மூளை வளர பழங்கள் காரணம்

நம் முன்னோர்கள் பழங்களை தேடி உண்டதால் அந்த செயல்கள் அவர்களின் மூளை பெரிதாக வளர உதவியிருக்கும் என ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த கண்டுபிடிப்பு சமூக உறவுகள் தான் நமது அறிவு வளர காரணம் என்ற பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு கருத்துக்கு சவாலாக உள்ளது.

140க்கும் மேற்பட்ட குரங்குகள் மற்றும் மனிதக் குரங்கு வகையை சார்ந்த இனங்களின் உணவு நுகர்வு மற்றும் சமூக நடத்தையை நியூயார்க் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தனர்.

தங்களது உணவில், இலைகளை விட பழங்களை அதிகமாக உண்ட விலங்குகளுக்கு குறிப்பிடத்தக்க அளவில் அவற்றில் மூளை பெரிதாக இருப்பதாக அவர் கூறுகின்றனர்.

_95352842_p04y57l3

சமூகத்தில் இணைந்து இருப்பதற்கான தேவையை விட, எளிதாக அணுகமுடியாதபடி உள்ள பழங்களை தேடி அவற்றை உரித்து உண்பது போன்ற செயல்கள்தான் அவர்களின் மூளை வளர்வதற்கு முக்கியமாக இருந்திருக்க முடியும் என்று ஆராச்சியாளர்கள் கருதுகின்றனர்.

5

Fruit may have been the making of mankind

A high-fruit diet is known to keep people healthy, but it may also have helped us develop into humans, a new study suggests.

Scientists have discovered a link between the amount of fruit eaten by primates and the size of their brains.

Previously it was thought that the larger brains of monkeys, apes and humans developed to cope with the complex social maneuverings required to successfully live in a group, a theory known as social brain hypothesis.

But researchers at New York University believe primates and humans actually ate their way to a bigger, more complex brain.

The team compiled the biggest ever database of more than 140 different species to explore the relationship between brain size, different kinds of social behaviour and feeding habits

They find no link between brain size and any measure of sociality, but they did find there was a strong link to diet. Fruit-eating primates have around 25 per cent more brain tissue than plant-eating species.

The researchers suggest that the bigger brains probably evolved to recall fruit locations, and work out new ways to extract flesh from tough skins. Fruits also contain for more energy than plants, giving brains a boost.

“Fruit is patchier in space and time in the environment, and the consumption of it often involves extraction from difficult-to-reach-places or protective skins,” said doctoral student Alex DeCasien, the lead author.

“However, if the question is: ‘Which factor, diet or sociality, is more important when it comes to determining the brain size of primate species?’ then our new examination suggests that factor is diet.”

 

Source BBC and  Telegraph

பாம்புக்குள் பல்லி, பல்லிக்குள் வண்டு – ஒன்றில் மூன்று புதை படிவம்

எரிமலைக் குழம்பு ஏரியில் 48 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் புதையுண்டு போன பாம்பின் புதை படிவத்தை கண்டெடுத்ததே வியப்பின் உச்சம். அதிலும் அப்படிப் புதைபடிவமாகிப்போன பாம்பின் உடலுக்குள் ஒரு பல்லியும், அந்தப் பல்லியின் வயிற்றில் ஒரு வண்டும் காணப் பட்டால்! வண்டை விழுங்கிய பல்லியை ஒரு பாம்பு விழுங்கிய ஓரிரு தினங்களில் எரிமலை ஏரியில் சிக்கி புதையுண்டு மரித்துப்போயிருக்கிறது. அதே நிலையில் புதைபடிவமாகிப்போனதால் இத்தனை கோடி ஆண்டுகளாக அது சிதையாமல் ஒரு அபூர்வமான உணவுச் சங்கிலியையும் அப்படியே தக்கவைத்திருக்கிறது.

இந்த அதிசயப் புதைபடிவத்தை ஜெர்மனியின் ஃபிராங்கஃபர்ட் நகரின் அருகில் உள்ள மெஸ்ஸல் பிட் (Messel Pit) பகுதியிலிருந்து ஆய்வாளர்கள் கண்டெடுத்திருக்கிறார்கள். பொதுவாக விலங்குப் புதைபடிவங்களுக்குள் உணவைக் காண்பது அரிது. ஆனால் மெஸ்ஸல் பகுதியில் காணப்படும் தனித்துவமான பதனப்படுத்தும் தன்மையால், ஏற்கெனவே இதுபோன்று ஏராளமான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. காலத்தைக் கணிக்க முடியாத அளவுக்கு எண்ணற்ற ஆண்டுகளுக்கு முன்னால் புதையுண்டுபோன குதிரையின் வயிற்றில் திராட்சையும் இலைகளும், பறவையின் குடலில் மகரந்தம், புதைபடிவமாகிப்போன மீனின் வயிற்றுக்குள் பூச்சிகள் இப்படிப் பலவற்றை ஃபிராங்ஃபர்ட் நகரில் உள்ள செங்கர்பெர்க் ஆய்வு நிறுவனத்தின் (Germany’s Senckenberg Institute) ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.

மூன்று அடுக்கில் புதை படிவமாகிப் போன உணவு சங்கிலியைக் கண்டு பிடித்திருப்பது இதுவே முதல் முறை. 3.4 அடி நீளமான பாம்பின் உடம்புக்குள் 20 சென்டிமீட்டர் நீளமுள்ள பல்லி காணப்படுகிறது. அதுவும் அந்தப் பாம்பின் எலும்புக் கூட்டுக்குள்ளேயே இந்தப் பல்லி படிவமாகிக் கிடப்பதால், அதை நிச்சயமாகப் பாம்புதான் விழுங்கியிருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது.

மேம்படுத்தப்பட்ட கணினித் திரை மூலமாக டாக்டர் ஸ்மித்தும் (DR.Krister Smith)அவருடன் இணைந்து பணியாற்றும் அகஸ்டின் ஸ்கான்ஃபர்லாவும் (Agustín Scanferla,) தான் பாம்புக்குள் இருக்கும் பல்லியின் படத்தை முதன் முதலில் கண்டெடுத்தார்கள். அதிலும் பல்லியின் வயிற்றில் வண்டைக் கண்டதன் மூலம் ஒரு புதிய நிலைப்பாட்டை எட்டியிருக்கிறார்கள். இதற்கு முன்னால் கிடைத்த பல்லியின் புதை படிவங்களுக்குள் தாவரங்களின் மிச்சம் மட்டுமே இருந்திருக்கிறது. ஆனால் இப்போது இந்தப் பல்லியின் வயிற்றில் வண்டு இருப்பதால், கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பல்லிகள் தாவரங்களை மட்டுமல்லாமல் பூச்சிகளையும் உண்டு வந்திருப்பது இதன் மூலமாகத் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

stock-vector-shiny-red-ribbon-on-white-background-with-copy-space-vector-illustration-324743945

Three-in-one fossil: Bug inside lizard inside snake

Forty-eight million years ago, an iguana relative living in what’s now Germany scarfed down an insect with a shimmering exoskeleton. Soon thereafter the lizard’s luck changed—when a juvenile snake gulped it down headfirst.

We know this happened because the snake had the spectacularly bad luck to end up in a death trap: the nearby Messel Pit, a volcanic lake with toxic deep waters and a possible knack for belching out asphyxiating clouds of carbon dioxide.

It’s unclear if the lake poisoned or suffocated the snake, fates that more often befell the area’s aquatic and flying creatures. Most likely, it somehow died near the lake and was washed in. But no more than two days after eating the lizard, the snake lay dead on the lake floor, entombed in sediments that impeccably preserved it, its meal, and its meal’s meal.

And that’s a very good thing. That fossil, recently described in Palaeobiodiversity and Palaeoenvironments, is only the second of its kind ever found, revealing three levels of an ancient food chain nested one inside the other in paleontology’s version of Russian nesting dolls—or its culinary equivalent, a turducken.

“It’s probably the kind of fossil that I will go the rest of my professional life without ever encountering again, such is the rarity of these things,” says Krister Smith, the paleontologist at Germany’s Senckenberg Institute who led the analysis and a National Geographic/Waitt Grant recipient. “It was pure astonishment.”

Agustín Scanferla, a study coauthor and ancient-snake expert at Argentina’s National Council of Scientific and Technical Research (CONICET), says that boids’ food preferences change as they age. When they’re young, they tend to spring for small lizards and amphibians, but once they reach adulthood, they shift to larger-bodied prey, including mammals, birds, and large reptiles such as crocodiles.

“This specimen shows us the earliest evidence of this dietary shift, [since] this beautiful boid, Palaeopython, is a juvenile,” says Scanferla, with a clear craving for small lizards—much like today’s young boas, but 48 million years earlier.

Head also notes that the fossil helps define the range of Palaeopython, which isn’t closely related to modern pythons, despite its name.

In 2008, researchers led by the University of Vienna’s Jürgen Kriwet described the fossil of a shark that gobbled up an amphibian with a spiny fish in its stomach.

That fossil, more than 250 million years old, even suggests that the amphibian had been digesting the fish for quite some time before becoming a meal itself.

“Finding gut contents provides a direct view million years back on who was eating whom,” Kriwet wrote in an email. “But normally, these records only cover two trophic levels. Finding a fossil preserved as gut content that itself still contains remains of its last meal provides even deeper insights.”

“Messel fossils are well known and have had much press and popular coverage because of their extraordinary preservation,” wrote Ken Rose, a paleontologist at the Johns Hopkins University School of Medicine and a National Geographic grantee. “This factor certainly played a role in this unusual preservation.”

Source ஹிந்து and National Geographic

பற்களை வார்க்கும் 3டி பிரின்டர்

home1

மருத்துவத் துறையில் முப்பரிமாண அச்சு இயந்திரங்கள் அருமையான சேவைகளை செய்து வருகின்றன. உச்சந்தலை முதல், பாதம் வரை பல உறுப்புகளை, மருத்துவர்கள் முப்பரிமாண அச்சு இயந்திரங்களின் உதவியால் செய்து விடுகின்றனர்.சிங்கப்பூரை சேர்ந்த,’ஸ்ட்ரக்டோ'(Structo) தயாரித்துள்ள, ‘டென்டாபார்ம்’ (DentaForm)  என்ற இயந்திரம் பற்களை வார்த்தெடுக்க உதவுகிறது. மிகச் சிறிய அளவே உள்ள டென்டாபார்ம், பல் மருத்துவர்களுக்கு வேகமாக, கச்சிதமாக பற்களை அச்சிட்டு தந்து விடுகிறது.டென்டாபார்ம், 50 மைக்ரோ மீட்டர் துல்லியத்தில் பற்களை அச்சிட வல்லது. ஏற்கனவே, இதே சிங்கப்பூர் நிறுவனம், ஆர்த்தோபார்ம் என்ற எலும்புகளை அச்சிடும் முப்பரிமாண இயந்திரத்தை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ‘டென்டாபார்மில் பயன்படுத்தப்படும், ‘மாஸ்க் ஸ்டீரியோ லித்தோகிராபி’( Mask stereo lithography)’ தொழில்நுட்பம், பல் மருத்துவர்களின் எல்லா தரத் தேவைகளையும் பூர்த்தி செய்வதால், பல் மருத்துவ உலகில் டிஜிட்டல் புரட்சியை விரைவு படுத்தும்’ என்கிறார், ஸ்ட்ரக்டோ வின் நிறுவனர்களுள் ஒருவரான ஹப் வான் எஸ்ப்ரோயக் (Huub van Esbroeck).

♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠

Structo Revolutionizes Digital Dentistry With The Launch of The DentaForm: The World’s Fastest Dental Model      3D Printer

Structo, a Singapore-based dental 3D printing solutions provider unveiled their latest dental 3D printer, the Structo DentaForm

“We are revolutionizing digital dentistry by breaking through the speed limits of 3D printers today. The Structo DentaForm will open up a whole new range of dental applications that can now work with our lightning-fast Mask Stereolithography (MSLA) technology,” said Huub van Esbroeck, one of Structo’s founders.

With a large build platform measuring 200x150mm, the Structo DentaForm is designed to print highly accurate precision models for the fitting of crowns and bridges in the area of restorative dentistry. Users can now print full arches and quadrants that are extremely precise with reproducible fit at a high throughput.

Source தினமலர்

சிலந்தியின் விஷத்திலிருந்து மருந்து

ஆஸ்திரேலிய சிலந்தி வகை ஒன்றின் விஷம், 15 நிமிடத்தில் மனிதனை கொல்லும் சக்தி கொண்டது. ஆனால், அதே சிலந்தியின் விஷத்தில் உள்ள ஒரு பொருள், பக்கவாதம் தாக்கப்பட்ட மனித மூளையில் செல்கள் அழிந்துவிடாமல் காக்கும் திறன் கொண்டது என்பதை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இந்த கண்டுபிடிப்பு எதேச்சையானது. Darling Downs funnel web spider (Hadronyche infensa என்ற விஷ சிலந்தியின் விஷத்தில் உள்ள டி,என்.ஏ வை பிரித்து வரிசைப்படுத்திய பொது Hi1a என்ற மூளையை காக்கக்கூடிய மூலக்கூறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

எலிகளிடம் இந்த Hi1a வை செலுத்திய பொது 80 % அளவு மூளை பாதிப்பு குறைந்தது. மேலும்  ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இன்னும் இரண்டு ஆண்டுகளில் மனிதனிடம் பரிசோதனைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

balls

Deadly spider venom could ward off stroke brain damage

A bite from an Australian funnel web spider can kill a human in 15 minutes, but a harmless ingredient found in the venom of one species can protect brain cells from being destroyed by a stroke, even when given hours after the event, scientists say.

Researchers discovered the protective molecule by chance as they sequenced the DNA of toxins in the venom of the Darling Downs funnel web spider (Hadronyche infensa) that lives in Queensland and New South Wales.

The molecule, called Hi1a, stood out because it looked like two copies of another brain cell-protecting chemical stitched together. It was so intriguing that scientists decided to synthesise the compound and test its powers. “It proved to be even more potent,” said Glenn King at the University of Queensland’s centre for pain research.

Administering Hi1a two hours after stroke reduced the extent of brain damage in rats by 80%.The researchers hope to start human trials of the compound in the next two years, but have more experiments to perform first. If the compound fares well in human trials, it could become the first drug that doctors have to protect against the devastating loss of neurons that strokes can cause.

Source The Guardian

புற்று நோயை கண்டறிய ரத்தப் பரிசோதனை

புற்று நோயை கண்டறிய ரத்தப் பரிசோதனையை செய்யும் ஒரு சாதனத்தை  அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக (University of California) விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்த சோதனை மூலம் புற்று நோய் இருப்பதை உறுதி செய்ய முடிவதுடன், உடலின் எந்தப் பாகத்தில் கட்டி உருவாகியுள்ளது என்பதையும் துல்லியமாக கண்டறிய முடியும் என கூறுகின்றனர்.

கட்டியின் ஆரம்ப நிலையிலேயே, செல்களில் உள்ள டி.ஏன்.ஏ.க்கள் ரத்தத்தில் கலந்துவிடும். இந்த டி.ஏன்.ஏ.க்களை சாதனத்தின் கணினி அராய்ந்து புற்று நோய் செல்கள் இருந்தால் தெரிவிக்கும். மேலும்  புற்று நோயின் ஆரம்ப நிலையே இந்த பரிசோதனை மூலம் தெரிய வருவதால் புற்று நோய் பரவாமல் தடுக்க முடியும். வலியான பயொப்சி முறைக்கு மாற்றான இந்த பரிசோதனை முறை மனிதகுலத்திற்கு ஒரு வரப்ரசாதமாகும்.

இன்னும் ஒரு ஆண்டில் இந்த சாதனம் விற்பனைக்கு வரும்.

images

AI that detects cancer in blood

A machine that can detect cancer from a blood sample could be ready in a year.

Scientists in California have developed a computer program that can detect tumour DNA as well as specify where in the body it is coming from.

DNA from tumour cells is known to end up in the bloodstream in the earliest stages of cancer and so offers a unique target for early detection.

Professor Jasmine Zhou, co-lead author of the study, said: ‘Non-invasive diagnosis of cancer is important, as it allows the early diagnosis of cancer, and the earlier the cancer is caught, the higher chance a patient has of beating the disease.

It will be available within a year.

Source Daily Mail

இரத்த வகையை அறிய காகிதப் பட்டை (Test strip)

சீனாவில் மூன்றாவது இராணுவ மருத்துவ பல்கலைக்கழகத்தை (Third Military Medical University in China ) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ரத்த வகைகளை அறிந்து கொள்ள உதவும் காகிதப் பட்டையை ((Test strip) உருவாக்கி இருக்கிறார்கள்.

தற்போதைய முறையில் ரத்த மாதிரியை எடுத்து ஆய்வுக்கூடத்தில் சோதனை செய்து முடிவுகளை அறிந்து கொள்ள குறைந்தது அரை மணி நேரம் காத்திருக்க வேண்டும். ஆனால் காகிதப் பட்டையை கொண்டு அரை நிமிடத்தில் ரத்த வகைகளை அறிந்து கொள்ளலாம்.

இந்த காகிதப் பட்டை ஆன்டிபாடிகள் (antibodies) மற்றும் சாயங்கள் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளது. ரத்தத்தில் உள்ள காப்புமூலங்கள் (antigens ), காகிதப் பட்டையில் உள்ள ஆன்டிபாடிகளுடன் வினையாற்றும் பொது ஏற்படும் நிறமாற்றம் கொண்டு ரத்த வகையை அறியலாம். ஆராய்ச்சியாளர்கள் 3550 ரத்த மாதிரிகளை சோதனை செய்ததில் அது 99.99 சதவீதம் துல்லியமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் பரிசோதனைகள் நடைபெறுகின்றன. இன்னும் இரண்டு ஆண்டுகளில் இது விற்பனைக்கு வரும்.

balls

Test strip able to identify blood type in less than a minute

A team of researchers at Third Military Medical University in China has developed a test strip that can be used to identify a person’s blood type in less than a minute.

The current method for determining blood type involves taking a blood sample to a lab where a trained technician uses a centrifuge to separate and test the different blood parts—the entire process can take anywhere from 30 minutes to a few hours depending on circumstances. In this new effort, the researchers have created a paper-based test strip that can be used to do the same thing in under a minute by people with just a few minutes’ training—and it is almost as accurate.

The paper strips developed by the team have small bits of antibodies and dyes that change colors (to teal or brown) when a drop of blood is applied. The colors change due to interactions between antigens in the blood sample and antibodies on the test strip.

Human blood comes mainly as type A, B, AB, or O. Type is determined by the antigens present on the surface of the red blood cell—type A blood has A antigens, B has B antigens, AB has both and O has neither of them. A different type of antigen determines whether the blood is positive or negative. The test strip relies on the fact that antibodies attack foreign antigens. If a person has blood with A antigens, for example, and is given blood with B antigens, antibodies in the blood will attack them, putting the person at risk of death. This is why emergency rooms typically use type O blood—it has no antigens to attack.

The researchers tested the test strip on 3550 blood samples and found it was accurate 99.99 percent of the time and took on average just 30 seconds to give results. The researchers believe their test strips could prove most useful in a war zone or in countries with limited healthcare facilities. More testing will have to be done, but the team believes their strip will be on the market within the next couple of years.

Source Medical express

 

‘ட்ரீ ஆன் எ சிப்’ (Tree-on-a-chip)

உயரமான ரெட்வுட் மரத்திலிருந்து சிறிய புல் வரை, தண்ணீரை வேரிலிருந்து நுனி இலை வரை கொண்டு செல்லசெல்லவும், இலைகள் உற்பத்தி செய்யும் சர்க்கரையை வேர் வரை கொண்டு செல்லவும்    இயற்கையின் நீரியல் குழாய்களான மரவியம் மற்றும் பட்டையம் (xylem and phloem) அமையப்பெற்றிக்கின்றன. இயற்கையிடமிருந்து இந்த உத்தியை அடிப்படையாக கொண்டு அமெரிக்காவைச் சேர்ந்த மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலைய Massachusetts Institute of Technology) விஞ்ஞானிகள் ஒரு மைக்ரோ சிப்பை உருவாக்கி இருக்கின்றனர். இந்த சிப், எந்த தூண்டு சக்தியும் இல்லாமல் செடியை போன்றே தண்ணீரையும் சர்க்கரையையும் நிலையான ஓட்ட விகிதத்தில் பம்ப் பண்ணியது.

சிப்பின் இந்த திறனானது எளிய ஹைட்ராலிக் இயக்கியாக சிறிய ரோபோக்களை இயக்க பயன்படும். ‘ட்ரீ ஆன் எ சிப்’ (tree-on-a-chip) என இந்த தொழில்நுட்பத்திற்கு பெயர் வைத்திருக்கின்றனர். இந்த தொழில் நுட்பத்தில் ரோபோக்களை இயக்க மின்சாரத்திற்கு பதிலாக சர்க்கரையும் தண்ணீரும் போதும்.

red ribbon with bow with tails

Tree-on-a-chip

Trees and other plants, from towering redwoods to diminutive daisies, are nature’s hydraulic pumps. They are constantly pulling water up from their roots to the topmost leaves, and pumping sugars produced by their leaves back down to the roots. This constant stream of nutrients is shuttled through a system of tissues called xylem and phloem, which are packed together in woody, parallel conduits.

Now engineers at MIT and their collaborators have designed a microfluidic device they call a “tree-on-a-chip,” which mimics the pumping mechanism of trees and plants. Like its natural counterparts, the chip operates passively, requiring no moving parts or external pumps. It is able to pump water and sugars through the chip at a steady flow rate for several days.

Anette “Peko” Hosoi, professor and associate department head for operations in MIT’s Department of Mechanical Engineering, says the chip’s passive pumping may be leveraged as a simple hydraulic actuator for small robots. The team’s new pumping mechanism may enable robots whose motions are propelled by inexpensive, sugar-powered pumps.

Source MIT edu

ஒலியோ ஸ்பான்ஜ் (Oleo Sponge)

91563622-06ed-45a4-83fc-67018fd6e9de

கடலில் எண்ணெய் கசிவை உறிஞ்சும் புதிய வகை பஞ்சை சிகாகோவின் அர்கோன் தேசிய ஆய்வகத்தில் (Argonne National Laboratory) உருவாக்கியுள்ளனர். இதன் பெயர் (ஒலியோ ஸ்பான்ஜ்) Oleo Sponge. தண்ணீரை உறியாமல் எண்ணையை மட்டும் உறிவதற்காக இந்த ஸ்பான்ஜ் மீது அலுமினிய ஆக்சைடு ( aluminum oxide) பூசப்படுகிறது. இது தன் எடையை போல 90 மடங்கு எடையை கொண்ட எண்ணையை உறிஞ்சக்கூடியது. எண்ணெயை பிழிந்து எடுத்த பிறகு மீண்டும் பஞ்சை பயன்படுத்தலாம்.

balls

Oleo Sponge

Scientists at Argonne National Laboratory have created a new tool to clean up oil spills by tinkering with the kind of foam found in seat cushions.

The modified foam can soak up oil floating on water and lurking below the surface, and then can be repeatedly wrung out and reused, the researchers say. Researchers used a new procedure to coat the foam with a material that attracts oil but not water. The sponge can absorb up to 90 times its own weight in spilled oil and then be squeezed out like a sponge and reused.

Source Chicagoedu

ஓரிகாமி ரோபோ

அமெரிக்காவின் நாசா, விண்வெளி ஆராய்ச்சிக்காக ஜப்பானின் ஓரிகாமி கலையை அடிப்படையாகக் கொண்ட புதிய வகையில் உருமாறும் ரோபோவை வடிவமைத்துள்ளது. சக்கரங்கள் மூலம் நகரும் இந்த ரோபோ, தொடர்ந்து செல்வதற்கு தடை இருந்தால் இடத்துக்கு ஏற்ப பல வகைகளிலும் மடங்கி, சுழன்று செல்கிறது. இதன் மூலம் சோதனைக்கு அனுப்பும் கிரகத்தில் தானியங்கி முறையில் இயங்கும்போது, மேடு பள்ளங்களில் தடைபடாமல் உருமாறி பயணிக்கும்

red ribbon with bow with tails

NASA’s origami-inspired robot

Engineers at NASA’s Jet Propulsion Laboratory in Pasadena, California are developing a small scout robot called the Pop-Up Flat Folding Explorer Robot (PUFFER) to accompany the next generation of Martian rovers in their outer space explorations.

Inspired by origami, the Japanese art of paper folding, PUFFER is designed to change shape in order to squeeze into small crevasses that are too tight for rovers to reach. So far the two-wheeled scout has been successfully tested in hostile and diverse terrains including the Mojave Desert and Antartica.

Though rovers themselves are built to last, they’re expensive and NASA engineers take care not to send them on overtly dangerous missions. A handful of PUFFERs are comparatively cheap and can be deployed in high-risk regions.

NASA also plans to scale it up slightly to the size of a breadbox in order to make it a bit more durable.

Source Hindu

ஹஷ்மி மாஸ்க் ( Hushme Mask)

ஏராளமானவர்கள் அமர்ந்திருக்கும் அலுவலகத்தில் அலைபேசியில் பேசுவது பேசுபவர்களுக்கும் அருகில் இருப்பவர்களுக்கும் சங்கடமான விஷயம். இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக ஹஷ்மி மாஸ்க் (Hushme mask) உருவாக்கப்பட்டிருக்கிறது. மாஸ்க் என்றாலும் இது முகத்தை மூடாது, வாயை மட்டும் மூடும். இதை மாட்டிக்கொண்டு உரையாடினால் அருகில் இருப்பவர்களுக்குக் கூட சிறிதும் கேட்காது. எந்தவிதத் தயக்கமும் இன்றி உரையாடலாம். போனிலிருந்து ப்ளூடூத் மூலம் காதுகளுக்கு குரல் கடத்தப்படுகிறது. பல்வேறு நிறங்களில் இந்த ஹஷ்மி மாஸ்க் கிடைக்கிறது. காற்று, அலை, சாரல், பறவைகளின் கூக்குரல் போன்ற பல்வேறு மெல்லிய ஒலிகளோடு உங்கள் குரலும் பயணிக்கும். எதிராளிக்கு சுவாரசியத்தை அளிக்கும். மொபைல் போன் குரலுக்கான உலகின் முதல்  முகமூடி’ இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்கு வருகிறது. விலை 13 ஆயிரம் ரூபாய்

balls

Hushme muzzle keeps phone calls private

Privacy-conscious consumers could soon be able to protect their conversations from strangers using a wearable gadget that clips over their mouth.

Hushme, which describes itself as the “world’s first voice mask for mobile phones”, is a rather extreme solution to an everyday problem.

The Bluetooth-connected device is worn around the face and neck, with the large, padded mouthpiece designed to muffle your voice to prevent people around you from hearing you clearly, in a train carriage or a cafe, for instance.

Hushme, however, goes even further by allowing you to completely drown out your speech with a selection of noises played through its inbuilt speakers.

The sound options include wind, ocean, rain, birds, monkey, squirrel, R2D2, Minion and Darth Vader.

Hushme plans to crowdfund the device in May and start commercial production before the end of the year.

It will cost around $200.

Source Hindu