உயிர் கான்கிரீட்

கண்டுபிடிப்பு: மணல், ஹைட்ரோஜெல் கலவையுடன் பாக்டீரியாவையும் கலந்து கான்கிரீட் தயாரித்தல்.

ஆராய்ச்சியாளர்கள்: அமெரிக்காவிலுள்ள கொலராடோ பல்கலைக் கழகத்தின் (University of Colorado Boulder) வில் ஸ்ருபார் (Wil Srubar) தலைமையிலான விஞ்ஞானிகள்

விவரம்: மணல், ஹைட்ரோஜெல் கலவையுடன் சயனோபாக்டீரியா – (பச்சை நுண்ணுயிரிகள்) (cyanobacteria) பாக்டீரியாவையும் கலந்து, ஒரு வார்ப்பில் போட்டுவிட்டால், பாக்டீரியாக்கள், சுற்றியுள்ள கார்பன் – டை – ஆக்சைடு வாயுவை உட்கொண்டு, கால்சியம் கார்பனேட்டை உற்பத்தி செய்கின்றன. இந்த வேதிப் பொருள் ஹைட்ரோஜெல்லையும் மணலையும் பிணைக்கும் கிரியா ஊக்கியாக செயல்படுகிறது. இதனால், வார்ப்பில் உள்ள மணல் மற்றும் ஹைட்ரோஜெல் கலவை மெல்ல மெல்ல இறுகி கான்கிரீட் கல்லாக மாறுகிறது.

பாக்டீரியாக்கள் இனப் பெருக்கம் செய்து, மேலும் கால்சியம் கார்பனேட்டை உற்பத்தி செய்து தள்ளுவதால், பாதியாக உடைக்கப்பட்ட கல், மேலும், ‘வளர்ந்து’ இரண்டு  முழு கற்களாக மாறும்.

இதன் வலிமை, கான்கிரீட்டை விட குறைவாக, இரண்டு கற்களை பிணைக்கும் சிமெண்ட் கலவையின் வலிமையை ஒத்திருக்கிறது.\

balls

Living concrete

Invention : Environmentally friendly ‘living concrete’ has been developed mixing sand, gel and bacteria .

Scientists: The project team, led by Wil Srubar of  University of Colorado Boulder

In detail : The team combined the bacteria with hydrogel gelatin, sand and nutrients in a liquid mixture, then placed this in a mould. The hydrogel contains moisture and nutrients that allow the bacteria to reproduce and mineralise – With heat and sunlight, the bacteria produced calcium carbonate crystals around the sand particles, in a process similar to how seashells form in the ocean. When cooled, the gelatin solidified the mixture into a gel form. The team then dehydrated the gel to toughen it, with the entire process taking several hours.

The team used Synechococcus, a  cyanobacteria – green microbes that live in the water and can manufacture their own food .

By splitting the brick in half, the bacteria can grow into two complete bricks with the help of some extra sand, hydrogel and nutrients.

Though it is termed ‘living concrete’, its mechanical properties are more similar to mortar, a weaker material usually made with cement and sand and found between the bricks of buildings,

 Source : Dinamalar  and daily mail

கடல் நீரும் ரோமானியர்கள் கட்டிடமும்

ரோமானியர்கள், 1,500 ஆண்டுகளுக்கு முன் கட்டிய நீர்வழிப் பாதைகள், கட்டடங்கள், துறைமுகங்கள் இன்றும் பலம் குன்றாமல் நிற்கின்றன. இதன் ரகசியம் என்ன என்று பலரும் ஆராய்ந்துள்ளனர். ஆனால், திட்டவட்டமான விடை கிடைக்கவில்லை.

df
மேரி  ஜாக்சன்  (நடுவில் )

அண்மையில், அமெரிக்காவிலுள்ள யூட்டா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மேரி ஜாக்சன் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் (Prof Marie Jackson, a geology and geophysics research professor), அக்கட்டடங்களிலிருந்து சில மாதிரிகளை எடுத்து வந்து, ஆய்வுக்கூடத்தில் சோதனை செய்தனர். சோதனையில், ரோமானியர்கள் கட்டடத்திற்கு என்னவிதமான கலவையை பயன்படுத்தினர் என்பது தெரிய வந்துள்ளது. எரிமலைச் சாம்பல், சுண்ணாம்பு, எரிமலைப் பாறைகளை உடைத்துச் செய்த சல்லிக் கற்கள் மற்றும் கடல் நீர் ஆகியவற்றின் கலவை தான் கட்டடங்களின் உறுதிக்குக் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்தக் கலவை காலப்போக்கில் வேதிவினை புரிந்து, புதிய தாதுத் துகள்களை உற்பத்தி செய்வதால், கட்டடம் கட்டப்பட்ட காலத்தை விட, மேலும் உறுதியடைந்து வருகின்றன என்றும் கண்டறிந்துள்ளனர்.

1

Secrets of Roman Buildings

It is a mystery that continues to baffle modern engineers. Why do 2,000-year-old Roman piers survive to this day, yet modern concrete seawalls embedded with steel crumble within decades?

Now scientist team headed by Prof Marie Jackson, a geology and geophysics research professor at the University of Utah in the US think have found the answer. They discovered that when saltwater mixes with the volcanic ash and lime used by Roman builders, it leads to the growth of interlocking minerals, which bring a virtually impenetrable cohesion to concrete.

Roman engineers made concrete by mixing volcanic ash with lime and seawater to make a mortar, and then added chunks of volcanic rock.  The combination of ash, water, and lime produces what is called a pozzolanic reaction, named after the city of Pozzuoli in the Bay of Naples, triggering the formation of crystals in the gaps of the mixture as it sets.

The same reaction happens in nature, and clumps of natural cement called ‘tuffs’ can be found scattered around volcanic areas, which is probably what gave the Romans the idea.

Source Dinamalar and Telegraph

முற்காலத்தில் வாழ்ந்த ‘பறக்கும் ராட்சத வான்கோழி’

சாம்பல் நிற கங்காரு அளவிலான ‘பறக்கும் ராட்சத வான்கோழி’ போன்றதொரு பறவை முற்காலத்தில் இருந்ததாக ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது, அழிந்து போய்விட்ட பறவையினங்களில் ஒன்றாகும்.

இலை குப்பைகளை கொண்டு நிலத்தில் மண்மேடுகளை உருவாக்கி, முட்டையிட்டு, புதைத்து வைப்பதற்கு பேர்போன நவீன கால மல்லீஃபெவுல் (Malleefowl ) பறவை முற்கால பறவை உறவினம்தான் இந்த சாம்பல் நிற கங்காரு அளவிலான ‘பறக்கும் ராட்சத வான்கோழி’. இருப்பினும், இந்த ‘பறக்கும் ராட்சத வான்கோழியான’, ப்ராகுரா காலினாசியா (Progura gallinacean) அவ்வாறு செய்யவில்லை. மல்லீஃபெவுல் பறவை பெற்றிருக்கும் பெரிய பாதங்களோ, தனி சிறப்பு மிக்க கூர்நகங்களையோ இது பெற்றிருக்கவில்லை .

மாறாக, இந்தோனீஷியாவிலும், பசிபிக்கிலும் வாழும், இன்றும் மணல் மேடு கட்டி குஞ்சு பொரிக்கும் சில பறவையினங்களைப்போல, ப்ராகுரா காலினாசியா வெப்பமான மணல் அல்லது மண்ணில் தங்கள் முட்டைகளை புதைத்து வைத்தன.

அடிலெய்டிலுள்ள ஃபிளின்டஸ் பல்கலைக்கழகத்தின் குழு ஒன்று இந்த அறிக்கை தயாரிக்க புதிய மற்றும் புதை படிவ எச்சங்களை ஆய்வு செய்திருக்கிறது.

இவற்றில் சில மாதிரிகள் முதன்முதலில் 1800களில் சேகரிக்கப்பட்டன. புதிய மாதிரிகள் ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியிலுள்ள புகழ்பெற்ற தைலாகோலியோ காவெர்ன்ஸில் இருந்து கிடைத்தவை. இங்குதான் சுண்ணாம்பு குழாய்கள் மூலம் எண்ணற்ற முற்கால விலங்குகள் அழிந்ததாக கருதப்படுகிறது.

மணல் மேடு கட்டி குஞ்சு பொரிக்கும் அழிந்துவிட்ட பறவையினங்களில் 5 புதிய இனங்களை விஞ்ஞானிகள் விவரிக்கின்றனர். அவற்றில் ப்ராகுரா காலினாசியா மிகவும் பெரியதாகும்.

11,700 ஆண்டுகள் முதல் 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பான பிளாய்ஸ்டோசீன் காலத்தில் இந்த பறவையினங்கள் வாழ்ந்துள்ளன. அப்படியானால், வயிற்றுப்பையில் குட்டியைப் பேணும் ராட்சத விலங்கு போன்ற சில பெரிய உருவங்களை கொண்ட அடையாள முக்கியத்துவ விலங்குகளாகக் கருதப்படும் விலங்குகளோடு இவை வாழ்ந்திருக்கும் என்று பொருள்படுகிறது.

வயிற்றுப்பையில் குட்டியைப் பேணும் ராட்சத விலங்குகள் ஆஸ்திரேலிய கண்டத்தில் நவீன மனிதர்கள் நுழைந்த பின்னர் சற்று அழிந்து போய்விட்டன.

அழிந்துபோன பல பெரிய பறவைகளில் டோடோ போன்றவை பறக்க முடியாததாக இருந்தாலும், ப்ராகுரா காலினாசியா நிச்சயமாக பறந்திருக்க முடியும் என்று ஃபிளின்டஸ் பல்கலைக்கழக குழுவினர் தெரிவித்திருக்கின்றனர்.

வலுவான இறகு எலும்புகளைக் கொண்ட இது மரங்களில் தங்கியது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

240_F_123165150_Co0vkIAoweQttDlqOkLztQ8JlFkFeRkh

Ancient bird like ‘a kangaroo-sized flying turkey’

It has been described as a “giant flying turkey” the size of a grey kangaroo by Australian scientists.

It is actually an extinct species of megapode bird – an ancient cousin of the modern Malleefowl, which famously builds mounds of earth and leaf litter in which to lay and incubate its eggs.

Progura gallinacea probably didn’t do that, however.

It lacked the Malleefowl’s large feet and specialised claws. Instead, it’s quite likely P. gallinacea simply buried its eggs in warm sand or soil, just as some living megapodes in Indonesia and the Pacific still do.

A team from Flinders University in Adelaide assessed new and old fossil finds in producing its report.

Some of the older specimens were first collected in the late 1800s; the newer ones came from the remarkable Thylacoleo caverns of Western Australia, where countless ancient animals fell to their deaths through limestone pipes.

The scientists actually describe five new species of extinct megapodes, of which Progura gallinacea was the biggest.

These birds all lived in the Pleistocene – a time period that covers 11,700 years ago to 2.5 million years ago. That means they would have existed alongside some of the iconic megafauna – such as the giant marsupials – that disappeared shortly after modern humans first entered the Australian continent.

Although many large extinct birds, such as dodos, were flightless, the Flinders team says Progura gallinacea definitely could take to the air.

It had strong wing bones and probably roosted in trees, the researchers say.

Source BBC

மூவாயிரம் ஆண்டுகள் பழமையான செயற்கை கால்

எகிப்தில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான செயற்கை கால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொல்பொருள் ஆய்வாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

எகிப்தில் ஷேக் அப்த் அல்-குவர்னி கல்லறையை ஆய்வு செய்துவரும் தொல்பொருள் ஆய்வாளர்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மரத்தாலான செயற்கை கால் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த செயற்கைக்கால் 3000 ஆண்டுகள் பழமையானது என தெரியவந்துள்ளது. இந்த காலானது மதகுரு ஒருவரது மகள் பயன்படுத்தி வந்தது எனவும், அவரது வாழ்நாளில் அந்த செயற்கை காலானாது பலமுறை மாற்றியமைக்கப்பட்டு வந்துள்ளது எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம் மனித உடம்பில் உறுப்புகளின் முக்கியத்துவத்தை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உணர்ந்துள்ளனர் என்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த செயற்கை காலானது மரத்தால் செய்யப்பட்டுள்ளது.

அதில் தோலினாலான வாரை கட்டுவதற்கு பயன்படுத்தியுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அந்தக் காலில் கட்டைவிரலில் நகம் இருப்பதை போன்றும் தத்ரூபமாக செதுக்கியுள்ளனர். இந்த செயற்கை கால் குறித்து தொல்பொருள் ஆய்வாளர்கள் தற்போது ஆய்வு நடத்தி வருகின்றனர்.

4

3,000-YEAR-OLD WOODEN TOE DISCOVERED

A big wood-and-leather toe from Egypt is the oldest prosthetic discovered so far, researchers believe, and provides an insight into the world of ancient medicine.

Experts found the 3,000-year-old Greville Chester artificial toe attached to a mummy in a tomb near the city of Luxor in 1997; it has been in the Cairo museum ever since. A re-examination of the toe has presented new findings.

Researchers at the University of Basel found that the wooden toe had been refitted several times to the shape of the woman who wore it, that it had signs of wear and that the user, a priest’s daughter, wanted the prosthetic device to be comfortable.

“By using a sophisticated way of fixing the individual parts of the prosthesis to each other, the artificial limb had a balancing effect and gave, to some extent, a freedom of movement,” Andrea Loprieno-Gnirs of the University of Basel told CNN.

Prosthetics replace missing limbs or body parts, allowing those who require them to operate freely. Scientists now believe that this toe is the earliest incarnation of a wearable, aritificial limb. “There is no other prosthetic device known of this old age displaying the same sophistication. It is a unique piece,” Loprieno-Gnirs said.

Researchers used modern technologies such as X-rays, microscopy and computer imaging to identify details about the prosthetic.  “The fact that the prosthesis was made in such a laborious and meticulous manner indicates that the owner valued a natural look, aesthetics and wearing comfort, and that she was able to count on highly qualified specialists to provide this.”

Source One India and News week

 

எகிப்தில் 3,000 ஆண்டு பழமையான 30 அடி உயர சிலை

எகிப்து நாட்டில், நைல் நதியின் கரையில் மாபெரும் தலைநகரம் கெய்ரோ. கெய்ரோவின் எல்-மெத்தரியா பகுதியில், கடந்த 2012ஆம் ஆண்டு முதல் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் வரலாற்று ஆய்வினை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தற்போது, 30அடி உயர குவார்ட்சைட் (quartzite) சிலை ஒன்றை, உடைந்த நிலையில்  பூமிக்கு அடியில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் தோண்டி எடுத்துள்ளனர். இந்தச் சிலையானது சுமார் 3000 வருடப் பழமையான சிலை எனவும், எகிப்தை ஆட்சி செய்த மன்னர்களின் வம்சத்தில், 19வது வம்சத்தின் முன்றாவது மன்னரான, இரண்டாம் ராமேசஸின் உருவச்சிலையாக இருக்கலாம் என எகிப்திய நாட்டின் மாநில தொல்பொருள் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், இந்தச் சிலையில் இருக்கும் உருவம் இரண்டாம் ராமேசஸிஸ் தான் என்பதற்கு தகுந்த ஆதாரம் இல்லை,ஆனால்  சிலை கண்டெடுக்கப்பட்ட இடம் பண்டைய எகிப்து நகரமாக விளங்கிய ஹெலியோபொலிஸ் பகுதி என்பதால் தொடர்ந்து ஆய்வு செய்வதன் மூலமே உறுதிப்படுத்த முடியும் என்றனர். சிலை கி.மு. (664 to 610 BC) ஒன்றாம் சமெட்டிச் (King Psammetich I) என்ற மன்னனுடயதாக ‘இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது ஏனென்றால் நேபா (‘Nebaa” ) என்ற பெயர் சிலையில் பொறிக்கப்பட்டிருக்கிறது. அது ஒன்றாம் சமெட்டிச்சை குறிப்பதாகும்.

தற்போது பூமிக்கு அடியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ள 30 அடி உயரச் சிலையின் பாகங்களை மீண்டும் அதேபோல பொருத்த முடியுமா,  உருவம் கொடுத்து புதுப்பிக்க முடியுமா என்று முயற்சி செய்து வருகிறார்கள் ஆய்வாளர்கள், தொடர்ந்து அந்தப் பகுதியில் ஆய்வுகளும் நடந்து வருகின்றன. 2018-ஆம் ஆண்டில் இச்சிலை, தி கிராண்ட் எகிப்திய அருங்காட்சியகம் இருக்கும் இடமான கிசாவிற்குக் கொண்டு செல்லப்பட்டு திறக்கப்பட உள்ளது.

இந்த ஆய்வு சமீபத்தில் எகிப்தில் செய்யப்பட்ட ஆய்வுகளில் மிக முக்கிய தொல்லியல் ஆய்வாகப் பார்க்கப்படுகிறது.

red ribbon with bow with tails

Massive Statue of Ancient Egyptian Pharaoh Found in Cairo

Archaeologists from Egypt and Germany have discovered the remains of an ancient Egyptian statue they believe could depict one of history’s most famous rulers.

The statue was found submerged in groundwater in a working-class neighborhood of Cairo. The 26-foot statue is made of quartzite and could be up to 3,000 years old. The Antiquities Ministry in Egypt is hailing the discovery as significant. The discovery’s proximity to a temple devoted to Ramses suggest the statue is of his likeness, the ministry says. However it is also thought to be that King Psammetich I, who ruled Egypt from 664 to 610 BC. The biggest clue pointing to the statue’s  identity was the discovery of an inscription on it that read “Nebaa,” a name closely linked to Psammetich I.

The discovery was made by a joint effort between Egypt’s Ministry of Antiquities and researchers from the University of Leipzig. A rising water table, industrial waste, and piling rubble have made excavation of the ancient site difficult.  Researchers believe many more remains of the ancient world lie hidden under the wider city of Cairo.

Source விகடன் and National Geographic