மேகமலையில் புதிய வகை தாவரம் கண்டுபிடிப்பு

தேனி மாவட்டம், மேகமலையில் ‘இம்பேஸியன்ஸ் மேகமலையானா’ (impatiens megamalaiyana) என்ற புதிய வகை தாவரத்தை காந்திகிராம பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் அத்துறை மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவர்களது கண்டுபிடிப்புக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இந்தியாவில் காடுகளில் காணப்படும்  ‘காசித் தும்பை’ என்று வழக்குச் சொல்லால் அழைக்கப்படும் ‘இம்பேஸியன்ஸ்’ எனும் தாவர இனம் தனிச் சிறப்பு வாய்ந்தது.

ஓராண்டு முதல் பல்லாண்டு தாவரங்களாக வளரும் இவை ஆப்பிரிக்கா, மடகாஷ்கர், இந்தியா மற்றும் இலங்கையில் பரவிக் காணப்படுகின்றன.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகைகளைக் கொண்ட இந்த தாவரம் மிகவும் அடர்த்தியான, ஈரப்பதமான மலைப்பகுதிகளிலும், பாறைகளிலும் மட்டும் வளரக் கூடியவை. இந்த தாவரங்கள் இந்தியாவில் ஏறக்குறைய 245 வகைகள் உள்ளன. பழனி மலை, ஆனை மலை, நீலகிரி, மூணாறு மற்றும் அகஸ்தியர் மலைகளில் இவ்வகை தாவரம் செறிந்து காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

காந்திகிராம பல்கலைக்கழக உயிரியல் துறை உதவிப் பேராசிரியர் ராமசுப்பு மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் தங்களுடைய சமீபத்திய தாவர இனங்கள் தேடலில், மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான மேகமலை வனப்பகுதிகளில் உள்ள புல்வெளிப் பரப்புகளில் இம்பேஸியன்ஸ் தாவர வகைகளில் புதிய வகை தாவர சிற்றினத்தை கண்டறிந்துள்ளனர்.

இதுகுறித்து உத விப் பேராசிரியர் ராம சுப்பு கூறியதாவது: ‘மேகமலையில் கண்டு பிடித்துள்ள புதிய தாவ ரத்துக்கு ‘இம்பேஸி யன்ஸ் மேகமலை யானா’ என பெயரிடப் பட்டுள்ளது. 28 செ.மீ. முதல் 42 செ.மீ. உயரம் வளரக்கூடிய குறுஞ்செடி. வெளிர் சிவப்பு நிறத்துடன் அடர் மஞ்சள் நிறத்தில் பூக்களைக் கொண்டது. பொதுவாக ஜூலை முதல் அக்டோபர் வரை பூக்கும் இயல்பு கொண்ட இவை, கடல் மட்டத்துக்கு மேல் 1,451 மீட்டர் உயரம் உள்ள இடங்களில் ஈரப்பதமான பாறைப் பகுதிகளில் வளரும். வருடத்தில் மே முதல் ஜூன் வரை விதைகள் முளைக்கத் தொடங்கி முழுவதுமாக வளர்ச்சி அடைந்து ஜனவரி மாதங்களில் அழிந்துவிடும்’.

இந்த புதிய தாவரம் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டு, இந்திய தாவரவியல் ஆராய்ச்சி நிலையத்தில் உலர் தாவரமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இம்பேஸியன்ஸ் தாவர இனங்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமான தாவரங்கள் அழியும் தருவாயில் உள்ளதாகக் கண்டறியப் பட்டுள்ளது. கண்களைக் கொள்ளை கொள்ளும் பல்வேறு வண்ணங்களுடன் வேறுபட்ட அமைப்பைக் கொண்ட இந்த தாவரங்களின் பூக்களைச் சார்ந்து பல்வேறு பூச்சிகளும், வண்டுகளும் வாழ்கின்றன. குறிப்பிட்ட மண் வகை, மழைப்பொழிவு மற்றும் இடச்சூழலைச் சார்ந்து வளர்வதால், வேறு இடங்களுக்கு இவை அதிகமாக பரவுவது இல்லை. அதனால், இவ்வகை தாவரங்கள் மிக அபூர்வமாகி வருகின்றன.

Source: Tamil hindu

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s