காயம் அடைந்த எறும்பை தூக்கிச்சென்று சிகிச்சை அளிக்கும் சகஎறும்புகள்

எறும்புகள் கூட்டமாக வாழ்பவை. ஆனால், கரையான்கள் போன்ற எதிரிகளுடன் சண்டை போடும்போது காயமடையும் சக எறும்புகளை, தங்கள் புற்றை நோக்கி எடுத்துச் செல்வதை அண்மையில் ஜெர்மனியை சேர்ந்த உயிரியலாளர்கள் (University of Würzburg’s Biocentre ) கண்டறிந்துள்ளனர்.

ஆப்பிரிக்கா நாட்டில் வசிக்கும் மடபிலே எறும்புகள் (Matabele ants), கரையான்களை வேட்டையாடி உண்பவை. வேட்டையாடிய கரையான்களை தங்கள் புற்றிற்கு எடுத்து வரும். அது மட்டுமல்லாமல், வேட்டையின் போது காயம் படும் எறும்புகள் ஒரு விதமான இரசாயன பொருட்களை வெளியிட்டு, தன் சக எறும்புகளுக்கு தகவல் தெரிவிக்கும். உடனே எறும்புகள், காயம் பட்ட எறும்பை தங்கள் புற்றிற்கு தூக்கி சென்று அங்கு சிகிச்சை அளிக்கும். சிகிச்சை பெரும்பாலும் ஒட்டிக்கொண்டிருக்கும் கரையானை விலக்குவதாகும்.

கூட்டமாக வசிக்கும் உயிரினங்கள் ஓரிரு உயிர்களுக்கு பாதகம் என்றால் கண்டுகொள்ளாதவை என்று கருதிய உயிரியலாளர்களுக்கு இது மிகப் பெரிய ஆச்சரியத்தை தந்துள்ளது.

3

Ants rescue their injured

The African Matabele ants (Megaponera analis) are widespread south of the Sahara and are a specialised termite predator. Two to four times a day, the ants set out to hunt prey. Proceeding in long files, they raid termites at their foraging sites, killing many workers and hauling the prey back to their nest.

The invasions bear an increased risk of injury. For this reason, the ants have developed a rescue behaviour hitherto unknown in insects. When an ant is injured in a fight, it will “call” its mates for help by excreting chemical substances. The injured insect is then carried back to the nest where it can recover after receiving treatment. What is the “therapy” like? Usually, treatment involves removing the termites still clinging to the ant.

A German research team of the University of Würzburg’s Biocentre has discovered this rescue behaviour of Megaponera analis and describes it in the journal Science Advances.

Source phys org

Advertisements

விவசாயம் செய்யும் எறும்புகள்

தென்னமெரிக்காவின் மழைக்காடு ஒன்றில் பல கோடி ஆண்டுகளுக்கு முன், சின்னச்சிறு எறும்பினங்கள் நமக்கும் முன்பே விவசாய வழிமுறைகளைக் கண்டறிந்துவிட்டன. தங்கள் உணவுத் தேவைக்காக அந்த எறும்புகள் பூஞ்சைகளைப் பயிரிட ஆரம்பித்தன. ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு சிக்ஸலப் வால் நட்சத்திரம் (Chicxulub meteor) பூமியின் மீது மோதியதால் பூமியின் நான்கில் மூன்று பங்கு அழிந்தது. அதிலிருந்து கொஞ்ச காலத்திலேயே அந்த எறும்புகள் விவசாயத்தைக் கண்டுபிடித்தன என்பதுதான் சிறப்பு.

இன்றைக்குச் சுமார் 250 எறும்பினங்கள் அமெரிக்கக் கண்டங்களின் மழைக்காடுகள், பாலைவனங்கள், புல்வெளிகளில் பூஞ்சைத் தோட்டங்களைப் பயிரிடுகின்றன. தட்பவெட்பம் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் தரைக்கடியில் உருவாக்கிய மண்ணறைகளில் பூஞ்சைகளை எறும்புகள் பயிரிடுகின்றன. பயிரிடுவது மட்டுமல்லாமல் அவற்றில் களையெடுக்கின்றன; நீர் பாய்ச்சுகின்றன; சில வகை தீங்கான பாக்டீரியாவிடமிருந்து பூஞ்சைகளைக் காப்பதற்காகச் சில எறும்பினங்கள் நோயுயிர்முறிகளையோ (antibiotics) வேதிப்பொருட்களையோ பயன்படுத்துகின்றன.

பல கோடி ஆண்டுகளாக இந்த எறும்பினங்கள் எப்படி இந்த அளவுக்கு மேம்பட்ட பூஞ்சை விவசாயிகளாகப் பரிணாமமடைந்தன என்ற ஆய்வை  அறிவியலாளர்கள் மேற்கொண்டனர்.

12tb-antfarmers01-master675

“உங்களுக்கு எக்ஸ்-ரே பார்வை இருந்து அமெரிக்கக் கண்டங்களின் மழைக்காடுகளில் தரைக்குக் கீழே பார்க்க முடிந்தால் ஒட்டுமொத்த நிலத்தடியும் தோட்ட அறைகளைக் கொண்டிருப்பதை நீங்கள் காணலாம்” என்கிறார் அமெரிக்காவின் இயற்கை வரலாற்றுக்கான ஸ்மித்ஸோனியன் தேசிய அருங்காட்சியகத்தில் பூச்சியியலாளராக இருக்கும் டெட் ஷுல்ட்ஸ் (Ted Schultz, an entomologist at the Smithsonian National Museum of Natural History).

பூஞ்சை விவசாய எறும்புகள் தென்னமெரிக்காவின் மழைக்காடுகளிலிருந்து சுமார் ஆறு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய மூதாதை இனத்திலிருந்து வந்திருக்கின்றன. மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்த விவசாய எறும்புகள் இரண்டாகப் பிரிந்தன.

விவசாய நுட்பத்தில் மேம்பட்ட எறும்பினம் அவற்றின் பூஞ்சைகளைப் பாலைவனப் பகுதிகள், சாவன்னா புல்வெளிகள் போன்ற உலர்ந்த, அல்லது பகுதியளவு உலர்ந்த தட்பவெட்பப் பகுதிகளுக்கு எடுத்துச் சென்றிருக்கின்றன. அங்கே தரைகீழ் தோட்ட அறைகளில் அந்தப் பூஞ்சைகளை எறும்புகள் பராமரித்தன. எறும்புகளைச் சார்ந்தே வாழும்படி அந்தப் பூஞ்சைகள் பரிணாம மாற்றம் பெற்றன.

விவசாய நுட்பத்தில் சற்றே மேம்படாத, சிக்கல் குறைந்த விவசாய முறைகளை மேற்கொள்ளும் எறும்பினம், மழைக்காடுகளில் வசிப்பவை. அவற்றைச் சாராமலேயே வாழ்ந்துவிடும் தன்மையுடைய பூஞ்சைகளை அந்த எறும்புகள் பயிரிட்டுவந்தன.

‘மேம்பட்ட விவசாய எறும்புகள், உலர்ந்த வெப்பநிலையைக் கட்டுப்படுத்த மிகவும் ஆழமான அறைகளைத் தோண்டுதல், அல்லது பழங்கள், தாவரங்கள், காலைப் பனி போன்றவற்றிலிருந்து தண்ணீரைக் கொண்டுவருவதன் மூலம் ஈரப்பதத்தைப் பராமரித்தல் போன்ற செயல்பாடுகளை அந்த எறும்புகள் மேற்கொள்ளக் கற்றுக்கொண்டன. அதாவது,’பசுங்குடில்களை’ நமக்கும் முன்பே பூஞ்சை வளர்ப்பில் எறும்புகள் மேற்கொண்டுவிட்டன. உலர்ந்த பிரதேசத்தில் அந்தப் பூஞ்சைகள், எறும்புகளின் பராமரிப்பு மட்டும் இல்லை என்றால் அழிந்து போய் இருக்கும்’ என்கிறார் ஷுல்ட்ஸ்.

விவசாய வழிமுறைகளை நாம் எறும்புகளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார் டாக்டர் ஷுல்ட்ஸ்.

1

Farming by Ants

In a rain forest in South America millions of years ago, ants had started farming before humans did. They started farming fungus for food — probably not too long after the Chicxulub meteor impact caused the mass extinction event that obliterated up to three-quarters of the rest of Earth’s plants and animals.

Today some 250 species of ants in tropical forests, deserts and grasslands throughout the Americas build fungi gardens in climate-controlled chambers underground. They weed them. They water them. Some even use antibiotics or chemicals to keep harmful bacteria away from their crop.

“If you had X-ray vision and you could look out in a wet, new-world tropical forest, you’d see the entire underground just peppered with garden chambers,” said Ted Schultz, an entomologist at the Smithsonian National Museum of Natural History and lead author of the study.

By comparing the genomes of 78 species of fungus farmers, including leaf-cutter ants, with 41 non-fungus farming species, Dr. Schultz and his colleagues revealed curious patterns. They found that fungus-farming ants probably all came from the same ancestor in the rain forests of South America some 60 million years ago. But 30 million years later, two kinds of ant-farming societies diverged.

One contained higher, more complex agriculturalists, which probably transported their fungus with them to dry or seasonably dry climates like deserts or savannas. There, they cared for it in their underground gardens, co-evolving until the fungus became totally dependent on its farmer. The second society was made up of lower, less complex agriculturalists, based primarily in tropical forests, and they grew fungus capable of escaping its garden and living independently.

Dr. Schultz speculated that with enough time, the dry climate created ideal conditions for the more complex ant farmers to domesticate the fungus, controlling temperature by digging deeper chambers, or maintaining humidity by bringing in water from fruits, plants or morning dew. “They’re already kind of putting their fungal crops in greenhouses,” he said, “but if you’re in a dry habitat, even if your fungal crop could escape, there’s nowhere to go.”

Dr. Schultz thinks we can take a lesson from these ant-brained farming methods.

Source Hindu and New York times