முதலையை போன்ற அமைப்புடைய டைனோசர் – டெலியோக்ரட்டர்

முதலையை போன்ற அமைப்புடைய, டைனோசர் குடும்பத்தை சேர்ந்த 245 மில்லியன் ஆண்டுகள் பழைமையான  நான்கு காலில் நடந்த ,ஒரு பெரும் ஊர்வனத்தின் புதைப்படிமானங்களை தன்சானியா நாட்டில், விஞ்ஞானிகள் கண்டெடுத்துள்ளனர் . ஆறடி நீள ஊர்வனத்திற்கு டெலியோக்ரட்டர் ராடினஸ் (Teleocrater rhadinus) என்று பெயர் வைத்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு ஆரம்ப கால விலங்குகள் பற்றிய அடிப்படை கோட்பாடுகளை மாற்றியமைக்கிறது.

இது இரண்டு அடி உயரமாகவும், இருபது முதல் அறுபத்தைந்து பவுண்ட் எடை கொண்டதாகவும் இருந்திருக்கும். சில உடல் அமைப்புகள் டைனோசர் இன பறவைகளை ஒத்திருந்தாலும் அதன் மற்ற உடல் அமைப்புகள் முதலையை ஒத்திருந்தன.

முன்பு முதலை இனம் பரிணாம வளர்ச்சி அடைந்து பறவை வகை டைனோசர் இனம் உருவானது என்று எண்ணி இருந்தனர். ஆனால் இடையில் டெலியோக்ரட்டர் இனம் ஓன்று இருந்திருக்கிறது.

டெலியோக்ரட்டர், டைனோசர்க்கும் முதலை இனத்திற்கும் இடையில் உள்ள ஒரு விடுபட்ட இணைப்பாகும் (missing link).

1

Early dinosaurs were similar to crocodiles

Scientists have unearthed fossils of the earliest known dinosaur relative, a 245-million-years old giant reptile that walked on four legs like a crocodile.

The six-foot-long, lizard-like carnivore, called Teleocrater rhadinus, was discovered in Tanzania. The finding fundamentally changes our ideas about the evolution of the prehistoric animals.

It is the earliest member of the bird-like side of the family. It is not a direct ancestor of dinosaurs, but it’s the oldest known dinosaur cousin, researchers said.

Teleocrater did not look much like a dinosaur. It resembled the monitor lizards alive today, researchers said.

It was between six and ten feet long, including its long neck and longer tail and it probably weighed between twenty and sixty-five pounds. It likely stood around two feet tall at the hip.

Some of its features, like the jaw muscle attachments at the back of its skull, clearly put it in the bird-like archosaur camp with the dinos, it has a lot in common with its more distant crocodilian cousins, researchers said.

We used to think that many of the distinctive features of bird-line archosaurs evolved very quickly after they diverged from the crocodile line because early bird-line archosaurs like Marasuchus, Dromoeron, and Lagerpeton were small and very dinosaur-like,” said Ken Angielczyk, associate curator at The Field Museum in the US.

“However, Teleocrater shows us that bird-line archosaurs initially inherited many crocodile-like features from the common ancestor of all archosaurs, and that the ‘typical’ bird-line features evolved in a step-wise fashion over a longer period of time,” Mr. Angielczyk said.

Teleocrater is a missing link between dinosaurs and the common ancestor they share with crocodiles, he said.

Source: Hindu

அழிவிலிருந்து மீண்ட ஜென்ட்டூ பெங்குவின்கள்

அன்டார்டிகா பகுதியிலுள்ள ஆர்ட்லி தீவில், கடந்த, 7,000 ஆண்டுகளாக, ‘ஜென்ட்டூ'(Gentoo penguins) என்ற வகையைச் சேர்ந்த பெங்குவின்கள் வாழ்ந்து வருகின்றன. இவை இத்தனை ஆண்டுகளில் குறைந்தது, மூன்று முறையாவது முற்றிலும் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டு, பின், மீண்டும் பெருகி வந்துள்ளன என்பதை, ‘பிரிட்டிஷ் அன்டார்டிக் சர்வே’ அமைப்பைச் சேர்ந்த ஸ்டீபன் ராபர்ட்ஸ் குழுவினர் கண்டறிந்துள்ளனர்.

அருகில் உள்ள எரிமலை தீவான Deception Island எரிமலையிலிருந்து வரும் எரிமலைச் சாம்பல்களால் ஆர்ட்லி தீவு,  மூடப்பட்டபோது, உயிர் தப்பிய பெங்குவின்கள் நீந்தி பிற பகுதிகளுக்கு தப்பிப் போய், மீண்டும் திரும்பி வந்துள்ளன. ஆனால் பெங்குவின் குஞ்சுகளும், முட்டை இடும் இடங்களும் அழிந்து போயின. மீண்டும் பழைய நிலைக்கு, (பெங்குவின்களும், ஆர்ட்லி தீவும்) திரும்ப கிட்டத்தட்ட 400 முதல் 800 ஆண்டுகள் ஆயின.

இந்த ஆராய்ச்சி, மற்ற இடங்களில் எரிமலையால் பெங்குவின் இனங்களிடம் ஏற்பட்ட பாதிப்பை பற்றி அறிய உதவும் என்று கூறுகின்றனர்.

banner-154181_960_720

Antarctic penguin colony repeatedly decimated by volcanic eruptions

One of the largest colonies of gentoo penguins in Antarctica was decimated by volcanic eruptions several times during the last 7,000 years according to a new study. An international team of researchers, led by British Antarctic Survey (BAS), studied ancient penguin guano and found the colony came close to extinction several times due to ash fall from the nearby Deception Island volcano

On at least three occasions during the past 7,000 years, the penguin population was similar in magnitude to today, but was almost completely wiped out locally after each of three large volcanic eruptions. It took, on average, between 400 and 800 years for it to re-establish itself sustainably.”

An eruption can bury penguin chicks in abrasive and toxic ash, and whilst the adults can swim away, the chicks may be too young to survive in the freezing waters. Suitable nesting sites can also be buried, and may remain uninhabitable for hundreds of years.”

The techniques developed in this study will help scientists to reconstruct past changes in colony size and potentially predict how other penguin populations may be affected elsewhere. For example, the chinstrap penguins on Zavodovski Island, which were disturbed by eruptions from the Mt Curry volcano in 2016.

Source Science Daily

பறவைகளை பார்த்தால் மன அழுத்தம் குறையும்

பறவைகளைத் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு மன அழுத்தம் குறைந்து, உற்சாகம் பிறக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. க்வீன்ஸ்லாந்து பல்கலைகழகமும் இங்கிலாந்தை சேர்ந்த எக்ஸீடர் பல்கலைக்கழகமும் டாக்டர் டேனியல் காக்ஸ் (Dr Daniel Cox), தலைமையில் இந்த ஆய்வை நடத்தின. அதில், பறவைகளைத் தொடர்ந்து பார்த்து அல்லது கவனித்து வருபவர்களுக்கு மன அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு ஆகியவை குறைவாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. எந்த பறவை என்றில்லை, எத்தனை பறவைகளை பார்கிறோமோ அந்தளவு மகிழ்ச்சி அதிகமாகும்,மன அழுத்தம் குறையும்.

இதுதவிர, வசிக்கும் வீட்டைச் சுற்றி புதர்கள், மரங்கள் ஆகியவை இருப்பதும் மனிதர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கும் எனவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. அதனால், நகரத்தில் வசிப்பவர்களை விட இயற்கையோடு இணைந்து வாழ்பவர்களே அதிக மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள் என்கிறார் காக்ஸ்.

Source Telegraph