பூச்சியை விரட்டும் தேங்காய் எண்ணெய்

 கண்டுபிடிப்பு: பூச்சியை விரட்டும் தேங்காய் எண்ணெய்

ஆராயச்சியாளர்கள்: அமெரிக்க வேளாண் துறை

விவரம்: நேரடியாக தேங்காய் எண்ணையை பூச்சி விரட்டியாக பயன்படுத்த முடியாது. மாறாக, அதன் கொழுப்புக் கலவையில் உள்ள, லாரிக் அமிலம், கேப்ரிக் அமிலம், கேப்ரிலிக் அமிலம் போன்றவற்றை பயன்படுத்தினால், அவை சிறந்த பூச்சி விரட்டியாக பயன்படும்.

சொல்லப்போனால், டீட்( DEET (N,N-Diethyl-meta-toluamide ) மருந்தைவிட இந்த அமிலங்களால் ஆன மருந்தை பூசிக்கொண்டால், கொசு முதல் மூட்டைப் பூச்சி வரை ரத்தத்தை உறிஞ்சும் பலவகை பூச்சிகள் நான்கு நாட்கள் வரை நம்மை அண்டாது .

⊗⊗⊗⊗⊗⊗⊗⊗⊗⊗⊗⊗⊗⊗⊗⊗⊗⊗⊗⊗⊗⊗⊗⊗⊗⊗⊗⊗⊗⊗⊗⊗⊗⊗⊗⊗⊗⊗⊗⊗⊗⊗

Coconut oil compounds repel insects better than DEET 

Invention : Compounds derived from coconut oil are more effective at repelling insects than chemicals.

Researchers: US Department of Agriculture ; Lead researcher Junwei Zhu .

Description: Fatty acids derived from coconut oil had long-lasting insect-repelling properties against a number of insects including flies, ticks, bed bugs and mosquitos.

Coconut oil itself is not a repellent. However, the coconut oil-derived free fatty acid mixture—lauric acid, capric acid and caprylic acid as well as their corresponding methyl esters—provides strong repellency against blood-sucking insects. By encapsulating coconut fatty acids into a starch-based formula, field trials showed this all-natural formula could provide protection to cattle against stable flies .

The coconut oil compounds out-performed DEET (N,N-Diethyl-meta-toluamide ) with an effective rate greater than 95 per cent, repelling bed bugs and ticks for two weeks, compared to DEET’s three days of effectiveness.  However, the concentration of coconut oil compounds required to effectively repel mosquitoes is far greater.

Source : Dinamalar and Independent

சிலந்திகள் உட்கொள்ளும் 80 கோடி டன் இரை

உலகில் சுமார் 45,000 க்கும் மேற்பட்ட சிலந்தி இனங்கள் இருக்கின்றன. அவற்றின் மொத்த எடை 2.5 கோடி டன். இவை யாவும் ஆண்டுக்கு 40 முதல் 80 கோடி டன் இரையை உட்கொள்ளுகின்றன என்று சுவிட்சர்லாந்த் மற்றும் சுவீடன் நாடு விலங்கியல் நிபுணர்கள் (Swiss and Swedish zoologists) கணக்கிட்டுள்ளனர். இது மனிதன் உட்கொள்ளும் மாமிசத்தின் அளவான 40 கோடி டன்னையும், திமிங்கலங்கள் உட்கொள்ளும் 28-50 கோடி டன் மாமிசத்தையும் விட அதிகமானவை.

JS123325878_PA_Spider-study-large_trans_NvBQzQNjv4BqPSGJeyftEP9WNF5nKPELKTBv_wsYjpRNHK7QRO4zXNA

சிலந்திகள் பெரும்பாலும் பூச்சிகளை தான் இரையாக கொள்கின்றன. ஆனால் சில பெரிய வகை வெப்பமண்டல சிலந்திகள் தவளை, பல்லி, மீன் மற்றும் சிறிய பாலூட்டிகளையும் தன உணவாக்கி கொள்கின்றன. சிலந்திகள் இவ்வாறு அகோர பசியுடன் பூச்சிகளை வேட்டையாடுவதால் பூச்சிகள் இனம் பல்கி பெருகாமல் கட்டுக்குள் இருக்கிறது. இதனால் இயற்கையின் சுற்றுச்சூழல் சமநிலை பராமரிக்கபடுகிறது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

Spiders outdo humans and whales as they eat 800 million TONS of prey every year

There are more than 45,000 species of spider living in all parts of the world with a collective weight of about 25 million tons.  Together they kill between 400 million and 800 million tons of prey annually, a team of Swiss and Swedish zoologists has calculated. In comparison, all the humans on Earth consume about 400 million tons of meat and fish each year and whales consume 280 million to 500 million tons of prey a year.

Most of their victims are insects but the largest tropical species occasionally make a meal of vertebrates such as frogs, lizards, fish and small mammals, said experts. These small voracious predators are crucial in maintaining ecological balance, as they’re responsible for killing astronomical numbers of insects worldwide .

Source Telegraph