இரட்டை விசிறி காற்றாலை

வித்தியாசமான காற்றாலை ஒன்றை, ‘டையர் விண்ட்ஸ்’ (Tyer Winds) என்ற துனீசிய நிறுவனம் உருவாக்கியுள்ளது. டையர் விண்ட்ஸின் விஞ்ஞானி அனிஸ் ஆவூனி (Anis Aouini), உருவாக்கியுள்ள காற்றாலைக்கு இரண்டே இறக்கைகள் தான் உள்ளன. ஹம்மிங்பேர்டு என்ற குட்டிப் பறவை, மலர்களில் தேன் உறிஞ்சும்போது, அதன் அலகு துளியும் அசையாமல் இருக்கும். ஆனால், அதன் இறக்கைகள் வினாடிக்கு, 5௦ – 2௦௦ முறை அடித்துக் கொண்டிருக்கும். இதை கவனித்த விஞ்ஞானிகள், ஹம்மிங்பேர்டின் இறக்கை அமைப்பை, ‘காப்பி’ அடித்து, தங்கள் காற்றாலையை வடிவமைத்து உள்ளனர்.

h

கார்பன் ஃபைபரால்( carbon fibre) ஆன 5.25 அடி நீளம்  கொண்ட  டையர் காற்றாலையின் இரண்டு இறக்கைகளும் காற்று வீசும்போது, ஹம்மிங்பேர்டின் இறக்கை போல் மேலும் கீழுமாக வேகமாக அசையும். காற்றாலையின் உள் இருக்கும் நூற்பு அச்சு ( Spinning Axle) நேரியல் இயக்கத்தை(linear Motion) வட்ட இயக்கமாக (circular motion) ‘8’ வடிவில் மாற்றுகிறது.  இந்த அசைவின் விசையில், காற்றாலையின் துாணில் இருக்கும் மின் உற்பத்தி இயந்திரம் இயங்கி, மின்சாரம் உற்பத்தியாகிறது

பாரம்பரிய காற்றாலைகளை விட குறைந்த அளவிற்கே மின்சாரம் உற்பத்தி ஆகும் என்றாலும் டையர் விண்ட்ஸ் காற்றாலை இரைச்சல் குறைவாகவும்,பறவைகளுக்கு ஆபத்து இல்லாமலும் உள்ளது. இதன் வடிவத்தை மேம்படுத்தி மின்சார உற்பத்தியை அதிகரிக்க ஆய்வுகள் தொடர்கின்றன.

Source Daily Mail

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s