ஓரிகாமி ரோபோ

அமெரிக்காவின் நாசா, விண்வெளி ஆராய்ச்சிக்காக ஜப்பானின் ஓரிகாமி கலையை அடிப்படையாகக் கொண்ட புதிய வகையில் உருமாறும் ரோபோவை வடிவமைத்துள்ளது. சக்கரங்கள் மூலம் நகரும் இந்த ரோபோ, தொடர்ந்து செல்வதற்கு தடை இருந்தால் இடத்துக்கு ஏற்ப பல வகைகளிலும் மடங்கி, சுழன்று செல்கிறது. இதன் மூலம் சோதனைக்கு அனுப்பும் கிரகத்தில் தானியங்கி முறையில் இயங்கும்போது, மேடு பள்ளங்களில் தடைபடாமல் உருமாறி பயணிக்கும்

red ribbon with bow with tails

NASA’s origami-inspired robot

Engineers at NASA’s Jet Propulsion Laboratory in Pasadena, California are developing a small scout robot called the Pop-Up Flat Folding Explorer Robot (PUFFER) to accompany the next generation of Martian rovers in their outer space explorations.

Inspired by origami, the Japanese art of paper folding, PUFFER is designed to change shape in order to squeeze into small crevasses that are too tight for rovers to reach. So far the two-wheeled scout has been successfully tested in hostile and diverse terrains including the Mojave Desert and Antartica.

Though rovers themselves are built to last, they’re expensive and NASA engineers take care not to send them on overtly dangerous missions. A handful of PUFFERs are comparatively cheap and can be deployed in high-risk regions.

NASA also plans to scale it up slightly to the size of a breadbox in order to make it a bit more durable.

Source Hindu

Advertisements

பிராக்ஸிமா பி (Proxima-B)

நம் சூரியன் அருகில் இருக்கும் நட்சத்திரம் ப்ராக்சிமா சென்டாரி (Proxima Centauri). அதன் அருகில் இருக்கும் மற்றொரு பிரகாசமான இரட்டை நட்சத்திரங்களான ஆல்பா சென்டாரி AB ( Alpha Centauri AB), ப்ராக்சிமாவின் ஒளியை மங்க செய்வதால், அதை நாம் வெறுங்கண்ணால் பார்க்க முடியாது. இந்த நட்சத்திரத்தை அராய்ச்சி செய்யும் திட்டத்திற்கு பேல் ரெட் டாட் (Pale red dot) என்று பெயர். லண்டனின் குயின் மேரி  பல்கலைக்கழகத்தைச் (Queen Mary University of London) சேர்ந்த வானியலாளர் கில்லம் அங்லாடா எஸ்க்யூட்(Guillem Anglada-Escudé) தலைமையிலான வானவியலாளர்கள் ஆகஸ்ட் மாதம் 2016 ஆண்டு, பிராக்ஸிமா பி (ProximaB) என்ற கோள் ஓன்று இந்த நட்சத்திரத்தை சுற்றி வருவதை ESO தொலை நோக்கி (ESO telescope) மூலம் கண்டுபிடித்து அதை பற்றிய விரிவான அறிக்கையை வெளியிட்டனர்.

  1. பிராக்ஸிமா பி பூமியிலிருந்து 25 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள பிராக்ஸிமா சென்டாரி எனும் நட்சத்திர மண்டலத்தில் அமைந்துள்ளது
  2. பூமியைவிட 3 மடங்கு பெரியதாக உள்ள பிராக்ஸிமா, பாறைக் கோளமாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.
  3. தன் நட்சத்திரத்திலிருந்து 75 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான தொலைவில் இது 5 சதவிகிதத்திற்கும் குறைவானதாகும். முழுமையாக சுற்றி முடிக்க 2 நாட்களை எடுத்துக்கொள்கிறது. அதாவது இந்த கோளில் ஒரு ஆண்டு என்பது 11.2 நாட்கள்.
  4. தன் நட்சத்திலிருந்து பல லட்சம் ஆண்டுகள் தள்ளியிருப்பதால் பிராக்ஸிமா குளுமையாக இருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
  5. கோளின் வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸிலிருந்து -40 டிகிரி செல்சியஸ் வரை இருப்பதால், திரவநிலையில் நீர் இருப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன என்கிறார்கள். அதனால் அங்கு உயிர்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறு உள்ளது

நம் சூரிய குடும்பத்திலிருந்து அல்லாமல் பிற நட்சத்திர மண்டலத்தில் அமைந்துள்ள கோள்களை எக்சோபிளானெட் (Exo Planet) என்று சொல்வார்கள். பிராக்ஸிமா பி தான், இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட எக்சோபிளானெட்களில் பூமிக்கு அருகில் இருப்பது.

Source ESO.org and Space

பசுமை டயர்கள்

வாகனங்களுக்கான  டயர்கள், படிம எரிபொருட்ளான (fossil fuels) பெட்ரோலிய பொருட்கள் கொண்டு உருவாக்கப்படுவதால் சூழ்நிலைக்கு ஒவ்வாததாக கருதப்படுகிறது இப்பொருட்களுக்கு மாற்றாக, மரம், புல் போன்ற புதுப்பிக்கத்தக்க இயற்கை பொருட்களிலிருந்து டயரை தயாரிக்க முடியும் என, விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.

டயரின் முக்கியமான மூலக்கூறு ஐய்சோப்ரீன் (isoprene). அமெரிக்காவிலுள்ள மின்னசோட்டா பல்கலைக்கழக (University of Minnesota) விஞ்ஞானிகள், அண்மையில் தாவரங்களிலிருந்து  ஐசோப்ரீனை (isoprene) பிரித்தெடுத்து ரப்பரை தயாரித்துள்ளனர்.

14-researchersi

இதற்கான மூன்று படி செயல்முறை

  1. முதலில் தாவரங்களில் உள்ள குளுக்கோஸ் போன்ற சர்க்கரை பொருட்களை, நுண்ணுயிரிகளைக் (microbes) கொண்டு, நொதித்தல் முறையில்  (Biological Fermentation) இடகோனிக் அமிலமாக (itaconic acid) மாற்றினர்.
  2. பின்னர் அதனுடன் ஹைட்ரஜன் (Hydrogen) வாயு செலுத்தி மீத்தைல் டெட்ரா ஹைட்ரோ ஃபுரான் (Methyl-Tetra Hydro Furan)ஆக மாற்றினர் .
  • பின் அதிலிருந்து நீரை வெளியேற்றி (Dehydrate) ஐசோப்ரீனை உருவாக்கி உள்ளனர்.

இந்த கண்டுபிடிப்பு வாகனங்களுக்கான  டயர்கள் மட்டுமல்லாது, மேம்பட்ட உயர்தர ரப்பர் சார்ந்த பொருட்களின் உற்பத்தியிலும் தாக்கத்தை  ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்

Source Phys.Org

வாயுத் தொல்லையை தீர்க்க உதவும் ‘ஏர்’ (Aire)

சிலருக்கு உட்கொள்ளும் உணவு வகைகள் ஒத்துக்கொள்ளாத போது, வயிற்று செரிமானம் பாதிக்கப்படுகிறது. இதனால் வாயுத் தொல்லை, வயிற்று வலி, மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்படலாம். ஒருவரது வயிற்றுக்கு, என்ன வகை உணவுகள் ஒத்துக்கொள்ளாதது  என்பதை கண்டுபிடிக்க உதவும் சாதனத்தை அயர்லாந்தை சேர்ந்த Food Marble என்ற கம்பெனி .’ஏர்’ (Aire) எனப்படும் கையடக்க சாதனத்தை உருவாக்கி இருக்கிறது. இந்த சாதனத்தை வாயில் வைத்து ஊதினால், மூச்சுக் காற்றில் உள்ள வேதிப் பொருட்களில், வயிற்றுக் கோளாறுக்கு காரணமானவற்றை கண்டறிந்து, அச்சாதனம் சொல்லிவிடும். இச்சாதனத்தை, ‘ஏர்’ மொபைல் செயலியுடன் இணைக்கும்போது, அது பயனாளியின் உணவுப் பழக்கம் மற்றும் ஒவ்வாமைகளை தொடர்ந்து பதிவு செய்யும்.

Aire breathalyzer app can analyse which foods cause excess gas   Daily Mail Online.png

நாம் உண்ணும் உணவில் உள்ள பிரக்டோஸ்(Fructose), லேக்டோஸ் (Lactose), சார்பிட்டால் (Sorbitol), போன்ற வேதிப் பொருட்கள் நம் வயிற்றுக்கு ஒவ்வாதபோது, அவை முழுமையாக செரிமானம் ஆவதில்லை. சிறு குடலில் செரிமானமாகாத உணவு பெருங்குடலில் உள்ள பாக்டீரியாவால் நொதித்தல் (Fermentation) என்ற வேதி வினைக்கு உட்பட நேரிடும். இந்த வினையால் ஹைட்ரஜன் (Hydrogen), மீத்தேன் ( Methane) போன்ற வாயுக்கள் வெளியேற்றப்படும். இந்த வாயுக்களைத்தான் ஏர் சாதனமும், மொபைல் செயலியும் பிரித்தறிந்து ஆலோசனைகளை வழங்குகிறது. செரிமானப் பிரச்னை உள்ளவர்களுக்கு இந்த சாதனம் ஒரு வரப்ரசாதம்.

இந்த ஏர் (Aire ) சாதனத்தின் விலை $99, இந்திய மதிப்பில் Rs 6700.ஆகஸ்ட் மாதம் 2017 ல் விற்பனைக்கு வரும்.

Source Daily Mail

நாய் அதன் உரிமையாளரின் குணநலனை பிரதிபலிக்கிறது

ஆஸ்திரியாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், நாய்கள் அதன் உரிமையாளரின் சோகம்,பதட்டம் மற்றும் எதிர்மறை உணர்வுகளை பிரதிபலிப்பதாக கண்டுபிடித்துள்ளனர். அதே போல் நாய்களின் உற்சாகம் மற்றும் நட்புத்தன்மை அதன் உரிமையாளருக்கும் தொற்றிக்கொண்டு மன அழுத்தத்தை விடுவிக்கும் என்கின்றனர்.

ஆராய்ச்சியாளர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட நாய்களையும் அதன் உரிமையாளர்களையும் பல்வேறு விதமான சோதனைகளுக்கு உட்படுத்தினர். உதாரணமாக, எச்சில் பரிசோதனை மூலம் அவற்றின் மன அழுத்தத்தையும், அச்சுறுத்தலின் போது அதன் இதய துடிப்பையும்  ஆராய்ந்தனர்.

ஆராய்ச்சியின் முடிவில் நாய் மற்றும் அதன் உரிமையாளர் இருவருமே ஒருவரிடமிருந்து மற்றவர் உணர்வுகளையும் குனநலனையும் பெற்றனர்/பிரதிபலித்தனர், ஆனாலும் நாய் அதிகமாக அதன் உரிமையாளரின் குணநலனை பிரதிபலித்தது என்று கண்டறிந்தனர்.நாய் உரிமையாளரின் உணர்வுகளையும் குனநலனையும் உள்வாங்கிக்கொண்டு அதற்கு ஏற்றார் போல் நடந்துகொள்கிறது.

இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.ஏனென்றால் நாய்கள் 30,000 ஆண்டுகளுக்கும் மேலாக மனிதர்களுடன் இணைந்து வாழ்ந்து வருகின்றன.

Source BBC

பூமியின் உள்மையப்பகுதியின் மூன்றாவது ஆதாரப் பொருள் கண்டுபிடிப்பு

பூமியின் உள்மையப்பகுதி 1,200km (745 மைல்கள்) ஆரம் கொண்ட ஒரு திட பந்து என்று கருதப்படுகிறது .பூமியின் உள்மையப்பகுதியில் இதுவரை “அறியப்படாத ஆதாரப் பொருள்” ஒன்றை அடையாளம் கண்டிருப்பதாக ஈஜி ஒக்டானி தலைமையிலான ஜப்பான் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமியின் உள்மையப்பகுதி மிகவும் ஆழத்தில் இருப்பதால், நேரடியாக இதனை ஆய்வு செய்ய முடியாது. எனவே இந்தப் பகுதிக்குள் அதிர்வலைகளை உட்புகச் செய்து அதன் மூலம் அப்பகுதி எதனால் ஆனது என்பதைப் புரிந்து கொள்ள விஞ்ஞானிகள் முயல்கின்றனர்.

பெரும்பாலும் இரும்பால் உருவாக்கப்பட்டுள்ள பூமியின் உள்மையப்பகுதி, 85 சதவீதம் இரும்பாலும், சுமார் 10 சதவீதம் நிக்கலாலும் உருவாக்கப்பட்டுள்ளது.

core-1

எஞ்சியுள்ள அந்த 5 சதவீத பொருளை பற்றிய ஆய்வு மேற்கொள்ள ஈஜி ஒக்டானியும், அவருடைய அணியினரும் இரும்பு மற்றும் நிக்கல் கலவையை உருவாக்கி, அதனை சிலிக்கானோடு சேர்த்தனர்.

பூமியின் உள்மையப்பகுதியில் நிலவுகின்ற அதே உயர் தட்பவெப்ப நிலையையும், அழுத்தங்களையும் மாதிரியாக உருவாக்கி சோதனைகள் நடத்தியதன் மூலம் இந்த ஆதாரப் பொருள் சிலிக்கானாக இருக்கலாம் என்று முடிவு செய்தனர்.

பூமியின் உள்மையப்பகுதியில் இருக்கின்ற அதிர்வலை தரவுகளோடு இந்த கலவை பொருந்தியுள்ளது.ஆனாலும், சிலிக்கான் இருப்பதை உறுதி செய்ய இன்னும் அதிக ஆய்வுகள் நடத்த வேண்டியுள்ளது. பிற ஆதாரப் பொருட்கள் இருப்பதற்கான சாத்தியக்கூற்றையும் இது தவிர்க்கவில்லை என்று பேராசியரியர் ஒக்டானி கூறுகிறார்.

ஆனால், ஆக்ஸிஜனும் பூமியின் உள்மையப்பகுதியில் இருக்கும் முக்கிய ஆதாரப் பொருளாக இருக்கலாம் என்று பிற ஆய்வாளர்களால் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

போரசிரியர் ஈஜி ஒக்டானியின் ஆய்வு முடிவுகள்படி, 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே அதிக அளவிலான சிலிக்கான் பூமியின் உள்மையப்பகுதியில் உள்ளடக்கப்பட்டிருந்தால், பூமியின் பிற பகுதிகளில் ஓரளவு அதிகமான ஆக்ஸிஜனை நிரப்பியிருக்கலாம்.

ஆனால், அதற்கு மாறாக, பூமியின் மையப்பகுதியில் ஆக்ஸிஜன் உள்ளிழுக்கப்பட்டிருந்தால், மையப்பரப்பை சுற்றியுள்ள பாறையாலான மேண்டில் என்ற பகுதிக்கு, ஆக்ஸிஜன் குறைவாகவே கிடைத்திருக்கும்.

சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற அமெரிக்க புவி இயற்பியல் ஒன்றியத்தின் கூட்டத்தில் இந்த ஆய்வை போரசிரியர் ஈஜி ஒக்டானி சமர்ப்பித்தார்.

Source BBC

அழிவை நோக்கி ஆஸ்திரேலியாவின் பவழப்பாறைகள்

cora

உலகின் மிகவும் அற்புதமான இயற்கை அதிசயங்களில் ஆஸ்திரேலியாவின் கிரேட் பாரியர் ரீஃபும் ( Great Barrier Reef) ஒன்று.  இது சுமார் 300000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 3000 க்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை உடையது. கடலுக்கு அடியில் பல வண்ணங்களில் கண்ணை கவரும் வண்ணம் காட்சியளிக்கும் பவளப்பாறைகள் பிரபல சுற்றுலா ஸ்தலமாகத் திகழ்கிறது.

ஐநா கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பின் (UNESCO) உலக பாரம்பரிய சொத்து  (world heritage site ) பட்டியலில் கிரேட்  பாரியர்  ரீஃப்  இடம்பெற்றுள்ளது.

ஆனால் மே 2016ல் அங்கு ஆராய்ச்சிகள் மேற்கொண்ட  விஞ்ஞானிகள் 93  சதவிகித பவளப்பாறைகள் வண்ணமிழந்து  வெளுத்துப்போன  (coral bleaching) நிலையில் இருந்ததை கண்டனர்.  ஆறு மாதங்களுக்கு பிறகு சோதித்த போது அவற்றில் பெரும்பான்மையானவை  இறந்து போயிருந்தன. 25 மில்லியன் ஆண்டுகளாக உயிருடன் இருந்த பவளப்பாறைகள் இப்போது அழிவின் விளிம்பில் இருக்கின்றன.

corall

பவழத்தின் நிறம் அதன் திசுக்களில் வாழும் நுண்ணிய பாசிகளால் (microscopic algae) கிடைப்பது. நீரின் வெப்பம் உயர்வதால் பவழம் அழுத்தத்திற்கு (stress) உள்ளாகிறது. அப்போது அதன் திசுக்களிலிருந்து பாசியை வெளியேற்றுகிறது. அதனால் வெறும் திசுக்கள், வெள்ளை அல்லது கண்ணாடி நிறத்தில் காட்சியளிக்கிறது. இந்த நிலை தொடரும் போது அவை பலவீனம் அடைகின்றன. அதன் வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கம் தடைபடுகின்றன. வெப்பம் தொடர்ந்து அதிகமாக இருந்தால் நாளடைவில் அவை இறக்கின்றன அல்லது மீண்டும் பழைய நிலையை அடைய நீண்ட காலமாகிறது.

விரைவாக நடவடிக்கை எடுக்காவிட்டால், இவற்றை அழிவிலிருந்து காப்பாற்றுவது கடினம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

Source The Telegraph

அண்டார்டிக்காவிலிருந்து பிரியும் பிரமாண்ட பனிப்பாறை

Larsen C என பெயரிடப்பட்டுள்ள பிரமாண்ட பனிப்பாறை  அண்டார்டிகா கண்டத்தில் இருந்து  பிரியப் போகிறது. இந்த பிளவு தற்சமயம் 100 மீட்டர் அகலமாகவும் அரை கிலோமீட்டர் ஆழமாகவும் இருக்கிறது. 5000 சதுர கிலோமீட்டர்கள்  பரப்பளவுள்ள இந்த பனிப்பாறை, 20 கிலோமீட்டர் அளவுக்கு தான் அண்டார்டிகாவுடன் இணைந்து இருக்கிறது. இது பிரிந்தால் அண்டார்டிகாவின் பரப்பளவில் பெரிய மாற்றம் ஏற்படும். கடல் மட்டம் இதனால் உயராது.  ஆனால் பனிப்பாறை பிரிந்த  பிறகு  உடைந்து போனால் கடல் மட்டம் 10 cm அளவு உயரலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இதற்கு முன்னால் Larsen B என்ற ஐஸ்பாறை 2002-லும் Larsen A என்ற  ஐஸ்பாறை 1995-லும் அண்டார்டிக்காவிலிருந்து  பிளவுபட்டது  குறிப்பிடத்தக்கது.

iceberg
2002ல் Larsen B பிரிந்து போன நிகழ்வு

Source BBC

 

மனித உடலின் புதிய உறுப்பு மிசென்ட்ரி (Mesentry)

வயிற்றுப்பகுதியின்  உள் படலமாக(abdominal lining)  இருக்கும் பெரிடோனியத்தின்   இரட்டை மடிப்பாக (Double fold of Peritoneum) மிசென்ட்ரி (Mesentry) என்ற ஒரு புதிய உறுப்பு இருப்பதை மருத்துவ விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.இது வயிற்றையும்  குடலையும் இணைக்கிறது.

இந்த அமைப்பை பற்றி முதலில் குறிப்பிட்டவர் Leonardo da Vinci. .பல நூற்றாண்டுகளாக இதை ஒரு தேவையற்ற அமைப்பாகவே கருதினர். இதை சிக்கலான  பல துண்டு பகுதிகளை உடைய அமைப்பாக எண்ணியிருந்தார்கள்.

ஆனால் 2012ஆம் ஆண்டுஅயர்லாந்தை (Ireland ) சார்ந்த விஞ்ஞானி J Calvin Coffey,  மிசென்ட்ரி ஒரு எளிமையான தொடர்ச்சியான அமைப்பு என்று கண்டுபிடித்தார். நான்கு வருடங்களாக இதற்கான ஆதாரங்களை திரட்டி ஜனவரி 2017ல் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

மிசென்ட்ரியின் குறிப்பிட்ட செயல்பாடு என்னவென்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் மிசென்ட்ரி  பற்றிய ஆராய்ச்சிகளால்  வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இந்த உறுப்பின் பங்கு என்ன என்று தெரிய வரும்.

உலகின் தலை சிறந்த மருத்துவ  நூலான Grey’s Anatomyயும் மிசென்ட்ரி பற்றிய விளக்கங்களுடன் புதுப்பிக்கப்பட்டது.

Source Time and Science Alert