பிரக்ஸிட் 1.0 – ஐரோப்பியாவிலிருந்து பிரிந்து சென்ற பிரிட்டன்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறிய பிரெக்ஸிட் நிகழ்வு பெரும் அரசியல் குழப்பங்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கலாம். ஆனால், ஐரோப்பியக் கண்டத்திலிருந்து பிரிட்டன் முதல் முறை பிரிந்தபோது நிகழ்ந்த பேரழிவு அளவுக்கு அவை ஏற்படுத்தாது என்றே நம்பலாம்.

பிரம்மாண்டமான அருவிகளும், பிற்பாடு, பெருவெள்ளமும் பிரிட்டனை எப்படி பிரான்ஸிலிருந்து துண்டித்தன என்பதைப் புதிய ஆய்வு ஒன்று கண்டறிந்திருக்கிறது. இந்தத் துண்டிப்பின் காரணமாக பிரிட்டன் தீவுகளும் அகழி போன்ற ஆங்கிலக் கால்வாயும் உருவாயின.

“ நில அமைப்பில் தொடர்ந்து ஏற்பட்ட தற்செயலான நிகழ்வுகள் காரணமாக பிரிட்டன் ஒரு தீவானது” என்று லண்டனின் இம்பீரியல் கல்லூரியில் நில அறிவியல் பேராசிரியர் சஞ்சீவ் குப்தா கூறுகிறார் (Sanjeev Gupta, professor of earth science at Imperial College London).

3211

நீண்ட காலமாக முன்வைக்கப்பட்ட கோட்பாடுகள், ஆங்கிலக் கால்வாயின் தரைப்பகுதி குறித்து நடத்தப்பட்ட ஆய்வுகள் போன்றவற்றைத் தற்போதைய ஆய்வு கணக்கிலெடுத்துக்கொண்டது. மேலும், கடலில் டோவர் நீரிணைக்கு அடியில் உள்ள நிலப்பரப்புக்கென்று துல்லியமாக உருவாக்கப்பட்ட புதிய வரைபடத்தையும் அடிப்படையாகக் கொண்டு பிரான்ஸிலிருந்து இங்கிலாந்து எப்படிப் பிரிந்தது என்ற புதிர் அவிழ்க்கப்பட்டிருக்கிறது.

சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டன், பிரான்ஸுடன் கிட்டத்தட்ட 32 கி.மீ. நீளம் கொண்டிருந்த சுண்ணாம்புப் பாறையால் இணைக்கப்பட்டிருந்தது. அதன் ஒரு புறத்தில் பெரிய ஏரி ஒன்று இருந்தது. அந்த ஏரியில் ஏராளமான பனிப்பாறைகள் இருந்தன. தற்போதைய வடக்குக் கடல் வரைக்கும் அந்த ஏரியின் பனிப்பாளம் நீண்டிருந்தது. “மலைக்க வைக்கும் ஒரு நிலப்பரப்பாக அது இருந்திருக்கும்” என்கிறார் குப்தா. சிறு சிறு ஆறுகள் இல்லாமல் போயிருந்தால் ஆங்கிலக் கால்வாயே வறண்டுதான் காணப்பட்டிருக்கும்; அப்படி இருந்திருந்தால் சுற்றியுள்ள நிலப்பரப்பு அப்போது மிகவும் அச்சுறுத்தும் விதத்தில் இருந்திருக்கும். ஆனால், பனிப்பாளங்கள் உருக ஆரம்பித்ததாலோ வேறு ஏதோ காரணத்தாலோ அணையைப் போன்ற முகட்டுக்கு மேல் நீரோட்டம் பொங்கி வழிந்தது.

“அப்படி நீர் வழிந்து வீழ்ந்த அருவிகள் உருவாக்கிய பெரிய குழிகள் அரிப்புக்குள்ளாகி படிவுப் பாறையானதை (bedrock) கண்டறிந்தோம்” என்றார் குப்தா.

இப்படிப் படிவுகள் நிரம்பிய குழிகள் மிகவும் பெரியவை. 140 மீட்டர் ஆழமும் 4 கி.மீ. விட்டமும் கொண்ட குழிகள்கூட இருக்கின்றன. அந்த நிலப்பரப்பின் குறுக்கே வரிசையாக இந்தக் குழிகள் அமைந்திருக்கின்றன. பல ஆண்டுகளுக்கு முன்பு அவை கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. இந்தக் குழிகள் காரணமாக சுரங்க ரயில் பாதைத் திட்டத்துக்கான தடங்களை மாற்றிக்கொள்ள வேண்டிவந்தது. எனினும், இந்தக் குழிகளுக்கெல்லாம் காரணம் அருவி நீர் கொட்டியதுதான் என்பதை முதன்முறையாகத் தெளிவான உதாரணங்களுடன் இந்தப் புதிய ஆய்வு விளக்குகிறது.

தொடர்ந்து நீரால் அரிக்கப்பட்டதால் அணைபோன்ற பாறை முகட்டில் கணிசமான சிதைவு ஏற்பட்டிருக்கிறது. இதனால், அதுவரை தேக்கப்பட்டிருந்த ஏரி நீர் பாய ஆரம்பித்துப் பள்ளத்தாக்குகள் உருவாகக் காரணமாயின.

புதிய தரவுகளை ஆராய்ந்து பார்த்ததில் ஒரு பெரிய பள்ளத்தாக்கு இருப்பது தெரியவந்துள்ளது. முன்பு பாறை முகடு இருந்த இடத்திலிருந்து இன்று ஆங்கிலக் கால்வாய் இருக்கும் இடம் வரை நீளும் பள்ளத்தாக்கு அது. அருவிகள் உருவாக்கிய குழிகள், மற்ற பள்ளத்தாக்குகள் ஊடாக அந்தப் பெரிய பள்ளத்தாக்கு நீள்கிறது. ஊழிப் பெருவெள்ளம் ஒன்று ஏற்பட்டிருப்பதை, இது உறுதிசெய்கிறது என்கிறார் குப்தா. சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தப் பெருவெள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. “நீரோட்டத்தில் காணப்பட்ட மற்ற ஏரிகளிலிருந்து வந்த வெள்ளமாக அது இருக்கலாம்” என்கிறார் குப்தா. இந்தப் பெருவெள்ளத்தால் ஆங்கிலக் கால்வாயின் மையப்பகுதி சுரண்டப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இந்த இரண்டு நிகழ்வுகளும் சேர்ந்து டோவர் நீரிணையைத் திறந்துவிட்டன என்கிறார் குப்தா.

240_F_123164999_GuE1ukNnFCit0uFD2lmRkOKZ1tehtJEz

‘Brexit 1.0’ – Britain’s original separation from Europe

Brexit might be causing political,but it is unlikely to be as catastrophic as the first separation of Britain from the continent.

A new study has revealed how giant waterfalls and, later, a megaflood severed connection to France, resulting in the creation of island Britain and the watery moat of the English Channel.

“A chance series of geological events set the stage for Britain becoming an island,” said Sanjeev Gupta, professor of earth science at Imperial College London and co-author of the research.

“If it weren’t for these events, in a sense the history of Britain would have been completely different,” he added, pointing out that if the ridge had never been breached, Britain would have remained attached to northern France with easy access to the rest of Europe.

The research,draws together a number of long-held theories and previous studies of the Channel’s seafloor with new, high resolution mapping of the landscape under the sea of the strait of Dover to unravel how Britain became separated from France.

About 450,000 years ago Britain was connected to France by a long, rocky, chalk ridge, approximately 32km long, behind which was a great lake, likely dotted with icebergs, with ice stretching across what is now the North Sea. “It would have been a dramatic landscape,” said Gupta. The Channel itself would have been dry, except for small rivers, while the surrounding land would have been forbidding. “It would have been cold, grey, rocky, with very, very sparse vegetation, like Svalbard or Siberia,” he said.

But, whether as a result of melting of the ice sheet or some other reason, it seems this dam-like ridge began to overflow.

“We find these huge holes basically, depressions, eroded into the bedrock in the Dover strait, and we believe the best explanation for these is that these were giant plunge pools – basically formed by waterfalls from the lake water plunging over [the ridge],” said Gupta.

The sediment-filled holes are enormous, he added, reaching up to 140 metres in depth and up to 4km in diameter, and exist in a line running across the seafloor. But while they were first discovered decades ago, leading to a change in course for plans for the Channel tunnel, the authors say the new study is the first clear evidence that they are the remains of huge plunge pools.

Erosion of the ridge by the water, the team add, at least partially ruptured the dam-like structure, releasing pent-up lake water which possibly carved some of the valleys previously found in the centre of the Channel. But there was more to come.

Analysis of the new data has revealed details of a huge valley, etched into the seafloor, running from behind the location of the former rock ridge into the Channel, cutting across the fossil plunge pools and connecting with the valleys in the centre of the Channel. That, says Gupta, suggests it was formed by catastrophic flooding, possibly sometime about 160,000 years ago, during another glacial period. “We think this is actually coming from lakes further upstream,” he said, adding that the megaflood probably also gouged the centre of the Channel.

Together, said Gupta, the two stages completely opened up the Dover strait, although Britain probably only fully became an island about 125,000 years ago, after sea level rises linked to a warmer climate. “You could say it was a violent beginning to Brexit 1.0,” he said

Source Guardian and hindu

Advertisements

சூரிய சாலை ( Solar Road)

 

Inauguration Of The First Solar Road in France - Tourouvre Au Perche, Orne

உலகின் முதல் சூரிய சாலை ( Solar Road) டிசம்பர் 2016ல் வட பிரான்ஸின் Normandy நகரின் ஒரு கிராமத்தில் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு  ஒரு  வழி பாதை பகுதிக்கு ( single  lane ) போடப்பட்டது.

5 மில்லியன் யூரோ செலவில்  2800 சதுர மீட்டருக்கு சூரிய தகடுகள் (Solar panel) சாலையில் பதிக்கப்பட்டது. கனரக வாகனங்களையும் (trucks) கடும் போக்குவரத்தையும் தாங்குமளவு வலிமையாக்க சிலிக்கான் தாளை கொண்ட resin சூரிய தகடுகள் மேல் பூசப்பட்டது. இதன் மூலம் அந்த கிராமத்தின் தெரு விளக்குகளுக்கு தேவையான மின்சாரம் கிடைக்கும். பிரெஞ்சு அரசாங்கம்  இன்னும் 5 ஆண்டுகளில் 1000 kms  சாலைகளை சூரிய சாலைகளாக மாற்ற இலக்கு வைத்திருக்கிறது.

Source Newsweek