428 கோடி ஆண்டுகால மிகப்பழமையான படிமங்கள்

58b6f477969ff

கனடாவில் கடற்பகுதியில்  428 கோடி ஆண்டு பழமையான உயிரினப் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கனடாவில் கியூபெக் மாகாணத்தில் (Quebec, Canada) உள்ள கடலோரப் பகுதியில் இந்த உயிரினப் படிமங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

download

இதுவரை கண்டெடுக்கப்பட்ட படிமங்களிலேயே மிகவும் பழமையானதும் சிறப்பானதும் ஆகும். இந்த படிமங்கள் இரும்பை துருவாக ஆக்சிசனேற்றும் பாக்டீரியாக்களின் (iron-oxidising bacteria) படிமங்கள் ஆகும். இந்த பாக்டீரியாக்கள், வெப்பநீர்ம பாறைகளின் சூடான துவாரங்களில் (hot vents) 60 டிகிரி சென்டிக்ரேட் வெப்பத்தையும் தாக்கு பிடித்து உயிர்  வாழ்த்திருக்கின்றன . மேலும் இவை இன்றைய உயிரினப் பாக்டீரியாக்களைப் போன்று காணப்படுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த பாக்டீரியாக்கள் தான்  நீண்ட காலமாக அழியாமல் இருக்கும் உயிரினம் என்றும் கண்டு பிடித்திருக்கிறார்கள் .

58b6f484a953b

இந்த கண்டுபிடிப்பு, பூமி உருவான சிறிது காலத்திலேயே அதாவது 450 கோடி ஆண்டுகளிலேயே உயிர்கள் உருவானதற்கான முக்கிய சான்றாகும். இது உயிரினங்களின் தோற்றம் பற்றிய ஆராய்ச்சிக்கு உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இதற்கு முன்பு, மேற்கு ஆஸ்திரேலியாவில் கிடைத்த  346 கோடி ஆண்டு கால படிமங்களே பழமையானதாகும்.

இதே போன்ற பாறைகள், செவ்வாய் கிரகத்திலோ அல்லது நம் சூரிய குடும்பத்தின் வேறு கிரகத்திலோ அல்லது அதன் நிலவுகளிலோ கிடைத்தால் அதில் இதே போன்று உயிரினங்களின் படிமங்கள் இருக்கின்றனவா என்ற ஆராய்ச்சிக்கு இது மிகவும் உதவும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

Source Telegraph

 

Advertisements

தோல் நோயை குணப்படுத்தும் பாக்டீரியாக்கள்

ஆரோக்கியமான மனித தோலில் எப்போதுமே பாக்டீரியாக்கள் இருக்கும். சொல்லப்போனால் மனித உடலில் எத்தனை செல்கள் இருக்கின்றதோ அதை விட அதிகமாக பாக்டீரியாக்கள் இருக்கும். பெரும்பாலான பாக்டீரியாக்கள் மனிதனுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுத்தாமல் வாழும். ஆனால் சில பாக்டீரியாக்கள் மனிதனுக்கு எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்தும், உயிருக்கு ஆபத்தை கூட விளைவிக்கும்.

சான் டியாகோ மருத்துவ கல்லூரியின் (UC San Diego School of Medicine) டாக்டர் ரிச்சர்ட்  கல்லோ (Richard Gallo) மற்றும் தெருக்கி நகட்சுஜி (Teruaki Nakatsuji) தலைமையிலான ஆராய்ச்சியாளர் குழு, மனித தோலில் உள்ள நுண்ணுயிர் கொல்லி பெப்டைடுகளை (antimicrobial peptides) உற்பத்தி செய்யும்  நல்ல பாக்டீரியாக்களை பிரித்தெடுத்து எக்சீமா (eczema) என்ற தோல் நோய் உடையவரின் தோலில் பதித்தார்கள். நல்ல பாக்டீரியாக்கள், தோல் நோய் உண்டாக்கும் ஸ்டாஃபிலோகாக்கஸ் ஆரியஸ் (Staphylococcus aureus), என்ற கெட்ட பாக்டீரியாக்களை அழித்தன.

இயற்கையான இந்த நுண்ணுயிர் கொல்லிகள் மற்ற ஆண்டிபயொடிக் மருந்துகளை (Antibiotic medicines) விட சிறந்தது, ஏனென்றால் இந்த முறையில் நல்ல பாக்டீரியாக்கள் அழிவது இல்லை.

Source UCSD news