வாயுத் தொல்லையை தீர்க்க உதவும் ‘ஏர்’ (Aire)

சிலருக்கு உட்கொள்ளும் உணவு வகைகள் ஒத்துக்கொள்ளாத போது, வயிற்று செரிமானம் பாதிக்கப்படுகிறது. இதனால் வாயுத் தொல்லை, வயிற்று வலி, மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்படலாம். ஒருவரது வயிற்றுக்கு, என்ன வகை உணவுகள் ஒத்துக்கொள்ளாதது  என்பதை கண்டுபிடிக்க உதவும் சாதனத்தை அயர்லாந்தை சேர்ந்த Food Marble என்ற கம்பெனி .’ஏர்’ (Aire) எனப்படும் கையடக்க சாதனத்தை உருவாக்கி இருக்கிறது. இந்த சாதனத்தை வாயில் வைத்து ஊதினால், மூச்சுக் காற்றில் உள்ள வேதிப் பொருட்களில், வயிற்றுக் கோளாறுக்கு காரணமானவற்றை கண்டறிந்து, அச்சாதனம் சொல்லிவிடும். இச்சாதனத்தை, ‘ஏர்’ மொபைல் செயலியுடன் இணைக்கும்போது, அது பயனாளியின் உணவுப் பழக்கம் மற்றும் ஒவ்வாமைகளை தொடர்ந்து பதிவு செய்யும்.

Aire breathalyzer app can analyse which foods cause excess gas   Daily Mail Online.png

நாம் உண்ணும் உணவில் உள்ள பிரக்டோஸ்(Fructose), லேக்டோஸ் (Lactose), சார்பிட்டால் (Sorbitol), போன்ற வேதிப் பொருட்கள் நம் வயிற்றுக்கு ஒவ்வாதபோது, அவை முழுமையாக செரிமானம் ஆவதில்லை. சிறு குடலில் செரிமானமாகாத உணவு பெருங்குடலில் உள்ள பாக்டீரியாவால் நொதித்தல் (Fermentation) என்ற வேதி வினைக்கு உட்பட நேரிடும். இந்த வினையால் ஹைட்ரஜன் (Hydrogen), மீத்தேன் ( Methane) போன்ற வாயுக்கள் வெளியேற்றப்படும். இந்த வாயுக்களைத்தான் ஏர் சாதனமும், மொபைல் செயலியும் பிரித்தறிந்து ஆலோசனைகளை வழங்குகிறது. செரிமானப் பிரச்னை உள்ளவர்களுக்கு இந்த சாதனம் ஒரு வரப்ரசாதம்.

இந்த ஏர் (Aire ) சாதனத்தின் விலை $99, இந்திய மதிப்பில் Rs 6700.ஆகஸ்ட் மாதம் 2017 ல் விற்பனைக்கு வரும்.

Source Daily Mail

Advertisements

உயிரிக்கண்கள் (பயோனிக் கண்கள்)

மரபு வழியாக உருவாகும் அபூர்வ பார்வை இழப்பு நோயான ரெடிநிடிஸ் பிக்மென்டோசாவுக்கு  (retinitis pigmentosa) இதுவரை உரிய சிகிச்சை இல்லை. தற்போது Bionic Eye எனப்படும் உயிரிக்கண் மூலம் குறைந்தபட்ச பார்வையை மீட்க முடியுமென பிரிட்டன் மருத்துவர்கள் செய்து காட்டியுள்ளனர். இதற்கான மேலதிக ஆய்வுக்கு நிதியளிக்கப்போவதாக பிரிட்டன் தேசிய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

உயிரிக்கன் செயல்படும் விதம்

பயோனிக் கண்களை இயக்கும் சாதனம் ஆர்கஸ் II (Argus® II Retinal Prosthesis System).இந்த ஆர்கஸ் II, கண்களின் விழித்திரையில் (Retina) மின் தூண்டலை (electrical stimulation) உருவாக்குகிறது. இதனால் பார்வை இழந்தவர்களுக்கு கருத்து காட்சி (visual perception) தூண்டப்படுகிறது

blind-nhs-patients-to-be-fitted-with-pioneering-bionic-eye-science-the-guardian

நோயாளியின் மூக்குகண்ணாடியில் பொருத்தப்பட்ட ஒரு மிகச் சிறிய அளவிலுள்ள வீடியோ கேமரா, காட்சிகளை பதிவு செய்யும்.பதிவு செய்யப்பட்ட காட்சிகள் நோயாளியிடம் உள்ள சிறிய கணினியில் தகவல்களாக மாற்றப்பட்டு மறுபடியும் மூக்குகண்ணாடிக்கு அனுப்பபடுகிறது. இந்த தகவல்கள் நோயாளியின் கண்களுக்குள் அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டுள்ள ஒரு சாதனத்திலுள்ள ஆண்டெனாவிற்கு செல்கிறது. பின்பு சமிக்ஞைகள் மின்அதிர்வுகளாக (electric pulses) மாற்றப்பட்டு, சேதமடைந்த ஒளிவாங்கியை (Photo receptors) புறக்கணித்து, விழித்திரையின் மீதமுள்ள செல்களை தூண்டுகிறது. பின்பு காட்சித்தகவல்கள் பார்வை நரம்பு மூலம் மூளைக்கு அனுப்பப்பட்டு காட்சிகளாக நோயாளிக்கு தெரிகிறது.

பயோனிக் கண்களால் நோயாளியால் தெளிவாக காட்சியை காண முடியாது.இருட்டும் வெளிச்சமுமாய், அசைவுமாய் தெரியும்.அதாவது முகத்தை தெளிவாக பார்க்க முடியாது, ஆனால் எதிரில் நபர் இருப்பது போவது போன்றவை தெரியும்.

‘பயோனிக் கண்’ சிகிச்சைக்கு Rs.1,25,19,194 செலவாகும்.

Source The Guardian

இரத்தத்தை சுத்திகரிக்கும் காந்தம்

இரத்தத்தில் கிருமித் தொற்று இருந்தால், அது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். ரத்தத்தில் கலந்துவிட்ட பாக்டீரியாக்களை அகற்றுவதற்கு மருத்துவர்கள் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை அளிப்பர்.

பாக்டீரியாக்களை அகற்றுவதற்கு காந்தத்தை பயன்படுத்தலாம் என, சுவிட்சர்லாந் திலுள்ள, ‘எம்ப்பா’ ஆய்வுக்கூடம் (Empa) ‘அடோல்பி மெர்க்கெல் இன்ஸ்டி டியூட் (Adolphe Merkle Institute)’ மற்றும் அமெரிக்காவின் ஹார்வர்டு மருத்துவ கல்லூரி  (Harvard Medical school) ஆகிய, மூன்று அமைப்புகளை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இரத்தத்தில் கலந்து நச்சு ஏற்படுத்தக்கூடிய பெரும்பாலான பாக்டீரியாக்களை எதிர்க்கும் பல்திறன் நோய் எதிர்பொருளை (antibody) மருத்துவர்கள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர். அந்த ஆன்டிபாடியை மிக நுண்ணிய இரும்புத்துகள்களில் பூசி, அத்துகள்களை இரத்தத்தில் கலப்பர். அதன் பிறகு நோயாளியின் உடலிலிருந்து அந்த இரத்தத்தை சுத்திகரிக்கும் காந்த டயாலிசிஸ் (Magnetic Dialysis)  இயந்திரத்தில் கொடுத்து காந்தப் புலத்திற்கு உட்படுத்துவர்.

nonfatal-attraction

இதனால் இரத்தத்தில் உள்ள இரும்புத்துகள்கள் உடனடியாக காந்த சக்தியால் ஈர்க்கப்பட்டு விடும். தனிப்படுத்தப்பட்ட துகள்களில் பூசப்பட்டுள்ள ஆன்டிபாக்டிகள், பாக்டீரியாக்களையும் கவர்ந்து வரும் என்பதால், இரத்தம் துய்மையானதாகி விடும். விலங்கு இரத்தத்தில் இந்த முறை வெற்றிகரமாக செயல்பட்டுள்ளது.

மேலும் பலவித நோய் கிருமிகளை நீக்குவதற்கும்,காந்தசுத்திகரிப்பின் போது ஆன்டிபாடி கலந்த இரும்புத்துகளை dialysis இயந்திரத்தில் இரத்தத்தில் (நோயாளியிடம் செலுத்தாமல்) செலுத்துவதற்கும் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. விரைவில் மனித இரத்தத்திலும் காந்தசுத்திகரிப்பு முறையை சோதிக்க உள்ளனர்.

Source Science Daily

மனித உடலின் புதிய உறுப்பு மிசென்ட்ரி (Mesentry)

வயிற்றுப்பகுதியின்  உள் படலமாக(abdominal lining)  இருக்கும் பெரிடோனியத்தின்   இரட்டை மடிப்பாக (Double fold of Peritoneum) மிசென்ட்ரி (Mesentry) என்ற ஒரு புதிய உறுப்பு இருப்பதை மருத்துவ விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.இது வயிற்றையும்  குடலையும் இணைக்கிறது.

இந்த அமைப்பை பற்றி முதலில் குறிப்பிட்டவர் Leonardo da Vinci. .பல நூற்றாண்டுகளாக இதை ஒரு தேவையற்ற அமைப்பாகவே கருதினர். இதை சிக்கலான  பல துண்டு பகுதிகளை உடைய அமைப்பாக எண்ணியிருந்தார்கள்.

ஆனால் 2012ஆம் ஆண்டுஅயர்லாந்தை (Ireland ) சார்ந்த விஞ்ஞானி J Calvin Coffey,  மிசென்ட்ரி ஒரு எளிமையான தொடர்ச்சியான அமைப்பு என்று கண்டுபிடித்தார். நான்கு வருடங்களாக இதற்கான ஆதாரங்களை திரட்டி ஜனவரி 2017ல் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

மிசென்ட்ரியின் குறிப்பிட்ட செயல்பாடு என்னவென்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் மிசென்ட்ரி  பற்றிய ஆராய்ச்சிகளால்  வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இந்த உறுப்பின் பங்கு என்ன என்று தெரிய வரும்.

உலகின் தலை சிறந்த மருத்துவ  நூலான Grey’s Anatomyயும் மிசென்ட்ரி பற்றிய விளக்கங்களுடன் புதுப்பிக்கப்பட்டது.

Source Time and Science Alert