எகிப்தில் 3,000 ஆண்டு பழமையான 30 அடி உயர சிலை

எகிப்து நாட்டில், நைல் நதியின் கரையில் மாபெரும் தலைநகரம் கெய்ரோ. கெய்ரோவின் எல்-மெத்தரியா பகுதியில், கடந்த 2012ஆம் ஆண்டு முதல் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் வரலாற்று ஆய்வினை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தற்போது, 30அடி உயர குவார்ட்சைட் (quartzite) சிலை ஒன்றை, உடைந்த நிலையில்  பூமிக்கு அடியில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் தோண்டி எடுத்துள்ளனர். இந்தச் சிலையானது சுமார் 3000 வருடப் பழமையான சிலை எனவும், எகிப்தை ஆட்சி செய்த மன்னர்களின் வம்சத்தில், 19வது வம்சத்தின் முன்றாவது மன்னரான, இரண்டாம் ராமேசஸின் உருவச்சிலையாக இருக்கலாம் என எகிப்திய நாட்டின் மாநில தொல்பொருள் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், இந்தச் சிலையில் இருக்கும் உருவம் இரண்டாம் ராமேசஸிஸ் தான் என்பதற்கு தகுந்த ஆதாரம் இல்லை,ஆனால்  சிலை கண்டெடுக்கப்பட்ட இடம் பண்டைய எகிப்து நகரமாக விளங்கிய ஹெலியோபொலிஸ் பகுதி என்பதால் தொடர்ந்து ஆய்வு செய்வதன் மூலமே உறுதிப்படுத்த முடியும் என்றனர். சிலை கி.மு. (664 to 610 BC) ஒன்றாம் சமெட்டிச் (King Psammetich I) என்ற மன்னனுடயதாக ‘இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது ஏனென்றால் நேபா (‘Nebaa” ) என்ற பெயர் சிலையில் பொறிக்கப்பட்டிருக்கிறது. அது ஒன்றாம் சமெட்டிச்சை குறிப்பதாகும்.

தற்போது பூமிக்கு அடியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ள 30 அடி உயரச் சிலையின் பாகங்களை மீண்டும் அதேபோல பொருத்த முடியுமா,  உருவம் கொடுத்து புதுப்பிக்க முடியுமா என்று முயற்சி செய்து வருகிறார்கள் ஆய்வாளர்கள், தொடர்ந்து அந்தப் பகுதியில் ஆய்வுகளும் நடந்து வருகின்றன. 2018-ஆம் ஆண்டில் இச்சிலை, தி கிராண்ட் எகிப்திய அருங்காட்சியகம் இருக்கும் இடமான கிசாவிற்குக் கொண்டு செல்லப்பட்டு திறக்கப்பட உள்ளது.

இந்த ஆய்வு சமீபத்தில் எகிப்தில் செய்யப்பட்ட ஆய்வுகளில் மிக முக்கிய தொல்லியல் ஆய்வாகப் பார்க்கப்படுகிறது.

red ribbon with bow with tails

Massive Statue of Ancient Egyptian Pharaoh Found in Cairo

Archaeologists from Egypt and Germany have discovered the remains of an ancient Egyptian statue they believe could depict one of history’s most famous rulers.

The statue was found submerged in groundwater in a working-class neighborhood of Cairo. The 26-foot statue is made of quartzite and could be up to 3,000 years old. The Antiquities Ministry in Egypt is hailing the discovery as significant. The discovery’s proximity to a temple devoted to Ramses suggest the statue is of his likeness, the ministry says. However it is also thought to be that King Psammetich I, who ruled Egypt from 664 to 610 BC. The biggest clue pointing to the statue’s  identity was the discovery of an inscription on it that read “Nebaa,” a name closely linked to Psammetich I.

The discovery was made by a joint effort between Egypt’s Ministry of Antiquities and researchers from the University of Leipzig. A rising water table, industrial waste, and piling rubble have made excavation of the ancient site difficult.  Researchers believe many more remains of the ancient world lie hidden under the wider city of Cairo.

Source விகடன் and National Geographic

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s