கார் + ட்ரோன் = பாப்-அப்

சர்வதேச அளவில் ஆட்டோ மொபைல் கண்காட்சியில், ஆண்டு தோறும் ஸ்விட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் நடைபெறும் கண்காட்சி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

விமானங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பிரான்ஸின் ஏர் பஸ் நிறுவனம், இத்தாலியைச் சேர்ந்த இடால்டிசைன் (Italdesign) நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து தனது மாடல் காரை இங்கு காட்சிப்படுத்தியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. பாப்-அப் என்ற பெயரிலான இந்த கார் தரையிலும் செல்லும், வானத்திலும் பறக்கும்.3E0B9B1700000578-0-image-a-79_1488927575170

ட்ரோன் மற்றும் கார் ஆகியவை ஒன்றிணைந்த கலவையாக இந்த பாப்-அப் உருவாக்கப்பட்டுள்ளது. காரை ஓட்டிச் சென்று வாகன நெரிசல் மிகுந்த பகுதி தொடங்குமிடத்திலிருந்து காரில் பறந்து சென்று குறிப்பிட்ட இடத்துக்குச் செல்லும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. சுற்றுச் சூழலை பெரிதும் கவனத்தில் கொண்டு முற்றிலும் பேட்டரியில் இயங்கும் வகையில் இந்த பாப்-அப் உருவாக்கப்பட்டுள்ளது.

சாலையில் செல்லும்போதும் பிறகு அது பறக்கும்போது இருவித செயல்பாடுகளைக் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. காரில் இயங்கும் பகுதி, அதாவது சக்கரத்துடன் கூடிய அடிப்பகுதி மட்டும் தனியாக கழலும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் சாலை வழிப் பயணம் முடிந்தவுடன் அடிப்பகுதி மட்டும் தனியாக கழற்றிவிடலாம். அடுத்து பறப்பதற்கு ட்ரோன் போன்ற சக்கரங்களுடன் கூடிய மேல் பகுதி காரின் மேலே பொறுத்தப்பட்டு கார் பறக்க உதவுகிறது.

3E0E046400000578-0-image-a-85_1488927575979

இந்த காரின் முழுமையான செயல் பாடு அனைத்தும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) முறையில் செயல்படுவதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கார் முழுவதும் கார்பன் ஃபைபரால் ஆனது. இதனால் எடை குறைவானது. ஆனால் உறுதியானதாகும். வாகன நெரிசல் மிகுந்த நியூயார்க், லண்டன், பாரிஸ், பெய்ஜிங், மற்றும் இந்தியாவின் மும்பை, டெல்லி, ஹைதராபாத் நகரங்களுக்கு இது மிகவும் ஏற்ற தீர்வாகும்.

காரை மட்டும் பயணிகள் வாங்கினால் போதும். பறப்பதற்கான ட்ரோன் வசதியை வாடகை முறையில் செயல்படுத்தலாம் என ஏர் பஸ் உத்தேசித்துள்ளது.

காரில் குறிப்பிட்ட பகுதிக்கு செல்லும்போது வாகன நெரிசல் அதிகமாக இருந்தால் அங்கிருந்து ட்ரோன் தேவை என ஸ்மார்ட்போன் செயலி மூலம் அழைத்தால், உங்கள் காரை அருகிலுள்ள ட்ரோன் கருவி வந்து அப்படியே தூக்கிச் செல்லும். வானில் பறக்கும் போது நீங்கள் செல்ல வேண்டிய இடத்தைத் தேர்வு செய்து அப்பகுதிக்கு சென்றவுடன் ட்ரோனின் சேவையை துண்டித்து விடலாம். ட்ரோன் அருகிலுள்ள பேட்டரி சார்ஜிங் மையத்தில் சென்று சார்ஜ் ஏற்றிக் கொள்ளும். பெரு நகரங்களில் வாகன நெரிசலுக்குத் தீர்வாக இது இருக்கும் என ஏர் பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இத்தகைய கார் சேவை முழுமையாக வர்த்தக ரீதியில் செயல்பட குறைந்தது 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது..

Source ஹிந்து

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s