பாசியிலிருந்து காலணிகள்

ஆசியா மற்றும் அமெரிக்காவின் நீர் நிலைகளில் அறுவடை செய்யப்படும் பாசிகளை சேகரித்து, ப்ளூம் போம் (Bloom Foam) தயாரிக்கப்படுகிறது. பாசிகளை உலரவைத்து, பின் அவற்றை நுண் குளிகைகளாக மாற்றி, வேறு சில வேதிப் பொருட்களுடன் (ethylene-vinyl acetate ) சேர்க்கப்பட்டு, மென்மையாக, வளைந்து கொடுக்கக்கூடிய, அதே சமயத்தில் உறுதியான போம் தயாரிக்கப்படுகிறது. இந்த போமில் 40% பாசியும் 60% ethylene-vinyl acetate ம் இருக்கும். ‘வைவா பேர்பூட்’ (Vivobarefoot) என்ற காலணி நிறுவனம், ப்ளூம் போம்களைப் பயன்படுத்தி காலணிகளை தயாரித்து சந்தையில் அறிமுகப்படுத்த இருக்கிறது. பெட்ரோலியத்தின் அடிப்படையிலான, ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் மூலம் செய்யப்படும் காலணிகளுக்கு மாற்றாக,  இயற்கைப் பாசியால் செய்யப்படும், ப்ளூம் காலணிகள் சுற்றுச்சூழல் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் என, வைவா பேர்பூட் நிறுவனம் நம்புகிறது.

மேலும் நீர்நிலைகளை அசுத்தம் பண்ணும் பாசிகளையும் கட்டுப்படுத்த முடியும்.

flo 4

Algae shoes

VIVOBAREFOOT, a minimalist running shoe company based in London, has announced its partnership with BLOOM, an American plant-based materials manufacturer. The companies have collaborated to create the Ultra III, a shoe made from ethylene-vinyl acetate (EVA) foam. BLOOM’s EVA foam is derived from algae biomasses at high risk of algal bloom. The current material uses 40% algae and 60% EVA, though Bloom is working on materials that use more algae.

Producing shoes using a plant-based material offers significant sustainability advantages. “Every pair will help re-circulate 57 gallons of filtered water back into natural habitats, and prevent the equivalent of 40 balloons full of CO2 being released into the Earth’s atmosphere,” according to VIVOBAREFOOT.

Furthermore, by sourcing algae biomass from areas at risk of algal bloom, the companies support a vibrant marine ecosystem. Harmful and uncontrolled algal blooms can deplete oxygen in the water and block sunlight from reaching fish and plants. Left unchecked, this algae could also release toxins that are dangerous to humans and animals or pollute drinking water.

VIVOBAREFOOT and BLOOM solve an environmental challenge in a unique and innovative fashion. Flexible and lightweight, the Ultra III will be available for purchase this July for $75.

Source Dinamalar and Sports techie

Advertisements

இந்தியாவில், உலகின் மிகப் பழமையான பாசிபடிமங்கள்

தாவரங்களின் ஆரம்ப நிலையான பாசியின் (algae) மிகப் பழமையான புதைபடிவங்களை இந்தியாவில் உத்தர பிரதேசத்தில் உள்ள சித்ரகூட் பகுதியில் (Chitrakoot region) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த படிமங்கள் பாஸ்பேட் நிறைந்த பாறைப்படிவுகளில் கண்டுபிடிக்கப்பட்டது.  இந்த படிமங்கள் 160 கோடி ஆண்டுகள் பழமையானவை.

சித்ரகூட் பாசி படிமங்களில் டி.என்.ஏ கிடைக்கவில்லை. ஆனாலும் அவை  வடிவத்தில் இன்றைய உலகில் இருக்கும் சிவப்பு பாசியை (red algae) ஒத்திருக்கிறது. ஜப்பானிய உணவான சுஷியில் ( sushi) சேர்க்கப்படுவது இந்த சிவப்பு பாசி.

பூமி சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. பூமியில் உயிரினம் சுமார் 428 கோடி ஆண்டுகளுக்கு முன் கடல் வாழ் பாக்டீரியா வடிவில் தோன்றின. ஆனால் தாவரம் மற்றும் விலங்கினங்கள் மிக பிந்தைய காலத்தில் தான் தோன்றின.

சித்ரகூட் பாசிபடிமங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழைய தாவர இனம் (பாசி) , 120 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது என்றும் சித்ரகூட்டில் கண்டுபிடிக்கப்பட்டது தான் மிக மிக ஆரம்ப காலத்தை சேர்ந்தது என்றும், தாவரங்கள் தோன்றியதாக கருதப்பட்ட காலத்தை விட சில கோடி ஆண்டுகள் முன்பே அவை தோன்றியதற்கான சான்று இது என்றும் இது குறித்த ஆய்வை மேற்கொண்ட ஸ்வீடன் நாட்டு (Swedish Museum of Natural History paleobiologist) விஞ்ஞானிகளான ஸ்டெபான் பெங்ஸ்டனும் (Stefan Bengtson)  தெரேஸ் சால்ஸ்டெடும் (Therese Sallstedt) தெரிவிக்கின்றனர்.

Source Telegraph