பல் ஆராய்ச்சிக்கு உதவும் பல்-சிப்.

கண்டுபிடிப்பு: பல் திசுக்களை, பல்லை போன்ற பல்-சிப்புக்குள் வைத்து  ஆராய்ச்சி செய்வது.

ஆராய்ச்சியாளர்கள்:  அமெரிக்காவிலுள்ள ஓரிகன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.(Oregon Health and Science University)

விவரம்: பல் திசுக்களை பல்-சிப்புக்குள் வைத்து,  நுண் கிருமிகளை செலுத்தி, பல் சொத்தையாவதற்கு, பல்லின் மேலே உள்ள எனாமல் எப்படி, ஏன் வழிவிடுகிறது என்பதை ஆராய முடியும். அதேபோல பல்லின் ஆரோக்கியம் கெடும் பிற வழிகளையும் கண்கூடாக மருத்துவர்களால் சோதித்து அறிய முடியும். ஒரு நோயாளியின் பற்களில் சிறிதளவு மாதிரியை எடுத்து அவரது பல்லுக்கு என்ன மாதிரியான சிகிச்சை தரலாம் என்று தீர்மானிக்க முடியும்.

balls

Tooth-on-a-chip

Invention : Device integrates cells cultured directly on a dentin wall within a microfluidic device that replicates some of the architecture and dynamics of the dentin-pulp interface.

Researchers : Oregon Health and Science University

Description :The device contains a small slice of dentin material taken from a molar, sandwiched between clear rubber slides. Channels etched into those slides allow introduced fluids to flow through that dentin. This replicates the manner in which a cavity in a tooth’s protective enamel lets bacteria enter the inside of the tooth.

Utilizing a microscope, scientists are subsequently able to study how the sample reacts. The technology could ultimately be used to develop better cavity-filling or cavity-prevention solutions, plus it could be utilized to optimize treatments for individual people

Dentists could extract a tooth from a patient, load it into this device, observe how a dental filling material interacts with the tooth, and pick a material that’s best for that particular patient.

Source : Dinamalar and New atlas

 

உணவை பாதுகாக்கும் மிலேகான்ஸ்(Milekons)

கண்டுபிடிப்பு: உணவை பாதுகாக்கும் மிலேகான்ஸ் எனும் நுண்ணுயிர் எதிர்ப்பு நேனோபடலம் (antimicrobial nanofilm)

நிறுவனம்: ரஷ்யாவிலுள்ள உயிரித்தொழில்நுட்ப நிறுவனமான, வியாட்கா அக்ரோகான்சர்ன், (Vyatka Agroconcern)

விவரம்: ரஷ்ய நிறுவனம், மிலேகான்ஸ் எனும் நுண்ணுயிர் எதிர்ப்பு நேனோபடலம் (antimicrobial nanofilm) ஒன்றை உருவாக்கியுள்ளது. பழம், காய்கறி, இறைச்சி, தானியங்களை அந்தப் படலத்தைக் கொண்டு பூசினால்/மூடினால், அவை வெகுநாட்களுக்குக் கெடாது.

அம்மோனியம், சர்க்கரை, எரிசாராயம், சோடியம் குளோரைடு ஆகியவற்றால் ஆன மிலேகான்சை உட்கொண்டாலும் கெடுதல் இல்லை. வெளியே வீசப்பட்டால், விரைவில் மட்கிவிடும். ஒரு டன் எடையுள்ள உணவை மைல்கான்ஸ் கொண்டு மூட, 158 ரூபாய் தான் ஆகும். விளைநிலத்தில் துவங்கி, கிடங்கு, கடை, வீடு என்று உணவின் முழு பயணத்திலும் கெடாமல் வைத்திருக்கும் மைல்கான்ஸ், வெப்பம் மிக்க வளரும் நாடுகளுக்கு ஏற்றது.

240_F_123165150_Co0vkIAoweQttDlqOkLztQ8JlFkFeRkh

Milekons, an antimicrobial, nanofilm preserves food

Invention: Milekons, a treatment that creates an antimicrobial nanofilm that can be used to coat the surface of fruits, vegetables and grains and preserve them.

Organisation: Russian biotech company Vyatka Agroconcern

Description:  World Health Organization states that up to 25% of grain crops are affected by mycotoxins.  The  Russian biotech company has created Milekons, a treatment that creates an antimicrobial nanofilm that can be used to coat the surface of fruits, vegetables and grains. This nanofilm prevents the formation of pathogenic microflora.  95-100% of vegetables, such as potatoes, treated with Milekons and placed in long-term storage for 6-8 months are preserved well. The preservative consists of a quaternary ammonium compound ‘widely used’ in water purification, modified sucrose, sodium chloride and ethanol.

Milekons is active against a wide range of viruses, bacteria and fungi, including antibiotic resistant microorganisms. It does not contain ‘chemically active substances’ that ‘adversely affect’ the ‘immunity or genetic apparatus’ of humans or animals that consume it. Grains treated with the coating and placed in storage for a year ‘do not lose [their] commercial properties’ and maintain ‘high growth properties’.

Source: Dinamalar  and Food Navigator 

அச்சடிக்கப்பட்ட ரத்த நாளங்களுடன் கூடிய தோல்

கண்டுபிடிப்பு:  அச்சடிக்கப்பட்ட ரத்த நாளங்களுடன் கூடிய தோல்

ஆராய்ச்சியாளர்கள்: நியூயார்க்கிலுள்ள ரென்செலயர் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூட்டின் (Rensselaer Polytechnic Institute in New York ) பங்கஜ் கராண்டே (Pankaj Karande) தலைமையிலான விஞ்ஞானிகள்

விவரம்: மனித தோல் செல்களை எடுத்து, ஆய்வகத்தில் வைத்து வளர்த்து, ‘பயோ இங்க்’ எனப்படும், ‘உயிரி மை’ தயாரிக்கப்படுகிறது. இந்த மையினை வைத்து, ‘3டி முப்பரிமாண அச்சியந்திரம்’ எனப்படும் உயிரி முப்பரிமாண அச்சியந்திரத்தில் கொடுத்து, வேண்டிய பரப்பளவுக்கு மனித தோலை அச்சடிக்க முடியும்.

ஆனால், அச்சடிக்கப்பட்ட மனித தோலில் ரத்த நாளங்கள் இல்லை என்பதால், செல்கள் சீக்கிரமே இறந்துவிடுகின்றன. இந்தக் குறைய போக்க விஞ்ஞானிகள், புதிய யுக்தியை கண்டறிந்துள்ளனர்.தோலின் ரத்த நாளங்களில் உள்ள செல்களையும் தனியே எடுத்து, உயிரி மையில் கலந்து அச்சிட்டனர். இந்த புதிய தோல், ஆய்வக சோதனைகளில், இயல்பாக உள்ள ரத்த நாளங்களுடன் இணைத்து வளரவும், ரத்தத்தை பெறவும், அனுப்பவும் செய்தன.

1502.m00.i123.n012.s.c10.seamless-web-page-dividers-with-shadows-

3D-PRINTED LIVING SKIN WITH BLOOD VESSELS

Research: 3D-printed skin complete with blood vessels

Researchers: A team of researchers at Rensselaer Polytechnic Institute in New York led by Pankaj Karande

In Detail: 3D printed available  provides some accelerated wound healing, but eventually it just falls off; it never really integrates with the host cells. Researchers now combined cells found in human blood vessels with other ingredients including animal collagen, and printed a skin-like material. After a few weeks, the cells started to form into vasculature. The skin was then grafted onto a mouse, and was found to connect with the animal’s vessels.

Source: Dinamalar  and  News Week

அதிக ஒலி எழுப்பும் பறவை

கண்டுபிடிப்பு:  உலகிலேயே அதிக அளவு ஒலி எழுப்பும் வெள்ளை பெல்பிர்ட் பறவை (white bellbird)

ஆராய்ச்சியாளர்கள்:  . உயிரியல் அறிஞர் Jeff Podos, University of Massachusetts , மற்றும் மரியோ கோன்-ஹாஃப்ட் (Mario Cohn-Haft), curator of birds at the Instituto Nacional de Pesquisas da Amazônia in Manaus, Brazil)

விவரம்: அமேசான் வனத்தின் வடக்கு பிரேசில் மலைப் பகுதிகளில் வாழும் வெள்ளை பெல்பிர்ட் ஆண் பறவை (புரேக்னியால் ஆல்பஸ்), பெண் பறவைகளைக் கவர எழுப்பும் ஒலி, ராக் இசைக் கச்சேரிகளில் வெளிப்படும் இரைச்சல், மரம் வெட்டும் இயந்திர ரம்பம் ஆகியவற்றைவிட அதிக இரைச்சலைக் கொண்டதாக இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.

1502.m00.i123.n012.s.c10.seamless-web-page-dividers-with-shadows-

Loudest bird on Earth

Discovery: Male white bellbird is the loudest bird on Earth

Researchers: Biologist Jeff Podos, University of Massachusetts and Mario Cohn-Haft, curator of birds at the Instituto Nacional de Pesquisas da Amazônia in Manaus, Brazil.

In detail:  The male white bellbird of the Amazon rainforest is the loudest bird on Earth.

The bellbird’s call is  of 125 dB—that’s similar to what you’d hear standing next to speakers at a rock concert. By comparison, a normal human voice is about 60 dB.

During mating season, the mountains of the Brazilian Amazon ring out with the screams of male white bellbirds. Males have two different song types: a cutting scream (0:08), and a rarer, louder two-tone call (0:17). ( video ) The calls can get louder than live rock concerts. The males may have evolved this trait to impress females, as the louder birds are presumably more fit.

Source : Dinamalar and National Geographic

மைட்டோகாண்ட்ரியா டி.என்.ஏ.,க்களை திருத்தம் செய்தல்

கண்டுபிடிப்பு:  மைட்டோகாண்ட்ரியா டி.என்.ஏ.,க்களை திருத்தம் செய்தல்

ஆராய்ச்சியாளர்கள்:  டோக்கியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் (Universities of Tokyo, Tohoku and Tamagawa)

 விவரம்: ஒரு செல்லின் மைய, டி.என்.ஏ.,வைத் தவிர, செல்லுக்கு தெம்பு தரும் ஆற்றல் கருவூலமாக, மைட்டோகாண்ட்ரியா டி.என்.ஏ.,வும் உள்ளது. விலங்கு செல்களில் இதன் கட்டமைப்பு மிகவும் எளிமையானது. ஆனால், தாவரங்களில் மிகவும் சிக்கலான அமைப்பை கொண்டுள்ளது.

செல்களின் ஒரு பகுதியான மைய, டி.என்.ஏ.,க்களை மட்டுமே விஞ்ஞானிகளால் கையாள முடிந்துள்ளது. இதனால், மக்காச் சோளம், வாழைப் பழம் போன்ற மரபணு திருத்தப்பட்ட பயிர்கள், திடீரென நோய்களுக்குட்பட்டு அழிந்து போயின. இந்த நிலையில் தான், விஞ்ஞானிகள், நெல் மற்றும் கடுகு ஆகியவற்றின் மைட்டோகாண்ட்ரியா டி.என்.ஏ.,க்களை முதல் முறையாக திருத்தம் செய்து வெற்றி கண்டுள்ளனர். இதனால், அப்பயிர்களின் வித்துக்கள் வீரியமுள்ளவையாக ஆகியுள்ளன.

1502.m00.i123.n012.s.c10.seamless-web-page-dividers-with-shadows-

Editing mitrochondrial DNA

Researchers : Researchers from the Universities of Tokyo, Tohoku and Tamagawa

Research : Editing mitrochondrial DNA

In detail: Mitchondria are often called the “powerhouses” of cells, since they produce energy from nutrients. These regions contain their own DNA, separate from the nuclear DNA in the rest of the cell. While mitochondrial DNA in animals has a smaller and simpler genome, in plants it’s the other way around. Because of the complexity, mitochondrial DNA had never been successfully edited in plants before.

Researchers earlier adapted a process used to edit mitochondrial DNA in animals. Named mitoTALENs, the technique uses a protein to cut and delete a specific gene from the mitochondrial genome.

The Japanese researchers now used the modified mitoTALENs technique to snip out a mitochondrial gene that’s thought to cause a condition called cytoplasmic male sterility (CMS), which leaves male plants infertile and unable to make pollen. Using the method, the team created plants that had their mitochondria edited appeared to be fertile, producing far more seeds than the unedited plants.

Source :Dinamalar and New atlas

கற்றாழையிலிருந்து பிளாஸ்டிக்

கண்டுபிடிப்பு:  கற்றாழையிலிருந்து பிளாஸ்டிக் தயாரித்தல்.

ஆராய்ச்சியாளர்கள்:   மெக்சிகோவை சேர்ந்த, அதேமஜாக் பள்ளத்தாக்கு பல்கலைக்கழகத்தின் (University of Valle de Atemajac in Zapopan, Mexico) சான்டிரா பாஸ்கோ அர்டிஸ் (Sandra Pascoe Ortiz) தலைமையிலான விஞ்ஞானிகள்.

 விவரம்: கற்றாழையை வெட்டி, பிழிந்து கிடைக்கும் சாறில், இயற்கையில் கிடைக்கும் மிருகக் கொழுப்பு, மெழுகு ஆகியவற்றை சேர்த்து இயற்கை பிளாஸ்டிக்கை உருவாக்கியுள்ளனர். இந்த இயற்கை பிளாஸ்டிக்கில் வலுவான ஷாப்பிங் பைகளை தயாரிக்க முடியும். மேலும், இதை குப்பையில் போட்டால், பத்தே நாட்களில் மட்கிப் போய்விடும்; தண்ணீரில் சில மணி நேரத்தில் கரைந்துவிடும்

balls

Biodegradable Plastic From Prickly Pear Cactus

Invention : Biodegradable Plastic From Prickly Pear Cactus
Scientists : Researchers headed by Sandra Pascoe Ortiz from the University of Valle de Atemajac in Zapopan, Mexico
In detail: The researchers used the most common variety of edible nopal cactus (the opuntia ficus-indica and the opuntia megacantha) to make a biodegradable and bio-based plastics (bioplastics). Nopal is a common name in Mexican Spanish for Opuntia cacti. The English word is prickly pear.
“The plastic is basically made out of the sugars of nopal juice, the monosaccharides and polysaccharides it contains. The sugars, pectin and organic acids in the juice give it a very viscous consistency. Glycerol, natural waxes, proteins and colorants are mixed with the juice after it has been decanted to remove its fiber. The formula is then dried on a hot plate to produce thin sheets of plastic.
The plastic begins to degrade after sitting in soil for just one month. When submerged in water, it degrades in a matter of days.

Video link: Bio plastic

Source:Forbes and BBC

கொசுவை விரட்டும் இயற்கை புரதம்

கண்டுபிடிப்பு: கொசுவை விரட்டும் இயற்கை புரதம் ‘பி.ம்.பி.,1′(PMP1)

ஆராய்ச்சியாளர்கள்: அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சர்ஜீத் கில்லின் (Sarjeet Gill) குழுவினர்

விவரம்: மனிதர்களுக்கு மலேரியாவை தொற்ற வைக்கும் அனாபிலஸ் கொசுக்கள் (Anopheles mosquitoes) மீது பிளாஸ்மோடியம் என்ற ஒட்டுண்ணிகள் குடியேறுகின்றன. இவை தான் மலேரியாவை மனிதருள் உண்டாக்குகின்றன.

அனாபிலஸ் கொசுக்களை கொல்லும் ஒரு பாக்டீரியாவை, 30 ஆண்டுகளுக்கு முன் விஞ்ஞானிகள் கண்டறிந்தாலும், அது எப்படி அனாபிலஸ் கொசுவை கொல்கிறது என்பது பிடிபடாமல் இருந்தது.

தற்போது, அந்த பாக்டீரியா உற்பத்தி செய்யும், ‘பி.ம்.பி.,1′(PMP1) நரம்பியல் நச்சு (neurotoxin) தான் கொசுவை கொல்கிறது என்பதை, கண்டறிந்துள்ளனர். ‘பி.ம்.பி.,1’ என்ற புரதத்தை வைத்து சோதித்தபோது, அது விலங்குகளுக்கு எந்த தீங்கையும் செய்யவில்லை.

எனவே, இதை அடிப்படையாக வைத்து கொசுவிரட்டியை உருவாக்கினால், மலேரியா அதிகம் உள்ள நாடுகளில், கொசுக்களை ஒழிக்க முடியும். வேதிப் பொருட்களை எதிர்க்கும் சக்தியை வளர்த்துக் கொள்ளும் கொசுக்களால், இயற்கையான புரதத்தை எதிர்க்கும் சக்தி வளராது என, விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

ΛΛΛΛΛΛΛΛΛΛΛΛΛΛΛΛΛΛΛΛΛΛΛΛΛΛΛΛΛΛΛΛ

Controlling deadly malaria without chemicals

Research: Neurotoxin PMP 1 kills Mosquitoes

Researchers :  Team led by Prof. Sarjeet Gill at the University of California, Riverside.

Description : Malaria is transmitted to humans by Anopheles mosquitoes, which are themselves infected with Plasmodium parasites. Approximately 30 years ago, scientists identified a strain of Paraclostridium bifermentans bacteria that kills Anopheles, although its method of doing so was not understood.

Now the research team, has identified a neurotoxin, called PMP1 produced by the bacteria, and determined how it kills Anopheles. Many neurotoxins generally target vertebrates, and although PMP1 bears 30 percent chemical similarity to botulinum or tetanus, both highly toxic to humans it didn’t affect vertebrates of any kind, or even other insects. When mice were directly injected with the neurotoxin, they showed no adverse reaction. Anopheles mosquitoes, on the other hand, die when exposed to it.

It is now hoped that industry partners could help develop a PNP1-based insecticide, for use in malaria-prone countries. Because that insecticide would be protein-based, it should harmlessly break down in the environment after being sprayed. And, unlike the case with synthetic chemical-based insecticides, the mosquitoes shouldn’t develop a resistance to it.

Source: Dinamalar and Phys.org

 

 

பருவநிலை மாற்றத்தை சமாளித்து வாழும் கணவா மீன்கள்

கண்டுபிடிப்பு: ஸ்க்விட் எனப்படும் கணவா மீன்கள் கடல் நீரின் பருவநிலை மாற்றத்தை சமாளித்து வாழும் திறனைப் பெற்றுள்ளன.

ஆராய்ச்சியாளர்: ARC Centre of Excellence for Coral Reef Studies (Coral CoE) at James Cook University (JCU) யை சேர்ந்த ப்ளேக் ச்பேடி (Dr Blake Spady)

விவரம்: கடல் நீரின் வெப்பம் கூடும்போது, அதில் கரியமிலத் (CO2) தன்மையும் அதிகரிக்கும். இது, மீன்களின் ஆக்சிஜன் ஈர்க்கும் திறனை வெகுவாக பாதிக்கும். ஆனால், ஸ்க்விட் எனப்படும் கணவா மீன்கள் இந்த மாற்றத்தை சமாளித்து வாழும் திறனைப் பெற்றுள்ளது.

கணவா மீன்களின் ஆயுள் குறைவுதான். என்றாலும் அவை வேகமாக வளரக்கூடியவை. ஆய்வகத்தில் கரியமிலத் தன்மையுள்ள நீரில் கணவா மீன்களை வளர்த்தபோது, நீரின் நச்சுத் தன்மையையும் மீறி அவை நன்கு வளர்ந்தன.

balls

Squid could thrive under climate change

Discovery: Squid will survive and may even flourish under even the worst-case ocean acidification scenarios.

Scientists : Dr Blake Spady, from the ARC Centre of Excellence for Coral Reef Studies (Coral CoE) at James Cook University (JCU)

Description:  Squid live on the edge of their environmental oxygen limitations due to their energy-taxing swimming technique. They were expected to fare badly with more carbon dioxide (CO2) in the water, ie acidic water. But when the squids were  subjected to CO2 levels projected for the end of the century, they are unaffected in their aerobic performance and recovery after exhaustive exercise by the highest projected end-of-century CO2 levels.

Squid have a high capacity to adapt to environmental changes due to their short lifespans, fast growth rates, large populations, and high rate of population increase.

Source: Science daily

 

 

கடல் வைரஸ்கள்

கண்டுபிடிப்பு: உலகம் முழுவதும் கடல் பகுதிகளில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட வகைகளை சேர்ந்த வைரஸ்கள் உள்ளன.
ஆராய்ச்சியாளர்கள்: அமெரிக்காவின் ஒஹாயோ (Ohio State University) பல்கலைக்கழகத்திலுள்ள ஆராய்ச்சியாளர்கள்
விவரம்: உலகம் முழுவதும் 80க்கும் மேற்பட்ட கடல் பகுதிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட தண்ணீரின் மாதிரிகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். வைரஸ்கள் கடலின் உள்ளே சுமார் 4,000 மீட்டர்கள் ஆழத்தில் வட துருவம் முதல் தென் துருவம் வரை உள்ள பகுதிகளில் காணப்படுகிறது. இதில் குறிப்பாக, மொத்தமுள்ள இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வைரஸ்களை அவற்றின் இடம் மற்றும் ஆழத்தை பொறுத்து ஐந்தே குழுக்களில் வகைப்படுத்த முடிவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பூமத்திய ரேகை (equator) பகுதியில் அதிக வைரஸ்கள் இருக்குமென்ற எதிர்பார்ப்பிற்கு பதிலாக ஆர்டிக் பெருங்கடலில் (Arctic Ocean) அதிக வகையான வைரஸ்கள் இருந்தன.
இவற்றில் பெரும்பாலானவை மனிதர்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றாலும், கடலிலுள்ள மற்ற நுண்ணுயிரிகளான பாக்டீரியா மற்றும் பூஞ்சை உள்ளிட்டவற்றின் மீது செல்வாக்கு செலுத்துவதால் அவை குறித்து அறிந்துகொள்ள அவசியமானதாக கருதப்படுகிறது

balls

Marine Viruses

Discovery: The oceans contain almost 200,000 different viral populations.

Scientists: Researchers at Ohio State University ,

Description: Marine viruses were found from the surface down to 4,000m deep and from the North to the South Pole. Though most are harmless to humans, they can infect marine life, including whales and crustaceans. Researchers drew up a global map of marine viruses based on seawater samples from nearly 80 sites around the world. They were surprised to find that the viruses fell into just five groups based on their location and depth. The second surprise was that the Arctic Ocean had lots of different types of viruses. It had been thought that hotspots for microbial diversity would be at the equator.

A litre of seawater typically contains billions of viruses – the vast majority of which remain unidentified. In the latest dataset, 90% of the populations could not be classified to a known group. Better knowledge of ocean viruses is important because of their influence on other marine microbes, including bacteria and fungi. Viruses have an impact on organisms, such as plankton, which produce more than half of the oxygen we breathe and absorb carbon dioxide from the atmosphere.

Source : BBC

ஆய்வகத்தில் உருவாகும் இறைச்சித்துண்டுகள்

ஆய்வு : ஆய்வகத்தில் உருவாகும் இறைச்சித்துண்டுகள்

பரிசோதிக்கும் நிறுவனங்கள்: மொசா மீட் (Mosa Meat), மெம்பிஸ் மீட்ஸ்  (Memphis Meats) , சூப்பர் மீட் (SuperMeat) பின்லஸ் புட்ஸ் ( Finless Foods).

விவரம் : மாடு மற்றும் கோழியின் உயிருள்ள சில செல்களை எடுத்து ஆய்வகத்தில் கிறிஸ்பர் மூலம் திருத்தம் செய்து, அவற்றை வேகமாக வளரும்படி செய்தல்.பின் செல்களை இணைத்து இழைகள் (fibers),பின் அவற்றை இணைத்து தசைகள் உருவாக்குவது.

இந்த தொழில்நுட்பம் நடைமுறைக்குவந்தால், இறைச்சிக்காக எந்த விலங்குகளும் கொல்லப்பட வேண்டியிருக்காது.

 

Meat grown in a laboratory

Invention :  Meat grown in a laboratory from cultured cells

Startups developing the product : Mosa Meat, Memphis Meats, SuperMeat and Finless Foods.

 Description : The meat is made by first taking a muscle sample from an animal. Technicians collect stem cells from the tissue, multiply them dramatically and allow them to differentiate into primitive fibers that then bulk up to form muscle tissue. Mosa Meat says that one tissue sample from a cow can yield enough muscle tissue to make 80,000 quarter-pounders.

A number of the start-ups say they expect to have products for sale within the next few years. But clean meat will have to overcome cost and taste barriers..To receive market approval, clean meat will have to be proved safe to eat.

Clean meat could make our daily eating habits more ethical and environmentally sustainable

Source : Scientific american