பிளாஸ்டிக்கை உண்ணும் மெழுகுப் புழு (Wax worm)

மெழுகுப் புழு (Wax worm) (Galleria mellonella ) என்ற ஒருவகைக் கம்பளிப்புழுவை மீன்பிடிப்பதற்குப் பயன்படுத்துவார்கள். இந்தப் புழு தேன்மெழுகை உண்ணக்கூடியது என்பதால் மெழுகுப் புழு என்ற பெயர் வந்தது. இந்தப் புழு பாலித்தீனின் வேதிப் பிணைப்புகளை எளிதில் உடைக்கக்கூடியதாக இருப்பதை அறிவியலாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

waxworms-main-1000

ஸ்பானிய தேசிய ஆராய்ச்சிக் கழகத்தைச் சேர்ந்த ஃபெதெரிக்கா பெர்தோக்கீனி (Federica Bertocchini , Institute of Biomedicine and Biotechnology of Cantabria, Spain) என்ற அறிவியலாளர் இரு ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பூச்சிகளின் விசித்திர இயல்புகளைத் தற்செயலாகக் கண்டறிந்தார்.

பெர்தோக்கீனி தேனடைகளிலிருந்து மெழுகுப்புழுக்களைக் களைந்து ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டார். கூடிய விரைவிலேயே அந்தப் புழுக்களெல்லாம் பிளாஸ்டிக்கை உண்ண ஆரம்பிக்க, பைகளில் துளைகள் விழ ஆரம்பித்தன. இதைக் கண்டதும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் சகாக்களான பாவ்லோ பாம்பெல்லியையும் கிறிஸ்டோபர் ஜே. ஹவ்வையும் (Paolo Bombelli and Christopher Howe ) தொடர்புகொண்டார்.

இந்தப் புழுக்களெல்லாம் பிளாஸ்டிக்கின் வேதிப் பிணைப்பைச் சிதைக்கின்றனவா அல்லது வெறுமனே பிளாஸ்டிக்கைச் சிறிய துணுக்குகளாக மட்டும் உடைக்கின்றனவா என்பதை ஆராய்ந்தனர். அதற்காக அந்த புழுக்களை அரைத்து பிளாஸ்டிக்கின் மேல் தடவினார்கள். அப்படிச் செய்ததன் மூலம், பூச்சிகளின் உள்ளிருக்கும் வேதிப்பொருட்களோ வேதிப்பொருள் கலவைகளோதான் பிளாஸ்டிக் சிதைப்புக்குக் காரணமாகின்றன என்பதைக் கண்டறிந்தனர்.

பிளாஸ்டிக் மூலக்கூறுகளின் மையத்தில் உள்ள கரிம அணுக்களை அந்த புதிரான ஒரு நொதியோ அல்லது பல நொதிகளோதான் உடைத்துச் சிறிய மூலக்கூறுகளாக ஆக்குகின்றன. இதற்க்கு காரணமான என்ஸைமை புழுக்கள் உற்பத்தி செய்கின்றனவா, அல்லது புழுக்களின் வயிற்றில் இருக்கும் பாக்டீரியா உற்பத்திசெய்கின்றனவா என்பது பற்றி ஆராய்ச்சி தொடர்கிறது.

1

Wax worms can cause plastic degradation

Each year, the world produces 300 million tons of plastic, much of which resists degradation and ends up polluting every corner of the globe. But a team of European scientists may have found a unique solution to the plastic problem. They discovered that a common insect can chew sizable holes in a plastic shopping bag within 40 minutes.

The discovery was led by Federica Bertocchini, a developmental biologist at the University of Cantabria in Spain. She first noticed the possibility as she cleaned out her backyard bee hives two years ago.

She removed some wax worms (Galleria mellonella) living in the hive and placed them in an old plastic bag. When she checked the bag an hour later, however, she discovered small holes in the part of the bag with the larvae. Although Bertocchini wasn’t an entomologist, she guessed immediately what was happening.

The larval form of a small moth, wax worms get their names because they live on the wax in bee hives. Like plastic, wax is a polymer, which consists of a long string of carbon atoms held together, with other atoms branching off the sides of the chain. Both wax and the polyethylene in Bertocchini’s plastic bag had a similar carbon backbone.

Bertocchini teamed up with fellow scientists Paolo Bombelli and Christopher Howe to figure out how the wax worms were pigging out on plastic.

When they placed the worms on polyethylene plastic, they found that each worm created an average of 2.2 holes per hour. Overnight, 100 wax worms degraded 92 milligrams of a plastic shopping bag. At this rate, it would take these same 100 worms nearly a month to completely break down an average, 5.5 gram plastic bag.

To rule out munching action from their jaws as the source of degradation, the team applied a soupy blend of recently deceased worms to the plastic and waited. Sure enough, they found the liquid larvae could also eat holes in plastic. This told Bertocchini and colleagues that an enzyme in the worms or the bacteria living in and on their bodies was dissolving the plastic.

That enzyme converted polyethylene into ethylene glycol, a chemical commonly used in antifreeze. Bertocchini hopes to identify the precise enzymes that break down polyethylene in future work.

Source :  Hindu and National Geographic

Advertisements

பிளாஸ்டிக் குப்பைகளை அழிக்கும் பூஞ்சை

சீன அறிவியல் அகாடமியின்,( Kunming Institute of Botany, Chinese Academy of Sciences ) குன்மிங் தாவரவியல் நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள்,  வேகமாக பிளாஸ்டிக் பொருட்களை உடைத்து அழிக்ககூடிய ஒரு பூஞ்சையை அடையாளம் கண்டறிந்து உள்ளனர். பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்நகரில் ஒரு குப்பைமுனையில் பிளாஸ்டிக்கை உண்ணும் பூஞ்சை( fungus) கண்டுபிக்கப்பட்டது.

மண்ணில் வாழும் இந்த ஆஸ்பர்ஜில்லஸ் டுபின்ஜெனசிஸ் (Aspergillus tubingensis) என்ற பூஞ்சை, பிளாஸ்டிக்கிலும் வளரக்கூடியது என்று கண்டுபிடித்தனர். பிளாஸ்டிக் மீது இந்த பூஞ்சை சுரக்கும் என்ஸைம், பிளாஸ்டிக் மூலக்கூறுகள், அல்லது பாலிமர் இடையே உள்ள ரசாயன பிணைப்பைப் பிரிக்கிறது.

மேம்பட்ட நுண்ணோக்கி உபயோகித்து ஆராய்ந்த போது, வேர் போன்ற அமைப்புடைய பூஞ்சையின் மய்சீலியா (mycelia) என்ற பகுதியின் வலிமை கொண்டும் பாலிமர் உடைபடுவதை அறிந்தனர்.

மக்காத பிளாஸ்டிக் குப்பைகளை அழித்து, சுற்றுசூழலை காப்பாற்ற உதவும் இந்த கண்டுபிடிப்பு மகத்தானதாகும்.

3

Fungus that eats plastic may help clean environment

Scientists have identified a soil fungus, which uses enzymes to rapidly break down plastic materials, an advance that could help deal with waste problem that threatens our environment.

Now, researchers from the Chinese Academy of Sciences have found an unexpected solution to the growing plastic problem in the form of a soil fungus.  The research team found their plastic-eating fungus living in an appropriate venue – a rubbish tip in Islamabad, Pakistan.

Aspergillus tubingensis is a fungus, which ordinarily lives in the soil. In laboratory trials, the researchers found that it also grows on the surface of plastics.

It secretes enzymes onto the surface of the plastic, and these break the chemical bonds between the plastic molecules, or polymers.

Using advanced microscopy and spectroscopy techniques, the team found that the fungus also uses the physical strength of its mycelia — the network of root—like filaments grown by fungi — to help break apart the polymers.

Source The Hindu