3டி கண்ணாடி அச்சியந்திரம்

முப்பரிமாண அச்சியந்திரங்களுக்கு மூலப் பொருளாக, பீங்கான், பாலித்தீன், பலவித உலோகங்களை பயன்படுத்தி பொருட்கள் வடிவமைப்பது  வழக்கம். மருத்துவத் துறையில் திசுக்களை உருவாக்க உயிரிப் பொருட்களைக் கூட பயன்படுத்த ஆரம்பித்துஉள்ளனர். ஆனால், கண்ணாடியை பயன்படுத்துவது சவாலானதாக இருந்து வந்தது. கண்ணாடியை பயன்படுத்தி, வேண்டிய பொருட்களை வடிவமைக்க உதவும் முப்பரிமாண அச்சு தொழில்நுட்பத்தை, முதல் முறையாக ஜெர்மனியிலுள்ள கார்ல்ஸ்ருஹே தொழில்நுட்ப நிலையம் (Karlsruhe Institute of Technology in Germany ) உருவாக்கி இருக்கிறது.

அங்குள்ள  ஆராய்ச்சியாளர்கள், துாய்மையான நானோ துகள்களான குவார்ட்ஸ் மற்றும் திரவ பாலிமர் ஆகிய இரண்டையும் கலந்து திரவ கண்ணாடியை (liquid glass) உருவாக்கினர். இந்தக் கலவையை முப்பரிமாண அச்சியந்திரத்தில் கொடுத்து, கண்ணாடிப் பொருளை உருவாக்கி பின்னர் உலையில் வைத்து சூடு பண்ணினர். அப்போது புறம்பான பொருட்களெல்லாம் எரிந்து மிகத்தூய்மையான கண்ணாடிப் பொருள் கிடைத்தது. இந்த அச்சியந்திரத்தால் மிகப்பெரிய கண்ணாடி கட்டிட முகப்பு முதல் மிகசிறிய லென்ஸ்கள் வரை தயாரிக்க முடியும் என, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

1

Glass can be printed with 3-D printer

3-D printers print objects made of plastics, ceramics and even metal, but not glass. But now a team of researchers at Karlsruhe Institute of Technology in Germany has developed a way to 3-D print objects made of pure glass.

The new technique allows for 3-D printing glass objects based on the creation of a “liquid glass” the team developed—a glass nanocomposite with glass nanoparticles suspended in a photocurable prepolymer. In practice, the sandy glass nanoparticles are mixed into a liquid solution and the results are then used as the “ink” for the printer. Once printed in the traditional way, the glass object is transferred to an oven that cures the glass and burns off other extraneous materials. The result is an object made of pure, clear glass.

They suggest the new technique could be used to produce both very large and very small glass objects, from skyscraper facades to tiny camera lenses.

Source Dinamalar

 

பற்களை வார்க்கும் 3டி பிரின்டர்

home1

மருத்துவத் துறையில் முப்பரிமாண அச்சு இயந்திரங்கள் அருமையான சேவைகளை செய்து வருகின்றன. உச்சந்தலை முதல், பாதம் வரை பல உறுப்புகளை, மருத்துவர்கள் முப்பரிமாண அச்சு இயந்திரங்களின் உதவியால் செய்து விடுகின்றனர்.சிங்கப்பூரை சேர்ந்த,’ஸ்ட்ரக்டோ'(Structo) தயாரித்துள்ள, ‘டென்டாபார்ம்’ (DentaForm)  என்ற இயந்திரம் பற்களை வார்த்தெடுக்க உதவுகிறது. மிகச் சிறிய அளவே உள்ள டென்டாபார்ம், பல் மருத்துவர்களுக்கு வேகமாக, கச்சிதமாக பற்களை அச்சிட்டு தந்து விடுகிறது.டென்டாபார்ம், 50 மைக்ரோ மீட்டர் துல்லியத்தில் பற்களை அச்சிட வல்லது. ஏற்கனவே, இதே சிங்கப்பூர் நிறுவனம், ஆர்த்தோபார்ம் என்ற எலும்புகளை அச்சிடும் முப்பரிமாண இயந்திரத்தை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ‘டென்டாபார்மில் பயன்படுத்தப்படும், ‘மாஸ்க் ஸ்டீரியோ லித்தோகிராபி’( Mask stereo lithography)’ தொழில்நுட்பம், பல் மருத்துவர்களின் எல்லா தரத் தேவைகளையும் பூர்த்தி செய்வதால், பல் மருத்துவ உலகில் டிஜிட்டல் புரட்சியை விரைவு படுத்தும்’ என்கிறார், ஸ்ட்ரக்டோ வின் நிறுவனர்களுள் ஒருவரான ஹப் வான் எஸ்ப்ரோயக் (Huub van Esbroeck).

♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠

Structo Revolutionizes Digital Dentistry With The Launch of The DentaForm: The World’s Fastest Dental Model      3D Printer

Structo, a Singapore-based dental 3D printing solutions provider unveiled their latest dental 3D printer, the Structo DentaForm

“We are revolutionizing digital dentistry by breaking through the speed limits of 3D printers today. The Structo DentaForm will open up a whole new range of dental applications that can now work with our lightning-fast Mask Stereolithography (MSLA) technology,” said Huub van Esbroeck, one of Structo’s founders.

With a large build platform measuring 200x150mm, the Structo DentaForm is designed to print highly accurate precision models for the fitting of crowns and bridges in the area of restorative dentistry. Users can now print full arches and quadrants that are extremely precise with reproducible fit at a high throughput.

Source தினமலர்