உயிர்த்தெழும் மேமோத் (Mammoth)

அடர்த்தியான ரோமங்களை உடைய மேமோத் எனப்படும் யானை வகை விலங்கு பூமியிலிருந்து அழிந்து 4௦௦௦ ஆண்டுகள் கடந்துவிட்டன. அனால் ஹார்வர்ட் பல்கலைகழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் மரபணு பொறியியல் ( Genetic Engineering) மூலம் மேமோத்தை மீண்டும் பூமிக்கு கொண்டு வரும் மகத்தான முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

ப்ரோபசர் ( Professor  George Church) ஜார்ஜ் சர்ச்  தலைமையிலான இந்த குழு, இன்னும் இரண்டு ஆண்டுகளில் மேமொபேன்ட்  ( mammophant) என்று பெயரிடப்பட்டுள்ள யானை மற்றும் மேமோத்தின் கலப்பின கருவை (Hybrid embryo) உருவாக்குவோம் என்று உறுதியளித்துள்ளனர். இது ஆசிய யானையின் வடிவில் இருக்கும் .அனால் மேமோத்தின் சிறப்பம்சங்களான சிறிய காது, தோலுக்கு அடியில் கொழுப்பு, நீண்ட கரடு முரடான ரோமங்கள் மற்றும் குளிர் பிரதேச இரத்தம் (cold-adapted blood) முதலியவை கொண்டிருக்கும்.

பல நூற்றாண்டுகளாக சைபீரியா பனிக்கட்டியில் உறைந்து கிடந்த மேமோத் பாகங்களிருந்து கிடைக்கபெற்ற டி.ஏன்.ஏவை கொண்டு மரபணு எடிட்டிங் நுட்பங்கள் ( Gene editing Technique) மூலம் மேமொபேன்ட் செல்கள் உருவாக்கி இருக்கின்றனர். க்ளோனிங் நுட்பங்கள் மூலம் இரண்டு வருடங்களில்  கருவை உருவாக்கி, (யானையின் கருவறையில் வைக்காமல்) செயற்கை கருவறையில் வைத்து மேமொபேன்ட்டை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். செயற்கை கருவறையில் உருவாகுவதால்,பிறப்பிற்கு முன் தாயுடன் உள்ள தொடர்பு இருக்காது.

மேமொபேன்டால் கீழ்கண்ட இரண்டு நன்மைகள் ஏற்படும் என்று ஜார்ஜ் சர்ச் தெரிவித்தார்.

ஓன்று — அழிவின் விளிம்பில் இருக்கும் ஆசிய யானைகளுக்கு மாற்று எதிர்காலம் கிடைக்கும்.

இரண்டு — உலக வெப்பமயமாதல் குறைக்கப்படும். பனிப்பிரதேசத்தில் நிரந்தர பனிக்கட்டிகள் உருகுவதை குறைக்கும்.

Source The Guardian

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s