சுற்றுசூழலுக்கு உகந்தவண்ணம் மின்னனு கழிவுகளை மறுசுழற்சி செய்யும் முறை கண்டுபிடிப்பு

02TH-SCI-PRASADJPG

இந்திய அறிவியல் நிறுவனத்தின் விஞ்ஞானிகளான பேராசிரியர் சட்டோபாத்யாய்.( Prof. Chattopadhyay), மற்றும் டாக்டர் சந்திரசேகர திவாரி (Dr. Chandra Sekhar Tiwary) மின்னனு கழிவுகளை சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வண்ணம் மறுசுழற்சி செய்யும் முறையை கண்டுபிடித்திருக்கின்றனர்.

திரவ நைட்ரஜநால் குளிரூட்டப்பட்ட அரைக்கும் இயந்திரத்தில் கடினமாக்கப்பட்ட இரும்பு உருளையை கொண்டு மின்னனு கழிவுகளை அரைக்கும் போது, மின்னணு கழிவில் இருக்கும் உலோகம், ஆக்சைடுகள் மற்றும் பாலிமர் போன்ற பல பொருட்கள் ஒன்றோடு ஓன்று வினை புரியாமல் 20-150 நானோமீட்டர் அளவிலான துகள்களாக்கப்படும். இந்த துகள்களை நீரில் கலந்து புவி ஈர்ப்பு விசைப்படி பிரித்தெடுக்கப்படும். எடை குறைந்த பாலிமர் மேலே மிதக்கும். உலோகங்கள் மற்றும் ஆக்ஸைடுகள் கீழே படியும். மீண்டும் நீரில் கலக்கும் போது ஆக்ஸைடுகள் மேலே மிதக்கும், உலோகங்கள் கீழே படியும்.

இந்த முறையில் இரசாயனங்கள் பயன்படுத்தப்படாதது சிறப்பாகும்.

 

5

Ecofriendly way of recycling e-waste

Indian Institute of Science (IISc) researchers  Prof. K. Chattopadhyay and Dr. Chandra Sekhar Tiwary  have found a novel way to recycle the mounting pile of electronic waste more efficiently and in an environmentally friendly manner.

The low-temperature ball mill was designed by Dr. Tiwary. The cryo-mill grinding chamber is cooled using liquid nitrogen and a small hardened steel ball is used for grinding the material in a controlled inert atmosphere using argon gas.

The crushed powder was then mixed with water to separate the components into individual classes of materials using gravity. The powder separated into two layers — the polymer floats at the top due to lower density, while metals and oxides of similar size and different density settle at the bottom. The bottom layer when diluted further separated into oxides at the top and metals at the bottom. The oxides and metals were present as individual elements.

“Our low-temperature milling separates the components into single phase components without using any chemicals, which is not possible using other techniques,” says Prof. Chattopadhyay.

Source The Hindu

ஆமை ஒற்றன் – ஆமை மூளையை கட்டுப்படுத்தும் மனித மூளை

நாட்டின் எல்லையில், இரவு நேரத்தில், ராணுவ வீரர்கள் காவல் காத்துக்கொண்டிருக்கும் புல்வெளிகளின் ஊடே ஒரு ஆமை மெதுவாக நகர்ந்து வரும். ஆமை தானே போகிறது என அவர்கள் அதைப் பெரிதாக கண்டு கொள்ளாமல் இருப்பார்கள். அது உயிருள்ள ஆமையா என்று வேண்டுமானால் அவர்கள் சந்தேகம் கொண்டு ஆராய்ந்துப் பார்க்கலாம். அது உயிருள்ள ஆமை என்றதும் அதைக் கீழே விட்டுவிடுவார்கள். அவர்களுக்குத் தெரியாது, அந்த ஆமையின் மூளை முழுக்க முழுக்க ஒரு மனிதனின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது. தம் எல்லையிலிருக்கும் ராணுவ முகாம்களை வேவு பார்க்க அது வந்திருக்கிறது என்பது. சமயத்தில், மனித வெடிகுண்டு போல், அது ஆமை வெடிகுண்டாகவும் மாறலாம். ஏனெனில், அதைக் கட்டுப்படுத்துவது ஒரு மனித மூளை.

இது கற்பனையோ, சினிமாக் கதையோ அல்ல. இது இன்றைய அறிவியல் கண்டுபிடிப்பு. உயிருள்ள உயிரினங்களின் மூளையை ஊடுருவி அதைத் தன் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரும் ஆராய்ச்சியில் பல நாட்டு ஆராய்ச்சியாளர்களும் ஈடுபட்டு வருகிறார்கள். இதுவரை பூச்சிகளை வைத்து இது போன்ற ஆராய்ச்சிகளை மெற்கொண்டு வந்தனர். தற்போது, ஆமையைக் கொண்டு இந்த ஆராய்ச்சியை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறார்கள் தென் கொரிய விஞ்ஞானிகள் (Korea Advanced Institute of Science and Technology (KAIST)).

மனிதர்களின் தலையில் “ஹெட் மவுண்டட் டிஸ்பிளே ” (Head Mounted Display) ஒன்று மாட்டப்படும். இதில் BCI எனப்படும்  ” Brain Computer Interface” மற்றும் CBI ” Computer Brain Interface” ஆகியவை இணைக்கப்படும். இவை மனித மூளையை கணிணிக்கும், கணிணியின் உத்தரவுகளை மூளைக்கும் கடத்தும் கருவியாக செயல்படும். அதே போன்று ஆமையின் முதுகில் ஒரு கேமரா, வைஃபை ட்ரான்ஸ்சீவர், கம்ப்யூட்டர் கன்ட்ரோல் மாட்யூல் மற்றும் ஒரு பேட்டரி ஆகியவைப் பொருத்தப்பட்டிருக்கும். மேலும், கூடுதலாக ஒரு அரை  – உருளை (Semi-Cylinder) வடிவிலான உணர் கருவியும் (Sensor) அதன் முதுகில் பொருத்தப்பட்டிருக்கும்.

ஆமையின் முதுகிலிருக்கும் கேமராவிலிருந்து அதன் சுற்றத்தை HMD பொருத்திய மனிதரால் உணர முடியும். இதைக் கண்டு அந்த மனிதர் ஒரு ஆமையாக மாறிட முடியும். அதாவது, ” நெய்நிகர் யதார்த்தம்” (Virtual Reality) போன்ற முறையில், அவன் இருக்கும் இடத்திலிருந்தே ஆமை இருக்கும் இடத்திற்குப் போனது போன்ற உணர்வு ஏற்படும். அவனிடம் இருக்கும் BCI மற்றும் CBI அந்த மனிதனின் எண்ணங்களை EEG சிக்னல்களாக மாற்றி ஆமைக்கு சென்றடையச் செய்யும்.அதன் முதுகிலிருக்கும் உணர் கருவி (Sensor), மனிதன் செலுத்த நினைக்கும் திசைகளை அவைகளுக்கு உணர்த்தும். அதன்படி, அந்த ஆமையும் நகர்ந்து செயல்படும்.

உலகில் எத்தனையோ உயிரினங்கள் இருக்க ஆமையை ஏன் இதற்கு தேர்ந்தெடுத்தார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. ஆமைக்கு இயற்கையிலேயே இருக்கும் அறிவாற்றல், தடைகளை கண்டுணர்ந்து நகரும் இயல்பு, ஒளிகளின் அலைக் கீற்றை வேறுபடுத்த முடிகிற திறன் ஆகியவையே இந்த ஆராய்ச்சிக்கு இதை தேர்ந்தெடுக்க காரணங்களாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

இன்னும் சில ஆண்டுகளில் இப்படியும் நடக்கலாம். மனிதன் அடைய முடியாத ஆழ்கடலில் எத்தனையோ ஆச்சரியங்கள் புதைந்துக் கிடக்கின்றன. ஒரு ஆமையாய் மாறி மனிதன் ஆழ்கடலில் பயணித்து பல கேள்விகளுக்கான விடைகளைக் கண்டறியலாம்.

4

Humans to control TURTLES using their thoughts

Researchers from the Korea Advanced Institute of Science and Technology (KAIST)  developed the technology that can ‘read’ and use human thought to control machines using ‘brain-computer interfaces’ (BCIs).

Scientists are using this technology to establish a link between the brains of different species.

A ‘cyborg system’ which consists of a camera, a Wi-Fi transceiver, a computer control module and a battery is mounted on the turtle’s shell.

Also included on the turtle’s shell is a black semi-cylinder with a slit, which forms the ‘stimulation device’.

The human wears a display on their head so they can see exactly what the turtle is doing in real-time through the video camera mounted on its shell and the BCI allows them to use their thoughts to direct it.

When they decide where the turtle should move these thoughts are recognised by the BCI system as electrical activity in the brain

The BCI can distinguish between three mental states: left, right and idle.

Left and right commands activate the turtle’s stimulation device via Wi-Fi, turning it so that it obstructs the turtle’s view. This invokes its natural instinct to move toward light and change its direction

Research demonstrates that the animal guiding scheme via BCI can be used in a variety of environments with turtles moving on many different surfaces, like gravel and grass, and tackling a range of obstacles, such as shallow water and trees.

Source விகடன்

ஓரிகாமி ரோபோ

அமெரிக்காவின் நாசா, விண்வெளி ஆராய்ச்சிக்காக ஜப்பானின் ஓரிகாமி கலையை அடிப்படையாகக் கொண்ட புதிய வகையில் உருமாறும் ரோபோவை வடிவமைத்துள்ளது. சக்கரங்கள் மூலம் நகரும் இந்த ரோபோ, தொடர்ந்து செல்வதற்கு தடை இருந்தால் இடத்துக்கு ஏற்ப பல வகைகளிலும் மடங்கி, சுழன்று செல்கிறது. இதன் மூலம் சோதனைக்கு அனுப்பும் கிரகத்தில் தானியங்கி முறையில் இயங்கும்போது, மேடு பள்ளங்களில் தடைபடாமல் உருமாறி பயணிக்கும்

red ribbon with bow with tails

NASA’s origami-inspired robot

Engineers at NASA’s Jet Propulsion Laboratory in Pasadena, California are developing a small scout robot called the Pop-Up Flat Folding Explorer Robot (PUFFER) to accompany the next generation of Martian rovers in their outer space explorations.

Inspired by origami, the Japanese art of paper folding, PUFFER is designed to change shape in order to squeeze into small crevasses that are too tight for rovers to reach. So far the two-wheeled scout has been successfully tested in hostile and diverse terrains including the Mojave Desert and Antartica.

Though rovers themselves are built to last, they’re expensive and NASA engineers take care not to send them on overtly dangerous missions. A handful of PUFFERs are comparatively cheap and can be deployed in high-risk regions.

NASA also plans to scale it up slightly to the size of a breadbox in order to make it a bit more durable.

Source Hindu

உலகின் மிகச் சிறிய காந்தம்

தொழில்நுட்பம் பெரிய எல்லைகளை ஒவ்வொரு முறையும் தொடும்போது தொழில்நுட்பச் சாதனங்களில் அளவு சிறுத்துக்கொண்டே போகிறது.

கலிபோர்னியா சான் ஜோன்ஸ் நகரில் உள்ள ஐ.பி.எம். நிறுவனத்தின் அல்மடன் ஆய்வு மையத்தில் ஒற்றை அணுவைக் கொண்ட உலகின் மிகச் சிறிய காந்தத்தை உருவாக்கி அதில் ஒற்றை ‘பிட்’ தகவலைச் சமீபத்தில் பதித்திருக்கிறார்கள்.

magnet_3145857f

அணு அளவுக்குத் துல்லியமாகக் காட்டும் ‘நோபல் பரிசு வென்ற’ ஸ்கானிங் டனல்லிங் நுண்ணோக்கி (Scanning tunneling microscope) மூலமாக இதற்குச் செயல்விளக்கம் தந்தனர்.

கணினித் தொழில்நுட்பத்தின் மிகச் சிறிய அலகு ‘பிட்’ (Bit) எனப்படுகிறது. இந்த வழிமுறையில் வெறுமனே 0 அல்லது 1 என்கிற எண் மட்டுமே இருக்கும். தற்போதுள்ள வன்தட்டு இயக்கியில் (hard disk drive) ஒரு பிட்டைப் பதிவுசெய்ய 1 லட்சம் அணுக்கள் தேவைப்படுகின்றன. அதிலிருந்து ஒரே ஒரு அணுவிலேயே ஒரு பிட்டைப் பதியும் அளவுக்குப் புதிய தொழில்நுட்பத்தை இந்த ஐ.பி.எம். விஞ்ஞானிகள் வடிவமைத் இருக்கிறார்கள். “தொழில் நுட்பத்தை முடிந்த அளவுக்குச் சுருக்கினால் என்னவாகும் என்பதைப் புரிந்துகொள்ளவே இந்த ஆய்வை மேற்கொண்டோம்” என்கிறார் நானோ ஆய்வாளர் கிரிஸ்டோபர் லட்ஸ் (Christopher Lutz ).

இது நானோதொழில்நுட்பத்தின் 35 ஆண்டுகால வரலாற்றில் மைல் கல். இந்த ஆய்வில் தெரியவந்த முக்கியமான கண்டுபிடிப்பு என்னவென்றால், இரண்டு காந்த அணுக்களில் தகவல் பதிய அவற்றுக்கு இடையில் ஒரு நானோமீட்டர் இடைவெளி இருந்தாலே போதுமானது. (ஒரு நானோமீட்டர் இடைவெளி என்பது ஒரு குண்டூசி தலையின் அகலத்தில் 10 லட்சத்தில் ஒரு பங்கு.) இந்தக் கண்டுபிடிப்பு மூலமாகத் தற்போது உள்ள ஹார்ட் டிஸ்க் டிரைவ் மற்றும் மெமரி சிப்களில் பதிவு செய்வதைக் காட்டிலும் 1,000 மடங்கு அதிக அடர்த்தியில் பதியலாம்.

“நாம் இதுவரை அடைந்ததில் உச்சபட்ச சாத்தியம் இந்த ஒற்றை அணு. இதுவரை நாங்கள் பார்த்த சேமிப்பு சாதனங்களிலேயே இதுதான் அதிஅற்புதமானது. அதை நினைத்தாலே பரவசமாக இருக்கிறது” என்றார் முன்னாள் ஐ.பி.எம். ஆய்வு விஞ்ஞானியும் தற்போது கொரியாவின் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேசிக் சயின்ஸ்-ன் விஞ்ஞானி ஆண்ட்ரியாஸ் ஹென்ரிச்.

balls

IBM stores one bit of data on a SINGLE atom

The IBM scientists used the scanning tunnelling microscope (STM) , an IBM invention that won the 1986 Nobel Prize for Physics, to view and move holmium atoms.

The data storage system uses a single atom of holmium, supported by magnesium oxide to help keep the magnetic poles of the atom stable.

By passing an electrical current through the holmium, the scientists are able to reverse these poles at will.

This allows for the switch between a 1 and 0 state – the binary positions used in computing to write and store information.

This information can be read by measuring the current passing through the atom, which will vary depending on its magnetic position.

The researchers showed that two magnetic atoms could be written and read independently, even when they were separated by just one nanometer – a distance one millionth the width of a pin head.

This tight spacing could eventually yield magnetic storage that is 1,000 times denser than today’s hard disk drives and solid state memory chips.

Hard drives built using this nanostructure would control the position of every atom.

This could make servers, computers and personal devices radically smaller and more powerful.

Christopher Lutz is lead nano-science researcher at IBM Research, based at Almaden in San Jose, California.

 About the project, he said:  ‘Magnetic bits lie at the heart of hard-disk drives, tape and next-generation magnetic memory.’We conducted this research to understand what happens when you shrink technology down to the most fundamental extreme – the atomic scale.

Source Hindu

 

LI- FI தொழில்நுட்பம்

Li-fi என்றால் என்ன?

இருட்டில் டார்ச் லைட் அடிக்கும்போது, அந்த ஒளி செல்லும் பாதையை கவனித்ததுண்டா? பல நுண்ணிய துகள்கள் அதில் பயணிப்பது தெரியும். அதுபோல, டேட்டாவை ஒளி மூலம் கடத்துவதுதான் Li-fi தொழில்நுட்பம்.   li –fi என்றால் light fidelity.

இப்போதிருக்கும் wifi டெக்னாலஜியில், வீடு வரை கேபிள் மூலம் வரும் இந்த டேட்டா, வயர்லெஸ் மோடம் மூலம் ரேடியோ அலைகளாக மாற்றப்படுகிறது. ரேடியோ அலைகளில்  டேட்டா நமது மொபைல் அல்லது லேப்டாப்புக்கு கடத்தப்படுகிறது. அங்கே அந்த அலைகள் டீ-கோட் செய்யப்பட்டு தேவையான தகவல்களாக ஸ்க்ரீன் தெரிகிறது. இந்த ரேடியோ அலைகளின் வேகம் தான் இப்போது வைஃபையின் வேகத்தை நிர்ணயிக்கிறது. Lifiயில் இந்த டேட்டா ஒளியின் மூலம் கடத்தப்படுவதால் அதன் வேகம் அதிகம். வைஃபையின் வேகத்தை விட பத்து மடங்கு அதிக வேகத்தில் டேட்டா பயணிக்கும்.

எப்படி செயல்படுகிறது?

எல்.ஈ.டி. பல்புக்கு சீரான மின்சாரம் கிடைக்கும்போது அது ஃபோட்டானை வெளிப்படுத்துகிறது. அந்த ஃபோட்டானைத்தான் நாம் வெளிச்சம் என்கிறோம். எப்போதாவது லோ-வோல்டேஜில் மின்சாரம் வரும்போது அந்த ஒளி குறைவதை நாம் பார்த்திருக்கிறோம். பல்புக்கு வரும் மின்சாரத்தின் அளவைக் கட்டுப்படுத்தினால் பல்பும் அதற்கேற்றது போல ஃபோட்டானை வெளிப்படுத்தும். Lifi வசதி இருக்கும் மொபைல் அல்லது லேப்டாப் அந்த சிக்னலை டீ-கோட் செய்து டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளும்.

lifi-technology-perfect-slides-16-638

யார் கண்டுபிடித்தது?

ஜெர்மனைச் சேர்ந்த பேராசிரியர் ஹெரால்ட் ஹாஸ் என்பவர்தான் Li-fiயின் பிதாமகர். 2011-ம் ஆண்டு ஒரு கருத்தரங்கில் ஒளியால் டேட்டாவை கடத்த முடியும் என்ற தியரியை அவர்தான் முன் வைத்தார். அடுத்த ஆண்டில் இந்த தொழில்நுட்பம் பற்றி பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வந்த சிலரை ஒன்று சேர்த்து ’Pure Lifi’ என்ற குழுவை உருவாக்கினார். இவர்கள் இதுவரை Lifiல் இயங்கும் இரண்டு புராடக்டுகளை தயாரித்திருக்கிறார்கள். இன்னும் சில ஆண்டுகளில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும்.

லைஃபை சிறப்புகள்:

100 MBPSக்கே நம்ம ஊர் நெட் நொண்டியடிக்க, 10GBPS எளிதில் கடத்தி சோதனையில் வெற்றிப்பெற்றிருக்கிறது லைஃபை. வைஃபை சிக்னலை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் சுருக்க முடியாது. அதாவது நமது வீட்டைத் தாண்டி சிக்னல் போகாமல் பார்த்துக் கொள்ள லைஃபையில் வழியுண்டு என்பதால் பாதுகாப்பானது. ரேடியோ அலைகளோடு ஒப்பிடுகையில் சுற்றுசூழலுக்கு பாதுகாப்பானது. வீடுகளின் கூரைகள் மீது பொருத்தப்பட்ட சோலார் தகடுகள் பிராட்பேண்டு ரிசீவர்களாக செயல்படும் சாத்தியங்களும் இருக்கிறது. அதாவது நம் வீட்டுக்கு வரும் இணைய கேபிளுக்கும் குட்பை சொல்லிவிட்டு, அதையும் நேரிடையாக அருகில் இருக்கும் டவரில் இருந்து இணையத்தை பெற முடியும் என்கிறார்கள். வைஃபையில் ரேடியோ அலைகள் இருப்பதால் மருத்துவமனை, விமானங்கள், மற்றும் பல பாதுகாப்பான பகுதிகளில் பயன்படுத்தப்படுவதில்லை. அங்கெல்லாம் லைபை முக்கிய பங்காற்றும்.

குறைகள்:

லைஃபை என்பது வைஃபைக்கு மாற்று என சொல்ல முடியாது. ஒளி நாம் போகும் எல்லா இடங்களுக்கும் வந்துவிடாது. இதை இன்னொரு வயர்லெஸ் தொழில்நுட்பமாக மட்டுமே கருத முடியும். ஆனால், விலை குறைந்த, எந்த பாதகமும் இல்லாத எளிமையான, வேகமான தொழில்நுட்பம் என்று சொல்லலாம்.

ஆராய்ச்சிகள் வெற்றி பெற்றாலும் லைஃபை புராடக்டுகள் சந்தைக்கு வர இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். ஆனால், அது வரும்போது மிகப்பெரிய ஆச்சர்யங்கள் நமக்காக காத்திருக்கின்றன என்பது மட்டும் நிச்சயம்.

Source விகடன்