சூரியனுக்கு விண்கலம்

அமெரிக்காவின் ‘நாசா’ மையம் சூரியனுக்கு விண்கலத்தை அனுப்பவுள்ளது. பூமியில் இருந்து 14.96 கோடி கி.மீ. தொலைவில் சூரியன் உள்ளது. இதன் வெப்பம் மற்றக் கிரகங்களைவிட அதிகமானது. அதனால் சூரியனில் ஆராய்ச்சியில் ஈடுபடுவது எளிதான காரியமல்ல. அதன் வெப்பத்தைத் தாங்குமளவுக்கு விசேஷ விண்கலம் தயாரிக்கும் பணியில் அமெரிக்க விஞ்ஞானிகள் ஈடுபட்டுவருகிறார்கள். இது ‘நாசா’ விஞ்ஞானிகளின் முதல் முயற்சி என கோட்டார்ட் விண்வெளி மைய (Goddard Space Flight centre) விஞ்ஞானி எரிக் கிறிஸ்டியன் (Eric Christian) தெரிவித்துள்ளார். சூரியனின் உள்புற வெப்ப நிலை 20 லட்சம் டிகிரி செல்சியஸ். ஆனால் அதன் சுற்றுப்புற வெப்ப நிலை 5,500 டிகிரி செல்சியஸ். அதனால் சூரியனின் மேற்பரப்பில் ஆய்வு நடத்தத் திட்டமிட்டுள்ளார்கள். 11.4 சென்டி மீட்டர் கன அளவு உள்ள கார்பன் காம்போஸிட் தடுப்பால் விண்கலம் உருவாக்கப்படவுள்ளது. அடுத்த ஆண்டு 2018-ல் இந்தப் புதிய விண்கலம் சூரியனுக்கு அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source ஹிந்து

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s