அண்டார்டிக் கடல் வாழ் உயிரினங்களின் ஆராய்ச்சிக்கு உதவும் ரோபோக்கள்

அண்டார்டிக் ஆராய்ச்சியாளர்கள்  நீருக்கடியில் இயங்கும் ரோபோவை கொண்டு அண்டார்டிக் கடலுக்கடியில் உள்ள உயிரினங்களை படம் பிடித்தனர்.

ரோபோ பிடித்த படத்தில் வண்ணமயமான, செயல்திறமிக்க, விதவிதமான கடல்பஞ்சுகள், கடல்சிலந்திகள்,நட்சத்திர மீன்கள் இருந்தன.இவை யாவும் வருடத்திற்கு 10 மாதங்கள் -1.5 டிகிரி செல்சியஸ் நீரில்,கடலின் மேற்பரப்பு 1.5 மீட்டர் பனிக்கட்டியில் மூடப்பட்ட  நிலையில் உயிர் வாழ்பவை.இந்த கடலின் மேற்புறத்தில் இருக்கும் பனிக்கட்டியே  கடலுக்கடியில் வாழும் இந்த உயிரினங்களை அண்டார்டிகாவில் வீசும் பனிப்புயலிடமிருந்து காப்பாற்றி அவை தழைக்க உதவுகிறது.ஆனால் சில வேளைகளில் glacier என்னும் பனிப்பாறைகள் வந்து அந்த இடத்தையேஉயிரினங்களையே   அழித்துவிடுவதும் உண்டு.

வாயுமண்டலத்துள் (atmosphere) செலுத்தப்படும் கரியமிலவாயுவின்(CO2) கால் பகுதி கடலினால் உறிஞ்சப்படுவதால் கடல் நீரின் அமிலத்தன்மை அதிகமாகிறது என்கிறார்  ஆராய்ச்சியாளர் Jonny Stark. குளிந்த நீர், கரியமிலவாயுவை வேகமாக உறிஞ்சுவதால் மற்ற பகுதிகளை விட Polar பகுதி இரண்டு மடங்கு அதிகமாக அமிலமாகிறது. இதனால் இந்த பகுதியில் வாழும் உயிரினங்களிடத்தில் என்னென்ன மாறுதல்கள் ஏற்படுகின்றன என்பது குறித்தும் ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன

Source The Hindu

Advertisements