உயிர் கான்கிரீட்

கண்டுபிடிப்பு: மணல், ஹைட்ரோஜெல் கலவையுடன் பாக்டீரியாவையும் கலந்து கான்கிரீட் தயாரித்தல்.

ஆராய்ச்சியாளர்கள்: அமெரிக்காவிலுள்ள கொலராடோ பல்கலைக் கழகத்தின் (University of Colorado Boulder) வில் ஸ்ருபார் (Wil Srubar) தலைமையிலான விஞ்ஞானிகள்

விவரம்: மணல், ஹைட்ரோஜெல் கலவையுடன் சயனோபாக்டீரியா – (பச்சை நுண்ணுயிரிகள்) (cyanobacteria) பாக்டீரியாவையும் கலந்து, ஒரு வார்ப்பில் போட்டுவிட்டால், பாக்டீரியாக்கள், சுற்றியுள்ள கார்பன் – டை – ஆக்சைடு வாயுவை உட்கொண்டு, கால்சியம் கார்பனேட்டை உற்பத்தி செய்கின்றன. இந்த வேதிப் பொருள் ஹைட்ரோஜெல்லையும் மணலையும் பிணைக்கும் கிரியா ஊக்கியாக செயல்படுகிறது. இதனால், வார்ப்பில் உள்ள மணல் மற்றும் ஹைட்ரோஜெல் கலவை மெல்ல மெல்ல இறுகி கான்கிரீட் கல்லாக மாறுகிறது.

பாக்டீரியாக்கள் இனப் பெருக்கம் செய்து, மேலும் கால்சியம் கார்பனேட்டை உற்பத்தி செய்து தள்ளுவதால், பாதியாக உடைக்கப்பட்ட கல், மேலும், ‘வளர்ந்து’ இரண்டு  முழு கற்களாக மாறும்.

இதன் வலிமை, கான்கிரீட்டை விட குறைவாக, இரண்டு கற்களை பிணைக்கும் சிமெண்ட் கலவையின் வலிமையை ஒத்திருக்கிறது.\

balls

Living concrete

Invention : Environmentally friendly ‘living concrete’ has been developed mixing sand, gel and bacteria .

Scientists: The project team, led by Wil Srubar of  University of Colorado Boulder

In detail : The team combined the bacteria with hydrogel gelatin, sand and nutrients in a liquid mixture, then placed this in a mould. The hydrogel contains moisture and nutrients that allow the bacteria to reproduce and mineralise – With heat and sunlight, the bacteria produced calcium carbonate crystals around the sand particles, in a process similar to how seashells form in the ocean. When cooled, the gelatin solidified the mixture into a gel form. The team then dehydrated the gel to toughen it, with the entire process taking several hours.

The team used Synechococcus, a  cyanobacteria – green microbes that live in the water and can manufacture their own food .

By splitting the brick in half, the bacteria can grow into two complete bricks with the help of some extra sand, hydrogel and nutrients.

Though it is termed ‘living concrete’, its mechanical properties are more similar to mortar, a weaker material usually made with cement and sand and found between the bricks of buildings,

 Source : Dinamalar  and daily mail

பல் ஆராய்ச்சிக்கு உதவும் பல்-சிப்.

கண்டுபிடிப்பு: பல் திசுக்களை, பல்லை போன்ற பல்-சிப்புக்குள் வைத்து  ஆராய்ச்சி செய்வது.

ஆராய்ச்சியாளர்கள்:  அமெரிக்காவிலுள்ள ஓரிகன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.(Oregon Health and Science University)

விவரம்: பல் திசுக்களை பல்-சிப்புக்குள் வைத்து,  நுண் கிருமிகளை செலுத்தி, பல் சொத்தையாவதற்கு, பல்லின் மேலே உள்ள எனாமல் எப்படி, ஏன் வழிவிடுகிறது என்பதை ஆராய முடியும். அதேபோல பல்லின் ஆரோக்கியம் கெடும் பிற வழிகளையும் கண்கூடாக மருத்துவர்களால் சோதித்து அறிய முடியும். ஒரு நோயாளியின் பற்களில் சிறிதளவு மாதிரியை எடுத்து அவரது பல்லுக்கு என்ன மாதிரியான சிகிச்சை தரலாம் என்று தீர்மானிக்க முடியும்.

balls

Tooth-on-a-chip

Invention : Device integrates cells cultured directly on a dentin wall within a microfluidic device that replicates some of the architecture and dynamics of the dentin-pulp interface.

Researchers : Oregon Health and Science University

Description :The device contains a small slice of dentin material taken from a molar, sandwiched between clear rubber slides. Channels etched into those slides allow introduced fluids to flow through that dentin. This replicates the manner in which a cavity in a tooth’s protective enamel lets bacteria enter the inside of the tooth.

Utilizing a microscope, scientists are subsequently able to study how the sample reacts. The technology could ultimately be used to develop better cavity-filling or cavity-prevention solutions, plus it could be utilized to optimize treatments for individual people

Dentists could extract a tooth from a patient, load it into this device, observe how a dental filling material interacts with the tooth, and pick a material that’s best for that particular patient.

Source : Dinamalar and New atlas

 

உலர் சலவை இயந்திரம்

கண்டுபிடிப்பு: காற்று மற்றும் நீராவி கொண்டு உடைகளை சுத்தம் செய்யும் இயந்திரம்

ஆராய்ச்சியாளர்கள்: சாம்சங்  நிறுவனம் (Samsung)

விவரம்: இயந்திரத்தில் சுத்தம் செய்ய வேண்டிய உடைகள் சிலவற்றை மாட்டி வைத்துவிட்டால், குழாய்கள் மூலம் அதிவேகமான காற்று துணிகளின் மேல் பாய்ந்து மேலோட்டமாக இருக்கும் துாசி, அழுக்கு போன்றவற்றை நீக்கிவிடுகிறது. பிறகு நீராவி அடித்து ஆழமாக படிந்துள்ள அழுக்குகளை போக்குகிறது. அடுத்து, வியர்வை வாடை, சிகரெட் நாற்றம், உணவு வாடை போன்றவற்றை போக்கி, மெல்லிய நறுமணம் ஒரு குழாய் மூலம் பாய்ச்சப்படுகிறது.பின் சுருக்கங்களையும் நீக்கிறது.

இந்த இயந்திரத்தை இணையத்திலும் இணைத்து ஸ்மார்ட் இயந்திரமாக பயன்படுத்தலாம்

1502.m00.i123.n012.s.c10.seamless-web-page-dividers-with-shadows-

Air Dresser – Dry cleaning closet

Invention: Device cleans clothes using air and steam

Organisation: Samsung Ltd.

In detail : The Samsung Air Dresser comes with three built-in hangers to hang three garments inside the main compartment at a time, as well as two rods to hang ties, scarves, and similar accessories. When activated, the device sprays air and steam onto the garments from the top and bottom, a process which eliminates dust, odour, and harmful pollutants. This cleaning is so thorough that it can even eradicate any residual micro dust. Each cleaning session would take around 25 minutes. Aside from cleaning clothes and accessories, it can also remove wrinkles. This device also works with Smart Things.

Source : Dinamalar  and C net

கற்றாழையிலிருந்து பிளாஸ்டிக்

கண்டுபிடிப்பு:  கற்றாழையிலிருந்து பிளாஸ்டிக் தயாரித்தல்.

ஆராய்ச்சியாளர்கள்:   மெக்சிகோவை சேர்ந்த, அதேமஜாக் பள்ளத்தாக்கு பல்கலைக்கழகத்தின் (University of Valle de Atemajac in Zapopan, Mexico) சான்டிரா பாஸ்கோ அர்டிஸ் (Sandra Pascoe Ortiz) தலைமையிலான விஞ்ஞானிகள்.

 விவரம்: கற்றாழையை வெட்டி, பிழிந்து கிடைக்கும் சாறில், இயற்கையில் கிடைக்கும் மிருகக் கொழுப்பு, மெழுகு ஆகியவற்றை சேர்த்து இயற்கை பிளாஸ்டிக்கை உருவாக்கியுள்ளனர். இந்த இயற்கை பிளாஸ்டிக்கில் வலுவான ஷாப்பிங் பைகளை தயாரிக்க முடியும். மேலும், இதை குப்பையில் போட்டால், பத்தே நாட்களில் மட்கிப் போய்விடும்; தண்ணீரில் சில மணி நேரத்தில் கரைந்துவிடும்

balls

Biodegradable Plastic From Prickly Pear Cactus

Invention : Biodegradable Plastic From Prickly Pear Cactus
Scientists : Researchers headed by Sandra Pascoe Ortiz from the University of Valle de Atemajac in Zapopan, Mexico
In detail: The researchers used the most common variety of edible nopal cactus (the opuntia ficus-indica and the opuntia megacantha) to make a biodegradable and bio-based plastics (bioplastics). Nopal is a common name in Mexican Spanish for Opuntia cacti. The English word is prickly pear.
“The plastic is basically made out of the sugars of nopal juice, the monosaccharides and polysaccharides it contains. The sugars, pectin and organic acids in the juice give it a very viscous consistency. Glycerol, natural waxes, proteins and colorants are mixed with the juice after it has been decanted to remove its fiber. The formula is then dried on a hot plate to produce thin sheets of plastic.
The plastic begins to degrade after sitting in soil for just one month. When submerged in water, it degrades in a matter of days.

Video link: Bio plastic

Source:Forbes and BBC

தங்கத்தைத் தேடிப் படரும் பூஞ்சை

கண்டுபிடிப்பு:  தங்கத்தைத் தேடிப் படரும் பூஞ்சை Fusarium  oxysporum,

ஆராய்ச்சியாளர்கள்:  ஆஸ்திரேலியாவின் விஞ்ஞான முகமையான சி.எஸ்.ஐ.ஆர்.ஓவைச் (The Commonwealth Scientific and Industrial Research Organisation (CSIRO) சேர்ந்த விஞ்ஞானிகள் (Dr Ravi Anand  and Dr Tsing Bohu).

விவரம்: வேதியல் ரீதியில் எளிதில் வினை புரியாத தங்கத் தாதுத் துகள்களுடன் புசாரியம் ஆக்ஸ்போரம் (Fusarium oxysporum) வினைபுரிந்து, தனது உடலெங்கும் அலங்கரித்துக்கொள்வதைப் போல சேமித்து வைத்திருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இந்த வகை பூஞ்சையைப் பயன்படுத்தி, மின்கழிவுகள் மற்றும் சாக்கடைக் கழிவுகளிலிருந்து தங்கத்தை பிரித்தெடுக்க முடியுமா என்றும்  பூமிக்கடியில் தங்கம் இருக்குமிடத்தை கண்டுபிடிக்க முடியுமா என்பதையும் தற்போது ஆராய்ந்து வருகின்றனர்.

Color fractal page text divider line design set

Discovery: Fungus Fusarium oxysporum draws gold from its surroundings.

Scientists: Dr Ravi Anand  and Dr Tsing Bohu of The Commonwealth Scientific and Industrial Research Organisation (CSIRO) Australia

In detail: The Fusarium oxysporum fungus attaches gold to its strands by dissolving and precipitating particles from the environment. Though fungus reacts with active metals, the reaction with inactive metal gold is surprising. There may be a biological advantage in doing so, as the gold-coated fungus was found to grow larger and spread faster than those that don’t interact with the precious metal.

Scientists are undertaking further analysis and modelling to understand why the fungus is interacting with gold, and whether it is an indication of a larger deposit below the surface.

The industry was already using gum leaves and termite mounds, which can store tiny traces of gold, to guide exploration sampling.

Source : Dinamalar and The Guardian

கான்கிரீட் தயாரிக்க பழைய கண்ணாடி துண்டுகள்

கண்டுபிடிப்பு:  கான்கிரீட் தயாரிக்க மணலுக்கு மாற்றாக பழைய கண்ணாடி துண்டுகள்

ஆராய்ச்சியாளர்கள்: டாக்டர் ரியாத் அல்-அமேரி(Dr. Riyadh Al-Ameri) தலைமையிலான  ஆஸ்திரேலியாவிலுள்ள டீக்கின் பல்கலைக்கழக (Deakin University) விஞ்ஞானிகள்.

 விவரம்: கண்ணாடிகளை பொடி செய்து, மணலுக்கு பதிலாக, பாலிமர் பிசினை பயன்படுத்தி பாலிமர் கான்கிரீட் தயாரிக்கலாம்.

balls

Concrete from recycled glass

Invention : Glass waste can be substituted for sand in concrete.

Researchers : Team led by Dr. Riyadh Al-Ameri, Australia’s Deakin University

Description: Various pieces of non-recyclable glass are ground into a coarse powder and mixed with polymer resin to prepare polymer concrete. Polymer concrete is typically used in applications such as waterproof flooring  ie.,roads and car parks..

Glass-based polymer concrete was found to be significantly stronger than its traditional sand-based counterpart.

Source : New atlas

கம்பியில்லா மின்னேற்றம் செய்யும் ஸ்மார்ட் மேசை இ- போர்டு’

கண்டுபிடிப்பு: ‘இ – போர்டு’ மேசை மூலம், அலைபேசி, மடிக்கணினி, பலகைக் கணினி ஆகியவற்றை கம்பியில்லா மின்னேற்றம் செய்து கொள்ளலாம்

நிறுவனம்: ஸ்பெயினைச் சேர்ந்த, ‘புரோட்டான் நியூ எனர்ஜி பியூச்சர்’

விவரம்: மேசையின் மேற்பரப்பில் சூரிய மின் தகடு பதிக்கப்பட்டுள்ளது. ஜன்னல் வழியே வரும் சூரிய ஒளி, முதல் அறை விளக்கின் ஒளி வரை எது இ -போர்டு மீது பட்டாலும், அது மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. அந்த மின்சாரத்தை, கம்பியில்லா மின்னேற்றம் மூலம் கருவிகளுக்கு பாய்ச்சி, கருவிகளை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவுகிறது.

balls

Ebörd –Smart table charges devices wirelessly

Invention: Ebörd –Smart table with Photovoltaic surface that produces power​ through indoor and outdoor lighting to charge via wireless the smart phone and other devices.

Enterprise : Proton New Energy Future

Description:  The table’s surface is photovoltaic, with a thin film panel that allows it to soak up sunlight and store it in a beefy 10 Ah battery. The company claims to have a patent on a membrane built with a protein from a marine bacteria, which it says boosts the performance of the solar modules by 60 percent in low light conditions. Ebörd can even absorb artificial light. The Ebörd is waterproof.The Ebörd uses the Qi charging platform

Source : Dinamalar and New atlas

மின்சார சாலை

ஜெர்மன் தன் நாட்டில் இயங்கும் சரக்கு லாரிகளுக்கென பிரத்யேக மின்சார சாலையை உருவாக்கியிருக்கிறது.

மின்சார ரயில் போன்று சாலையிலேயே மின்சார கம்பிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. தற்போது 10 கிலோமீட்டர் தூரத்துக்கு இந்த மின்சார சாலையை உருவாக்கி இருக்கிறது. இந்த சாலையின் வழியாக சரக்கு லாரிகள் செல்லும்போது, லாரியின் மேற்புறம் இருக்கும் மின் கடத்தி சாலையில் உள்ள மின்சார கம்பிகளுடன் இணைப்பை உருவாக்கிக் கொள்ளும்.

அப்போது லாரிக்கு தேவையான ஆற்றல் அந்த மின்சாரம் வழியே சார்ஜ் செய்யப்பட்டுவிடும். இதனால் எரிபொருள் பயன்பாடு குறைக்கப்படுவது மட்டுமல்லாமல் வாகனப் புகையால் ஏற்படும் மாசும் கட்டுப்படுத்தப்படுகிறது.

240_F_123165150_Co0vkIAoweQttDlqOkLztQ8JlFkFeRkh

e-Highway

Germany has opened the first stretch of a so-called electric highway that will connect hybrid trucks to overhead wires, allowing them to recharge while traveling on the country’s main transportation arteries.

The 10-kilometer (6-mile) stretch south of Frankfurt on Germany’s A5 autobahn was opened last week, the German state of Hesse. One truck is using it now, with four more planned by 2020.

The system was built by Munich-based engineering firm Siemens AG, while Volkswagen AG’s Scania trucks unit provided the vehicles. It uses technology similar to trains or trams, allowing to trucks to link on while driving at up to 90 kilometers an hour, drawing power from the wires above. The electricity charges up the trucks’s battery, allowing it to drive electrically for a while afterward, with a diesel motor kicking in once the battery is depleted

 Source:Hindu and Daily mail

ஆய்வகத்தில் உருவாகும் இறைச்சித்துண்டுகள்

ஆய்வு : ஆய்வகத்தில் உருவாகும் இறைச்சித்துண்டுகள்

பரிசோதிக்கும் நிறுவனங்கள்: மொசா மீட் (Mosa Meat), மெம்பிஸ் மீட்ஸ்  (Memphis Meats) , சூப்பர் மீட் (SuperMeat) பின்லஸ் புட்ஸ் ( Finless Foods).

விவரம் : மாடு மற்றும் கோழியின் உயிருள்ள சில செல்களை எடுத்து ஆய்வகத்தில் கிறிஸ்பர் மூலம் திருத்தம் செய்து, அவற்றை வேகமாக வளரும்படி செய்தல்.பின் செல்களை இணைத்து இழைகள் (fibers),பின் அவற்றை இணைத்து தசைகள் உருவாக்குவது.

இந்த தொழில்நுட்பம் நடைமுறைக்குவந்தால், இறைச்சிக்காக எந்த விலங்குகளும் கொல்லப்பட வேண்டியிருக்காது.

 

Meat grown in a laboratory

Invention :  Meat grown in a laboratory from cultured cells

Startups developing the product : Mosa Meat, Memphis Meats, SuperMeat and Finless Foods.

 Description : The meat is made by first taking a muscle sample from an animal. Technicians collect stem cells from the tissue, multiply them dramatically and allow them to differentiate into primitive fibers that then bulk up to form muscle tissue. Mosa Meat says that one tissue sample from a cow can yield enough muscle tissue to make 80,000 quarter-pounders.

A number of the start-ups say they expect to have products for sale within the next few years. But clean meat will have to overcome cost and taste barriers..To receive market approval, clean meat will have to be proved safe to eat.

Clean meat could make our daily eating habits more ethical and environmentally sustainable

Source : Scientific american

இறகு தந்த சிறப்பு வெல்க்ரோ

கண்டுபிடிப்பு: இறகின் அமைப்பை போன்ற சிறப்பு வெல்க்ரோ.

ஆராய்ச்சியாளர்: கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் தாரா சல்லிவன் (Tarah Sullivan).

விவரம்: ஒரு இறகில், நடு ஈர் பகுதியின் இரு புறமும் கூரல் எனும் இழைகள் உண்டு. கூரல்கள் ஒன்றோடொன்று ஒட்டியிருக்கும்; அவை காற்று, தண்ணீர் பட்டால் பிரிந்து, மீண்டும் சேர்ந்து கொள்ளும்.

கூரல்களின் இரு பக்கமும், 8-16 மைக்ரோமீட்டர் இடைவெளியில் நுண்ணிய பிசிறுகள் இருக்கும். இந்த பிசிறுகள், அருகே உள்ள கூரல்களின் பிசிறுகளுடன் கச்சிதமாக பிணைந்து விடும்.

ஆராய்ச்சியாளர் தாரா, அதே போன்ற அமைப்பை, நவீன முப்பரிமாண அச்சுஇயந்திரத்தில் பெரிய அளவில் வடிவமைத்து அச்சிட்டார்; அவையும் பிரிந்து, பிணையும் தன்மையை கொண்டிருந்தன.

இந்த கண்டுபிடிப்பு, விமான இறக்கை முதல், பல இடங்களில் பயன்படும்.

balls

‘Supervelcro’ based on FEATHERS

Invention: Supervelcro’ material inspired from bird’s feathers

Researcher: Tarah Sullivan, researcher at the University of California San Diego.

Description: Composed of keratin, feathers have a central shaft going down the middle, with softer and skinnier barbs sprouting off to either side. Along the edges of those barbs are small structures known as barbules. Those barbules hook onto one another, holding adjacent barbs together. The barbs can still be pulled apart, then subsequently “zipped” back together.

feat

Tarah Sullivan, discovered that in birds of all sizes, the barbules are always spaced within eight to 16 micrometers of one another (a micrometer is one thousandth of a millimeter).

Keeping this ratio in mind, she proceeded to create large-scale 3D-printed models of barbs and barbules. Using these, she demonstrated that objects with such a structure could repeatedly be joined to one another and pulled apart – as is the case with the hook-and-loop structure of Velcro.

Additionally, natural barbs and barbules are capable of trapping air on a feather’s underside, while diverting it on top. Sullivan believes that this quality could also be replicated in bioinspired man-made materials, which may have applications in fields such as aerospace.

Source : Dinamalar and Daily mail