ட்ரோன்களை அழிக்கும் நுண்ணலை

ஆளில்லாமல் பறக்கும் வாகனங்களான, ‘ட்ரோன்’களின் பயன்பாடு அதிகரித்து வருகின்றது. ராணுவத்தில்,எதிரி முகாம்களை வேவு பார்க்க, புகைப்படம் எடுக்க, தகவல் சேகரிக்க, பொருள் பட்டுவாடா பண்ண, மேற்பார்வை பண்ண என்று பல விதங்களில் ட்ரோன்’கள் பயன்படுகின்றன. ஆனால் இது தீயவர்கள்,மற்றும் தீவிரவாதிகளால்  அந்தரங்களை படமெடுக்கவும், தடை செய்யப்பட்ட பகுதிகளின் மேல் பறக்கவிடவும், மக்களுக்கு கெடுதல் செய்யவும் உபயோகபடுத்தபடுகிறது

Star trek, Ocean’s Eleven போன்ற பல திரைப்படங்களில் எதிரியின் மின்னணு சாதனங்களை சில கருவிகள் கொண்டு ஹீரோ அழிப்பதை பார்த்திருப்போம். ஆனால் இப்போது அது நிஜமாகிவிட்டது.

ட்ரோன்களின் அத்துமீறல்களை தடுக்க, அல்லது அழிக்க புதிய வகை ஆயுதத்தை அமெரிக்க ராணுவத்திற்காக உருவாக்கி இருக்கிறது ‘ரேதியான்’  (Raytheon ) நிறுவனம். மைக்ரோவேவ் எனப்படும் நுண்ணலைகளை பயன்படுத்தும், ‘பேசர்’  (Phaser system) என்ற இந்த சாதனம் டிஷ் ஆண்டனா போன்ற அமைப்பையும், நுண்ணலைகளை உற்பத்தி செய்யும் பெரிய பெட்டி போன்ற அமைப்பையும் கொண்டிருக்கிறது. ட்ரோன்கள் பறக்கும் இடத்தை துல்லியமாக கண்டறிய ரேடார் வசதியும் இதில் உண்டு. ட்ரோனை கண்டறிந்ததும், டிஷ் மூலம் அடர்த்தியான நுண்ணலை துடிப்புகளை பேசர் அனுப்பும். இதனால் ட்ரோன்களில் இருக்கும் மின்னணு சாதனங்கள் நொடியில் பொசுங்கிவிடும். ஒரே சமயத்தில் பல ட்ரோன்களை இதுபோல அழிக்க பேசரால் முடியும்.

Source Daily Mail

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s