பூமியின் உள்மையப்பகுதியின் மூன்றாவது ஆதாரப் பொருள் கண்டுபிடிப்பு

பூமியின் உள்மையப்பகுதி 1,200km (745 மைல்கள்) ஆரம் கொண்ட ஒரு திட பந்து என்று கருதப்படுகிறது .பூமியின் உள்மையப்பகுதியில் இதுவரை “அறியப்படாத ஆதாரப் பொருள்” ஒன்றை அடையாளம் கண்டிருப்பதாக ஈஜி ஒக்டானி தலைமையிலான ஜப்பான் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமியின் உள்மையப்பகுதி மிகவும் ஆழத்தில் இருப்பதால், நேரடியாக இதனை ஆய்வு செய்ய முடியாது. எனவே இந்தப் பகுதிக்குள் அதிர்வலைகளை உட்புகச் செய்து அதன் மூலம் அப்பகுதி எதனால் ஆனது என்பதைப் புரிந்து கொள்ள விஞ்ஞானிகள் முயல்கின்றனர்.

பெரும்பாலும் இரும்பால் உருவாக்கப்பட்டுள்ள பூமியின் உள்மையப்பகுதி, 85 சதவீதம் இரும்பாலும், சுமார் 10 சதவீதம் நிக்கலாலும் உருவாக்கப்பட்டுள்ளது.

core-1

எஞ்சியுள்ள அந்த 5 சதவீத பொருளை பற்றிய ஆய்வு மேற்கொள்ள ஈஜி ஒக்டானியும், அவருடைய அணியினரும் இரும்பு மற்றும் நிக்கல் கலவையை உருவாக்கி, அதனை சிலிக்கானோடு சேர்த்தனர்.

பூமியின் உள்மையப்பகுதியில் நிலவுகின்ற அதே உயர் தட்பவெப்ப நிலையையும், அழுத்தங்களையும் மாதிரியாக உருவாக்கி சோதனைகள் நடத்தியதன் மூலம் இந்த ஆதாரப் பொருள் சிலிக்கானாக இருக்கலாம் என்று முடிவு செய்தனர்.

பூமியின் உள்மையப்பகுதியில் இருக்கின்ற அதிர்வலை தரவுகளோடு இந்த கலவை பொருந்தியுள்ளது.ஆனாலும், சிலிக்கான் இருப்பதை உறுதி செய்ய இன்னும் அதிக ஆய்வுகள் நடத்த வேண்டியுள்ளது. பிற ஆதாரப் பொருட்கள் இருப்பதற்கான சாத்தியக்கூற்றையும் இது தவிர்க்கவில்லை என்று பேராசியரியர் ஒக்டானி கூறுகிறார்.

ஆனால், ஆக்ஸிஜனும் பூமியின் உள்மையப்பகுதியில் இருக்கும் முக்கிய ஆதாரப் பொருளாக இருக்கலாம் என்று பிற ஆய்வாளர்களால் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

போரசிரியர் ஈஜி ஒக்டானியின் ஆய்வு முடிவுகள்படி, 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே அதிக அளவிலான சிலிக்கான் பூமியின் உள்மையப்பகுதியில் உள்ளடக்கப்பட்டிருந்தால், பூமியின் பிற பகுதிகளில் ஓரளவு அதிகமான ஆக்ஸிஜனை நிரப்பியிருக்கலாம்.

ஆனால், அதற்கு மாறாக, பூமியின் மையப்பகுதியில் ஆக்ஸிஜன் உள்ளிழுக்கப்பட்டிருந்தால், மையப்பரப்பை சுற்றியுள்ள பாறையாலான மேண்டில் என்ற பகுதிக்கு, ஆக்ஸிஜன் குறைவாகவே கிடைத்திருக்கும்.

சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற அமெரிக்க புவி இயற்பியல் ஒன்றியத்தின் கூட்டத்தில் இந்த ஆய்வை போரசிரியர் ஈஜி ஒக்டானி சமர்ப்பித்தார்.

Source BBC

மூட்டுவலிக்கு காரணம் பரிணாம வளர்ச்சி

boi

மனிதர்கள், இடுப்பு, தோள்பட்டை மற்றும் முட்டி வலியில் அதிகம் அவதிப்படுவதற்கான முக்கிய காரணத்தை ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழக (oxford University) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அவர்கள் 400 மில்லியன் காலத்திய 3௦௦ இனங்களின் (species) எலும்புகளின் முப்பரிமாண மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டனர். எலும்புகள் காலப்போக்கில் என்ன மாறுதல்களை அடைந்தன என்று ஆராய்ந்தபோது மனிதன் நேராக இரு கால்களால் நிற்க ஆரம்பித்த போது தான் எலும்புகளில் மாற்றம் ஏற்பட்டது என கண்டுபிடித்தனர். அந்த மாற்றம் தான் வலிகளுக்கு காரானமானது. அதாவது மனிதர்கள் பரிணமித்த விதம் தான் நவீன கால வாழ்க்கையில் ஏற்படும் வலிகளின் முக்கிய காரணங்களில் ஒன்று என்று அவர்கள் கூறுகின்றனர்.

நாலு காலில் நடந்த உயிர்கள் பரிணாம வளர்ச்சி அடைந்து இரண்டு காலில் நடக்க தொடங்கிய போது முழு பாரத்தையும் தாங்க தொடை எலும்பின் கழுத்து பகுதி விரிவடைய ஆரம்பித்தது. விரிவடையும் போது எலும்புகளுக்கு இடையில் செல்லும் நரம்புகளும் ரத்தநாளங்களும் குறுகி முட்டி வலி ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு மேம்பட்ட வடிவில்   மூட்டு மாற்று வடிவமைப்பதிலும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளபடுகின்றன

பிசியோதெரபி மற்றும் சரியான ஆசன நிலை (posture) மூலம் இந்த பிரச்சனை நம் சந்ததியினருக்கும் வராமல் ஓரளவு தடுக்கலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

Source BBC