கொசுவை மயக்கும் ஒளி

உலகெங்கும் கொசுக்கள் பரப்பும் நோய்களால், 4.29 லட்சம் பேருக்கு மேல் கொல்லப்படுகின்றனர். ஆப்ரிக்காவில் மலேரியாவை பரப்பும், ‘அனோபிலிஸ்’ (Anopheles gambiae ) வகை கொசுக்களுக்கு இதில் முக்கியமான பங்கு உண்டு. கொசு விரட்டி மருந்துகள், கருவிகளுக்கு டிமிக்கி கொடுக்க அனோபிலிஸ் கொசுக்கள் விரைவில் கற்றுக்கொள்வதால், வேறு வழிகளில் அவற்றை விரட்ட விஞ்ஞானிகள் பரிசோதனைகள் நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவிலுள்ள நோட்டர் டாம் பல்கலைக்கழக (University of Notre Dame) விஞ்ஞானிகள், இரவில், 10 நிமிடங்களுக்கு வேகமாக ஒளித்துடிப்புகளை அனுப்பும் விளக்கு ஒளியை காட்டினால், அதன் பிறகு அனோபிலிஸ் கொசுக்களுக்கு, மனிதர்களை கடிக்கும் உந்துதல் வெகுவாக மட்டுப்படுவதாக கண்டறிந்துள்ளனர். சிவப்பு ஒளி போல பல அலைவரிசை ஒளிகளை அவர்கள் தற்போது சோதித்து வருகின்றனர். விரைவில், இதன் அடிப்படையில் ஒளி மூலம் கொசு விரட்டும் கருவியை அவர்கள் உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.

1

Light to manipulate mosquitoes

Scientists at the University of Notre Dame have found that exposure to just 10 minutes of light at night suppresses biting and manipulates flight behavior in the Anopheles gambiae mosquito, the major vector for transmission of malaria in Africa.

Critical behaviors exhibited by the species, such as feeding, egg laying and flying, are time-of-day specific, including a greater propensity for nighttime biting. A recent report from the World Health Organization stated an estimated 212 million people worldwide are infected with the disease, resulting in 429,000 deaths – mostly children.

Insecticide-treated bed nets and walls have helped prevent bites and reduce malaria, but researchers say mosquitoes are adapting to preventive conditions, leaving adults and children vulnerable in the early evening and early morning hours – when they are not under the nets or in the house.

The team tested the mosquitoes’ preference to bite during their active host-seeking period by separating them into multiple control and test batches. Control mosquitoes were kept in the dark, while test batches were exposed to a pulse of white light for 10 minutes. Researchers then tested the propensity of the mosquitoes to bite immediately after the pulse and every two hours throughout the night, holding their arms to a mesh lining that allowed uninfected mosquitoes to feed while remaining contained. Results indicated a significant suppression. In another experiment, mosquitoes were pulsed with light every two hours, and using this multiple pulse approach the team found that biting could be suppressed during a large portion of the 12-hour night.

Pulses of light would probably be more effective than constant exposure, as the mosquitoes would be less likely to adapt to light presented in periodic doses. The research team is testing the effectiveness of different wavelengths of light, such as red light, that would be less disturbing to adults and children while they sleep, with an aim toward developing field-applicable solutions.

Source : Dinamalar and Notre Dame news

பட்டாம்பூச்சியும் சூரிய ஒளி தகடும்

புதிய பொருட்களை உருவாக்க இயற்கையிடமிருந்து விஞ்ஞானிகள் கற்றுக்கொள்வது பரவலாகியிருக்கிறது. ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தை (Australian National University) சேர்ந்த பொறியியல் வல்லுனர்கள், பட்டாம்பூச்சியின் இறக்கை அமைப்பை ஆராய்ந்து, செம்மையாக செயல்படும் சூரிய ஒளித் தகடுகளை வடிவமைக்கலாம் என்று கண்டறிந்துள்ளனர். நீல நிறத்திலுள்ள, ‘மார்போ டிடியஸ்’ (Morpho Didius) என்ற பட்டாம்பூச்சி, தன் இறக்கையிலுள்ள நுண்ணிய அமைப்புகளை வைத்து, சூரிய ஒளியை சிதற வைத்தல், பிரதிபலித்தல், உறிஞ்சுதல் ஆகியவற்றை தன் விருப்பப்படி செய்வதாக, இந்த ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர் நீரஜ் லால் (Dr Niraj Lal ) மற்றும் அவர்களது குழுவினர் கண்டறிந்தனர். நீலப் பட்டாம்பூச்சியின் இறக்கையிலுள்ள அதே போன்ற நேனோ அமைப்புகளை ஆய்வுக்கூடத்தில் உருவாக்கி, இயக்கியபோது, ஒளியை விரும்பியபடி கட்டுப்படுத்த முடிந்தது என்று நீரஜ் லால் தெரிவித்துள்ளார்.

இத் தொழில்நுட்பத்தை வைத்து சூரிய மின் ஒளித் தகடுகளை தயாரித்தால், கிடைக்கும் ஒளியில் அதிக மின்சாரம் தயாரிப்பது சாத்தியமாகலாம். மேலும், கட்டடங்கள், ராணுவம் போன்ற பல துறைகளிலும் இத் தொழில்நுட்பம் உதவும், என, நீரஜ் தன் ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

balls

Butterfly wings inspire solar technologies

Taking a closer look at butterfly’s iridescent wings is paving the way for next-generation solar and stealth technologies.

The iridescent blue Morpho Didius became a muse for a group of Australian National University engineers fascinated by the tiny cone-line shaped nanostructures that scatter light to create its luminous colour.  Lead researcher Dr Niraj Lal said until now being able to make light go exactly where you wanted it to had proven tricky.

“We were surprised by how well our tiny cone-shaped structures worked to direct different colours of light where we wanted them to go,” he said. “Techniques to finely control the scattering, reflection and absorption of different colours of light are being used in the next generation of very high-efficiency solar panels,” he said.

The aim of the team’s light experiments was to absorb all of the blue, green and ultraviolet colours of sunlight in the perovskite layer of a solar cell. And to absorb all of the red, orange and yellow light in the silicon layer – known as a tandem solar cell with double-decker layers.

But beyond solar technology the technique could one day be used to make opaque objects transparent to certain colours, and vice versa, as part of new stealth applications. Or in architecture to control how much light and heat passed through windows.

Dr Lal said the technique, inspired by nature, had strong commercial promise as it was very scalable and did not require expensive technology.

Source Dinamalar and Sydney Morning Herald

பிளாஸ்டிக்கை உண்ணும் மெழுகுப் புழு (Wax worm)

மெழுகுப் புழு (Wax worm) (Galleria mellonella ) என்ற ஒருவகைக் கம்பளிப்புழுவை மீன்பிடிப்பதற்குப் பயன்படுத்துவார்கள். இந்தப் புழு தேன்மெழுகை உண்ணக்கூடியது என்பதால் மெழுகுப் புழு என்ற பெயர் வந்தது. இந்தப் புழு பாலித்தீனின் வேதிப் பிணைப்புகளை எளிதில் உடைக்கக்கூடியதாக இருப்பதை அறிவியலாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

waxworms-main-1000

ஸ்பானிய தேசிய ஆராய்ச்சிக் கழகத்தைச் சேர்ந்த ஃபெதெரிக்கா பெர்தோக்கீனி (Federica Bertocchini , Institute of Biomedicine and Biotechnology of Cantabria, Spain) என்ற அறிவியலாளர் இரு ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பூச்சிகளின் விசித்திர இயல்புகளைத் தற்செயலாகக் கண்டறிந்தார்.

பெர்தோக்கீனி தேனடைகளிலிருந்து மெழுகுப்புழுக்களைக் களைந்து ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டார். கூடிய விரைவிலேயே அந்தப் புழுக்களெல்லாம் பிளாஸ்டிக்கை உண்ண ஆரம்பிக்க, பைகளில் துளைகள் விழ ஆரம்பித்தன. இதைக் கண்டதும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் சகாக்களான பாவ்லோ பாம்பெல்லியையும் கிறிஸ்டோபர் ஜே. ஹவ்வையும் (Paolo Bombelli and Christopher Howe ) தொடர்புகொண்டார்.

இந்தப் புழுக்களெல்லாம் பிளாஸ்டிக்கின் வேதிப் பிணைப்பைச் சிதைக்கின்றனவா அல்லது வெறுமனே பிளாஸ்டிக்கைச் சிறிய துணுக்குகளாக மட்டும் உடைக்கின்றனவா என்பதை ஆராய்ந்தனர். அதற்காக அந்த புழுக்களை அரைத்து பிளாஸ்டிக்கின் மேல் தடவினார்கள். அப்படிச் செய்ததன் மூலம், பூச்சிகளின் உள்ளிருக்கும் வேதிப்பொருட்களோ வேதிப்பொருள் கலவைகளோதான் பிளாஸ்டிக் சிதைப்புக்குக் காரணமாகின்றன என்பதைக் கண்டறிந்தனர்.

பிளாஸ்டிக் மூலக்கூறுகளின் மையத்தில் உள்ள கரிம அணுக்களை அந்த புதிரான ஒரு நொதியோ அல்லது பல நொதிகளோதான் உடைத்துச் சிறிய மூலக்கூறுகளாக ஆக்குகின்றன. இதற்க்கு காரணமான என்ஸைமை புழுக்கள் உற்பத்தி செய்கின்றனவா, அல்லது புழுக்களின் வயிற்றில் இருக்கும் பாக்டீரியா உற்பத்திசெய்கின்றனவா என்பது பற்றி ஆராய்ச்சி தொடர்கிறது.

1

Wax worms can cause plastic degradation

Each year, the world produces 300 million tons of plastic, much of which resists degradation and ends up polluting every corner of the globe. But a team of European scientists may have found a unique solution to the plastic problem. They discovered that a common insect can chew sizable holes in a plastic shopping bag within 40 minutes.

The discovery was led by Federica Bertocchini, a developmental biologist at the University of Cantabria in Spain. She first noticed the possibility as she cleaned out her backyard bee hives two years ago.

She removed some wax worms (Galleria mellonella) living in the hive and placed them in an old plastic bag. When she checked the bag an hour later, however, she discovered small holes in the part of the bag with the larvae. Although Bertocchini wasn’t an entomologist, she guessed immediately what was happening.

The larval form of a small moth, wax worms get their names because they live on the wax in bee hives. Like plastic, wax is a polymer, which consists of a long string of carbon atoms held together, with other atoms branching off the sides of the chain. Both wax and the polyethylene in Bertocchini’s plastic bag had a similar carbon backbone.

Bertocchini teamed up with fellow scientists Paolo Bombelli and Christopher Howe to figure out how the wax worms were pigging out on plastic.

When they placed the worms on polyethylene plastic, they found that each worm created an average of 2.2 holes per hour. Overnight, 100 wax worms degraded 92 milligrams of a plastic shopping bag. At this rate, it would take these same 100 worms nearly a month to completely break down an average, 5.5 gram plastic bag.

To rule out munching action from their jaws as the source of degradation, the team applied a soupy blend of recently deceased worms to the plastic and waited. Sure enough, they found the liquid larvae could also eat holes in plastic. This told Bertocchini and colleagues that an enzyme in the worms or the bacteria living in and on their bodies was dissolving the plastic.

That enzyme converted polyethylene into ethylene glycol, a chemical commonly used in antifreeze. Bertocchini hopes to identify the precise enzymes that break down polyethylene in future work.

Source :  Hindu and National Geographic

இறந்தது போல நடிக்கும் பெண் தட்டாம்பூச்சி

விரும்பாவிட்டாலும், விடாது துரத்தும் ஆண் தட்டாம்பூச்சியை,(dragonfly)  பெண் தட்டாம்பூச்சி எப்படி சமாளிக்கிறது? பறந்து கொண்டிருக்கும்போதே திடீரென புல்வெளி மீது மல்லாக்க விழுந்து, இறந்தது போல நடிக்கிறது; ஆண் தட்டாம்பூச்சி அருகே வந்து பார்த்து, இறந்து விட்டது என்று தவறாக நினைத்து, வெகுதுாரம் பறந்து போன பிறகு, பெண் தட்டாம்பூச்சி பறந்து விடுகிறது.

சில வகை வெட்டுக்கிளிகள், ஈக்கள், சிலந்திகள், எதிரியிடம் இரையாகாமல் இருக்க இப்படி நடிப்பதுண்டு. என்றாலும் தட்டாம்பூச்சி, விருப்பமில்லாத ஆணிடம் இருந்து தப்பிக்க, போலி மரண உத்தியை கடைபிடிப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்கிறார் இந்த செயலை கண்டுபிடித்த ஜூரிச் பல்கலைக்கழகத்தின் உயிரியலாளர் ரச்சிம் கலிபா(Rassim Khelifa, a biologist at the University of Zurich).

flo 4

FEMALE DRAGONFLY DEATH FEIGNING TO AVOID SEX

Some female dragonflies go to great lengths to avoid sex—they fake their own deaths. For the first time, a scientist has observed that female moorland hawker dragonflies freeze mid-air, crash to the ground, and lie motionless when faced with aggressive males.

Called sexual death feigning, this behavior evolved to protect females against aggressive males; for instance, female moorland hawker dragonflies risk injury and sometimes death if coerced into mating. Only five species, including a spider and praying mantis, are known to practice sexual death feigning, making this new discovery all the more intriguing, says Rassim Khelifa, a biologist at the University of Zurich who published a new study on the phenomenon in the journal Ecology.

“In a lot of dragonflies, males try to seize the female with or without consent,” Khelifa says. “The fittest—that is the fastest, most powerful male—is usually the one who mates.”

When Khelifa studied the behavior more closely in the wild, he found that faking death works: More than 60 percent of the females he observed escaped after deceiving chasing males.

All the females who did not perform the death feint were intercepted by males.

source : National Geographic

வலி அறியாத தேனீக்கள்

ஆஸ்திரேலியாவின் க்வீன்ஸ்லாண்டு பல்கலைகழகத்தை (University of Queensland in Australia) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், பூச்சிகளுக்கு வலி உணர்வு இருக்கிறதா என்று ஆராய்ச்சியை தேனீக்களை கொண்டு நடத்தினர்.

தேனீக்களின் காலை வெட்டியும், காலில் கிளிப் மாட்டியும் அதற்கு காயத்தை ஏற்படுத்தினர். காயமடைந்த தேனீக்களுக்கு வலியைப் போக்கும் மார்பீன் கலந்த இனிப்பு திரவத்தையும், சாதாரண இனிப்பு திரவத்தையும் தந்து விஞ்ஞானிகள் சோதனை செய்தனர். மார்பீன் கலந்த இனிப்பு திரவத்தை உட்கொண்டிருந்தால், வலிக்கு இதமளிப்பதை அறிந்து தேனீக்கள் மீண்டும் மீண்டும் மார்பீன் கலந்த இனிப்பு திரவத்தை உட்கொண்டதாக அறியலாம் என்று எண்ணினர். ஆனால் ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக, காயமடைந்த தேனீக்கள் சாதாரண இனிப்பு திரவத்தையே உட்கொண்டன. இதனால், தேனீக்களுக்கு வலி உணர்வு இல்லை என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்தார்கள்.

3

Honey bees don’t Feel Pain

Most complex animals feel pain, but what about insects? The Queensland Brain Institute at the University of Queensland in Australia conducted a rather ingenious experiment on honeybees.

They conducted two experiments, with 540 bees in each. In the first, they affixed clips to the legs of half the bees, to “create the sensation of a continuous pinch, similar to an attack of a biting predator or competitor.” The other bees were left unharmed to serve as controls. Then, bees were allowed to free feed in a cage with feeders containing pure sucrose solution and feeders containing sucrose solution with morphine.

The researchers also conducted a second experiment, identical but for one difference: Half of the bees had one middle leg amputated, while the other half was left unharmed.

The researchers hypothesized that if bees feel pain, an injury would prompt them to choose morphine-containing solution over pure sucrose.

Results from the experiments did not support this hypothesis. Clipped bees from the first experiment did not consume more morphine than control bees. In the second experiment, amputated bees did consume more morphine/sucrose solution, but they also consumed more pure sucrose solution. According to the researchers, this indicates that “amputation prompts an immune response, which entails increased energetic demands.” In other words, the amputated bees weren’t drinking more morphine solution to relieve pain; they were drinking more because their injury was metabolically taxing – they were hungry.

Based on current scientific evidence, they don’t appear capable of experiencing pain. More research is needed.

Source : Real Clear Science

காயம் அடைந்த எறும்பை தூக்கிச்சென்று சிகிச்சை அளிக்கும் சகஎறும்புகள்

எறும்புகள் கூட்டமாக வாழ்பவை. ஆனால், கரையான்கள் போன்ற எதிரிகளுடன் சண்டை போடும்போது காயமடையும் சக எறும்புகளை, தங்கள் புற்றை நோக்கி எடுத்துச் செல்வதை அண்மையில் ஜெர்மனியை சேர்ந்த உயிரியலாளர்கள் (University of Würzburg’s Biocentre ) கண்டறிந்துள்ளனர்.

ஆப்பிரிக்கா நாட்டில் வசிக்கும் மடபிலே எறும்புகள் (Matabele ants), கரையான்களை வேட்டையாடி உண்பவை. வேட்டையாடிய கரையான்களை தங்கள் புற்றிற்கு எடுத்து வரும். அது மட்டுமல்லாமல், வேட்டையின் போது காயம் படும் எறும்புகள் ஒரு விதமான இரசாயன பொருட்களை வெளியிட்டு, தன் சக எறும்புகளுக்கு தகவல் தெரிவிக்கும். உடனே எறும்புகள், காயம் பட்ட எறும்பை தங்கள் புற்றிற்கு தூக்கி சென்று அங்கு சிகிச்சை அளிக்கும். சிகிச்சை பெரும்பாலும் ஒட்டிக்கொண்டிருக்கும் கரையானை விலக்குவதாகும்.

கூட்டமாக வசிக்கும் உயிரினங்கள் ஓரிரு உயிர்களுக்கு பாதகம் என்றால் கண்டுகொள்ளாதவை என்று கருதிய உயிரியலாளர்களுக்கு இது மிகப் பெரிய ஆச்சரியத்தை தந்துள்ளது.

3

Ants rescue their injured

The African Matabele ants (Megaponera analis) are widespread south of the Sahara and are a specialised termite predator. Two to four times a day, the ants set out to hunt prey. Proceeding in long files, they raid termites at their foraging sites, killing many workers and hauling the prey back to their nest.

The invasions bear an increased risk of injury. For this reason, the ants have developed a rescue behaviour hitherto unknown in insects. When an ant is injured in a fight, it will “call” its mates for help by excreting chemical substances. The injured insect is then carried back to the nest where it can recover after receiving treatment. What is the “therapy” like? Usually, treatment involves removing the termites still clinging to the ant.

A German research team of the University of Würzburg’s Biocentre has discovered this rescue behaviour of Megaponera analis and describes it in the journal Science Advances.

Source phys org

சிலந்திகள் உட்கொள்ளும் 80 கோடி டன் இரை

உலகில் சுமார் 45,000 க்கும் மேற்பட்ட சிலந்தி இனங்கள் இருக்கின்றன. அவற்றின் மொத்த எடை 2.5 கோடி டன். இவை யாவும் ஆண்டுக்கு 40 முதல் 80 கோடி டன் இரையை உட்கொள்ளுகின்றன என்று சுவிட்சர்லாந்த் மற்றும் சுவீடன் நாடு விலங்கியல் நிபுணர்கள் (Swiss and Swedish zoologists) கணக்கிட்டுள்ளனர். இது மனிதன் உட்கொள்ளும் மாமிசத்தின் அளவான 40 கோடி டன்னையும், திமிங்கலங்கள் உட்கொள்ளும் 28-50 கோடி டன் மாமிசத்தையும் விட அதிகமானவை.

JS123325878_PA_Spider-study-large_trans_NvBQzQNjv4BqPSGJeyftEP9WNF5nKPELKTBv_wsYjpRNHK7QRO4zXNA

சிலந்திகள் பெரும்பாலும் பூச்சிகளை தான் இரையாக கொள்கின்றன. ஆனால் சில பெரிய வகை வெப்பமண்டல சிலந்திகள் தவளை, பல்லி, மீன் மற்றும் சிறிய பாலூட்டிகளையும் தன உணவாக்கி கொள்கின்றன. சிலந்திகள் இவ்வாறு அகோர பசியுடன் பூச்சிகளை வேட்டையாடுவதால் பூச்சிகள் இனம் பல்கி பெருகாமல் கட்டுக்குள் இருக்கிறது. இதனால் இயற்கையின் சுற்றுச்சூழல் சமநிலை பராமரிக்கபடுகிறது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

Spiders outdo humans and whales as they eat 800 million TONS of prey every year

There are more than 45,000 species of spider living in all parts of the world with a collective weight of about 25 million tons.  Together they kill between 400 million and 800 million tons of prey annually, a team of Swiss and Swedish zoologists has calculated. In comparison, all the humans on Earth consume about 400 million tons of meat and fish each year and whales consume 280 million to 500 million tons of prey a year.

Most of their victims are insects but the largest tropical species occasionally make a meal of vertebrates such as frogs, lizards, fish and small mammals, said experts. These small voracious predators are crucial in maintaining ecological balance, as they’re responsible for killing astronomical numbers of insects worldwide .

Source Telegraph

சின்னஞ்சிறு தவளை இனங்கள்

கேரள மாநிலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் புதிதாக ஏழு சின்னஞ்சிறு தவளை இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஐந்தாண்டு ஆராய்ச்சிக்குப் பிறகு இந்தப் புதிய இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை இரவுத் தவளைகள் ஆகும். இந்த ஏழு தவளைகளையும் சேர்த்து மொத்தம் 35 வகையான இரவுத் தவளைகள் இது வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தத் தவளை இனங்கள் அனைத்தும் நகங்களில் அமர்ந்துகொள்ளும் அளவில் மிகச் சிறியவை. சுமார் 0.7 அங்குலம் அளவு கொண்டவை. அவற்றுள் நான்கு தவளைகள் 0.5 அங்குலம் அளவுக்கு மிகச் சிறியவை. இவை ஈரமான இலை குப்பையின் அடியிலும் சதுப்பு நிலத்திலும் காணப்பட்டன. இவை கிரிக்கெட் என்ற பூச்சியை போன்று குரல் எழுப்பின. இவற்றிற்கு மற்ற தவளைகள் போல் கால் விரல்களை இணைக்கும் மெல்லிய தோல் பகுதி (webbing between the toes) இல்லை.

பியர்ஜெ (PeerJ) என்னும் ஆராய்ச்சி இதழில் பிப்ரவரி 21-2017ல் இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்துள்ளன. கேரள மாநில வனத்துறையுடன் இணைந்து சோனாலி கார்க் (Sonali Garg) தலைமையிலான டெல்லி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.

Source Washington post

பந்து விளையாடும் தேனீ

தேனீக்கள் புத்திசாலியான பூச்சி ஆகும். இது பூவின் எந்த பாகத்தில் தேன் கிடைக்கும் என்று ஆராய்ந்து தேனை எடுக்கும்.லண்டனின் க்வீன் மேரி பல்கலைகழகத்தை (Queen Mary University) சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஓல்லி லூக்கோலா (Olli Loukola) தேனீக்களை பற்றி ஆராய்ந்ததில், நாய்கள், பூனைகள்,குரங்குகள் போன்று தேனீக்களும் ஒரு செயலை செய்து காட்டினால் அதை திருப்பி செய்யும் திறன் கொண்டது என்று கண்டுபிடித்தார். தான் செய்த செயலுக்கு பரிசையும் எதிர்பார்க்கிறது.

பரிசோதனையில் ஒரு பந்தை உருட்டி ஒரு குழியில் போட்டு காட்டியபோது தேனீயும் அதே போல் பந்தை குழியில் போட்டது.அதற்கு சன்மானமாக சர்க்கரை தண்ணீர் கொடுக்கப்பட்டது. மேலும் அது செய்து காட்டப்பட்டதை விட மேம்படுத்தியும் செய்தது. அதனால் அதற்கு பிரச்னைக்கு தீர்வு காணும் அறிவு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

Source The Guardian