடர்ச்சியாக உறங்குவது சாத்தியமில்லை.

இதற்கு ஈர்ப்பு விசை இல்லாமல் இருப்பது முதன்மைக் காரணமாக இருக்கலாம். அல்லது எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கும் இயந்திரங்களின் ஓசை, மனம் கிளர்ச்சியடைந்த நிலை, மன அழுத்தம், காலக் குழப்பம் (Space lag) போன்றவை காரணமாக இருக்கலாம். ஏனென்றால், சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒவ்வொரு நாளும் 15 சூரிய உதயம், 15 சூரிய மறைவு நிகழும். விண்ணில் அதிகபட்சமாக ஆறு மணி நேரம்தான் ஒருவரால் தூங்க முடிந்திருக்கிறது. அதேநேரம் இந்தத் தூக்கமே ஒருவருடைய உடல்நிலைக்குப் போதும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஏனென்றால், ஈர்ப்பு விசை இல்லாமல் இருப்பதால் உடல் அதிகக் களைப்பை உணராது.

Source ஹிந்து