மரபணு பிறழ்வை தவிர்க்கும் ஓக் மரம்

நுாற்றாண்டுகள் கண்ட உயிருள்ள மரங்களின் மரபணுக்களில், நிறைய பிறழ்வுகள் நிகழும் என்றே தாவர மரபணுவியல் வல்லுனர்கள் கருதி வந்தனர். ஆனால், பயோஆர்க்சைவ்.ஆர்க் இணைய தளத்தில், நம்ரதா சர்க்கார் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள், 234 வயதான ஓக் மரம் ஒன்றின் மரபணுக்களை அலசியபோது, அவற்றில் மிகக் குறைவான மரபணு பிறழ்வுகளே ஏற்பட்டிருந்ததை கண்டறிந்துள்ளனர். விலங்குகளைப் போலல்லாமல், நெடுநாள் வாழும் மரங்கள், ஏதாவது வகையில் மரபணுப் பிறழ்வை தவிர்க்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

red ribbon with bow with tails

Low Rate of Somatic Mutations in a Long-Lived Oak Tree

Because plants do not possess a proper germline, deleterious mutations that occur in the soma can be passed to gametes. It has generally been assumed that the large number of somatic cell divisions separating zygote from gamete formation in long-lived plants should lead to many mutations. However, a recent study showed that surprisingly few cell divisions separate apical stem cells from axillary stem cells in annual plants, challenging this view. To test this prediction, Namrata Sarkar and other scientists generated and analysed the full genome sequence of two terminal branches of a 234-year-old oak tree and found very few fixed somatic single-nucleotide variants (SNVs), whose sequential appearance in the tree could reliably be traced back along nested sectors of younger branches. Our data indicate that the stem cells of shoot meristems in trees are robustly protected from accumulation of mutations, analogous to the germline in animals.

Source Dinamalar and biorxiv.org

மாடுகளுக்கு மரபணு திருத்தம்

உலகெங்கும் வெளியேற்றப்படும் மொத்த, ‘பசுமைக் குடில்’ வாயுக்களில், 9.5 சதவீதம் மாடுகள் மூலமே காற்று வெளியில் கலக்கின்றன. இதை குறைக்க, மாடுகளின் ஆராய்ச்சியாளர்கள் வயிற்றில் உள்ள  பாக்டீரியாக்களை மரபணு மாற்றம் செய்யும் முயற்சியில் இறங்கி இருக்கின்றனர்.

ஆனால் கனடா அரசு, மாடுகளையே மாற்ற ‘மாடுகள் மரபணு திட்டத்தை’ (Genome Canada project) துவங்கியிருக்கிறது. உலகெங்கும் மாட்டு இனங்களில், சில மாடுகள் பசுமைக் குடில் வாயுக்களை குறைவாக வெளியேற்றுகின்றன என்கின்றனர். அப்படிப்பட்ட மாடுகளின் மரபணு ரகசியத்தை அறிந்து, அந்த மரபணு தன்மைகளை தங்கள் நாட்டு மாடுகளுக்கும் கொண்டு வருவதுதான் கனடாவின் திட்டம். இதற்கென, கனடாவின் தனியார் மாட்டுப் பண்ணைகளிலுள்ள 10ஆயிரம் மாடுகளுக்கு மரபணு திருத்தம் செய்யும் திட்டத்தை கனடா அரசு துவங்கியிருக்கிறது.

balls

Genome Canada project

Bovine livestock are responsible for about 9.5 percent of global greenhouse gas output, according to the Food and Agriculture Organization of the United Nations.  Some scientists at Pennsylvania State University are even genetically modifying the bacteria in cow guts.

But scientists are also tweaking the cows themselves. The Genome Canada project … harnesses labs in the US, UK, Denmark, Australia, and Switzerland to help identify cows that produce fewer greenhouse gases, with the ultimate goal of distributing the responsible genes—conveniently transported in the form of bull semen—to areas that don’t have the resources to develop their own greener cows.

Source Dinamalar and Genetic Literacy Project

கண்ணாடித் தவளை

தவளை இனங்களில், கண்ணாடித் தவளைகள் (Hyalinobatrachium genus) உண்டு. இவற்றின் வயிற்றுப் பகுதிக்குள் இருப்பவை அப்படியே தெரியும். ஆனால், அமேசானின் ஈக்வடார் வனப் பகுதியில், விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள புதிய கண்ணாடித் தவளை, சற்று வித்தியாசமானது. இதன் வயிற்றுப் பகுதி மட்டுமல்ல, அடி நெஞ்சுப் பகுதியும் அப்படியே வெளியே தெரிகிறது. ஆம், அதன் இதயம் துடிப்பதைக்கூட நம்மால் பார்க்க முடியும். ஆனால் இதன் முதுகுப் பகுதியில் பச்சைப் புள்ளிகள் கொண்ட தோல் மூடியிருக்கிறது. மொத்தம், 2 செ.மீ., நீளமே உள்ள இந்த தவளைகள், இலைக்கு அடியில் பெரும்பாலும் இருப்பவை. எனவே தான், இத்தனை காலமாக, உயிரியல் விஞ்ஞானிகளின் கண்களில் படாமல், தப்பித்திருக்க முடிந்தது. இந்த தவளைக்கு ‘ஹயாலினோபாட்ராசியம் யாகு’ (Hyalinobatrachium yaku ) என்ற உயிரியல் பெயரிடப்பட்டுள்ளது.

5

Transparent frog

There are transparent frogs in the Hyalinobatrachium genus, some of which have been observed in the wild and some of which have been preserved as museum specimens. They are all about the same size and most of them are at least partly transparent on the abdomen. But the very act of preserving the animals for collections causes some discoloration of the skin, so other markings—such as telltale spots and different shades of green and yellow—may be lost or become indistinct.

A team of researchers led by ecologist and biologist Juan M. Guayasimin of the Universidad San Francisco de Quito in Ecuador Guayasimin reckoned that the Amazon rainforest could use one more going-over to determine if there were more species within the genus to be found. They surveyed 65-ft. (20 m) diameter plots near relatively narrow, shallow streams that the Hyalinobatrachium frogs were known to favor. In short order they found what they were looking for.

The new species, Hyalinobatrachium yaku which takes its name from yuka, the word for water in the local Kichwa language, is distinct from other members of the genus in a few ways: the mating call is different, with an amplitude and duration unique to the species; the DNA is different; and the covering of transparent abdominal skin is significantly larger, reaching up to the chest and exposing the heart.

The species’ metaphorical heart is special too—at least when it comes to the males. Unlike other dads-to-be in the Hyalinobatrachium genus, the yaku males look after the clutch of eggs the female lays, protecting them from harm until they hatch. Still, there are certain kinds of harm that even the most vigilant male can’t prevent. The investigators cite numerous threats to the frogs’ habitat—including oil extraction, road development and stream pollution. The hope, as always, is that once people learn about the remarkable species that make the rainforest their homes, the forest itself might be tended more gently.

Source Dinamalar and Time

ஆபத்தை எச்சரிக்கும் தாவரங்கள்

ஒரு செடி, தனக்கு ஆபத்து ஏற்பட்டதும், அக்கம் பக்கத்திலுள்ள தாவரங்களை, பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கும் என்பதை தாவரவியல் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அமெரிக்காவிலுள்ள டிலாவேர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், ஆய்வுக்கூடத்தில் (University of Delaware) கடுகு செடிகளை வைத்து இரண்டு ஆண்டுகள் செய்த ஆய்விற்குப் பின் இந்த முடிவுக்கு வந்துள்ளனர். ஒரு செடியின் சில இலைகள் கொய்யப்பட்ட பிறகு, இலைகளில் சில வேதிப் பொருட்களை உற்பத்தி செய்து காற்றில் பரப்புவதன் மூலம், மற்ற செடிகள் அதை புரிந்துகொள்கின்றன.

Harsh Bais & Connor Sweeney - DBI

ஆபத்து என்ற தகவல் கிடைத்ததும், அக்கம்பக்கத்து செடிகள், மறு நாளே சற்று வேகமாக வளர்ந்திருப்பதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது பாதுகாப்பு கருதி மேற்கொள்ளப்படும் செயல் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

2

PLANTS CALL 911, TOO

Injured plants warn neighbors of danger, University of Delaware study finds. In studies of Arabidopsis thaliana, also known as mustard weed, the University of Delaware team found that when a leaf was nicked, the injured plant sent out an emergency alert to neighboring plants, which began beefing up their defenses.

“A wounded plant will warn its neighbors of danger,” says Bais, who is an associate professor of plant and soil sciences in UD’s College of Agriculture and Natural Resources. “It doesn’t shout or text, but it gets the message across. The communication signals are in the form of airborne chemicals released mainly from the leaves.”

“The reason why the uninjured plant is putting out more roots is to forage and acquire more nutrients to strengthen its defenses,” Bais says. “So we began looking for compounds that trigger root growth.”

They  measured auxin, a key plant growth hormone, and found more of this gene expressed in neighboring plants when an injured plant was around. He also confirmed that neighbor plants of injured plants express a gene that corresponds to a malate transporter (ALMT-1). Malate attracts beneficial soil microbes, including Bacillus subtilis, which Bais and his colleagues discovered several years ago. Apparently, uninjured plants that are in close proximity to injured ones and that have increased malate transporter associate more with these microbes. These beneficials bond with the roots of the uninjured plants to boost their defenses.

Source Dinamalar and UDel

தனித்துவமான மரபணு பெற்ற ஷெர்பாக்கள்

நேபாள நாட்டைச் சேர்ந்த ஷெர்பா இன மக்களின் உடல்கூறு இயற்கையாகவே பிராணவாயுவை திறமையாக பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

இமய மலைப் பிரதேசத்தைப் பார்க்கவருபவர்களை விட, குறைந்த பிராணவாயு உள்ள சூழலில் ஷெர்பா மக்கள் மட்டும் மூச்சுத்திணறலை சமாளிக்க முடிகிறது என்பது நீண்டகாலமாக ஒரு புதிராக இருந்தது.

மலையேறுபவர்கள், குறைந்த பிராணவாயு இருக்கும் இடத்திற்கு ஏற்றவாறு தங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டுமெனில் அவர்களின் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கவேண்டும். அதன்மூலம் பிராணவாயுவை கொண்டுசெல்லும் திறனை அதிகரிக்கமுடியும்.

இதற்கு மாறாக, ஷெர்பா மக்களின் ரத்தம் இயற்கையாகவே லேசானதாக, குறைவான ரத்த அணுக்கள் மற்றும் பிராணவாயுவை கொண்டதாக உள்ளது.

புதிய தசை மாதிரிகளை உயிர்வேதியல் சோதனைக்கு உட்படுத்தியபோது, ஷெர்பா மக்களின் திசுக்கள், உடல் கொழுப்பு எரிவதை கட்டுப்படுத்தி, குளுக்கோஸ் நுகர்வவை அதிகரித்து, கிடைக்கும் பிராணவாயுவை சிறப்பாக பயன்படுத்தி கொள்கின்றன என்பது தெரிய வந்தது. சர்க்கரைச் சத்தை எரித்துக்கொள்வதன் மூலம், ஒரு ஆக்ஸிஜன் யூனிட்டை சுவாசிப்பதால் கிடைக்கும் கலோரிகளை அதிகப்படுத்திக்கொள்கின்றன.

ஷெர்பா மக்கள் நேபாளத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட இனத்தை சேர்நதவர்கள். அவர்கள் சுமார் 6,000 ஆண்டுகளாக மனிதர்கள் வாழ்ந்த பகுதியான திபெத் பகுதியில் இருந்து 500 ஆண்டுகளுக்கு முன்பாக நேபாளத்திற்கு இடம்பெயர்ந்தவர்கள். ஒரு பயனுள்ள மரபணு அவர்களுக்குள் உருவாக இது அதிகமான நேரம்தான்,” என்றார் ஆய்வின் மூத்த ஆராய்ச்சியாளர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆண்ட்ரூ முரே.

2

Lean-burn physiology gives Sherpas peak-performance

Nepalese Sherpas have a physiology that uses oxygen more efficiently than those used to the atmosphere at sea level.

It has long been a puzzle that Sherpas can cope with the low-oxygen atmosphere present high in the Himalayas far better than those visiting the region. Mountaineers trekking to the area can adapt to the low oxygen by increasing the number of red cells in their blood, increasing its oxygen-carrying capacity.

In contrast, Sherpas actually have thinner blood, with less haemoglobin and a reduced capacity for oxygen (although this does have the advantage that the blood flows more easily and puts less strain on the heart).

The biochemical tests on the fresh muscle showed was that the Sherpas’ tissue was able to make much better use of oxygen by limiting the amount of body fat burned and maximising the glucose consumption. In other words, by preferentially burning body sugar rather than body fat, the Sherpas can get more calories per unit of oxygen breathed.

Sherpas are a specific population amongst the Nepalese (“the Ferraris of the Himalayans”, Formenti calls them) who migrated to the country 500 years ago from Tibet, which has been occupied by humans for at least 6,000 years. That is plenty of time for a beneficial gene to become embedded, says Cambridge University’s Prof Andrew Murray, the senior author on the new study.

Other recent studies have shown that some genes that help Tibetans survive at high altitude come from the recently discovered extinct human species known as the Denisovans, although there is no evidence yet that the metabolic gene is among them.

Source BBC

 

சீப்பு ஜெல்லி – உலகில் முதலில் தோன்றிய விலங்கினம்

ஒரு வகை ஜெல்லி தான் உலகில் முதன்முதலில் தோன்றிய விலங்கு வகை ஊயிரினம். அதாவது நமக்கு மூதாதையர் ஒரு ஜெல்லி.

சுமார் நூறு ஆண்டுகளாக மிக ஆரம்ப நிலை உயிரினமான ஸ்பான்ஜ் தான் விலங்கினத்தில் முதலில் தோன்றியது என்று நம்பப்பட்டு வந்தது. அனால் அமெரிக்க பல்கலை கழகத்தின் விஞ்ஞானிகளால் (Vanderbilt and Wisconsin-Madison universities ) சமீபத்தில் நடத்தப்பட்ட மரபியல் ஆய்வில், சீப்பு ஜெல்லி என்ற உயிரினம் தான் தொன்மையான விலங்கினம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2008ம் ஆண்டிலேயே இந்த வாதம் முன் வைக்கப்பட்டது. அப்போது அது பெரிய  சர்ச்சையை விஞ்ஞானிகளுக்குள்ஏற்படுத்தியது. ஆனால் இப்போது அது மரபியல் ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

பல்வேறு உயிரினங்களின் மரபணு தொடர்களை ஆராய்ந்து அவை எந்த உயிரினத்தின் மரபணு தொடரை ஒத்திருக்கிறது என்று கண்டுபிடித்து இறுதியில் சீப்பு ஜெல்லி தான் முதல் விலங்கினம் என்று தெரிய வந்ததாக ஆராய்ச்சியை மேற்கொண்ட  பேராசிரியர்  அந்தோனிஸ் ரோகாஸ் (Professor Antonis Rokas) தெரிவிக்கிறார்.

1

A jelly is the ultimate ancestor of all animal life

The earliest form of animal life on Earth was a jelly, according to a new genetic analysis which claims to have overturned one aspect of the theory of evolution.

For nearly a century, it has been thought our ultimate ancestor was a sponge because it is such a simple kind of life.

In 2008, one study suggested comb jellies – or ctenophores – should be accorded this title, but this sparked a major controversy with supporters of the sponge origin theory hitting back.

The researchers, from Vanderbilt and Wisconsin-Madison universities, said that previously scientists trying to work out the relationships between different animals had collected large amounts of genetic data then built a plausible family tree.

Professor Antonis Rokas, of Vanderbilt, said: “This has worked extremely well in 95 per cent of the cases, but it has led to apparently irreconcilable differences in the remaining five per cent.”

“The trick is to examine the gene sequences from different organisms to figure out who they identify as their closest relatives,” Professor Rokas said.

“When you look at a particular gene in an organism, let’s call it A, we ask if it is most closely related to its counterpart in organism B? Or to its counterpart in organism C? And by how much?”

This still involved examining hundreds or thousands of genes.

The results of this analysis found a so-called “phylogenetic signal” that favoured comb jellies over sponges with considerably more genes supporting the former’s claim to be the original animal.

Source: Independent

மரத்தில் வசிக்கும் நண்டுகள்

கேரளாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள மரங்களில்  வாழும் புதிய நண்டு இனத்தை கண்டுபிடித்துள்ளனர் கேரளா பல்கலை கழகதத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். ஆந்த பகுதியில் வாழும் கனி என்ற பழங்குடி இனத்தவரின் பெயரில் இந்த நண்டிற்கு கனி மரஞ்சடு (Kani maranjandu ) என்று பெயர் வைத்துள்ளனர்.

அதன் கடின மேல் ஓடு, ஆண் வயிற்று பகுதி மற்றும் இனப்பெருக்க பாகங்கள், மற்றும் நீண்ட கால்கள் ஆகியவை மற்ற நண்டு இனங்களிடம் காணப்படாத சிறப்பு இயல்புகளாகும்.

பெரிய மரங்களில் காணப்படும் தண்ணீர் தேங்கக்கூடிய அளவில் உள்ள பெரிய பொந்துகளில் இந்த கனி மரஞ்சடு நண்டு இனங்கள் உயிர்வாழுகின்றன.

stock-vector-shiny-red-ribbon-on-white-background-with-copy-space-vector-illustration-324743945

New tree-living crab species found in Kerala

Scientists have discovered a new species of long legged, tree-dwelling crabs in Western Ghats of Kerala.

The new species named Kani maranjandu after the Kani tribe in Kerala, are substantially different from other congeners.

The characteristic traits of the crab include the structure of its hard upper shell, its male abdominal structure and reproductive parts and diagnostic elongated walking legs, which no other genus has, said researchers from University of Kerala.

This is the first report of its kind to offer a record of an arboreal crab — a species that lives in trees. Water holding hollows in large trees are essential for the survival of this unique species.

Source Hindu

அம்பரில் டைனோசர் வால்

அம்பர் (Amber) அதன் பொன்னிற அழகுக்காக மட்டுமல்ல அதன் உள்ளிருக்கும் மில்லியன் ஆண்டு பழமையான சிறிய உயிரினங்களுக்காகவும் விலை மதிப்புமிக்கதாகுகிறது. அது ஒரு மகத்தான புதைபடிவம்.

ஜூராசிக் பார்க் படத்தில் அம்பரில் டைனோசரை கடித்த கொசு இருப்பதாக காட்டியதை தொல்லுயிரியல் வல்லுநர்கள் (paleontologist )  கிண்டலடித்தார்கள். ஆனால் இப்போது டைனோசரின் ஒரு சிறிய பகுதியே அம்பருக்குள் கிடைத்திருக்கிறது

ep_xingmckellar_maniraptora_amber-by-cheung-chung-tat_jpg_16x9
மரப்பிசினில் டைனோசரின் வால் இப்படி மாட்டியிருக்கலாம்

தொல்லுயிரியல் வல்லுநர்கள், தொல்லுயிர்களை புதைபடிவங்களிலும், எலும்புகளிலும்  தேடிக்கொண்டிருந்த போது, சீன பல்கலைகழகத்தில் தொல்லுயிரியல் வல்லுநராக இருக்கும் லிடா ஜின்க் (Lida Xing) அம்பர்களில் தேடிக்கொண்டிருந்தார். மியான்மர் கடையில் கிடைத்த ஒரு சிறிய அப்ரிகாட் அளவு அம்பரை, சி.டி. ஸ்கேன் மற்றும் நுண்ணுயிர் நோக்கி கொண்டு ஆராய்ந்த போது அது 99 மில்லியன் பழமையான ஆம்பர் என்றும் அதனுள் ஒரு சிறிய டைனோசரின் ரத்தத்துடன் கூடிய வால் பகுதி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. வால் பகுதியில் மெல்லிய இறகுகள் இருந்தாலும் அவை பறவையுடையது அல்ல என்றும் உறுதி செய்தனர். இறகுகளின் பரிணாம வளர்ச்சியை அறிய இந்த ஆராய்ச்சி உதவும் என்கின்றனர்.

Source National Geographic

உயிர்த்தெழும் மேமோத் (Mammoth)

அடர்த்தியான ரோமங்களை உடைய மேமோத் எனப்படும் யானை வகை விலங்கு பூமியிலிருந்து அழிந்து 4௦௦௦ ஆண்டுகள் கடந்துவிட்டன. அனால் ஹார்வர்ட் பல்கலைகழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் மரபணு பொறியியல் ( Genetic Engineering) மூலம் மேமோத்தை மீண்டும் பூமிக்கு கொண்டு வரும் மகத்தான முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

ப்ரோபசர் ( Professor  George Church) ஜார்ஜ் சர்ச்  தலைமையிலான இந்த குழு, இன்னும் இரண்டு ஆண்டுகளில் மேமொபேன்ட்  ( mammophant) என்று பெயரிடப்பட்டுள்ள யானை மற்றும் மேமோத்தின் கலப்பின கருவை (Hybrid embryo) உருவாக்குவோம் என்று உறுதியளித்துள்ளனர். இது ஆசிய யானையின் வடிவில் இருக்கும் .அனால் மேமோத்தின் சிறப்பம்சங்களான சிறிய காது, தோலுக்கு அடியில் கொழுப்பு, நீண்ட கரடு முரடான ரோமங்கள் மற்றும் குளிர் பிரதேச இரத்தம் (cold-adapted blood) முதலியவை கொண்டிருக்கும்.

பல நூற்றாண்டுகளாக சைபீரியா பனிக்கட்டியில் உறைந்து கிடந்த மேமோத் பாகங்களிருந்து கிடைக்கபெற்ற டி.ஏன்.ஏவை கொண்டு மரபணு எடிட்டிங் நுட்பங்கள் ( Gene editing Technique) மூலம் மேமொபேன்ட் செல்கள் உருவாக்கி இருக்கின்றனர். க்ளோனிங் நுட்பங்கள் மூலம் இரண்டு வருடங்களில்  கருவை உருவாக்கி, (யானையின் கருவறையில் வைக்காமல்) செயற்கை கருவறையில் வைத்து மேமொபேன்ட்டை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். செயற்கை கருவறையில் உருவாகுவதால்,பிறப்பிற்கு முன் தாயுடன் உள்ள தொடர்பு இருக்காது.

மேமொபேன்டால் கீழ்கண்ட இரண்டு நன்மைகள் ஏற்படும் என்று ஜார்ஜ் சர்ச் தெரிவித்தார்.

ஓன்று — அழிவின் விளிம்பில் இருக்கும் ஆசிய யானைகளுக்கு மாற்று எதிர்காலம் கிடைக்கும்.

இரண்டு — உலக வெப்பமயமாதல் குறைக்கப்படும். பனிப்பிரதேசத்தில் நிரந்தர பனிக்கட்டிகள் உருகுவதை குறைக்கும்.

Source The Guardian