எபோலாவுக்கு தடுப்பு மருந்து

deadstate-ebola-vaccine

2014ல் ஆப்பிரிக்காவில் 11000 பேரை கொன்று வேகமாக பரவிய, உலகையே அசச்சுறுத்திய எபோலா (ebola) கொள்ளை நோய் வராமல்  100 சதவிகிதம் தடுக்கக்கூடிய vaccine கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த தடுப்பு மருந்தை போன வருடம் கினியாவில் 5837 பேருக்கு கொடுத்து பரிசோதித்த பொது அவர்கள் யாரையும் எபோலா நோய் தாக்கவில்லை.ஆனால் அந்த தடுப்பு மருந்து கொடுக்காத  அந்த ஊரின் 6004 பேரில் ,23 பேருக்கு எபோலா நோய் தொற்று ஏற்பட்டது.

இந்த தடுப்பு மருந்துக்கு மருத்துவ ஒழுங்குமுறை அதிகாரத்திலிருந்து (regulatory authority)   இன்னும் அங்கீகாரம் வழங்கப்படவில்லை. ஆனால் பெருமளவு எபோலா  நோய் தொற்று  பரவினால் உடனே கொடுக்க 300000 doses தடுப்பு மருந்து  கையிருப்பு உள்ளதாக தெரிவிக்கிறார்கள்.

Source World Health Organisation

Advertisements