போதையில் வாகனம் ஓட்டுவதை தடுக்கும் சாதனம்

பெரும்பாலான விபத்துகளுக்குக் காரணம் குடி போதையில் வாகனம் ஓட்டுவதுதான் என்று சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்தியாவை சேர்ந்த ஆய்வாளர்கள் சிலர் ஒரு புதிய கருவியை உருவாக்கியுள்ளனர். இந்த கருவி பொருத்தப்பட்ட வாகனத்தை குடிபோதையில் உள்ளவர்கள் ஸ்டார்ட் செய்தால் ஸ்டார்ட் ஆகாது. உத்திராகண்ட் உள்ளுறை பல்கலை (Uttarakhand Residential University) மற்றும் ஆர்ஐ இன்ஸ்ட்ரூமென்ட் ஆய்வகத்தைச் (Haldwani-based RI Instruments and Innovation) சேர்ந்த ஆர்.பி. ஜோஷி(R.P. Joshi), ஆகாஷ் பாண்டே(Akash Pandey) குல்தீப் படேல்(Kuldeep Patel) உள்ளிட்ட நிபுணர் குழு இந்தக் கருவியை உருவாக்கியுள்ளது.

கிராபீன்(Graphene) பூச்சு பூசப்பட்ட எலெக்ட்ரோட் உணர் கருவிகளைக் கொண்டது இந்த கருவி. வாகனத்தை ஸ்டார்ட் செய்யும்முன்பு, டிரைவர் சீட்டில் அமர்ந்திருப்போர் ஒருவேளை மது அருந்தியிருந்தால், வாகனம் ஸ்டார்ட் ஆகாது. ஒருவேளை மது அருந்தாத நண்பரை ஊதச் செய்து, சிறிது மது அருந்தியிருப்பவர் காரை ஸ்டார்ட் செய்யலாம் என்றாலும் அதுவும் நடக்காது. இதில் உள்ள உணர் கருவி டிரைவர் இருக்கையில் அமர்ந்திருப்பவரின் சுவாசக் காற்றை உணர்ந்து உடனடியாக வாகன செயல்பாட்டை நிறுத்திவிடும். .

விபத்து ஏற்பட்டால் 10 நிமிடங்களுக்குள் போலீசுக்கு தகவல் சொல்லி விடும். இந்த கருவியில் உள்ள ஜிபிஆர்எஸ்-ஜிபிஎஸ் விபத்தின் போது வாகனத்தை கண்டுபிடிக்க உதவும்

balls

Device to prevent drunk driving

Uttarakhand Residential University  and Haldwani-based RI Instruments and Innovation in  India have jointly developed a device which will help in preventing cases of drunk driving. The new technology derived from waste products will make driving difficult if the driver is in an inebriated condition. The vehicle will also refuse to start in case the driver is feeling drowsy or talking on the phone.

Graphene – an allotrope of carbon generated from the waste products and wild grass – is one of the primary component used to make the prototype. The graphene-coated electrodes can catalyse the process of oxidation of ethyl alcohol into acetic acid. The driver has to blow the graphene-sensor on the device to start the vehicle. The sensor will detect the concentration of alcohol and if it is over the prescribed limit, the engine will not start.

In case the driver is falling asleep, the object and imaging module of the sensor will analyse his eye movements and will alert the co-passengers. In case of an accident, the device will automatically, within five to 10 minutes, dial phone number 100 to send an SOS to the police. The device is also equipped with GPRS-GPS and other bio-metric technologies which will help in identifying the location of the vehicle in case of an accident.

The device will be patented after which it will be tested extensively before it is used in vehicles.

Source : Economic Times

One thought on “போதையில் வாகனம் ஓட்டுவதை தடுக்கும் சாதனம்

Leave a reply to முத்துசாமி இரா Cancel reply