மாடுகளுக்கு மரபணு திருத்தம்

உலகெங்கும் வெளியேற்றப்படும் மொத்த, ‘பசுமைக் குடில்’ வாயுக்களில், 9.5 சதவீதம் மாடுகள் மூலமே காற்று வெளியில் கலக்கின்றன. இதை குறைக்க, மாடுகளின் ஆராய்ச்சியாளர்கள் வயிற்றில் உள்ள  பாக்டீரியாக்களை மரபணு மாற்றம் செய்யும் முயற்சியில் இறங்கி இருக்கின்றனர்.

ஆனால் கனடா அரசு, மாடுகளையே மாற்ற ‘மாடுகள் மரபணு திட்டத்தை’ (Genome Canada project) துவங்கியிருக்கிறது. உலகெங்கும் மாட்டு இனங்களில், சில மாடுகள் பசுமைக் குடில் வாயுக்களை குறைவாக வெளியேற்றுகின்றன என்கின்றனர். அப்படிப்பட்ட மாடுகளின் மரபணு ரகசியத்தை அறிந்து, அந்த மரபணு தன்மைகளை தங்கள் நாட்டு மாடுகளுக்கும் கொண்டு வருவதுதான் கனடாவின் திட்டம். இதற்கென, கனடாவின் தனியார் மாட்டுப் பண்ணைகளிலுள்ள 10ஆயிரம் மாடுகளுக்கு மரபணு திருத்தம் செய்யும் திட்டத்தை கனடா அரசு துவங்கியிருக்கிறது.

balls

Genome Canada project

Bovine livestock are responsible for about 9.5 percent of global greenhouse gas output, according to the Food and Agriculture Organization of the United Nations.  Some scientists at Pennsylvania State University are even genetically modifying the bacteria in cow guts.

But scientists are also tweaking the cows themselves. The Genome Canada project … harnesses labs in the US, UK, Denmark, Australia, and Switzerland to help identify cows that produce fewer greenhouse gases, with the ultimate goal of distributing the responsible genes—conveniently transported in the form of bull semen—to areas that don’t have the resources to develop their own greener cows.

Source Dinamalar and Genetic Literacy Project

Advertisements

சீப்பு ஜெல்லி – உலகில் முதலில் தோன்றிய விலங்கினம்

ஒரு வகை ஜெல்லி தான் உலகில் முதன்முதலில் தோன்றிய விலங்கு வகை ஊயிரினம். அதாவது நமக்கு மூதாதையர் ஒரு ஜெல்லி.

சுமார் நூறு ஆண்டுகளாக மிக ஆரம்ப நிலை உயிரினமான ஸ்பான்ஜ் தான் விலங்கினத்தில் முதலில் தோன்றியது என்று நம்பப்பட்டு வந்தது. அனால் அமெரிக்க பல்கலை கழகத்தின் விஞ்ஞானிகளால் (Vanderbilt and Wisconsin-Madison universities ) சமீபத்தில் நடத்தப்பட்ட மரபியல் ஆய்வில், சீப்பு ஜெல்லி என்ற உயிரினம் தான் தொன்மையான விலங்கினம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2008ம் ஆண்டிலேயே இந்த வாதம் முன் வைக்கப்பட்டது. அப்போது அது பெரிய  சர்ச்சையை விஞ்ஞானிகளுக்குள்ஏற்படுத்தியது. ஆனால் இப்போது அது மரபியல் ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

பல்வேறு உயிரினங்களின் மரபணு தொடர்களை ஆராய்ந்து அவை எந்த உயிரினத்தின் மரபணு தொடரை ஒத்திருக்கிறது என்று கண்டுபிடித்து இறுதியில் சீப்பு ஜெல்லி தான் முதல் விலங்கினம் என்று தெரிய வந்ததாக ஆராய்ச்சியை மேற்கொண்ட  பேராசிரியர்  அந்தோனிஸ் ரோகாஸ் (Professor Antonis Rokas) தெரிவிக்கிறார்.

1

A jelly is the ultimate ancestor of all animal life

The earliest form of animal life on Earth was a jelly, according to a new genetic analysis which claims to have overturned one aspect of the theory of evolution.

For nearly a century, it has been thought our ultimate ancestor was a sponge because it is such a simple kind of life.

In 2008, one study suggested comb jellies – or ctenophores – should be accorded this title, but this sparked a major controversy with supporters of the sponge origin theory hitting back.

The researchers, from Vanderbilt and Wisconsin-Madison universities, said that previously scientists trying to work out the relationships between different animals had collected large amounts of genetic data then built a plausible family tree.

Professor Antonis Rokas, of Vanderbilt, said: “This has worked extremely well in 95 per cent of the cases, but it has led to apparently irreconcilable differences in the remaining five per cent.”

“The trick is to examine the gene sequences from different organisms to figure out who they identify as their closest relatives,” Professor Rokas said.

“When you look at a particular gene in an organism, let’s call it A, we ask if it is most closely related to its counterpart in organism B? Or to its counterpart in organism C? And by how much?”

This still involved examining hundreds or thousands of genes.

The results of this analysis found a so-called “phylogenetic signal” that favoured comb jellies over sponges with considerably more genes supporting the former’s claim to be the original animal.

Source: Independent

உயிர்த்தெழும் மேமோத் (Mammoth)

அடர்த்தியான ரோமங்களை உடைய மேமோத் எனப்படும் யானை வகை விலங்கு பூமியிலிருந்து அழிந்து 4௦௦௦ ஆண்டுகள் கடந்துவிட்டன. அனால் ஹார்வர்ட் பல்கலைகழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் மரபணு பொறியியல் ( Genetic Engineering) மூலம் மேமோத்தை மீண்டும் பூமிக்கு கொண்டு வரும் மகத்தான முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

ப்ரோபசர் ( Professor  George Church) ஜார்ஜ் சர்ச்  தலைமையிலான இந்த குழு, இன்னும் இரண்டு ஆண்டுகளில் மேமொபேன்ட்  ( mammophant) என்று பெயரிடப்பட்டுள்ள யானை மற்றும் மேமோத்தின் கலப்பின கருவை (Hybrid embryo) உருவாக்குவோம் என்று உறுதியளித்துள்ளனர். இது ஆசிய யானையின் வடிவில் இருக்கும் .அனால் மேமோத்தின் சிறப்பம்சங்களான சிறிய காது, தோலுக்கு அடியில் கொழுப்பு, நீண்ட கரடு முரடான ரோமங்கள் மற்றும் குளிர் பிரதேச இரத்தம் (cold-adapted blood) முதலியவை கொண்டிருக்கும்.

பல நூற்றாண்டுகளாக சைபீரியா பனிக்கட்டியில் உறைந்து கிடந்த மேமோத் பாகங்களிருந்து கிடைக்கபெற்ற டி.ஏன்.ஏவை கொண்டு மரபணு எடிட்டிங் நுட்பங்கள் ( Gene editing Technique) மூலம் மேமொபேன்ட் செல்கள் உருவாக்கி இருக்கின்றனர். க்ளோனிங் நுட்பங்கள் மூலம் இரண்டு வருடங்களில்  கருவை உருவாக்கி, (யானையின் கருவறையில் வைக்காமல்) செயற்கை கருவறையில் வைத்து மேமொபேன்ட்டை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். செயற்கை கருவறையில் உருவாகுவதால்,பிறப்பிற்கு முன் தாயுடன் உள்ள தொடர்பு இருக்காது.

மேமொபேன்டால் கீழ்கண்ட இரண்டு நன்மைகள் ஏற்படும் என்று ஜார்ஜ் சர்ச் தெரிவித்தார்.

ஓன்று — அழிவின் விளிம்பில் இருக்கும் ஆசிய யானைகளுக்கு மாற்று எதிர்காலம் கிடைக்கும்.

இரண்டு — உலக வெப்பமயமாதல் குறைக்கப்படும். பனிப்பிரதேசத்தில் நிரந்தர பனிக்கட்டிகள் உருகுவதை குறைக்கும்.

Source The Guardian