இரத்த வகையை அறிய காகிதப் பட்டை (Test strip)

சீனாவில் மூன்றாவது இராணுவ மருத்துவ பல்கலைக்கழகத்தை (Third Military Medical University in China ) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ரத்த வகைகளை அறிந்து கொள்ள உதவும் காகிதப் பட்டையை ((Test strip) உருவாக்கி இருக்கிறார்கள்.

தற்போதைய முறையில் ரத்த மாதிரியை எடுத்து ஆய்வுக்கூடத்தில் சோதனை செய்து முடிவுகளை அறிந்து கொள்ள குறைந்தது அரை மணி நேரம் காத்திருக்க வேண்டும். ஆனால் காகிதப் பட்டையை கொண்டு அரை நிமிடத்தில் ரத்த வகைகளை அறிந்து கொள்ளலாம்.

இந்த காகிதப் பட்டை ஆன்டிபாடிகள் (antibodies) மற்றும் சாயங்கள் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளது. ரத்தத்தில் உள்ள காப்புமூலங்கள் (antigens ), காகிதப் பட்டையில் உள்ள ஆன்டிபாடிகளுடன் வினையாற்றும் பொது ஏற்படும் நிறமாற்றம் கொண்டு ரத்த வகையை அறியலாம். ஆராய்ச்சியாளர்கள் 3550 ரத்த மாதிரிகளை சோதனை செய்ததில் அது 99.99 சதவீதம் துல்லியமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் பரிசோதனைகள் நடைபெறுகின்றன. இன்னும் இரண்டு ஆண்டுகளில் இது விற்பனைக்கு வரும்.

balls

Test strip able to identify blood type in less than a minute

A team of researchers at Third Military Medical University in China has developed a test strip that can be used to identify a person’s blood type in less than a minute.

The current method for determining blood type involves taking a blood sample to a lab where a trained technician uses a centrifuge to separate and test the different blood parts—the entire process can take anywhere from 30 minutes to a few hours depending on circumstances. In this new effort, the researchers have created a paper-based test strip that can be used to do the same thing in under a minute by people with just a few minutes’ training—and it is almost as accurate.

The paper strips developed by the team have small bits of antibodies and dyes that change colors (to teal or brown) when a drop of blood is applied. The colors change due to interactions between antigens in the blood sample and antibodies on the test strip.

Human blood comes mainly as type A, B, AB, or O. Type is determined by the antigens present on the surface of the red blood cell—type A blood has A antigens, B has B antigens, AB has both and O has neither of them. A different type of antigen determines whether the blood is positive or negative. The test strip relies on the fact that antibodies attack foreign antigens. If a person has blood with A antigens, for example, and is given blood with B antigens, antibodies in the blood will attack them, putting the person at risk of death. This is why emergency rooms typically use type O blood—it has no antigens to attack.

The researchers tested the test strip on 3550 blood samples and found it was accurate 99.99 percent of the time and took on average just 30 seconds to give results. The researchers believe their test strips could prove most useful in a war zone or in countries with limited healthcare facilities. More testing will have to be done, but the team believes their strip will be on the market within the next couple of years.

Source Medical express

 

Advertisements

உயர் ரத்த அழுத்தத்தோடு தொடர்புடைய, 107 மரபணுக்கள்

உயர் ரத்த அழுத்தத்தோடு தொடர்புடைய, 107 மரபணுக்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.பிரிட்டனில் செயல்படும், ‘பயோபேங்’ (UK Biobank) என்ற திட்டத்தில் பங்கேற்ற, 40-69 வயதில் உள்ள 422,000 பேரிடம் மேற்கொண்ட மரபணு முடிவில் இந்த கண்டுபிடிப்பு சாத்தியமாகியுள்ளது.

இந்த மரபணுக்கள், மனித ரத்த நாளங்கள் மற்றும் இதயத் திசுக்களில் செயல்படுபவை. லண்டனிலுள்ள இம்பீரியல் கல்லுாரி (Imperial College)மற்றும் குவீன் மேரி பல்கலைக்கழகம் (Queen Mary University) ஆகியவற்றை சேர்ந்த விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ள இந்த மரபணுக்களின் அடிப்படையில், புதிய மற்றும் செம்மையான உயர் ரத்த அழுத்த மருந்துகளை உருவாக்க முடியும்.மேலும், இளம் வயதிலேயே ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் பக்கவாதம் வரும் வாய்ப்புகள் உள்ளதா என்பதை துல்லியமாக கணிக்கவும் இந்த கண்டுபிடிப்புகள் உதவும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

உயர் ரத்த அழுத்தத்தை தடுக்க, வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் உணவு முறை மாற்றங்களை பரிந்துரைக்கவும் இக்கண்டுபிடிப்புகளை மருத்துவர்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

Source The Sun andMedical News Today

பிரிட்டனில் முதல் முறையாக தோல்வியடைந்த மலேரியா சிகிச்சை: மருத்துவர்கள் கவலை

நோய் மருந்தையும் மீறிய எதிர்ப்புத் திறன்மிக்க மலேரியா நோய் வகைகள் ஆப்ரிக்க கண்டம் முழுவதிலும் வெளியாகி வருவதாக தெரிவித்து புதிய கவலைகளை பிரிட்டன் மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர்.

மலேரியா நோயால் பாதிக்கப்பட்ட நான்கு நபர்களுக்கு பிரிட்டனில் அளிக்கப்பட்ட ஒரு முக்கிய மலேரியா சிகிச்சை முதல் முறையாக தோல்வியடைந்துள்ளளது. இவர்கள் நால்வரும் உகாண்டா, அங்கோலா மற்றும் லைபீரியா ஆகிய ஆப்ரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரிட்டன் திரும்பியவர்கள்.

ஆரம்பத்தில் மலேரியா எதிர்ப்பு சிகிச்சையை அவர்களின் உடல் நல்ல முறையில் ஏற்று வந்தாலும், பின்னர் ஒரு மாதம் கழித்து அவர்களுக்கு மீண்டும் மலேரியா தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

மலேரியா நோயை உண்டாக்கும் ஒட்டுண்ணி மாதிரிகளை கொண்டு நடத்தப்பட்ட சோதனைகளில், மலேரியா நோய் மருந்துக்கு இவ்வகை ஒட்டுண்ணிகள் எதிர்ப்பை உருவாக்கி இருக்கக் கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

Source BBC

இரத்தத்தை சுத்திகரிக்கும் காந்தம்

இரத்தத்தில் கிருமித் தொற்று இருந்தால், அது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். ரத்தத்தில் கலந்துவிட்ட பாக்டீரியாக்களை அகற்றுவதற்கு மருத்துவர்கள் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை அளிப்பர்.

பாக்டீரியாக்களை அகற்றுவதற்கு காந்தத்தை பயன்படுத்தலாம் என, சுவிட்சர்லாந் திலுள்ள, ‘எம்ப்பா’ ஆய்வுக்கூடம் (Empa) ‘அடோல்பி மெர்க்கெல் இன்ஸ்டி டியூட் (Adolphe Merkle Institute)’ மற்றும் அமெரிக்காவின் ஹார்வர்டு மருத்துவ கல்லூரி  (Harvard Medical school) ஆகிய, மூன்று அமைப்புகளை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இரத்தத்தில் கலந்து நச்சு ஏற்படுத்தக்கூடிய பெரும்பாலான பாக்டீரியாக்களை எதிர்க்கும் பல்திறன் நோய் எதிர்பொருளை (antibody) மருத்துவர்கள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர். அந்த ஆன்டிபாடியை மிக நுண்ணிய இரும்புத்துகள்களில் பூசி, அத்துகள்களை இரத்தத்தில் கலப்பர். அதன் பிறகு நோயாளியின் உடலிலிருந்து அந்த இரத்தத்தை சுத்திகரிக்கும் காந்த டயாலிசிஸ் (Magnetic Dialysis)  இயந்திரத்தில் கொடுத்து காந்தப் புலத்திற்கு உட்படுத்துவர்.

nonfatal-attraction

இதனால் இரத்தத்தில் உள்ள இரும்புத்துகள்கள் உடனடியாக காந்த சக்தியால் ஈர்க்கப்பட்டு விடும். தனிப்படுத்தப்பட்ட துகள்களில் பூசப்பட்டுள்ள ஆன்டிபாக்டிகள், பாக்டீரியாக்களையும் கவர்ந்து வரும் என்பதால், இரத்தம் துய்மையானதாகி விடும். விலங்கு இரத்தத்தில் இந்த முறை வெற்றிகரமாக செயல்பட்டுள்ளது.

மேலும் பலவித நோய் கிருமிகளை நீக்குவதற்கும்,காந்தசுத்திகரிப்பின் போது ஆன்டிபாடி கலந்த இரும்புத்துகளை dialysis இயந்திரத்தில் இரத்தத்தில் (நோயாளியிடம் செலுத்தாமல்) செலுத்துவதற்கும் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. விரைவில் மனித இரத்தத்திலும் காந்தசுத்திகரிப்பு முறையை சோதிக்க உள்ளனர்.

Source Science Daily

ரத்த தானத்தில் DNA கலப்பது இல்லை

நம் உடலின் ஒவ்வொரு அணுவிலும் DNA இருப்பதை அறிவோம்.ஆனால் ரத்த தானத்தின் பொது தானமளித்தவரின்  DNA  தானம் பெற்றவரின் DNA யோடு கலப்பது இல்லை.

ரத்தம் plasma,வெள்ளையணுக்கள்,சிவப்பணுக்கள்,மற்றும் தட்டணுக்களால் (platelets) ஆனது.அவற்றில் வெள்ளையணுவில் மட்டுமே உட்கரு (nucleus) மற்றும் DNA  இருக்கும்.சிவப்பணுக்களும் தட்டணுக்களும் (பிளேட்லெட்) எலும்பு மஜ்ஜையில் உற்பத்தியாகும்போதே உட்கருவை (nucleus and DNA) இழந்துவிடுகின்றன.

ரத்ததானத்தின் போது centrifuge மூலம் வெள்ளையணுக்கள் நீக்கப்பட்டு மற்றவை தான் செலுத்தப்படுகிறது. அதனால் DNA கலப்பதற்கு வாய்ப்பு இல்லை.

ரத்தம் பிரிக்கப்படாமலேயே செலுத்தினால் febrile என்ற வகை காய்ச்சல் ஏற்படும். ரத்தத் தானம் பெறுபவரின் ரத்த வெள்ளையணுக்கள் அயல் டி.என்.ஏ.வை அழிக்கும் செயல்பாட்டால் உருவாகும் காய்ச்சல்தான் இது.

Source Hindu