ஒலியை வளைக்கும் மெட்டா பொருள் (metamaterial)

ஒரு புதிய வகையான ‘சூப்பர் பொருளைக் கொண்டு, ஒலி அலைகளை வடிவமைப்பதற்கான ஒரு எளிய வழியை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். பிரிட்டனிலுள்ள சசெக்ஸ் மற்றும் பிரிஸ்டல் (Universities of Sussex and Bristol) ஆகிய இரு பல்கலைக்கழகங்களின் விஞ்ஞானிகள், பேராசிரியர் ஸ்ரீராம் சுப்ரமணியன் (Professor Sriram Subramanian) தலைமையில் ஒரு புதிய மெட்டா பொருளை (metamaterial) உருவாக்கியுள்ளனர்.

மெட்டா பொருள் என்பது நுட்பமாக வடிவமைக்கப்பட்ட நுண்ணிய பொருளாகும். பல மெட்டா பொருட்களை ஒன்றிணைத்து ஷீட்டாகவோ அல்லது வேறு வடிவத்திலோ பயன்படுத்தலாம். இயற்கையை மீறிய செயல்களை செய்ய இந்த மெட்டா பொருள் பயன்படுத்தப்படுகிறது.

3DC040B100000578-4263550-These_quantal_metamaterial_bricks_form_together_to_create_a_new_-m-1_1488196782407

முதலில், விரல்நகம் அளவிலுள்ள நுண்ணிய கட்டியான (brick) மெட்டா பொருளை முப்பரிமாண பிரிண்டர் (3D printer) கொண்டு தயார் செய்து, பின்னர் பல மெட்டா பொருட்களை இணைத்து ஒரு தகடாக மாற்றி ஒளியை வடிவமைக்க வேண்டிய இடத்தில் பொறுத்த வேண்டும். இப்பொருளால், ஒலி அலைகளை வளைக்கவும், திசை திருப்பவும், குவிக்கவும் முடியும். ஆராய்ச்சியில் பாலிமர் ( polymer) கொண்டு மெட்டா பொருளை உருவாகினர்.

இந்த தொழில்நுட்பத்தால் ஒலியை தடுக்கவும், அதிகரிக்கவும், வளைக்கவும் மட்டுமல்லாது, லேசர் போன்று ஒலியை குவித்து உடலிலுள்ள கட்டியை அழிக்கவும் முடியும்.

Source Daily Mail

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s