யானைகளின் தூக்கம்

ஆப்ரிக்காவின் சோபி தேசியப் பூங்காவில் 9Chobe National Park, Botswana,) ஆப்ரிக்க யானைகளின் உறக்கம் குறித்து ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டார் பேராசிரியர் பால் மேங்கர்(Professor Paul Manger).

உலகிலேயே மிகக் குறைந்த நேரம் உறங்கும் பாலூட்டி யானை தான் என்று சொல்லியிருக்கிறார் பால் மேங்கர். காட்டில் சுற்றும்  இரண்டு பெண் யானைகளின் தந்தத்தில் Actiwatch என்ற கருவி பொருத்தப்பட்டது. இது அந்த யானைகளின் உறங்கும் நேரத்தைக் கணக்கெடுக்கும். மேலும் அதன் தோளில் Gyroscope என்ற கருவி பொருத்தப்பட்டது. இது யானைகள் எந்தெந்த நிலைகளில் உறங்கும் என்பதைக் கணக்கிடும்.

இதன்படி யானைகள் சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே உறங்குவதாக கண்டறிந்திருக்கிறார்கள். மேலும், அதிகபட்சமாக 46 மணி நேரம் வரை தூங்காமல் தொடர்ந்து நடந்துகொண்டே இருந்ததையும் பதிவு செய்துள்ளனர். இது உலக ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.

இதுவரை சரணாலயத்திலோ, மிருகக்காட்சி சாலைகளிலோ இருக்கும் யானைகளைக் கொண்டுதான் ஆராய்ச்சிகளைச் செய்திருக்கிறார்கள். அதன்படி ஒரு யானை சராசரியாக 6 மணி நேரம் வரை தூங்கும் என்று சொல்வார்கள். ஆனால், காட்டு யானைகள் இவ்வளவு குறைந்த நேரம்தான் தூங்குகிறது என்பது ஆச்சரியமான விஷயம்.

யானைகளின் குறைந்த நேரத்தூக்கத்திற்கு காரணம் அதன் உடல் பெரிது என்பதும், நிறைய உணவுகளைத் தேடி சாப்பிட வேண்டும் என்பதால் நிறைய நடந்து, குறைவாகத் தூங்குவதாகச் சொல்லியிருக்கிறார்கள்

3DD8E7A500000578-0-image-a-32_1488395247920.jpg

இரண்டு நாட்களில் தூங்காமல் தொடர்ந்து 30 கிமீ தூரத்திற்கு உணவைத் தேடி அவை நடக்கின்றன. மேலும், சில இடங்களில் தனக்கு ஆபத்து ஏற்படும் என்று தெரிந்தால் அந்தப் பகுதிகளில் நிற்காமல் கடக்கின்றன யானைகள். யானைகள் குறித்த விடை தெரியா மற்றுமொரு கேள்வியையும் எழுப்பியிருக்கிறது இந்த ஆராய்ச்சி முடிவு.

ரெம் REM என்று சொல்லக்கூடிய Rapid Eye Movement Sleep உறக்கத்தின் 5 நிலைகளில் ஒன்று. நம் தசைகளும், எலும்புகளும் ஓய்வெடுக்கும் போது, இந்த உறக்க நிலை நமக்குக் கிடைக்கும். இந்த நிலையில் தான் லூசிட் (Lucid) கனவுகள் வரும். அதாவது, அரைத் தூக்கக் கனவு மாதிரி. இந்தக் கனவுகள் நமக்கு நன்றாக நினைவிலிருக்கும். மிருகங்களுக்கு இந்தக் கனவுகள் தான் அதிகப்படியான ஞாபக சக்தியைக் கொடுக்கின்றன. பாலூட்டிகளில் அதிக ஞாபக சக்தி கொண்டது யானை தான் என்று சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஆனால், யானைகள் நெடு நேரம் நின்றுகொண்டே தூங்குகின்றன. மிகவும் குறைவாகத் தூங்குகின்றன. இந்த நிலைகளில் தசைகளும், எலும்புகளும் இறுகியே இருக்கும். இதன்படி பார்த்தால் யானைகளுக்கு “ரெம்” உறக்கம் அதிகபட்சமாக வாரத்திற்கொரு முறைதான் வரும் வாய்ப்பு இருக்கிறது. லூசிட் கனவுகளும் வாரத்திற்கொரு முறைதான். முடிவுகள் இப்படியிருக்க, யானைக்கு எப்படி அபாரமான ஞாபக சக்தி இருக்கிறது எனக் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள் உலக ஆராய்ச்சியாளர்கள்.

Source விகடன்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s