வீடு கட்டும் முப்பரிமாண (3 டி) பிரிண்டர்

மாஸ்கோ நகரில் வெறும் இருபத்து நான்கே மணிநேரத்தில் ஒரு வீட்டை கட்டி முடித்திருக்கிறது அபிஸ் கோர் நிறுவனத்தின் 3 டி பிரிண்டர். இந்த 3 டி வீடு கட்டும் பிரிண்டரை உருவாக்கியவர் நிகிதா சென்-யுன்-தய் (Nikita Chen-yun-tai) .

apis-cor-3d-printed-home

சிமென்ட் கலவை, இரும்புக் கம்பிகள் போன்றவற்றை கையாளும், அபிஸ் கோர் 3டி இயந்திரம், 360 டிகிரி கோணங்களிலும் சுற்றிச் சுற்றி இயங்கும் திறன் கொண்டது. வீட்டுமனையில் இந்த இயந்திரத்தை வைத்து, சிமென்ட் கலவையை குழாய் மூலம் செலுத்த, இதனுடன் இணைந்துள்ள கணினியில் இருக்கும் வரைபடத்தின் படி இந்த இயந்திரத்தில் உள்ள பெரிய சிரிஞ்ச் போன்ற அமைப்பு, வேகமாக சுவர்களை வடிக்க ஆரம்பிக்கிறது. இடையிடையே கம்பிகளை வைத்து  3டி இயந்திரமே வீட்டைக் கட்டி முடித்து விடுகிறது.

ஆனால் வீட்டின் தளத்தை கட்டுவதையும், வீட்டிற்கு வர்ணம் பூசுவதையும் ஆட்கள் தான் செய்ய வேண்டும்.

3E0B945300000578-4290498-image-a-23_1488905943813

இந்த வீடு கட்ட ஆன செலவு, 6.75 லட்சம் ரூபாய். வெறும் 400 சதுர அடி  கொண்ட இந்த வீட்டுக்குள் அனைத்து நவீன வசதிகளையும் பொருத்த முடியும். இந்த வீடு உறுதியானது. சுமார் 175 ஆண்டுகள் நிலைத்திருக்கும்.

Source Daily Mail

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s