ஹஷ்மி மாஸ்க் ( Hushme Mask)

ஏராளமானவர்கள் அமர்ந்திருக்கும் அலுவலகத்தில் அலைபேசியில் பேசுவது பேசுபவர்களுக்கும் அருகில் இருப்பவர்களுக்கும் சங்கடமான விஷயம். இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக ஹஷ்மி மாஸ்க் (Hushme mask) உருவாக்கப்பட்டிருக்கிறது. மாஸ்க் என்றாலும் இது முகத்தை மூடாது, வாயை மட்டும் மூடும். இதை மாட்டிக்கொண்டு உரையாடினால் அருகில் இருப்பவர்களுக்குக் கூட சிறிதும் கேட்காது. எந்தவிதத் தயக்கமும் இன்றி உரையாடலாம். போனிலிருந்து ப்ளூடூத் மூலம் காதுகளுக்கு குரல் கடத்தப்படுகிறது. பல்வேறு நிறங்களில் இந்த ஹஷ்மி மாஸ்க் கிடைக்கிறது. காற்று, அலை, சாரல், பறவைகளின் கூக்குரல் போன்ற பல்வேறு மெல்லிய ஒலிகளோடு உங்கள் குரலும் பயணிக்கும். எதிராளிக்கு சுவாரசியத்தை அளிக்கும். மொபைல் போன் குரலுக்கான உலகின் முதல்  முகமூடி’ இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்கு வருகிறது. விலை 13 ஆயிரம் ரூபாய்

balls

Hushme muzzle keeps phone calls private

Privacy-conscious consumers could soon be able to protect their conversations from strangers using a wearable gadget that clips over their mouth.

Hushme, which describes itself as the “world’s first voice mask for mobile phones”, is a rather extreme solution to an everyday problem.

The Bluetooth-connected device is worn around the face and neck, with the large, padded mouthpiece designed to muffle your voice to prevent people around you from hearing you clearly, in a train carriage or a cafe, for instance.

Hushme, however, goes even further by allowing you to completely drown out your speech with a selection of noises played through its inbuilt speakers.

The sound options include wind, ocean, rain, birds, monkey, squirrel, R2D2, Minion and Darth Vader.

Hushme plans to crowdfund the device in May and start commercial production before the end of the year.

It will cost around $200.

Source Hindu

பறவைகளை பார்த்தால் மன அழுத்தம் குறையும்

பறவைகளைத் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு மன அழுத்தம் குறைந்து, உற்சாகம் பிறக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. க்வீன்ஸ்லாந்து பல்கலைகழகமும் இங்கிலாந்தை சேர்ந்த எக்ஸீடர் பல்கலைக்கழகமும் டாக்டர் டேனியல் காக்ஸ் (Dr Daniel Cox), தலைமையில் இந்த ஆய்வை நடத்தின. அதில், பறவைகளைத் தொடர்ந்து பார்த்து அல்லது கவனித்து வருபவர்களுக்கு மன அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு ஆகியவை குறைவாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. எந்த பறவை என்றில்லை, எத்தனை பறவைகளை பார்கிறோமோ அந்தளவு மகிழ்ச்சி அதிகமாகும்,மன அழுத்தம் குறையும்.

இதுதவிர, வசிக்கும் வீட்டைச் சுற்றி புதர்கள், மரங்கள் ஆகியவை இருப்பதும் மனிதர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கும் எனவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. அதனால், நகரத்தில் வசிப்பவர்களை விட இயற்கையோடு இணைந்து வாழ்பவர்களே அதிக மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள் என்கிறார் காக்ஸ்.

Source Telegraph