இந்தியாவில், உலகின் மிகப் பழமையான பாசிபடிமங்கள்

தாவரங்களின் ஆரம்ப நிலையான பாசியின் (algae) மிகப் பழமையான புதைபடிவங்களை இந்தியாவில் உத்தர பிரதேசத்தில் உள்ள சித்ரகூட் பகுதியில் (Chitrakoot region) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த படிமங்கள் பாஸ்பேட் நிறைந்த பாறைப்படிவுகளில் கண்டுபிடிக்கப்பட்டது.  இந்த படிமங்கள் 160 கோடி ஆண்டுகள் பழமையானவை.

சித்ரகூட் பாசி படிமங்களில் டி.என்.ஏ கிடைக்கவில்லை. ஆனாலும் அவை  வடிவத்தில் இன்றைய உலகில் இருக்கும் சிவப்பு பாசியை (red algae) ஒத்திருக்கிறது. ஜப்பானிய உணவான சுஷியில் ( sushi) சேர்க்கப்படுவது இந்த சிவப்பு பாசி.

பூமி சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. பூமியில் உயிரினம் சுமார் 428 கோடி ஆண்டுகளுக்கு முன் கடல் வாழ் பாக்டீரியா வடிவில் தோன்றின. ஆனால் தாவரம் மற்றும் விலங்கினங்கள் மிக பிந்தைய காலத்தில் தான் தோன்றின.

சித்ரகூட் பாசிபடிமங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழைய தாவர இனம் (பாசி) , 120 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது என்றும் சித்ரகூட்டில் கண்டுபிடிக்கப்பட்டது தான் மிக மிக ஆரம்ப காலத்தை சேர்ந்தது என்றும், தாவரங்கள் தோன்றியதாக கருதப்பட்ட காலத்தை விட சில கோடி ஆண்டுகள் முன்பே அவை தோன்றியதற்கான சான்று இது என்றும் இது குறித்த ஆய்வை மேற்கொண்ட ஸ்வீடன் நாட்டு (Swedish Museum of Natural History paleobiologist) விஞ்ஞானிகளான ஸ்டெபான் பெங்ஸ்டனும் (Stefan Bengtson)  தெரேஸ் சால்ஸ்டெடும் (Therese Sallstedt) தெரிவிக்கின்றனர்.

Source Telegraph

Advertisements

3 thoughts on “இந்தியாவில், உலகின் மிகப் பழமையான பாசிபடிமங்கள்

 1. Hey I liked your tags and wanted to read, but its all in your native language and i have no clue what it is. If you could write in english perhaps. More audience. 🙂

  Like

  1. Science news are available only in English. So I thought to bring that news to Tamil viewers. Hence I translated interesting science news to Tamil.
   Thanks for your suggestion. I will try to make Bilingual posts.

   Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s