உலகில் 30 கோடிக்கும் மேற்பட்டோர் மன அழுத்த நோயால் பாதிப்பு

உலகம் முழுவதும் 30 கோடிக்கும் மேற்பட்டோர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார தினம் வரும் 7-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி ஐ.நா.சபையின் ஓர் அங்கமான உலக சுகாதார அமைப்பு மன அழுத்தம் பற்றி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

கடந்த 2005-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரையிலான காலத்தில் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 18 சதவீதத்துக்கு மேல் அதிகரித் துள்ளது. இன்றைய காலகட்டத் தில் உலகம் முழுவதும் 30 கோடிக்கும் மேற்பட்டோர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இது உலக நாடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை ஆகும். குறிப்பாக, இது தற்கொலைக்கு காரணமாக அமைகிறது. எனவே, மனநல சுகாதாரத்தை பேணிக் காப்பது பற்றி மறு ஆய்வு செய்ய வேண்டியது அவசியம்.

பொதுவாக மனநல சுகாதாரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பணக்கார நாடுகளில்கூட மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீதம் பேர் சிகிச்சை எடுத்துக்கொள்வதில்லை. மேலும் அரசுகளும் மனநல சுகாதாரத்துக்கு குறைவான நிதியே ஒதுக்குகின்றன. இந்த நிலை மாற வேண்டியது அவசியம்

stock-vector-shiny-red-ribbon-on-white-background-with-copy-space-vector-illustration-324743945

300 million people suffer from depression

More than 300 million people are living with depression, according to the latest estimates from the World Health Organisation (WHO).

The UN agency released the estimates on Thursday ahead of World Health Day.(April 7)

“These new figures are a wake-up call for all countries to re-think their approaches to mental health and to treat it with the urgency that it deserves,” Xinhua news agency quoted a WHO news release as saying.

With the number of people with depression increasing more than 18 per cent from 2005 to 2015, WHO is carrying out a year-long campaign, Depression: Let’s Talk, the focus of April 7’s World Health Day, with the aim of encouraging more people with depression to get help.

Depression is an important risk factor for suicide, which claims hundreds of thousands of lives each year, says the report.

In many countries, there is no, or very little, support available for people with mental health disorders. Even in high-income countries, nearly 50 per cent of people with depression do not get treatment. On average, just three per cent of government health budgets is invested in mental health, varying from less than one percent in low-income countries to five percent in high-income countries, says the report.

Source Hindu

பறவைகளை பார்த்தால் மன அழுத்தம் குறையும்

பறவைகளைத் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு மன அழுத்தம் குறைந்து, உற்சாகம் பிறக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. க்வீன்ஸ்லாந்து பல்கலைகழகமும் இங்கிலாந்தை சேர்ந்த எக்ஸீடர் பல்கலைக்கழகமும் டாக்டர் டேனியல் காக்ஸ் (Dr Daniel Cox), தலைமையில் இந்த ஆய்வை நடத்தின. அதில், பறவைகளைத் தொடர்ந்து பார்த்து அல்லது கவனித்து வருபவர்களுக்கு மன அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு ஆகியவை குறைவாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. எந்த பறவை என்றில்லை, எத்தனை பறவைகளை பார்கிறோமோ அந்தளவு மகிழ்ச்சி அதிகமாகும்,மன அழுத்தம் குறையும்.

இதுதவிர, வசிக்கும் வீட்டைச் சுற்றி புதர்கள், மரங்கள் ஆகியவை இருப்பதும் மனிதர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கும் எனவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. அதனால், நகரத்தில் வசிப்பவர்களை விட இயற்கையோடு இணைந்து வாழ்பவர்களே அதிக மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள் என்கிறார் காக்ஸ்.

Source Telegraph