குளுகோமாவை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்கும் பரிசோதனை முறை

நிரந்தரமாக பார்வையிழப்பு ஏற்படுவதற்குக் காரணமாக இருக்கும் குளுகோமா என்ற கண் நீர் அழுத்த நோயினால் உலகம் முழுவதும் 60 மில்லியன் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர், மூன்றில் ஒரு பகுதி பார்வையிழந்த நிலையிலேயே தங்களுக்கு பாதிப்பு இருப்பதைக் கண்டுபிடிக்கிறார்கள்.

_95800230_glaucoma

இதுதொடர்பான ஆராய்ச்சியில் புதிய பரிசோதனை முறையை உருவாக்கியிருப்பதாக லண்டன் பல்கலைக்கழக கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அவர்கள் உருவாக்கியிருக்கும் புதிய கண் பரிசோதனை முறை மூலம், கண்பார்வை குறைபாடு தெரிய ஆரம்பிப்பதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பே குளுகோமா இருப்பதைக் கண்டுபிடித்துவிட முடியும்.

கண்ணுக்குள் ஏற்படும் அழுத்தம் காரணமாக ஏற்படும் மாற்றங்களால் இந்த நோய் ஏற்படுகிறது. இதனால், விழித்திரையில் உள்ள நரம்பு மண்டலங்கள் சேதமடைந்துவிடுகின்றன. அழுத்தம் காரணமாக அந்த செல்களில் மாற்றங்கள் ஏற்பட்டு, கொழுப்பு அமைப்புகள் சேர்ந்து அந்த நரம்பு செல்களை தடிமனாக்குகிறது.

இந்த செல்களில் ஒட்டிக்கொள்ளும் வகையிலான ஒளிரும் வண்ண திரவத்தை பயன்படுத்தி இந்த சோதனை மேற்கொள்ளப்படுகிறது. அவை, விழியின் ரத்த நாளங்களுக்குள் செலுத்தப்படுகின்றன. ஒளிரும் சாயத்திரவங்கள் இந்த நரம்பு செல்களை ஒட்டிப்பிடித்துக் கொள்கின்றன. அதன்பிறகு, கண் சிகிச்சை நிபுணர், கண்களின் பின்பக்கத்தைப் பரிசோதிக்க வேண்டும். விழித்திரை, வெள்ளைப் புள்ளிகளுடன் ஒளிர்ந்தால், அந்த நோயாளிக்கு பிரச்சனை இருப்பதாக உறுதிப்படுத்தக் கொள்ள முடியும். இந்த நோய் கண்டறிவதற்கு ஐந்து முதல் 10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே அடையாளம் காணலாம்

இந்த பரிசோதனை இது வரை 16 நபர்களுக்கு சோதித்துப் பார்க்கப்பட்டது. இன்னும் ஆழமான ஆய்வுகள் தேவைப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த ஆய்வின் முடிவுகள் குளுகோமாவால் பார்வையிழப்பு ஏற்பட்டவர்களுக்கு புதிய நம்பிக்கையை அளிக்கவும், பிற நரம்பு ரீதியான நோய்களால் பாதிக்கப்படுவோருக்கு ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்கவும் வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என்று இந்த ஆய்வுக்கு நிதியுதவி அளித்த வெல்கம் அறக்கட்டளையின் பெதன் ஹக்ஸ் (Bethan Hughes) தெரிவித்துள்ளார்.

stock-vector-shiny-red-ribbon-on-white-background-with-copy-space-vector-illustration-324743945

Test may spot glaucoma before symptoms begin

Glaucoma affects 60 million people around the world and most have lost a third of their vision by the time they are diagnosed.

It might be possible to treat the main cause of permanent blindness before people notice any loss of vision, say University College London researchers. They have developed a new kind of eye exam that might spot glaucoma a decade before symptoms appear. It uses a fluorescent dye that sticks to the cells in the retina that are about to die.

But it has been tested on just 16 people in safety trials and far more research is needed, the study says.

The disease is usually caused by changes to the pressure inside the eye that kills the retina’s nerve cells. As these cells become stressed and sickly, they start to change their chemistry and more fatty structures move to the outside of the cell. This is what the fluorescent dye, which is injected into the bloodstream, sticks to.

Then all an optician has to do is look at the back of the eye and if the retina is illuminated in white fluorescent dots then the patient has a problem.

Current treatments to control the eye’s internal pressure can stop or slow down the progression of the disease, although they cannot reverse the damage already done. Treatment is much more successful when it is begun in early stages of the disease, when sight loss is minimal.

Bethan Hughes, from the Wellcome Trust, which funded the research, said: “This innovation has the potential to transform lives for those who suffer loss of sight through glaucoma, and offers hope of a breakthrough in early diagnosis of other neurodegenerative diseases.

Source BBC

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s