மன அழுத்தம் உடலை பருமனாக்குகிறது

பிரிட்டனின் English Longitudinal Study of Ageing நடத்திய ஆய்வில் நீண்ட கால மன அழுத்தத்தால் அவதியுறுபவர்கள், உடல் பருமன் ஆக அதிக வாய்ப்புள்ளது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். 54 வயதை கடந்த, 2,500 ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த சோதனையில் பங்கு கொண்டனர். அவர்களின் தலை முடியில் உள்ள கார்டிசோல் (Cortisol) என்ற ஹார்மோனின் அளவையும் உடல் நிறை குறியீட்டடையும் (body mass index or BMI,) ஒப்பிட்ட போது, அதிக கார்டிசோல் கொண்டவரின் எடை அதிகமாக இருந்தது கண்டுபிக்கப்பட்டது.

கார்டிசோல் அட்ரீனல் சுரப்பிகள் உற்பத்தியாக்கும் ஒரு ஹார்மோன் ஆகும். உறுதியான நிலையில் இரத்த ஓட்டத்தில் குளுக்கோஸ் அளவை வைத்து கொள்ள இது ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இது மன அழுத்தம் ஏற்படும் சமயத்தில் அதிகமாக உற்பத்தியாகி இரத்ததில் கலக்கிறது. அதாவது, அதிக அளவு குளுக்கோஸ் உற்பத்தியாகி நாளடைவில் கொழுப்பாக மாறுகிறது.

இந்த ஆராய்ச்சி, வயதானவர்களிடமும், ஒரு குறிப்பிட்ட இனத்தவரிடமும் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதால் முழுமையானதாக கருதப்படவில்லை. எல்லா தரப்பு மக்களிடமும், மேலும் ஆய்வுகள்  மேற்கொள்ளப்பட உள்ளது.

3

Long-term stress linked to higher levels of obesity

English researchers compared stress levels and body weight of more than 2,500 men and women over age 54 who participated in the English Longitudinal Study of Ageing. Study showed that the levels of cortisol in the hair is positively and significantly correlated to larger waist circumference and higher body mass index or BMI.

Cortisol is a hormone produced in the adrenal glands that is released into the bloodstream in times of stress. In addition to suppressing inflammation and regulating blood pressure, cortisol helps maintain steady supplies of blood sugar and gives an energy boost to handle emergencies.

There were limitations to the study, which included the fact the data was from an older population in which levels of cortisol may differ relative to younger adults and the sample was almost exclusively white. More research is needed.

Source Science Daily

Leave a comment