இதயத்தை காக்கும் கொட்டை பருப்புகள்

கண்டுபிடிப்பு: கொட்டை பருப்புகளை உட்கொள்ளும் நீரிழிவு நோயாளிகளுக்கு இதய நோய் வரும் வாய்ப்பு குறைவு.

ஆராய்ச்சியாளர்கள்:பாஸ்டன் ஹார்வர்ட் சான் போது சுகாதார கல்லூரியின் ஆராய்ச்சியாளர் காங் லியு (Gang Liu, Ph.D. a nutritional sciences researcher at the Harvard T.H. Chan School of Public Health in Boston) தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கலிபோர்னியா பல்கலைகழகத்தின் மருத்துவ பேராசிரியர் பிரகாஷ் தீத்வனியா (Prakash Deedwania, M.D)

விவரம்: பாதாம்,முந்திரி,பிஸ்தா,வால்நட் போன்ற கொட்டை பருப்புகளை நீரிழிவு நோயாளிகள் உட்கொண்டால் அவர்களுக்கு இதய நோய் வரும் வாய்ப்பு குறைகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். நிலக்கடலையை விட மரத்தில் கிடைக்கும் கொட்டைகளுக்கே அதிக பலன் இருப்பதையும் கண்டு பிடித்திருக்கிறார்கள். கொட்டை பருப்புகள், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மற்றும் இரத்த அழுத்ததை சீராக வைத்தல்,மற்றும் கொழுப்பின் வளர்சிதைமாற்றத்திற்கு உதவுகிறது. இதனால் இதயத்திற்கு பயனளிக்கலாம் என்று எண்ணுகிறார்கள்.

Eating nuts tied to lower heart disease risk for diabetics

Research : Eating more nuts, particularly tree nuts, may reduce the risk of cardiovascular disease among people with type 2 diabetes

 Researchers : Gang Liu, Ph.D. a nutritional sciences researcher at the Harvard T.H. Chan School of Public Health in Boston, Massachusetts

Prakash Deedwania, M.D., a professor of medicine at the University of California-San Francisco School of Medicine

In detail : Type 2 diabetes is associated with an increased risk for high cholesterol, heart disease and stroke, and is a widespread public health problem. Nuts are chock full of unsaturated fatty acids, phytochemicals, fiber, vitamins such as vitamin E and folate, as well as minerals including calcium, potassium and magnesium.

Researchers found that eating all kinds of nuts especially tree nuts offered some heart-healthy benefits. Nuts improve blood sugar control, blood pressure, metabolism of fats, inflammation and blood vessel wall function. Also, researchers explain that tree nuts offer more benefits, because they contain higher levels of these nutrients than peanuts and also tree nuts are consumed with the skin or outer peel, in which most antioxidants reside, while peanuts are usually eaten without the peel. Results also showed that eating even a small amount of nuts had an effect.

The positive association with eating nuts continued independent of a person’s gender, smoking habits or body weight.

Source :Reuters

 

Advertisements

போதையில் வாகனம் ஓட்டுவதை தடுக்கும் சாதனம்

பெரும்பாலான விபத்துகளுக்குக் காரணம் குடி போதையில் வாகனம் ஓட்டுவதுதான் என்று சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்தியாவை சேர்ந்த ஆய்வாளர்கள் சிலர் ஒரு புதிய கருவியை உருவாக்கியுள்ளனர். இந்த கருவி பொருத்தப்பட்ட வாகனத்தை குடிபோதையில் உள்ளவர்கள் ஸ்டார்ட் செய்தால் ஸ்டார்ட் ஆகாது. உத்திராகண்ட் உள்ளுறை பல்கலை (Uttarakhand Residential University) மற்றும் ஆர்ஐ இன்ஸ்ட்ரூமென்ட் ஆய்வகத்தைச் (Haldwani-based RI Instruments and Innovation) சேர்ந்த ஆர்.பி. ஜோஷி(R.P. Joshi), ஆகாஷ் பாண்டே(Akash Pandey) குல்தீப் படேல்(Kuldeep Patel) உள்ளிட்ட நிபுணர் குழு இந்தக் கருவியை உருவாக்கியுள்ளது.

கிராபீன்(Graphene) பூச்சு பூசப்பட்ட எலெக்ட்ரோட் உணர் கருவிகளைக் கொண்டது இந்த கருவி. வாகனத்தை ஸ்டார்ட் செய்யும்முன்பு, டிரைவர் சீட்டில் அமர்ந்திருப்போர் ஒருவேளை மது அருந்தியிருந்தால், வாகனம் ஸ்டார்ட் ஆகாது. ஒருவேளை மது அருந்தாத நண்பரை ஊதச் செய்து, சிறிது மது அருந்தியிருப்பவர் காரை ஸ்டார்ட் செய்யலாம் என்றாலும் அதுவும் நடக்காது. இதில் உள்ள உணர் கருவி டிரைவர் இருக்கையில் அமர்ந்திருப்பவரின் சுவாசக் காற்றை உணர்ந்து உடனடியாக வாகன செயல்பாட்டை நிறுத்திவிடும். .

விபத்து ஏற்பட்டால் 10 நிமிடங்களுக்குள் போலீசுக்கு தகவல் சொல்லி விடும். இந்த கருவியில் உள்ள ஜிபிஆர்எஸ்-ஜிபிஎஸ் விபத்தின் போது வாகனத்தை கண்டுபிடிக்க உதவும்

balls

Device to prevent drunk driving

Uttarakhand Residential University  and Haldwani-based RI Instruments and Innovation in  India have jointly developed a device which will help in preventing cases of drunk driving. The new technology derived from waste products will make driving difficult if the driver is in an inebriated condition. The vehicle will also refuse to start in case the driver is feeling drowsy or talking on the phone.

Graphene – an allotrope of carbon generated from the waste products and wild grass – is one of the primary component used to make the prototype. The graphene-coated electrodes can catalyse the process of oxidation of ethyl alcohol into acetic acid. The driver has to blow the graphene-sensor on the device to start the vehicle. The sensor will detect the concentration of alcohol and if it is over the prescribed limit, the engine will not start.

In case the driver is falling asleep, the object and imaging module of the sensor will analyse his eye movements and will alert the co-passengers. In case of an accident, the device will automatically, within five to 10 minutes, dial phone number 100 to send an SOS to the police. The device is also equipped with GPRS-GPS and other bio-metric technologies which will help in identifying the location of the vehicle in case of an accident.

The device will be patented after which it will be tested extensively before it is used in vehicles.

Source : Economic Times

பறவை முட்டையின் வடிவமும் பறக்கும் திறனும்

பறவைகளின் முட்டைகள் பலவித வடிவங்களில் இருப்பதற்கு  பறவையியல் வல்லுனர்கள் பல காரணங்களை சொல்கின்றனர். உயரமான கூடுகளிலிருந்து உருண்டு விழாமல் இருக்க நீள் வட்ட முட்டைகளும், கீழே விழுந்தால் உடையாமல் காக்க, கோள வடிவ முட்டைகளும் உருவாகியிருக்கலாம் என்பது பலரது கருத்து.

ஆனால், அண்மையில், 14,000 பறவையினங்களின் 50 ஆயிரம் முட்டைகளின் வடிவங்களை ஆராய்ந்த ஹார்வர்டு மற்றும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக (Harvard University and Princeton University ) ஆராய்ச்சியாளர்கள், பறவைகளின் பறத்தல் திறனைப் பொறுத்து அவை இடும் முட்டைகளின் வடிவங்கள் மாறுபடக்கூடும் என்று விளக்கமளித்துள்ளனர்.

23tb-eggs03-master675.jpg

பறக்கும் திறன் வலுவாக உள்ள பறவைகளின் உடல் அமைப்பு பறப்பதற்கு ஏற்ற வகையில் இருப்பதால், அவற்றின் இனப் பெருக்க உறுப்பு சிறியதாக அமைந்திருக்கும். எனவே, அவை இடும் முட்டைகள் நீள்வட்ட வடிவில் இருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் தந்துள்ளனர்.

4

Why Do Bird Eggs Have Different
Shapes? Look to the Wings

Owls’ are spherical, hummingbirds’ are elliptical and sandpipers’ are pointy.

All bird eggs have the same function — to protect and nourish a growing chick. But they come in a brilliant array of shapes. This variety has puzzled biologists for centuries. Now, in the most comprehensive study of egg shapes to date, a team of scientists seems to have found an answer.

The researchers cataloged the natural variation of egg shapes across 1,400 bird species, created a mathematical model to explain that variation, and then looked for connections between egg shape and many key traits of birds. On a global scale, the authors found, one of the best predictors of egg shape is flight ability, with strong fliers tending to lay long or pointy eggs.

The authors conducted a multistep investigation that brought together biology, computer science, mathematics and physics. They first wrote a computer program, named Eggxtractor. With Eggxtractor, the researchers plotted nearly 50,000 eggs, representing all major bird orders, from a database of digital images by the Museum of Vertebrate Zoology in Berkeley, Calif.

Next, the researchers attempted to answer how eggs might acquire varying shapes. Rather than looking at the shell, as one might expect, they focused on the egg’s membrane (the film you see when peeling a hard-boiled egg), which is essential to the egg’s shape.

The scientists identified two parameters that could influence egg form: variations in the membrane’s composition and differences in pressure applied to the membrane before the egg hatches.

By adjusting these two parameters, “we were able to completely recover the entire range of observed avian egg shapes” — a good test of the model, said L. Mahadevan, a professor of applied math, biology and physics at Harvard University and an author of the study.

Finally, the researchers looked into why egg shapes might be so spectacularly diverse. One popular hypothesis centered on nest location: Cliff-nesting birds, it was thought, lay pointy eggs so that if the eggs are bumped, they spin in a circle rather than rolling off the cliff. Another suggested that birds lay eggs in shapes that pack together best in different-size clutches.

But when the authors related egg shape to these and other variables, they were surprised to find that none of them fit on a global scale (though they may still play important roles on smaller scales). Instead, egg shape was strongly correlated with a measure of wing shape, called the hand-wing index, which reflects flight ability.

Wandering albatrosses are one of the most far-ranging fliers — some have been known to circumnavigate the Antarctic Ocean three times in a year — and have elliptical eggs. Eastern screech owls rarely move beyond their small territory, where they tend to fly in short, low-powered glides, and have almost spherical eggs.

Source : Dinamalar and New York Times

மரபணு பிறழ்வை தவிர்க்கும் ஓக் மரம்

நுாற்றாண்டுகள் கண்ட உயிருள்ள மரங்களின் மரபணுக்களில், நிறைய பிறழ்வுகள் நிகழும் என்றே தாவர மரபணுவியல் வல்லுனர்கள் கருதி வந்தனர். ஆனால், பயோஆர்க்சைவ்.ஆர்க் இணைய தளத்தில், நம்ரதா சர்க்கார் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள், 234 வயதான ஓக் மரம் ஒன்றின் மரபணுக்களை அலசியபோது, அவற்றில் மிகக் குறைவான மரபணு பிறழ்வுகளே ஏற்பட்டிருந்ததை கண்டறிந்துள்ளனர். விலங்குகளைப் போலல்லாமல், நெடுநாள் வாழும் மரங்கள், ஏதாவது வகையில் மரபணுப் பிறழ்வை தவிர்க்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

red ribbon with bow with tails

Low Rate of Somatic Mutations in a Long-Lived Oak Tree

Because plants do not possess a proper germline, deleterious mutations that occur in the soma can be passed to gametes. It has generally been assumed that the large number of somatic cell divisions separating zygote from gamete formation in long-lived plants should lead to many mutations. However, a recent study showed that surprisingly few cell divisions separate apical stem cells from axillary stem cells in annual plants, challenging this view. To test this prediction, Namrata Sarkar and other scientists generated and analysed the full genome sequence of two terminal branches of a 234-year-old oak tree and found very few fixed somatic single-nucleotide variants (SNVs), whose sequential appearance in the tree could reliably be traced back along nested sectors of younger branches. Our data indicate that the stem cells of shoot meristems in trees are robustly protected from accumulation of mutations, analogous to the germline in animals.

Source Dinamalar and biorxiv.org

பட்டாம்பூச்சியும் சூரிய ஒளி தகடும்

புதிய பொருட்களை உருவாக்க இயற்கையிடமிருந்து விஞ்ஞானிகள் கற்றுக்கொள்வது பரவலாகியிருக்கிறது. ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தை (Australian National University) சேர்ந்த பொறியியல் வல்லுனர்கள், பட்டாம்பூச்சியின் இறக்கை அமைப்பை ஆராய்ந்து, செம்மையாக செயல்படும் சூரிய ஒளித் தகடுகளை வடிவமைக்கலாம் என்று கண்டறிந்துள்ளனர். நீல நிறத்திலுள்ள, ‘மார்போ டிடியஸ்’ (Morpho Didius) என்ற பட்டாம்பூச்சி, தன் இறக்கையிலுள்ள நுண்ணிய அமைப்புகளை வைத்து, சூரிய ஒளியை சிதற வைத்தல், பிரதிபலித்தல், உறிஞ்சுதல் ஆகியவற்றை தன் விருப்பப்படி செய்வதாக, இந்த ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர் நீரஜ் லால் (Dr Niraj Lal ) மற்றும் அவர்களது குழுவினர் கண்டறிந்தனர். நீலப் பட்டாம்பூச்சியின் இறக்கையிலுள்ள அதே போன்ற நேனோ அமைப்புகளை ஆய்வுக்கூடத்தில் உருவாக்கி, இயக்கியபோது, ஒளியை விரும்பியபடி கட்டுப்படுத்த முடிந்தது என்று நீரஜ் லால் தெரிவித்துள்ளார்.

இத் தொழில்நுட்பத்தை வைத்து சூரிய மின் ஒளித் தகடுகளை தயாரித்தால், கிடைக்கும் ஒளியில் அதிக மின்சாரம் தயாரிப்பது சாத்தியமாகலாம். மேலும், கட்டடங்கள், ராணுவம் போன்ற பல துறைகளிலும் இத் தொழில்நுட்பம் உதவும், என, நீரஜ் தன் ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

balls

Butterfly wings inspire solar technologies

Taking a closer look at butterfly’s iridescent wings is paving the way for next-generation solar and stealth technologies.

The iridescent blue Morpho Didius became a muse for a group of Australian National University engineers fascinated by the tiny cone-line shaped nanostructures that scatter light to create its luminous colour.  Lead researcher Dr Niraj Lal said until now being able to make light go exactly where you wanted it to had proven tricky.

“We were surprised by how well our tiny cone-shaped structures worked to direct different colours of light where we wanted them to go,” he said. “Techniques to finely control the scattering, reflection and absorption of different colours of light are being used in the next generation of very high-efficiency solar panels,” he said.

The aim of the team’s light experiments was to absorb all of the blue, green and ultraviolet colours of sunlight in the perovskite layer of a solar cell. And to absorb all of the red, orange and yellow light in the silicon layer – known as a tandem solar cell with double-decker layers.

But beyond solar technology the technique could one day be used to make opaque objects transparent to certain colours, and vice versa, as part of new stealth applications. Or in architecture to control how much light and heat passed through windows.

Dr Lal said the technique, inspired by nature, had strong commercial promise as it was very scalable and did not require expensive technology.

Source Dinamalar and Sydney Morning Herald

விரைப் புற்றுநோய் சிகிச்சைக்கு புதிய மருந்து

ப்ரோஸ்டேட் புற்றுநோய் சிகிச்சைக்காக வழங்கப்பட்ட மருந்து ஒன்று, முன்னர் எண்ணியதை விட அதிக உயிர்களை காப்பாற்றியிருப்பது பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் நிக்கோலாஸ் ஜேம்ஸ் (Prof Nicholas James, University of Birmingham) மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

நீண்டகால ஹார்மோன் சிகிச்சை தொடங்கவிருந்த ப்ரோஸ்டேட் புற்றுநோயாளிகளுக்கு கூடுதல் சிகிச்சையாக வழங்கப்பட்ட அபிரட்டெரோன் (abiraterone) மருந்தை சோதனை செய்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

ஸைதிகா என்றும் அறியப்படும் அபிரட்டெரோன், புற்றுநோய் செல்களை கொன்றுவிடுகின்ற கீமோதெரபி போல் அல்லாமல், அதிக டெஸ்டோஸ்டிரோன் ப்ரோஸ்டேட் சுரப்பியை சென்றடைவதை தடுத்து, கட்டியின் வளர்ச்சியை இது கட்டுப்படுத்துகிறது.

இந்த மருந்து சோதனை சுமார் இரண்டாயிரம் நோயாளிகளிடம் நடத்தப்பட்டது.

பாதி ஆண்களுக்கு ஹார்மோன் சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறருக்கு ஹார்மோன் மற்றும் அபிரட்டெரோன் சிகிச்சை வழங்கப்பட்டது.

இந்த மருந்து சோதனையில் ஈடுபட்ட மொத்தம் ஆயிரத்து 917 நோயாளிகளில், ஹார்மோன் சிகிச்சை மட்டுமே பெற்றவர்களில் 262 பேர் இறந்த நிலையில், ஹார்மோன் மற்றும் அபிரட்டெரோன் சிகிச்சை வழங்கப்பட்டோரில் 184 பேர் தான் இறந்திருந்தனர்.

இந்த ஆய்வின் மூலம் கிடைத்திருக்கிற முடிவுகள் ப்ரோஸ்ரேட் புற்றுநோய்க்கு வழங்கப்படும் சிகிச்சையில் மாற்றங்களை கொண்டு வரலாம். முதலில் எண்ணியதைவிட அதிக ப்ரோஸ்ரேட் புற்றுநோயாளிகள் அபிரட்டெரோன் மூலம் உதவி பெறலாம்” என்று ஐக்கிய ராஜ்ஜியத்தின் புற்றுநோய் ஆய்வகத்தின் தலைமை செயலதிகாரி சர் ஹர்பால் குமார் (Sir Harpal Kumar, Cancer Research UK’s chief executive) கூறியுள்ளார்.

240_F_123164999_GuE1ukNnFCit0uFD2lmRkOKZ1tehtJEz

New treatment for Prostate cancer

A drug for treating prostate cancer that has spread was found to save lives when offered earlier, a study found.

The trial looked at abiraterone as an additional treatment in patients with prostate cancer who were about to start long-term hormone therapy.

Prof Nicholas James, from the University of Birmingham, who led the research, said: “These are the most powerful results I’ve seen from a prostate cancer trial – it’s a once-in-a-career feeling.

Abiraterone, also known as Zytiga (Zytiga), is a hormone therapy. Unlike chemotherapy which kills the cancerous cells, it stops more testosterone from reaching the prostate gland to stifle the tumour’s growth.

The trial involved almost 2,000 patients. Half the men were treated with hormone therapy while the other half received hormone therapy and abiraterone. Of the 1,917 men in the trial, there were 184 deaths in the combination group compared with 262 in those given hormone therapy alone.

Sir Harpal Kumar, Cancer Research UK’s chief executive, said: “These results could transform the treatment of prostate cancer. Abiraterone can clearly help many more prostate cancer patients than was first thought.”

Source BBC

தவளைகளிடமிருந்து வைரஸ் காய்ச்சலை தடுக்கும் மருந்துகள்

சளிப்படலம் போன்ற ஒரு வண்ணமயமான திரவத்தினை சுரக்கும் தவளையானது (ஹைட்ரோஃபிளாஸ் பேஹுவிஸ்தாரா)( Hudrophylax bahuvistara) கேளராவில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

தவளையின் தோலிலிருந்து வெளிப்படும் பிசுப்பிசுப்பான திரவத்தினை ஆய்வு செய்ததில் host defence peptides இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய பெப்டைட்களுக்கு ‘உருமின்’ என்று கேரளாவின் உறுமி வாளை நினைவுபடுத்தும் வகையில் பெயர் வைத்திருக்கின்றனர். ஆய்வக சோதனைகளில், இது சாதாரண செல்களை அழிக்காமல். ஃப்ளூ காய்ச்சல் வைரஸ்களை அழித்தது.

இந்த திரவத்தினை கொண்டு பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை அழிக்கமுடியும், என்றும் அதைகொண்டு  புதிய நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து தயாரிக்கலாம் என்று அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள எமோரி பல்கலைக்கழகத்தை (Emory University) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

3

Frog mucus could DESTROY human virus

Frog mucus is loaded with molecules that kill bacteria and viruses, and researchers are beginning to investigate it as a potential source for new anti-microbial drugs. One of these “host defense peptides,” courtesy of a colorful tennis-ball-sized frog species (Hydrophylax bahuvistara) from southern India, can destroy many strains of human flu and protect mice against flu infection. The researchers named the newly identified peptide “urumin,” after the urumi, a sword with a flexible blade that snaps and bends like a whip, which comes from the same Indian province, Kerala, as the frog.

Josh Jacob, researcher at Emory University in Atlanta, said the compound named urumin “represents a novel antiviral against human influenza viruses of the H1 subtype”.This peptide binds to haemagglutinin, a protein found on the surface of influenza viruses, and manages to destroy them physically.

Jacob’s team is still working out the details of the flu-destroying mechanism, but the urumin appears to work by targeting a viral surface protein called hemagluttinin, the H in H1N1. “The virus needs this hemagglutinin to get inside our cells,” says Jacob. “What this peptide does is ,it binds to the hemagglutinin and destabilizes the virus. And then it kills the virus.”

SourceDaily Thanthi

மேகமலையில் புதிய வகை தாவரம் கண்டுபிடிப்பு

தேனி மாவட்டம், மேகமலையில் ‘இம்பேஸியன்ஸ் மேகமலையானா’ (impatiens megamalaiyana) என்ற புதிய வகை தாவரத்தை காந்திகிராம பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் அத்துறை மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவர்களது கண்டுபிடிப்புக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இந்தியாவில் காடுகளில் காணப்படும்  ‘காசித் தும்பை’ என்று வழக்குச் சொல்லால் அழைக்கப்படும் ‘இம்பேஸியன்ஸ்’ எனும் தாவர இனம் தனிச் சிறப்பு வாய்ந்தது.

ஓராண்டு முதல் பல்லாண்டு தாவரங்களாக வளரும் இவை ஆப்பிரிக்கா, மடகாஷ்கர், இந்தியா மற்றும் இலங்கையில் பரவிக் காணப்படுகின்றன.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகைகளைக் கொண்ட இந்த தாவரம் மிகவும் அடர்த்தியான, ஈரப்பதமான மலைப்பகுதிகளிலும், பாறைகளிலும் மட்டும் வளரக் கூடியவை. இந்த தாவரங்கள் இந்தியாவில் ஏறக்குறைய 245 வகைகள் உள்ளன. பழனி மலை, ஆனை மலை, நீலகிரி, மூணாறு மற்றும் அகஸ்தியர் மலைகளில் இவ்வகை தாவரம் செறிந்து காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

காந்திகிராம பல்கலைக்கழக உயிரியல் துறை உதவிப் பேராசிரியர் ராமசுப்பு மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் தங்களுடைய சமீபத்திய தாவர இனங்கள் தேடலில், மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான மேகமலை வனப்பகுதிகளில் உள்ள புல்வெளிப் பரப்புகளில் இம்பேஸியன்ஸ் தாவர வகைகளில் புதிய வகை தாவர சிற்றினத்தை கண்டறிந்துள்ளனர்.

இதுகுறித்து உத விப் பேராசிரியர் ராம சுப்பு கூறியதாவது: ‘மேகமலையில் கண்டு பிடித்துள்ள புதிய தாவ ரத்துக்கு ‘இம்பேஸி யன்ஸ் மேகமலை யானா’ என பெயரிடப் பட்டுள்ளது. 28 செ.மீ. முதல் 42 செ.மீ. உயரம் வளரக்கூடிய குறுஞ்செடி. வெளிர் சிவப்பு நிறத்துடன் அடர் மஞ்சள் நிறத்தில் பூக்களைக் கொண்டது. பொதுவாக ஜூலை முதல் அக்டோபர் வரை பூக்கும் இயல்பு கொண்ட இவை, கடல் மட்டத்துக்கு மேல் 1,451 மீட்டர் உயரம் உள்ள இடங்களில் ஈரப்பதமான பாறைப் பகுதிகளில் வளரும். வருடத்தில் மே முதல் ஜூன் வரை விதைகள் முளைக்கத் தொடங்கி முழுவதுமாக வளர்ச்சி அடைந்து ஜனவரி மாதங்களில் அழிந்துவிடும்’.

இந்த புதிய தாவரம் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டு, இந்திய தாவரவியல் ஆராய்ச்சி நிலையத்தில் உலர் தாவரமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இம்பேஸியன்ஸ் தாவர இனங்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமான தாவரங்கள் அழியும் தருவாயில் உள்ளதாகக் கண்டறியப் பட்டுள்ளது. கண்களைக் கொள்ளை கொள்ளும் பல்வேறு வண்ணங்களுடன் வேறுபட்ட அமைப்பைக் கொண்ட இந்த தாவரங்களின் பூக்களைச் சார்ந்து பல்வேறு பூச்சிகளும், வண்டுகளும் வாழ்கின்றன. குறிப்பிட்ட மண் வகை, மழைப்பொழிவு மற்றும் இடச்சூழலைச் சார்ந்து வளர்வதால், வேறு இடங்களுக்கு இவை அதிகமாக பரவுவது இல்லை. அதனால், இவ்வகை தாவரங்கள் மிக அபூர்வமாகி வருகின்றன.

Source: Tamil hindu

ஜுரத்தை கண்டறிய Ferrofluid திரவம்

வெப்பமானி (thermometer) இல்லாமல் நோயாளியின் வெப்பத்தை அறிந்துகொள்ளும் முறையை இந்தியாவின்  IGCAR ஐ (Indira Gandhi Centre for Atomic Research (IGCAR), Kalpakkam, Chennai,India) சேர்ந்த ஜான் பிலிப் (John Philip) தலைமையிலான விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

12th-igcar

இது ஒரு மெல்லிய படலத்தில் இருக்கும் ferrofluid திரவத்தில், சிறிய வெப்ப மாற்றத்திலும் ஏற்படும் நிற மாற்றத்தை அடிப்படையாக கொண்டது. இந்த ferrofluid திரவத்தில் எண்ணெய் துளிகள் (oil droplets) கொண்ட இரும்பு ஆக்சைடு நானோ துகள்கள் (iron oxide nanoparticles) தண்ணீரில் கலக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை உணரும் பாலிமரில் இந்த ferrofluid திரவம் சேரும் பொது ஒவ்வொரு வெப்பத்திற்கு ஒவ்வொரு நிறத்தை இந்த திரவம் காட்டக்கூடியவாறு மாற்றி அமைக்க முடியும். உதாரணத்திற்கு நம் உடலின் சாதாரண வெப்பத்திற்கு மஞ்சள் நிறத்தையும், வெப்பம் அதிகரிக்கும் பொது, அதாவது ஜுரத்திற்கு பச்சை நிறத்தையும் காட்ட வைக்க முடியும். இதனால் கண்ணால் பார்த்தே ஜுரத்தை அறிய முடியும்.

images

Soon, doctors can ‘see’ a fever

Visual, non-invasive monitoring of body temperature of patients without using a thermometer was invented by a team of scientists led by John Philip, head of the smart materials section at the Indira Gandhi Centre for Atomic Research (IGCAR), Kalpakkam, near Chennai ,India.

The concept is based on ferrofluid emulsion contained in a thin film that changes colour with rise in temperature within a narrow range — 30-40° C.

The emulsion has iron oxide nanoparticles containing oil droplets dispersed in water. “Till now ferrofluid was used as a magnetic stimuli-responsive material. We now found that in the presence of a temperature-sensitive polymer — poly(N-isopropylacrylamide), also known as PNIPAM) — the ferrofluid emulsion can be used as a thermally tunable grating to produce different colours,” says Dr. Philip.

Up to about 34° C, the polymer is highly hydrated and swollen due to repulsive interaction between individual monomer segments. But when the temperature crosses 34° C, the polymer becomes dehydrated leading to a collapsed state.The polymer will once again become hydrated and swollen when the temperature falls below 34° C. “By using certain additives, we can tune the collapse of the polymer to higher temperature to reflect fever conditions,” clarifies A.W. Zaibudeen, senior research fellow at IGCAR and the first author of the paper.

Using magnetic fields, the scientists first achieved a particular ordering (spacing between the arrays of emulsion droplets) of emulsion and got a particular colour. When polymer is added as a stabiliser and the temperature is increased, the grating spacing of the polymer changes and gives rise to a different colour or spacing.

“The colour given off at normal temperature can be fixed by changing the emulsion property and magnetic field strength,” Dr. Philip says. If the normal temperature is fixed at yellow, the change will be to green when the temperature increases. Colour with higher wavelength is produced at lower temperature and colour of lower wavelength at higher temperature.

Source The Hindu

பிரக்ஸிட் 1.0 – ஐரோப்பியாவிலிருந்து பிரிந்து சென்ற பிரிட்டன்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறிய பிரெக்ஸிட் நிகழ்வு பெரும் அரசியல் குழப்பங்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கலாம். ஆனால், ஐரோப்பியக் கண்டத்திலிருந்து பிரிட்டன் முதல் முறை பிரிந்தபோது நிகழ்ந்த பேரழிவு அளவுக்கு அவை ஏற்படுத்தாது என்றே நம்பலாம்.

பிரம்மாண்டமான அருவிகளும், பிற்பாடு, பெருவெள்ளமும் பிரிட்டனை எப்படி பிரான்ஸிலிருந்து துண்டித்தன என்பதைப் புதிய ஆய்வு ஒன்று கண்டறிந்திருக்கிறது. இந்தத் துண்டிப்பின் காரணமாக பிரிட்டன் தீவுகளும் அகழி போன்ற ஆங்கிலக் கால்வாயும் உருவாயின.

“ நில அமைப்பில் தொடர்ந்து ஏற்பட்ட தற்செயலான நிகழ்வுகள் காரணமாக பிரிட்டன் ஒரு தீவானது” என்று லண்டனின் இம்பீரியல் கல்லூரியில் நில அறிவியல் பேராசிரியர் சஞ்சீவ் குப்தா கூறுகிறார் (Sanjeev Gupta, professor of earth science at Imperial College London).

3211

நீண்ட காலமாக முன்வைக்கப்பட்ட கோட்பாடுகள், ஆங்கிலக் கால்வாயின் தரைப்பகுதி குறித்து நடத்தப்பட்ட ஆய்வுகள் போன்றவற்றைத் தற்போதைய ஆய்வு கணக்கிலெடுத்துக்கொண்டது. மேலும், கடலில் டோவர் நீரிணைக்கு அடியில் உள்ள நிலப்பரப்புக்கென்று துல்லியமாக உருவாக்கப்பட்ட புதிய வரைபடத்தையும் அடிப்படையாகக் கொண்டு பிரான்ஸிலிருந்து இங்கிலாந்து எப்படிப் பிரிந்தது என்ற புதிர் அவிழ்க்கப்பட்டிருக்கிறது.

சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டன், பிரான்ஸுடன் கிட்டத்தட்ட 32 கி.மீ. நீளம் கொண்டிருந்த சுண்ணாம்புப் பாறையால் இணைக்கப்பட்டிருந்தது. அதன் ஒரு புறத்தில் பெரிய ஏரி ஒன்று இருந்தது. அந்த ஏரியில் ஏராளமான பனிப்பாறைகள் இருந்தன. தற்போதைய வடக்குக் கடல் வரைக்கும் அந்த ஏரியின் பனிப்பாளம் நீண்டிருந்தது. “மலைக்க வைக்கும் ஒரு நிலப்பரப்பாக அது இருந்திருக்கும்” என்கிறார் குப்தா. சிறு சிறு ஆறுகள் இல்லாமல் போயிருந்தால் ஆங்கிலக் கால்வாயே வறண்டுதான் காணப்பட்டிருக்கும்; அப்படி இருந்திருந்தால் சுற்றியுள்ள நிலப்பரப்பு அப்போது மிகவும் அச்சுறுத்தும் விதத்தில் இருந்திருக்கும். ஆனால், பனிப்பாளங்கள் உருக ஆரம்பித்ததாலோ வேறு ஏதோ காரணத்தாலோ அணையைப் போன்ற முகட்டுக்கு மேல் நீரோட்டம் பொங்கி வழிந்தது.

“அப்படி நீர் வழிந்து வீழ்ந்த அருவிகள் உருவாக்கிய பெரிய குழிகள் அரிப்புக்குள்ளாகி படிவுப் பாறையானதை (bedrock) கண்டறிந்தோம்” என்றார் குப்தா.

இப்படிப் படிவுகள் நிரம்பிய குழிகள் மிகவும் பெரியவை. 140 மீட்டர் ஆழமும் 4 கி.மீ. விட்டமும் கொண்ட குழிகள்கூட இருக்கின்றன. அந்த நிலப்பரப்பின் குறுக்கே வரிசையாக இந்தக் குழிகள் அமைந்திருக்கின்றன. பல ஆண்டுகளுக்கு முன்பு அவை கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. இந்தக் குழிகள் காரணமாக சுரங்க ரயில் பாதைத் திட்டத்துக்கான தடங்களை மாற்றிக்கொள்ள வேண்டிவந்தது. எனினும், இந்தக் குழிகளுக்கெல்லாம் காரணம் அருவி நீர் கொட்டியதுதான் என்பதை முதன்முறையாகத் தெளிவான உதாரணங்களுடன் இந்தப் புதிய ஆய்வு விளக்குகிறது.

தொடர்ந்து நீரால் அரிக்கப்பட்டதால் அணைபோன்ற பாறை முகட்டில் கணிசமான சிதைவு ஏற்பட்டிருக்கிறது. இதனால், அதுவரை தேக்கப்பட்டிருந்த ஏரி நீர் பாய ஆரம்பித்துப் பள்ளத்தாக்குகள் உருவாகக் காரணமாயின.

புதிய தரவுகளை ஆராய்ந்து பார்த்ததில் ஒரு பெரிய பள்ளத்தாக்கு இருப்பது தெரியவந்துள்ளது. முன்பு பாறை முகடு இருந்த இடத்திலிருந்து இன்று ஆங்கிலக் கால்வாய் இருக்கும் இடம் வரை நீளும் பள்ளத்தாக்கு அது. அருவிகள் உருவாக்கிய குழிகள், மற்ற பள்ளத்தாக்குகள் ஊடாக அந்தப் பெரிய பள்ளத்தாக்கு நீள்கிறது. ஊழிப் பெருவெள்ளம் ஒன்று ஏற்பட்டிருப்பதை, இது உறுதிசெய்கிறது என்கிறார் குப்தா. சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தப் பெருவெள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. “நீரோட்டத்தில் காணப்பட்ட மற்ற ஏரிகளிலிருந்து வந்த வெள்ளமாக அது இருக்கலாம்” என்கிறார் குப்தா. இந்தப் பெருவெள்ளத்தால் ஆங்கிலக் கால்வாயின் மையப்பகுதி சுரண்டப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இந்த இரண்டு நிகழ்வுகளும் சேர்ந்து டோவர் நீரிணையைத் திறந்துவிட்டன என்கிறார் குப்தா.

240_F_123164999_GuE1ukNnFCit0uFD2lmRkOKZ1tehtJEz

‘Brexit 1.0’ – Britain’s original separation from Europe

Brexit might be causing political,but it is unlikely to be as catastrophic as the first separation of Britain from the continent.

A new study has revealed how giant waterfalls and, later, a megaflood severed connection to France, resulting in the creation of island Britain and the watery moat of the English Channel.

“A chance series of geological events set the stage for Britain becoming an island,” said Sanjeev Gupta, professor of earth science at Imperial College London and co-author of the research.

“If it weren’t for these events, in a sense the history of Britain would have been completely different,” he added, pointing out that if the ridge had never been breached, Britain would have remained attached to northern France with easy access to the rest of Europe.

The research,draws together a number of long-held theories and previous studies of the Channel’s seafloor with new, high resolution mapping of the landscape under the sea of the strait of Dover to unravel how Britain became separated from France.

About 450,000 years ago Britain was connected to France by a long, rocky, chalk ridge, approximately 32km long, behind which was a great lake, likely dotted with icebergs, with ice stretching across what is now the North Sea. “It would have been a dramatic landscape,” said Gupta. The Channel itself would have been dry, except for small rivers, while the surrounding land would have been forbidding. “It would have been cold, grey, rocky, with very, very sparse vegetation, like Svalbard or Siberia,” he said.

But, whether as a result of melting of the ice sheet or some other reason, it seems this dam-like ridge began to overflow.

“We find these huge holes basically, depressions, eroded into the bedrock in the Dover strait, and we believe the best explanation for these is that these were giant plunge pools – basically formed by waterfalls from the lake water plunging over [the ridge],” said Gupta.

The sediment-filled holes are enormous, he added, reaching up to 140 metres in depth and up to 4km in diameter, and exist in a line running across the seafloor. But while they were first discovered decades ago, leading to a change in course for plans for the Channel tunnel, the authors say the new study is the first clear evidence that they are the remains of huge plunge pools.

Erosion of the ridge by the water, the team add, at least partially ruptured the dam-like structure, releasing pent-up lake water which possibly carved some of the valleys previously found in the centre of the Channel. But there was more to come.

Analysis of the new data has revealed details of a huge valley, etched into the seafloor, running from behind the location of the former rock ridge into the Channel, cutting across the fossil plunge pools and connecting with the valleys in the centre of the Channel. That, says Gupta, suggests it was formed by catastrophic flooding, possibly sometime about 160,000 years ago, during another glacial period. “We think this is actually coming from lakes further upstream,” he said, adding that the megaflood probably also gouged the centre of the Channel.

Together, said Gupta, the two stages completely opened up the Dover strait, although Britain probably only fully became an island about 125,000 years ago, after sea level rises linked to a warmer climate. “You could say it was a violent beginning to Brexit 1.0,” he said

Source Guardian and hindu