தீக்காயத்துக்கு மருந்தாகும் டிலாபியா மீன்

பிரேசில் மருத்துவமனையில் தீக்காயங்களுக்கான சிகிச்சையில் டிலாபியா  மீனின் (tilapia fish) தோலை மருத்துவர்கள் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

பிரேசிலின் சியாரா பல்கலைகழகத்தின் (Federal University of Ceara) விஞ்ஞானிகள், டிலாபியா  மீனின் தோலுக்கு, மனிதனின் தோலை போன்றே ஈரப்பதம், பிணைக்கும் புரதமான கொலாசென், மற்றும் நோய் எதிர்ப்பு சக்திகள் இருப்பதை கண்டுபிடித்தனர். இந்த தன்மைகள் தீக்காயங்களை விரைவில் குணப்படுத்தும் என்று நம்பினர்.

Treatment of Burns with Tilapia Skin

மீனிலிருந்து உரிக்கப்பட்ட தோல், வெட்டி சுத்தமாக்க்கப்பட்டு, வைரஸ் போன்ற நுண்ணுயிரிகள் ஒழிக்கப்பட்டு குளிரூட்டிகளில் பாதுகாக்கப்படுகிறது. இவ்வாறு சுத்தம் செய்யப்பட்ட தோல், மீன் வாடையே இல்லாமல் இருக்கும். மேலும், இது இரண்டு ஆண்டுகள் வரை கெடாமல் இருக்கும்.

தீக்காயங்களின் மீது வேறு எந்த மருந்தும் இல்லாமல் இந்த மீன் தோலால் மட்டுமே கட்டு போடும்போது காயம் ஆற தேவையான கொலாசென் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. பத்து நாட்களில்  காயம் ஆறியதும் காய்ந்த மீன் தோலை எடுத்து விடலாம்.

தீக்காயங்களுக்கான மற்ற சிகிச்சைகளை விட இது மிகவும் மலிவானது.

இந்த சிகிச்சை முறை இன்னமும் பரிசோதனையாகவே மேற்கொள்ளப்படுகிறது.

4

Fish skin to treat burn victims

Researchers in Brazil are experimenting with a new treatment for severe burns using the skin of tilapia fish, an unorthodox procedure they say can ease the pain of victims and cut medical costs.

Tilapia is abundant in Brazil’s rivers and fish farms, which are expanding rapidly as demand grows for the mildly flavored freshwater fish.

Scientists at the Federal University of Ceara in northern Brazil have found that tilapia skin has moisture, collagen and disease resistance at levels comparable to human skin, and can aid in healing.

University lab technicians treated the fish skin with various sterilizing agents, and sent it to São Paulo for irradiation to kill viruses before packaging and refrigeration. Once cleaned and treated, it can last for up to two years, researchers say. The treatment removes any fish smell.

In medical trials, the alternative therapy has been used on at least 56 patients to treat second- and third-degree burns.

The fish skin has high levels of collagen type 1, stays moist longer than gauze, and does not need to be changed frequently.

The tilapia skin is applied directly onto the burned area and covered with a bandage, without the need for any cream. After about 10 days, doctors remove the bandage. The tilapia skin, which has dried out and loosened from the burn, can be peeled away.

The tilapia skin treatment costs 75 percent less than the sulfadiazine cream typically used on burn patients in Brazil, as it is a cheap fish-farming waste product.

The researchers hope the treatment will prove commercially viable and encourage businesses to process tilapia skin for medical use.

Source Reuters

குறையும் ஆக்ஸிஜன் அளவு

கடந்த இருபது ஆண்டுகளாக உலகம் முழுவதும் உள்ள கடல்களில் கரைந்துள்ள ஆக்ஸிஜன் அளவு ஆபத்தான அளவில் குறைந்துவருவது தெரியவந்திருக்கிறது.

ஜார்ஜியா இன்ஸ்ட்டியூட் ஆஃப் டெக்னாலஜியின் (Georgia Institute of Technology) ஆய்வாளர்கள், கடந்த ஐம்பது ஆண்டுகளாகக் கடல்களின் தரவுகளை ஆய்வுசெய்தபோது கடல்களின் ஆரோக்கியம் ஆபத்தான அளவுக்குப் பாதித்திருப்பது உறுதியாகியிருக்கிறது. 1980-களில் இருந்து கடல்களின் வெப்ப நிலை அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. அப்போதிலிருந்து, கடல்களில் கரைந்துள்ள ஆக்ஸிஜன் அளவு குறைய ஆரம்பித்திருக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

“கடல்களில் இருக்கும் ஆக்ஸிஜனுக்கு மாறுபட்ட பண்புகள் இருக்கின்றன. அதில் மாற்றம் நடக்கும்போது இது காலநிலையிலும் மாற்றத்தை உருவாக்கும்” என்கிறார் ஜார்ஜியா இன்ஸ்ட்டியூட்டின் இணைப் பேராசிரியர் தகா இடோ (Taka Ito).

images

Oxygen level in world’s oceans dipping since 1980s

Researchers at Georgia Institute of Technology in the US looked at a historic dataset of ocean information stretching back more than 50 years and searched for long term trends and patterns.

They found that oxygen levels started dropping in the 1980s as ocean temperatures began to climb.

Falling oxygen levels in water have the potential to impact the habitat of marine organisms worldwide and in recent years led to more frequent “hypoxic events” that killed or displaced populations of fish, crabs and many other organisms.

Researchers have for years anticipated that rising water temperatures would affect the amount of oxygen in the oceans, since warmer water is capable of holding less dissolved gas than colder water.

However, the data showed that ocean oxygen was falling more rapidly than the corresponding rise in water temperature.

The majority of the oxygen in the ocean is absorbed from the atmosphere at the surface or created by photosynthesising phytoplankton.

Ocean currents then mix that more highly oxygenated water with subsurface water. But rising ocean water temperatures near the surface have made it more buoyant and harder for the warmer surface waters to mix downward with the cooler subsurface waters.

Melting polar ice has added more freshwater to the ocean surface – another factor that hampers the natural mixing and leads to increased ocean stratification.

Source Hindu and Indian express

கோரல்களை காப்பாற்றும் வினிகர்

கோரல்களை உண்ணும், உடம்பு முழுவதும் முட்கள் கொண்ட நட்சத்திர மீனான கிரௌன் ஆப் தார்ன்ஸ் நட்சத்திர மீன் (crown-of-thorns starfish)  சமீபகாலமாக மாசுபாட்டினால் பல்கி பெருகி உள்ளது. இதனால், ஏற்கனவே கடல் நீர் வெப்ப அதிகரிப்பால் வண்ணமிழந்து (coral bleaching) அழிந்து கொண்டிருக்கும் கோரல்கள், முற்றிலும் வேகமாக அழியும் நிலைக்கு தள்ளப்படிருக்கின்றன. கடல் வெப்பத்தை கட்டுக்குள் வைப்பது மனிதனுக்கு பெரிய சவால் என்றாலும் குறைந்தபட்சம் கோரல்களை உண்ணும் கிரௌன் ஆப் தார்ன்ஸ் நட்சத்திர மீனிடமிருந்தாவது கோரல்களை காப்பாற்ற ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

ஆஸ்திரேலியாவின் James Cook Universityயை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சமையலுக்கு பயன்படுத்தப்படும் வெள்ளை வினிகரை நட்சத்திர மீனின் உள்ளே செலுத்தினார்கள். 48 மணி நேரத்தில் அவை இறந்து போயின. இதனால் அங்கிருக்கும் பிற உயிரினங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

sd

ஆஸ்திரேலியாவின்  கிரேட்  பாரியர்  ரீஃபில் கோடிக்கணக்கான கிரௌன் ஆப் தார்ன்ஸ் நட்சத்திர மீன்கள் இருக்கின்றன. மேலும் ஒவ்வொரு பெண் மீனும் 6.5 கோடி முட்டைகள் இடும். அதனால் ஒவ்வொரு மீனையும்  வினிகர் செலுத்தி அழிப்பது மிக கடினமான பணி.

images

Vinegar rescues Great Barrier Reef

The Coral-munching crown-of-thorns starfish is naturally-occurring but has proliferated due to pollution and run-off at the World Heritage-listed ecosystem, which is also reeling from two consecutive years of mass coral bleaching. Until now other expensive chemicals such as bile salts have been used to try and eradicate the pest – which consumes coral faster than it can be regenerated – but they can harm other marine organisms.

Studies conducted by James Cook University revealed that crown-of-thorns injected with vinegar at four sites on the reef over six weeks, died within 48 hours with no impact on other life. Starfish are simple animals that can’t regulate their own internal pH levels. If they’re injected with white vinegar, which contains acetic acid, they die within 48 hours and begin to disintegrate.

“There are millions of starfish on the Great Barrier Reef and each female produces around 65 million eggs in a single breeding season. It would take a massive effort to try and cull them all individually, but we know that sustained efforts can save individual reefs.” Researchers said.

Vinegar has now been added to the GBRMPA’s list of approved control chemicals, meaning operators can apply for permits to start controlling the starfish.

Source Telegraph

விவசாயம் செய்யும் எறும்புகள்

தென்னமெரிக்காவின் மழைக்காடு ஒன்றில் பல கோடி ஆண்டுகளுக்கு முன், சின்னச்சிறு எறும்பினங்கள் நமக்கும் முன்பே விவசாய வழிமுறைகளைக் கண்டறிந்துவிட்டன. தங்கள் உணவுத் தேவைக்காக அந்த எறும்புகள் பூஞ்சைகளைப் பயிரிட ஆரம்பித்தன. ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு சிக்ஸலப் வால் நட்சத்திரம் (Chicxulub meteor) பூமியின் மீது மோதியதால் பூமியின் நான்கில் மூன்று பங்கு அழிந்தது. அதிலிருந்து கொஞ்ச காலத்திலேயே அந்த எறும்புகள் விவசாயத்தைக் கண்டுபிடித்தன என்பதுதான் சிறப்பு.

இன்றைக்குச் சுமார் 250 எறும்பினங்கள் அமெரிக்கக் கண்டங்களின் மழைக்காடுகள், பாலைவனங்கள், புல்வெளிகளில் பூஞ்சைத் தோட்டங்களைப் பயிரிடுகின்றன. தட்பவெட்பம் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் தரைக்கடியில் உருவாக்கிய மண்ணறைகளில் பூஞ்சைகளை எறும்புகள் பயிரிடுகின்றன. பயிரிடுவது மட்டுமல்லாமல் அவற்றில் களையெடுக்கின்றன; நீர் பாய்ச்சுகின்றன; சில வகை தீங்கான பாக்டீரியாவிடமிருந்து பூஞ்சைகளைக் காப்பதற்காகச் சில எறும்பினங்கள் நோயுயிர்முறிகளையோ (antibiotics) வேதிப்பொருட்களையோ பயன்படுத்துகின்றன.

பல கோடி ஆண்டுகளாக இந்த எறும்பினங்கள் எப்படி இந்த அளவுக்கு மேம்பட்ட பூஞ்சை விவசாயிகளாகப் பரிணாமமடைந்தன என்ற ஆய்வை  அறிவியலாளர்கள் மேற்கொண்டனர்.

12tb-antfarmers01-master675

“உங்களுக்கு எக்ஸ்-ரே பார்வை இருந்து அமெரிக்கக் கண்டங்களின் மழைக்காடுகளில் தரைக்குக் கீழே பார்க்க முடிந்தால் ஒட்டுமொத்த நிலத்தடியும் தோட்ட அறைகளைக் கொண்டிருப்பதை நீங்கள் காணலாம்” என்கிறார் அமெரிக்காவின் இயற்கை வரலாற்றுக்கான ஸ்மித்ஸோனியன் தேசிய அருங்காட்சியகத்தில் பூச்சியியலாளராக இருக்கும் டெட் ஷுல்ட்ஸ் (Ted Schultz, an entomologist at the Smithsonian National Museum of Natural History).

பூஞ்சை விவசாய எறும்புகள் தென்னமெரிக்காவின் மழைக்காடுகளிலிருந்து சுமார் ஆறு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய மூதாதை இனத்திலிருந்து வந்திருக்கின்றன. மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்த விவசாய எறும்புகள் இரண்டாகப் பிரிந்தன.

விவசாய நுட்பத்தில் மேம்பட்ட எறும்பினம் அவற்றின் பூஞ்சைகளைப் பாலைவனப் பகுதிகள், சாவன்னா புல்வெளிகள் போன்ற உலர்ந்த, அல்லது பகுதியளவு உலர்ந்த தட்பவெட்பப் பகுதிகளுக்கு எடுத்துச் சென்றிருக்கின்றன. அங்கே தரைகீழ் தோட்ட அறைகளில் அந்தப் பூஞ்சைகளை எறும்புகள் பராமரித்தன. எறும்புகளைச் சார்ந்தே வாழும்படி அந்தப் பூஞ்சைகள் பரிணாம மாற்றம் பெற்றன.

விவசாய நுட்பத்தில் சற்றே மேம்படாத, சிக்கல் குறைந்த விவசாய முறைகளை மேற்கொள்ளும் எறும்பினம், மழைக்காடுகளில் வசிப்பவை. அவற்றைச் சாராமலேயே வாழ்ந்துவிடும் தன்மையுடைய பூஞ்சைகளை அந்த எறும்புகள் பயிரிட்டுவந்தன.

‘மேம்பட்ட விவசாய எறும்புகள், உலர்ந்த வெப்பநிலையைக் கட்டுப்படுத்த மிகவும் ஆழமான அறைகளைத் தோண்டுதல், அல்லது பழங்கள், தாவரங்கள், காலைப் பனி போன்றவற்றிலிருந்து தண்ணீரைக் கொண்டுவருவதன் மூலம் ஈரப்பதத்தைப் பராமரித்தல் போன்ற செயல்பாடுகளை அந்த எறும்புகள் மேற்கொள்ளக் கற்றுக்கொண்டன. அதாவது,’பசுங்குடில்களை’ நமக்கும் முன்பே பூஞ்சை வளர்ப்பில் எறும்புகள் மேற்கொண்டுவிட்டன. உலர்ந்த பிரதேசத்தில் அந்தப் பூஞ்சைகள், எறும்புகளின் பராமரிப்பு மட்டும் இல்லை என்றால் அழிந்து போய் இருக்கும்’ என்கிறார் ஷுல்ட்ஸ்.

விவசாய வழிமுறைகளை நாம் எறும்புகளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார் டாக்டர் ஷுல்ட்ஸ்.

1

Farming by Ants

In a rain forest in South America millions of years ago, ants had started farming before humans did. They started farming fungus for food — probably not too long after the Chicxulub meteor impact caused the mass extinction event that obliterated up to three-quarters of the rest of Earth’s plants and animals.

Today some 250 species of ants in tropical forests, deserts and grasslands throughout the Americas build fungi gardens in climate-controlled chambers underground. They weed them. They water them. Some even use antibiotics or chemicals to keep harmful bacteria away from their crop.

“If you had X-ray vision and you could look out in a wet, new-world tropical forest, you’d see the entire underground just peppered with garden chambers,” said Ted Schultz, an entomologist at the Smithsonian National Museum of Natural History and lead author of the study.

By comparing the genomes of 78 species of fungus farmers, including leaf-cutter ants, with 41 non-fungus farming species, Dr. Schultz and his colleagues revealed curious patterns. They found that fungus-farming ants probably all came from the same ancestor in the rain forests of South America some 60 million years ago. But 30 million years later, two kinds of ant-farming societies diverged.

One contained higher, more complex agriculturalists, which probably transported their fungus with them to dry or seasonably dry climates like deserts or savannas. There, they cared for it in their underground gardens, co-evolving until the fungus became totally dependent on its farmer. The second society was made up of lower, less complex agriculturalists, based primarily in tropical forests, and they grew fungus capable of escaping its garden and living independently.

Dr. Schultz speculated that with enough time, the dry climate created ideal conditions for the more complex ant farmers to domesticate the fungus, controlling temperature by digging deeper chambers, or maintaining humidity by bringing in water from fruits, plants or morning dew. “They’re already kind of putting their fungal crops in greenhouses,” he said, “but if you’re in a dry habitat, even if your fungal crop could escape, there’s nowhere to go.”

Dr. Schultz thinks we can take a lesson from these ant-brained farming methods.

Source Hindu and New York times

 

அட்லாண்டிக் ஆகும் கிழக்கு ஆர்டிக்

ஆர்டிக் பெருங்கடலின் கிழக்கு பகுதி அட்லாண்டிக் ஆகி வருவதை சர்வதேச ஆராய்ச்சி குழு, பதினைந்து ஆண்டுகள் வெப்ப நிலை மாற்றத்தை அளவிட்டு கண்டறிந்துள்ளனர்.

பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலுக்கும்,  ஆர்டிக் பெருங்கடலுக்கும் உள்ள வித்தியாசம் –ஆர்டிக் கடலில் மேற்பரப்பு குளிராகவும்,ஆழத்தில் வெதுவெதுப்பாகவும் இருக்கும். ஆனால் பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலில், மேலே வெதுவெதுப்பாகவும் உள்ளே குளிராகவும் இருக்கும்.

முன்பு, அட்லாண்டிக் பெருங்கடலின் சூடான நீர், ஆர்டிக் பெருங்கடலின் குளிர்ந்த நீரோடு கலப்பதை ஹாலோகலைன் அடுக்கு  (halocline layer) எனும் (கடலின் உப்பு நீரும் பணியிலிருந்து உருகி வரும் புதிய நீரும் இணையும் இடத்தில் ஏற்படும் ஒரு) தடுப்பு தடுத்தது. ஆனால் இப்போது அட்லாண்டிக் பெருங்கடலின் சூடான நீர் அடியிலிருந்து ஊடுருவி ஆர்டிக்கின் பனிக்கட்டிகளை உருக்குவதை கண்டறிந்துள்ளனர்.இதை ஆராய்ச்சியாளர்கள் அட்லான்டிபிக்கேஷன் என்கின்றனர்.

ஆர்டிக் கடலின் பனி உருகுவதும், அட்லாண்டிக் ஊடுருவுவதும் காலநிலை மாற்றம் ஏற்படுவதை  சுட்டிக்காட்டுவதாகும்.

5

Eastern Arctic Ocean found to be undergoing ‘Atlantification

An international team of researchers has found that the eastern part of the Arctic Ocean is undergoing what they describe as “Atlantification”—in which the ocean is becoming more like the Atlantic Ocean. In their paper published in the journal Science, the group describes how they tracked ocean temperatures over a 15-year period and the changes they found.

The Arctic Ocean has traditionally been different from the Atlantic or Pacific in a fundamental way—the water gets warmer as you go deeper (due to inflows from the Atlantic) rather than the other way around, as happens with the other two.

The researchers found that warm water from the Atlantic, which has traditionally been separated from melting ice because of the halocline layer—a barrier that exists between deep salty water and fresher water closer to the surface—has been penetrating the barrier, allowing ice to melt from below. It has also led to the water becoming less stratified, like the Atlantic.

These new findings may explain why the extent of ice coverage has been shrinking so dramatically—at a rate of 13 percent per decade.

Arctic sea-ice loss is a leading indicator of climate change and can be attributed, in large part, to atmospheric forcing.

Source : Phys.org

கடல் படுகையிலிருந்து 10 கி.மீ., ஆழத்திலும் உயிர்கள்

கடல் படுகையிலிருந்து, 10 கி.மீ., ஆழத்தில் உள்ள தரைத் தளத்திலும் நுண் உயிரிகள் இருக்கலாம் என்பதை நெதர்லாந்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆலிவர் பிளம்ப்பர் (Oliver Plümper, Netherlands’ Utrecht University) தலைமையிலான விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது

மரியானா ட்ரேன்ச் (Mariana Trench) என்ற உலகிலேயே ஆழமான கடல் பகுதியின் அருகில் உள்ள வெப்பநீர்ம துவாரங்கள்  வழியே ரிமோட் மூலம் இயக்கப்படும் கருவியை உள்ளே அனுப்பி அங்கிருந்து மண் மாதிரிகளை எடுத்து ஆராய்ந்தார்கள்.

gஎரிமலைப் பகுதியில் எடுக்கப்பட்ட அந்த கனிம வளமிக்க மண்ணில் செர்பென்டைன் (serpentine) என்ற கணிமமும், கரிம பொருளும் (organic material) கிடைத்தன. இந்த ஆர்கானிக் மூலக்கூறுகள் மண்ணில் உயிரிகள் இருந்ததற்கு சான்றாக இருந்தது. ஆனால் அது எந்த உயிரினம் என்று கண்டறியப்படவில்லை.

s

ஒலிவைன் என்ற கனிமம் நீருடன் வினை புரியும் போது செர்பென்டைன் என்ற கனிமம் உருவாகும். அவ்வாறு வினை புரியும் போது ஹைட்ரஜன் மற்றும் மீத்தேன் வாயு வெளியேறும். இவை இரண்டும் அந்த பகுதியில் இருக்கும் நுண்ணுயிர்களுக்கு உணவாகும். இதனால் செர்பென்டைன் கனிமம் இருக்கும் இடங்களில் உயிர்கள் இருக்க வாய்புகள் அதிகம் என்று அறியலாம்.

இந்த ஆராய்ச்சி வேற்று கிரகத்திலும் கடலுக்கு அடியில் உயிர்கள் உள்ளனவா என்று அறிய உதவும்.

stock-vector-shiny-red-ribbon-on-white-background-with-copy-space-vector-illustration-324743945

Life could exist up to 10 kilometres beneath the sea floor

A new study that found signs of microbes alive today below the deepest place on Earth, the vast underwater canyon called the Mariana Trench. The trench is part of a subduction zone, where the Pacific tectonic plate slips beneath the Philippine Sea plate. The surrounding seafloor is littered with hydrothermal vents and mud volcanoes, churning out ingredients from the deep Earth.

“This is another hint at a great, deep biosphere on our planet,” says study leader Oliver Plümper, a researcher at the Netherlands’ Utrecht University. “It could be huge or very small, but there is definitely something going on that we don’t understand yet.”

Life may be able to survive so deep because subduction zones are relatively cool; magma doesn’t hit the sinking crust until it reaches a lower point in the mantle. As such, Plümper extrapolated that the known temperature limit of life—around 120 degrees Celsius—wouldn’t come to a depth of at least ten kilometres below the ocean floor.

That could make these microbes the deepest life known on our planet, trumping microbes found in seafloor sediment as much as three miles down.

Plümper’s team examined organic material found in serpentine, a class of minerals formed when olivine in the upper mantle reacts with water pushed up from within the subduction zone. The combination produces hydrogen and methane gas, which microbes can use as food.

Source National Geographic

அழிவிலிருந்து மீண்ட ஜென்ட்டூ பெங்குவின்கள்

அன்டார்டிகா பகுதியிலுள்ள ஆர்ட்லி தீவில், கடந்த, 7,000 ஆண்டுகளாக, ‘ஜென்ட்டூ'(Gentoo penguins) என்ற வகையைச் சேர்ந்த பெங்குவின்கள் வாழ்ந்து வருகின்றன. இவை இத்தனை ஆண்டுகளில் குறைந்தது, மூன்று முறையாவது முற்றிலும் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டு, பின், மீண்டும் பெருகி வந்துள்ளன என்பதை, ‘பிரிட்டிஷ் அன்டார்டிக் சர்வே’ அமைப்பைச் சேர்ந்த ஸ்டீபன் ராபர்ட்ஸ் குழுவினர் கண்டறிந்துள்ளனர்.

அருகில் உள்ள எரிமலை தீவான Deception Island எரிமலையிலிருந்து வரும் எரிமலைச் சாம்பல்களால் ஆர்ட்லி தீவு,  மூடப்பட்டபோது, உயிர் தப்பிய பெங்குவின்கள் நீந்தி பிற பகுதிகளுக்கு தப்பிப் போய், மீண்டும் திரும்பி வந்துள்ளன. ஆனால் பெங்குவின் குஞ்சுகளும், முட்டை இடும் இடங்களும் அழிந்து போயின. மீண்டும் பழைய நிலைக்கு, (பெங்குவின்களும், ஆர்ட்லி தீவும்) திரும்ப கிட்டத்தட்ட 400 முதல் 800 ஆண்டுகள் ஆயின.

இந்த ஆராய்ச்சி, மற்ற இடங்களில் எரிமலையால் பெங்குவின் இனங்களிடம் ஏற்பட்ட பாதிப்பை பற்றி அறிய உதவும் என்று கூறுகின்றனர்.

banner-154181_960_720

Antarctic penguin colony repeatedly decimated by volcanic eruptions

One of the largest colonies of gentoo penguins in Antarctica was decimated by volcanic eruptions several times during the last 7,000 years according to a new study. An international team of researchers, led by British Antarctic Survey (BAS), studied ancient penguin guano and found the colony came close to extinction several times due to ash fall from the nearby Deception Island volcano

On at least three occasions during the past 7,000 years, the penguin population was similar in magnitude to today, but was almost completely wiped out locally after each of three large volcanic eruptions. It took, on average, between 400 and 800 years for it to re-establish itself sustainably.”

An eruption can bury penguin chicks in abrasive and toxic ash, and whilst the adults can swim away, the chicks may be too young to survive in the freezing waters. Suitable nesting sites can also be buried, and may remain uninhabitable for hundreds of years.”

The techniques developed in this study will help scientists to reconstruct past changes in colony size and potentially predict how other penguin populations may be affected elsewhere. For example, the chinstrap penguins on Zavodovski Island, which were disturbed by eruptions from the Mt Curry volcano in 2016.

Source Science Daily

சீப்பு ஜெல்லி – உலகில் முதலில் தோன்றிய விலங்கினம்

ஒரு வகை ஜெல்லி தான் உலகில் முதன்முதலில் தோன்றிய விலங்கு வகை ஊயிரினம். அதாவது நமக்கு மூதாதையர் ஒரு ஜெல்லி.

சுமார் நூறு ஆண்டுகளாக மிக ஆரம்ப நிலை உயிரினமான ஸ்பான்ஜ் தான் விலங்கினத்தில் முதலில் தோன்றியது என்று நம்பப்பட்டு வந்தது. அனால் அமெரிக்க பல்கலை கழகத்தின் விஞ்ஞானிகளால் (Vanderbilt and Wisconsin-Madison universities ) சமீபத்தில் நடத்தப்பட்ட மரபியல் ஆய்வில், சீப்பு ஜெல்லி என்ற உயிரினம் தான் தொன்மையான விலங்கினம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2008ம் ஆண்டிலேயே இந்த வாதம் முன் வைக்கப்பட்டது. அப்போது அது பெரிய  சர்ச்சையை விஞ்ஞானிகளுக்குள்ஏற்படுத்தியது. ஆனால் இப்போது அது மரபியல் ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

பல்வேறு உயிரினங்களின் மரபணு தொடர்களை ஆராய்ந்து அவை எந்த உயிரினத்தின் மரபணு தொடரை ஒத்திருக்கிறது என்று கண்டுபிடித்து இறுதியில் சீப்பு ஜெல்லி தான் முதல் விலங்கினம் என்று தெரிய வந்ததாக ஆராய்ச்சியை மேற்கொண்ட  பேராசிரியர்  அந்தோனிஸ் ரோகாஸ் (Professor Antonis Rokas) தெரிவிக்கிறார்.

1

A jelly is the ultimate ancestor of all animal life

The earliest form of animal life on Earth was a jelly, according to a new genetic analysis which claims to have overturned one aspect of the theory of evolution.

For nearly a century, it has been thought our ultimate ancestor was a sponge because it is such a simple kind of life.

In 2008, one study suggested comb jellies – or ctenophores – should be accorded this title, but this sparked a major controversy with supporters of the sponge origin theory hitting back.

The researchers, from Vanderbilt and Wisconsin-Madison universities, said that previously scientists trying to work out the relationships between different animals had collected large amounts of genetic data then built a plausible family tree.

Professor Antonis Rokas, of Vanderbilt, said: “This has worked extremely well in 95 per cent of the cases, but it has led to apparently irreconcilable differences in the remaining five per cent.”

“The trick is to examine the gene sequences from different organisms to figure out who they identify as their closest relatives,” Professor Rokas said.

“When you look at a particular gene in an organism, let’s call it A, we ask if it is most closely related to its counterpart in organism B? Or to its counterpart in organism C? And by how much?”

This still involved examining hundreds or thousands of genes.

The results of this analysis found a so-called “phylogenetic signal” that favoured comb jellies over sponges with considerably more genes supporting the former’s claim to be the original animal.

Source: Independent

அட்லாண்டிக் கடலுக்குள் கனிம மலை

அட்லாண்டிக் கடலுக்குள் அரிய கனிமங்கள் செறிவாக இருக்கும் பாறைப்படிமங்களை Dr Bram Murton தலைமையிலான பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பூமியிலேயே அதிகபட்ச அரிய கனிமங்களின் குவியலாக இது வர்ணிக்கப்படுகிறது.

அட்லாண்டிக் கடலின் ஆழத்திலிருக்கும் மிகப்பெரிய,உயரமான  (3,000m ) மலையில் இவை இருக்கின்றன. இயற்கையின் மிகப்பெரிய பொக்கிஷமாக வர்ணிக்கப்படும் இந்த படிமங்களில் இருக்கும் அரிய கனிமங்கள், மின்னணுத்தொழில் முதல் சூரிய மின்சாரத்தகடுகள் வரை பயன்படக்கூடியவை. நிலத்தில் அரிதாக கிடைக்கும் tellurium, இங்கு 50,000 மடங்கு அதிகமாக கிடைக்கிறது.

இவை பெரும் மலையாக குவிந்திருப்பது விஞ்ஞானிகளுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், இவற்றை வெட்டி எடுக்கும்போது ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்பும் அதனால் கடல்வாழ் உயிரிகள் பெருமளவு உயிரிழக்க நேரும் ஆபத்தும் பெரும் கவலையை அதிகரித்துள்ளது.

banner-154181_960_720

Tropic Seamount in Atlantic Ocean- Treasure trove of rare minerals

British scientists exploring an underwater mountain in the Atlantic Ocean have discovered a treasure trove of rare minerals.

Samples brought back to the surface contain the scarce substance tellurium in concentrations 50,000 times higher than in deposits on land.

Tellurium is used in a type of advanced solar panel, so the discovery raises a difficult question about whether the push for renewable energy may encourage mining of the seabed.

The rocks also contain what are called rare earth elements that are used in wind turbines and electronics.

Known as Tropic Seamount, the mountain stands about 3,000m tall – about the size of one of the middle-ranging Alpine summits – with a large plateau at its top, lying about 1,000m below the ocean surface.

Dr Bram Murton, the leader of the expedition, told the BBC that he had been expecting to find abundant minerals on the seamount but not in such concentrations.

“These crusts are astonishingly rich and that’s what makes these rocks so incredibly special and valuable from a resource perspective.”

He says he is not advocating deep-sea mining, which has yet to start anywhere in the world and is likely to be highly controversial because of the damage it could cause to the marine environment.

Scientists are now weighing up the relative risks and merits of mining on land as opposed to on the seabed. The concern would be for the ecosystems that are built around any mined seamount

Source BBC

கப்பலுக்கு சுரங்கப்பாதை

உலகில், மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடான நார்வேயின் ஸ்டட் (Stad) தீபகர்ப்ப கடற்பகுதி கொந்தளிப்பான வானிலைக்கும் ராட்சச அலைகளுக்கும் பேர் போனது.

இந்த பகுதியில் கப்பல்களின் பயணநேரத்தை குறைத்து, அவற்றின் பாதுகாப்பை மேம்படுத்தும் திட்டம் ஒன்று தயாராகியுள்ளது.

கடும்பாறைகளாலான இந்த தீபகற்பத்திற்கு உள்ளே அடியாழத்தில் “உலகின் முதல் கப்பல் சுரங்கம்” உருவாக்கப்படவிருக்கிறது.

ஆழ்கடலிலிருந்து விலகி, அமைதியான இரண்டு கடற்பகுதிகளுக்கு இடையில் 1,700-metre நீளத்தில், 26.5m அகலத்தில்,  37 metres  உயரத்தில், இந்த சுரங்கம் குடையப்படுகிறது. இந்த கப்பல் சுரங்கம் வழியாக 16000 டன் எடையுள்ள கப்பல்கள் வரை செல்ல முடியும்.

Norway Ship Tunnel

உலக அளவில் கப்பல்கள் செல்ல பிரம்மாண்ட கால்வாய்கள் இதற்கு முன்பு வெட்டப்பட்டிருந்தாலும், கப்பல்கள் செல்லக்கூடிய சுரங்கம் அமைக்கப்படுவது உலகிலேயே இதுவே முதல் முறை என்கிறது நார்வே.

இந்த சுரங்கத்திற்காக சுமார் எண்பது லட்சம் டன் கற்பாறை வெடிவைத்து தகர்த்து எடுக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

2023 ஆம் ஆண்டுக்குள் இந்த சுரங்கத்தை வெட்டி முடிக்க முடியுமென நார்வே நம்புகிறது. . இதை கட்டி முடிக்க £250 மில்லியன் பவுண்ட்டுகள் ஆகும் என்று மதிப்பிடபட்டிருக்கிறது.

v0

Norway to build world’s first tunnel for ships

Norway plans to build the world’s first tunnel for ships, a 1,700-metre (5,610-ft) passageway burrowed through a piece of rocky peninsula that will allow vessels to avoid a treacherous part of sea. The tunnel is expected to be located at the narrowest point of the Stadlandet peninsula, where the weather has for decades been considered an obstacle for shipping.

The Stad Ship Tunnel, which would be able to accommodate cruise and freight ships weighing up to 16,000 tonnes, is expected to open in 2023.

It will be 37 metres high and 26.5m wide, according to the Norwegian Coastal Administration, and is estimated to cost at least 2.7bn kroner (£250m).

Source The guardian