ஆரஞ்சு தோல் வடிகட்டி

வீணாகும் ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை தோல்களை வைத்து, அசுத்தமான நீரை வடிகட்டவும், பயனுள்ள உலோகங்களை பிரித்தெடுக்கவும் முடியும் என, ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

உலகெங்கும் ஆண்டுதோறும் வீணாகும், 3.8 கோடி டன்கள் ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களின் தோல்களை, உயர் அழுத்த முறையில் பதப்படுத்தினால், அதற்கு நீரை வடிகட்டும் திறன் உருவாகிறது என்பதை ஸ்பெயினின் கிரனடா பல்கலைக்கழகம் (University of Granada) மற்றும் மெக்சிகோவிலுள்ள மின் வேதியியல் ஆராய்ச்சி மையம் (Center for Electrochemical Research and Technological Development) ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

wastewatercl

பதப்படுத்தப்பட்ட பழத் தோல்களை வடிகட்டிகளில் அடைத்து, அசுத்த நீரை சுத்தமாக்க பயன்படுத்துவதோடு, பல பயனுள்ள உலோகங்களையும் வடித்தெடுக்க முடிவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இவை கரி அடிப்படையிலான வடிகட்டிகளை விட அதிக பயன் தரக்கூடியவையாக இருப்பதால், பழத்தோல் வடிகட்டிகளை வர்த்தக ரீதியியிலும் தயாரித்து வினியோகிக்க முடியும் என, ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

240_F_123165150_Co0vkIAoweQttDlqOkLztQ8JlFkFeRkh

Fruit peels clean Wastewater

Researchers from the University of Granada (UGR), and from the Center for Electrochemical Research and Technological Development and the Center of Engineering and Industrial, both in Mexico, have developed a process that allows to clean waters containing heavy metals and organic compounds considered pollutants, using a new adsorbent material made from the peels of fruits such as oranges and grapefruits.

The researchers developed a new process by which it is possible to modify the structure of peels of fruits via instant controlled pressure drop treatment, giving them adsorbent properties such as a greater porosity and surface area. By using a subsequent chemical treatment, they have managed to add functional groups to the material, thus making it selective in order to remove metals and organic pollutants present in water.

A subsequent study carried out by the Researchers has showed that it is possible to pack those new materials in fixed bed columns, in a way similar to standard wastewater treatments.

The results show a great potential for the use of said materials as adsorbents capable of competing with commercial activated carbon for the adsorption and recovery of metals present in wastewater, in a way that could make it possible to carry out sustainable processes in which products with a great commercial value could be obtained from food industry residues.

Source : Dinamalar

Advertisements

கடல் நீரை குடிநீராக்கும் கிராபீன் வடிகட்டி

கடல் நீரை, எளிதில் குடிநீராக மாற்றும் புதிய வழியை கண்டுபிடித்திருக்கிறார், பிரிட்டனை சேர்ந்த மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் டாக்டர் ராகுல் நாயர் (University of Manchester, led by Dr Rahul Nair,). ‘கிராபீன்’ எனப்படும் நேனோ தொழில்நுட்பத்துறையின் விந்தைப் பொருள் வகையான கிராபீன் ஆக்சைடை வைத்து ராகுலின் ஆய்வுக் குழு உருவாக்கிய சவ்வு, கடல் நீரில் உள்ள உப்புப் படிகங்களை முற்றிலும் வடிகட்டி, குடிக்க உகந்த நீரைத் தருகிறது. ஏற்கனவே பல குடிநீர் ஆராய்ச்சியாளர்கள், பலவித சவ்வுகளை வடிகட்டிகளாக பயன்படுத்தியுள்ளனர். ஆனால், அந்த வடிகட்டிகளால் பெரிய துகள்களை நீரிலிருந்து பிரிக்க முடிந்தாலும், நுணுக்கமான உப்பு படிகங்களை வடிகட்ட முடியாமல் இருந்தது. நீர் மூலக்கூறுகளை வெளியே விடுத்து உப்பு மூலக்கூறுகளை தடுத்து நிறுத்துமளவுக்கு துளைகள் உள்ள சவ்வை உருவாக்குவது தான் பெரிய சவால். ராகுல் அணியினரின் கிராபீன் ஆக்சைடு வடிகட்டியில் உள்ள துளைகள் கூட, நீர் பட்டதும் சற்றே பெரிதாக ஆகின. இதை தடுக்க, ‘எபோக்சி’ பிசின் (epoxy resin ) படலங்களை அந்த சவ்வின் இரு புறமும் பொருத்தியதால், கிராபீன் மூலக்கூறுகள் பெரிதாவதை தடுக்க முடிந்தது என்று, ‘நேச்சர் நேனோ டெக்னாலஜி’ இதழில் எழுதிய கட்டுரையில் ராகுல் விளக்கியிருக்கிறார்.

தற்போது ஆய்வுக்கூடத்தில் வேறு பல வடிகட்டும் சவ்வுகளுடன் தங்கள் கண்டுபிடிப்பை ஒப்பிடும் சோதனைகளில் ராகுல் அணி ஈடுபட்டு வருகிறது.

4

Graphene-based sieve removes salt from seawater.

The sought-after development could aid the millions of people without ready access to clean drinking water.

The promising graphene oxide sieve could be highly efficient at filtering salts, and will now be tested against existing desalination membranes.

Reporting their results in the journal Nature Nanotechnology, scientists from the University of Manchester, led by Dr Rahul Nair, show how they solved some of the challenges by using a chemical derivative called graphene oxide.

Of the single-layer graphene he added: “To make it permeable, you need to drill small holes in the membrane. But if the hole size is larger than one nanometre, the salts go through that hole. You have to make a membrane with a very uniform less-than-one-nanometre hole size to make it useful for desalination. It is a really challenging job.”

Graphene oxide membranes have already proven their worth in sieving out small nanoparticles, organic molecules and even large salts. But until now, they couldn’t be used to filter out common salts, which require even smaller sieves.

Previous work had shown that graphene oxide membranes became slightly swollen when immersed in water, allowing smaller salts to flow through the pores along with water molecules.

Now, Dr Nair and colleagues demonstrated that placing walls made of epoxy resin (a substance used in coatings and glues) on either side of the graphene oxide membrane was sufficient to stop the expansion.

Restricting the swelling in this way also allowed the scientists to tune the properties of the membrane, letting through less or more common salt for example.

When common salts are dissolved in water, they always form a “shell” of water molecules around the salt molecules.

This allows the tiny capillaries of the graphene-oxide membranes to block the salt from flowing through along with the water.

The scientists plan to test the graphene oxide sieve against existing industrial membranes used in desalination.

Source தினமலர்