ஆபத்தை எச்சரிக்கும் தாவரங்கள்

ஒரு செடி, தனக்கு ஆபத்து ஏற்பட்டதும், அக்கம் பக்கத்திலுள்ள தாவரங்களை, பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கும் என்பதை தாவரவியல் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அமெரிக்காவிலுள்ள டிலாவேர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், ஆய்வுக்கூடத்தில் (University of Delaware) கடுகு செடிகளை வைத்து இரண்டு ஆண்டுகள் செய்த ஆய்விற்குப் பின் இந்த முடிவுக்கு வந்துள்ளனர். ஒரு செடியின் சில இலைகள் கொய்யப்பட்ட பிறகு, இலைகளில் சில வேதிப் பொருட்களை உற்பத்தி செய்து காற்றில் பரப்புவதன் மூலம், மற்ற செடிகள் அதை புரிந்துகொள்கின்றன.

Harsh Bais & Connor Sweeney - DBI

ஆபத்து என்ற தகவல் கிடைத்ததும், அக்கம்பக்கத்து செடிகள், மறு நாளே சற்று வேகமாக வளர்ந்திருப்பதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது பாதுகாப்பு கருதி மேற்கொள்ளப்படும் செயல் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

2

PLANTS CALL 911, TOO

Injured plants warn neighbors of danger, University of Delaware study finds. In studies of Arabidopsis thaliana, also known as mustard weed, the University of Delaware team found that when a leaf was nicked, the injured plant sent out an emergency alert to neighboring plants, which began beefing up their defenses.

“A wounded plant will warn its neighbors of danger,” says Bais, who is an associate professor of plant and soil sciences in UD’s College of Agriculture and Natural Resources. “It doesn’t shout or text, but it gets the message across. The communication signals are in the form of airborne chemicals released mainly from the leaves.”

“The reason why the uninjured plant is putting out more roots is to forage and acquire more nutrients to strengthen its defenses,” Bais says. “So we began looking for compounds that trigger root growth.”

They  measured auxin, a key plant growth hormone, and found more of this gene expressed in neighboring plants when an injured plant was around. He also confirmed that neighbor plants of injured plants express a gene that corresponds to a malate transporter (ALMT-1). Malate attracts beneficial soil microbes, including Bacillus subtilis, which Bais and his colleagues discovered several years ago. Apparently, uninjured plants that are in close proximity to injured ones and that have increased malate transporter associate more with these microbes. These beneficials bond with the roots of the uninjured plants to boost their defenses.

Source Dinamalar and UDel

புற்றுநோயை தடுக்கும் இத்தாலிய தக்காளிகள்

இத்தாலியின் தெற்குப் பகுதிகளில் விளையும் இரண்டு வகை தக்காளிகளான, சான் மார்சனோ மற்றும் கார்பரினோவுக்கு  (San Marzano and Corbarino) வயிற்றுப் புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சியைத் தடுக்கும் சக்தி உள்ளதாக Mercogliano  ஆன்காலஜி ஆராய்ச்சி மையத்தின் (The Oncology Research Center of Mercogliano (CROM)) டேனியலா  பாரோன் (Daniela Barone) தலைமையிலான ஆராய்ச்சியாளர் குழு தெரிவிக்கிறது.

san-marzano-tomatoes
சான் மார்சனோ

இவ்வகை தக்காளிகளின் தன்மைகளை அலசி, வயிற்றுப் புற்றுநோய் வராமல் தடுப்பதற்கும், ஏற்கனவே உருவாகிய புற்றுநோயின் வேகத்தை மட்டுப்படுத்துவதற்கும் மேலும் ஆராய்ச்சிகள் நடைபெறுகிறது.

1

Italian Tomato Breeds May Help Fight Stomach Cancer

A new study shows that whole tomato extracts from two different Southern Italy cultivars inhibit gastric cancer cell growth and malignant features, paving the way for future studies aimed at implementing lifestyle habits not only for prevention, but potentially as a support to conventional therapies.

“Their antitumoral effect seem not related to specific components, such as lycopene, but rather suggest that tomatoes should be considered in their entirety,” says Daniela Barone, researcher at the Oncology Research Center of Mercogliano (CROM).

Experiments analyzed whole tomato lipophilic extracts for their ability to tackle various neoplastic features of gastric cancer cell lines. Extracts of both the San Marzano and Corbarino tomato varieties were able to inhibit the growth and cloning behavior of malignant cells. Treatment with the whole tomato extracts affected key processes within the cells hindering their migration ability, arresting cell cycle through the modulation of retinoblastoma family proteins and specific cell cycle inhibitors, and ultimately inducing cancer cell death through apoptosis.

Source Science Daily

ஆர்டிக் விதை களஞ்சியம்

பூமியில் போரினாலோ இயற்கை பெரழிவுகளாலோ உணவு பயிர்கள் அழியாமல் பாதுகாக்க ஸ்வால்பார்ட் உலக விதை களஞ்சியம் (Svalbard doomsday global seed vault ) நிரந்தர பனிமண்டலமான அர்டிக்கில் 2008 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.

இங்கு நிலவும் நிரந்தர பனி ( -5 degrees Centigrade) காரணமாக, உலகின் எனய கிடங்குகளில் விதைகள் அழிந்துபோனாலும் இங்கு அவை உயிர்ப்புடன் இருக்கும். உலகின் மிக முக்கிய உணவு ஆதாரங்களான உருளைக்கிழங்கு,நெல்,கோதுமை,பார்லி,கடலை,பருப்பு,முதலியவற்றின் விதைகள் இந்த களஞ்சியத்தில் பிராதானமாக சேமிக்கப்படுகிறது. இது வரை 100 நாடுகளில் இருந்து 20000 வகையான விதைகள் சேமிக்கப்பட்டிருக்கின்றன

web-seed-vault-2-getty.jpg450px-storage_containers_in_svalbard_global_seed_vault_01

யுத்தத்தால் சீரழிந்த சிரியாவின் அலெப்போவில் ( Aleppo) 141,000 விதைகள் கொண்ட விதை வங்கி பாதிக்கப்பட்ட போது,  ஸ்வால்பார்ட் உலக விதை களஞ்சியத்திலிருந்து விதைகளை சர்வதேச ஆராய்ச்சி மையம் 2015ல் சிரியாவிற்கு வழங்கியது. அவற்றில் 15000 விதைகள் உலக களஞ்சியத்தில் திரும்ப சேர்க்கப்பட்டன.

பிப்ரவரி 22, 2017 அன்று  பெனின் (Benin), இந்தியா, பாகிஸ்தான், லெபனான், மொரோக்கோ, நெதர்லாந்து, அமெரிக்கா,மெக்ஸிக்கோ, பெலாரஸ் (Belarus) போஸ்னியா,ஹெர்சிகோவினா (Herzegovina),  மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளிலிருந்து புதிதாக சேர்க்கப்பட்ட 50000 விதைகளையும் சேர்த்து இப்போது உலக களஞ்சியத்தில் இருக்கும் விதைகளின் எண்ணிக்கை 940000 ஆகும். இதன் மொத்த கொள்ளளவு 4.5 மில்லியன் விதைகள்.

Source CNBC

வேளாண் உலகின் புரட்சி – காய் கனிகளை கெடாமல் பாதுகாக்கும் ‘எடிபீல்’ (Edipeel)

விளை நிலங்களிலிருந்து காய்கறிகள், கனிகள் வீட்டுக்கு வருவதற்குள் 45 சதவீதம், வாடி, வதங்கி, அழுகி விடுகின்றன. விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் ஏற்படும் இந்த இழப்பை தவிர்க்க எளிமையான வழியை, ‘அபீல் சயன்சஸ்’ (Apeel Sciences) என்ற அமெரிக்க நிறுவனம் உருவாக்கிஇருக்கிறது.

ஆராய்ச்சியாளரும் ‘அபீல் சயன்சின் நிறுவனருமான ஜேம்ஸ் ரோஜெர்ஸ் (James Rogers) ‘எடிபீல்’ (Edipeel) என்ற பொடியை கண்டுபிடித்துள்ளார். இவரின் இந்த ஆராய்ச்சிக்காக Bill and Melinda Gates Foundation  ஒரு லட்சம் டாலர் ($100000) அளித்துள்ளது. ஆப்பிரிக்காவில் அறுவடை செய்த ஒரு நாளில் வீணாக போகக்கூடிய உணவு பொருளான cassava என்ற கிழங்கை பாதுகாக்க முதலில் இந்த பொடியை Foundationல் பயன் படுத்தினர்.

edi
James Rogers

இந்த பொடியை காய், கனிகள் மீது பூசிவிட்டால், அவை பல நாட்கள் கெடாமல் தாக்குப் பிடிக்கும்.உதாரணத்திற்கு  வாழைப் பழம் 10 நாட்கள் வரை, எலுமிச்சை 54 நாட்கள் வரை, மாம்பழம் 27 நாட்கள் வரை கெடாமல் இருக்கும் என்கிறது அபீல் சயன்சஸ். காய், கனிகளின் இரண்டாவது தோல் போல செயல்படும் எடிபீல், காற்றினால் ஏற்படும் ஆக்சிஜனேற்றம், நீர் ஆவியாதல் போன்றவற்றை தடுத்துவிடுவதால், அவை வாடுவதும், கெடுவதும் பல நாட்களுக்கு ஒத்திப் போடப்படுகிறது. எடிபீல் பொடியில் செயற்கை துளியும் இல்லை என்கிறது அபீல் சயன்சஸ். செடி, கொடி, இழை, தழை, பழங்களின் தோல்களை மறுசுழற்சி செய்தே எடிபீல் உருவாக்கப்பட்டுள்ளதாக அபீல் சயன்சஸ் சொல்கிறது

edipeel

எடிபீலை காய் கனிகள் செடியில்/மரத்தில் இருக்கும் போதே, அறுவடைக்கு முன்பே கூட சேர்க்கலாம். உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (Food and Drugs Administration) எடிபீல் பாதுகாப்பானது என்று அங்கீகரித்துள்ளது. இனி மேல் காய்கள், பழங்களை கெடாமல் வைத்திருக்க, குளிர்ச்சியூட்டும் செலவே இல்லாமல் ஆகிவிடும்.

Source New York Post