நைட்ரஜன் பேட்டரி (Nitrogen Battery)

காற்றில் ஆக்சிஜனை விடவும் அதிகமாக, 78 சதவீதத்திற்கு மேல் இருப்பது நைட்ரஜன். ஆனால் நைட்ரஜன் மூலக்கூற்றில் இரு நைட்ரஜன் அணுக்கள் மிக உறுதியான மூன்று வலுப்பிணைப்பால் (triple covalent bond) இணைக்கப்பட்டிருப்பதால், சாதாரண நிலைமையில், அவற்றை உடைத்து இரசாயன ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுவது விஞ்ஞானிகளுக்கு பெரிய சவாலாக இருந்தது.

சீனாவிலுள்ள சாங்சுன் வேதியியல் ஆராய்ச்சி நிலையத்தின் ஜின் போ சாங் (Xin-Bo Zhang, of the Changchun Institute of Applied Chemistry) தலைமையிலான குழு, காற்றில் உள்ள நைட்ரஜனை பேட்டரியில் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.

புழக்கத்தில் உள்ள லித்தியம் பேட்டரியில், லித்தியம் நைட்ரைடு (2Li3N) உடைக்கப்பட்டு லித்தியம் மற்றும் நைட்ரஜன் வாயுவாக மாறுகிறது. ஆனால் இதன் எதிர்வினையை, புதிய தொழில்நுட்பத்தில் பயன்படுத்தி இருக்கின்றனர். அதாவது காற்றில் உள்ள நைட்ரஜனை, சாதகமான சூழலில் லித்தியத்துடன் வினை புரிய வைத்து மின் ஆற்றலாக மாற்றினர். ஆனால், லித்தியம் பேட்டரியை விட மிக குறைந்த அளவே மின் ஆற்றல் கிடைத்தது. மின் ஆற்றலை மேம்படுத்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

240_F_123165150_Co0vkIAoweQttDlqOkLztQ8JlFkFeRkh

A Battery Prototype Powered by Atmospheric Nitrogen

As the most abundant gas in Earth’s atmosphere, nitrogen has been an attractive option as a source of renewable energy. But nitrogen gas — which consists of two nitrogen atoms held together by a strong, triple covalent bond — doesn’t break apart under normal conditions, presenting a challenge to scientists who want to transfer the chemical energy of the bond into electricity. Researchers in China present one approach to capturing atmospheric nitrogen that can be used in a battery.

The “proof-of-concept” design works by reversing the chemical reaction that powers existing lithium-nitrogen batteries. Instead of generating energy from the breakdown of lithium nitride (2Li3N) into lithium and nitrogen gas, the researchers’ battery prototype runs on atmospheric nitrogen in ambient conditions and reacts with lithium to form lithium nitride. Its energy output is brief but comparable to that of other lithium-metal batteries.

“This promising research on a nitrogen fixation battery system not only provides fundamental and technological progress in the energy storage system but also creates an advanced N2/Li3N (nitrogen gas/lithium nitride) cycle for a reversible nitrogen fixation process,” says senior author Xin-Bo Zhang, of the Changchun Institute of Applied Chemistry, part of the Chinese Academy of Sciences. “The work is still at the initial stage. More intensive efforts should be devoted to developing the battery systems.

Source Chinese Academy of Sciences

இரத்த வகையை அறிய காகிதப் பட்டை (Test strip)

சீனாவில் மூன்றாவது இராணுவ மருத்துவ பல்கலைக்கழகத்தை (Third Military Medical University in China ) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ரத்த வகைகளை அறிந்து கொள்ள உதவும் காகிதப் பட்டையை ((Test strip) உருவாக்கி இருக்கிறார்கள்.

தற்போதைய முறையில் ரத்த மாதிரியை எடுத்து ஆய்வுக்கூடத்தில் சோதனை செய்து முடிவுகளை அறிந்து கொள்ள குறைந்தது அரை மணி நேரம் காத்திருக்க வேண்டும். ஆனால் காகிதப் பட்டையை கொண்டு அரை நிமிடத்தில் ரத்த வகைகளை அறிந்து கொள்ளலாம்.

இந்த காகிதப் பட்டை ஆன்டிபாடிகள் (antibodies) மற்றும் சாயங்கள் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளது. ரத்தத்தில் உள்ள காப்புமூலங்கள் (antigens ), காகிதப் பட்டையில் உள்ள ஆன்டிபாடிகளுடன் வினையாற்றும் பொது ஏற்படும் நிறமாற்றம் கொண்டு ரத்த வகையை அறியலாம். ஆராய்ச்சியாளர்கள் 3550 ரத்த மாதிரிகளை சோதனை செய்ததில் அது 99.99 சதவீதம் துல்லியமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் பரிசோதனைகள் நடைபெறுகின்றன. இன்னும் இரண்டு ஆண்டுகளில் இது விற்பனைக்கு வரும்.

balls

Test strip able to identify blood type in less than a minute

A team of researchers at Third Military Medical University in China has developed a test strip that can be used to identify a person’s blood type in less than a minute.

The current method for determining blood type involves taking a blood sample to a lab where a trained technician uses a centrifuge to separate and test the different blood parts—the entire process can take anywhere from 30 minutes to a few hours depending on circumstances. In this new effort, the researchers have created a paper-based test strip that can be used to do the same thing in under a minute by people with just a few minutes’ training—and it is almost as accurate.

The paper strips developed by the team have small bits of antibodies and dyes that change colors (to teal or brown) when a drop of blood is applied. The colors change due to interactions between antigens in the blood sample and antibodies on the test strip.

Human blood comes mainly as type A, B, AB, or O. Type is determined by the antigens present on the surface of the red blood cell—type A blood has A antigens, B has B antigens, AB has both and O has neither of them. A different type of antigen determines whether the blood is positive or negative. The test strip relies on the fact that antibodies attack foreign antigens. If a person has blood with A antigens, for example, and is given blood with B antigens, antibodies in the blood will attack them, putting the person at risk of death. This is why emergency rooms typically use type O blood—it has no antigens to attack.

The researchers tested the test strip on 3550 blood samples and found it was accurate 99.99 percent of the time and took on average just 30 seconds to give results. The researchers believe their test strips could prove most useful in a war zone or in countries with limited healthcare facilities. More testing will have to be done, but the team believes their strip will be on the market within the next couple of years.

Source Medical express

 

அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் செல்லும் சீன ரயில்

சீனாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சாங்க்விங்(Chongquing), மக்கள் தொகை அதிகம் கொண்ட நகரம். இங்கே 31,000 சதுர மைல்களில் 4.9 கோடி மக்கள் வசிக்கிறார்கள். காலியான இடம் கிடைப்பதே கடினம். புதிதாக சாலையோ ரயில் வழித்தடமோ அமைப்பதற்குக்கூட இடம் இல்லை. அதனால்,ரயில் செல்லும் பாதையில் இருக்கும் கட்டிடங்களை இடிக்காமல், ரயில் பாதையை அமைத்துள்ளனர். 19 மாடிகள் கொண்ட மூன்று குடியிருப்புகளுக்குள் ரயில்கள் செல்லுமாறு இந்த பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. 6, 7, 8-வது தளங்கள் மட்டும் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளன. ரயில் பாதைக்குக் கீழும், மேலும் மக்கள் குடியிருக்கிறார்கள். ஒரு ரயில் போவதற்கும் இன்னொரு ரயில் வருவதற்குமாக இரண்டு பாதைகள் குடியிருப்புகளுக்குள் செல்கின்றன. ரயில் செல்லும் சத்தம் குடியிருப்புவாசிகளைப் தொந்தரவு செய்யாமல் இருப்பதற்காக ஒலி உள்வாங்கிக்கொள்ளும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. “கட்டிடத்தைப் பாதிக்காத வகையில் எடை குறைந்த தண்டவாளங்கள்தான் போடப்பட்டுள்ளன. அத்துடன் கட்டிடத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ரயில் ஓடும்போது சில நேரங்களில் பாத்திரம் சுத்தம் செய்யும்போது கருவியில்(dishwasher) வரும் ஒலி போல் கேட்கும். மற்றபடி எங்கள் தலைக்கு மேல் ரயில்கள் ஓடுகின்றன என்ற நினைப்பே வராது.வரிசையாக மூன்று குடியிருப்புகளுக்குள் நுழைந்து ரயில் வெளிவருவதைப் பார்க்க அற்புதமாக இருக்கும்!” என்கிறார் ஒரு குடியிருப்பு வாசி.

balls

Train goes through the centre of a 19-storey block of flats in China

The city of Chongqing in the south-east of the country has a population of 49 million packed into 31,000 square miles, causing urban planners to look creatively at solving space issues.

A special railway station was built into the block of houses, set into the sixth to eighth floors.

Residents can hop on Chongqing Rail Transit No.2 at their own Liziba station.

Even though they are living in close quarters to a busy train station, any noise has been muffled by special equipment.

To homeowners in the complex, the sound of the train is designed to be as disturbing as the noise from a dishwasher

Source Hindu

உலகின் மிக உயரமான பாலம் -பெய்பஞ்சியாங் பாலம்: சீனாவில் திறக்கப்பட்டது

china-bridge

சீனாவின் இரு மலைப்பிரதேச மாகாணங்களை இணைக்கும் உலகின் மிக உயரமான பாலம் பெய்பஞ்சியாங் பாலம் (Beipanjiang Bridge) போக்குவரத்துக்காக  திறக்கப்பட்டது. இதனால் 4 மணிநேரம் எடுக்கும் பயணம் 1 மணி நேரமாக குறையும். நதியின் மீது கட்டப்பட்டுள்ள இந்த  பாலம் 565 மீட்டர்கள், அதாவது 1,854 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.

யுனான் (Yunnan) மாகாணத்தின் ஸுனாவேய் ( Xuanwei )  மற்றும் குயுஸூ (Guizhou) மாகாணத்தின் ஷுய்செங் (Shuicheng)  மலைப்பகுதிகளை இந்தப் பாலம் இணைக்கிறது. இந்த அதிசய பாலம் ஒரு பில்லியன் யுவான் (144 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) செலவில் கட்டப்பட்டுள்ளது. ஹுபேயில் (Hubei ) கட்டப்பட்ட ஸீ டு (Si Du ) நதியின் மீது கட்டப்பட்ட பாலத்தை விடவும் இது உயரமானது என்பதால் உலகின் மிக உயரமான பாலம் இதுவே.

Source The Hindu