சுவாச சோதனை மூலம் மலேரியா நோய் பாதிப்பை கண்டறியலாம்!

சுவாச சோதனை’ மூலம் மலேரியா நோய் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய முடியும் என அமெரிக்க விஞ்ஞானிகள்  கண்டு பிடித்துள்ளனர் .

பைன் மரங்கள் மற்றும் ஊசியிலை மரங்கள் வெளியிடக்கூடிய டெர்பீன் (Terpene), கொசுக்கள் மற்றும் மகரந்த சேர்க்கை செய்யும் வேறு சில பூச்சிகளை வரவழைக்கும் என செய்ன்ட் லூயிசில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழக (Washington University in St Louis) ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மலேரியா பாதிப்பு உள்ளவர்களின் சுவாசத்திலும் இதே மணம் இருக்க, அது கொசு உள்ளிட்ட மற்ற பூச்சிகளை ஈர்க்கும். அவை மற்றவர்களை கடிக்கும் போது பலருக்கும் மலேரியா பரவ வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

மலேரியா பாதிப்பு உள்ளவர்களின் சுவாசத்தை, சுவாச சோதனைக் கருவி மூலம் பரிசோதித்து பார்த்த போது, அது மலேரியாவை பரப்பும் பூச்சிகளை ஈர்கக்கூடிய இயற்கை மணத்தை  ஒத்திருந்தது. இந்த சோதனை மலேரியா நோயை கண்டறிய புதிய மலிவான மற்றும் எளிமையான வழியாக அமையும் என பேராசிரியிர் ஆட்ரி ஓடம் ஜான் (Prof Audrey Odom John) மற்றும் அவரது சக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

மலாவியில் (Malawi), மலேரியா பாதிப்பு இருக்கும் அல்லது இல்லாமல் இருக்கும் காய்ச்சல் உள்ள 35 குழந்தைகளின் சுவாச மாதிரிகளில் ஆராய்ச்சியாளர்கள் சோதனை மேற்கொண்டனர். அதில் 29 குழந்தைகளுக்கு துல்லியமான முடிவை இந்த சோதைனை தந்துள்ளதால், இதன் வெற்றி விகிதம் 83 விழுக்காடாக கருதப்படுகிறது.

balls

Malaria breath test shows promise

People with malaria give off a distinctive “breath-print” that could be used as a test for the disease, according to American scientists.

They had already tried out a crude prototype breathalyser in Africa, a tropical medicine conference heard. One of the odours it sniffs out is identical to a natural smell that attracts insects that spread malaria.

Pine trees and conifers emit these terpenes to summon mosquitoes and other pollinating insects, say the researchers, from Washington University in St Louis.

They believe people with malaria who have this odour in their breath may also attract mosquitoes and infect more of the biting insects, which can then spread the disease to other people that they bite.

Although the test needs perfecting, it could offer a new cheap and easy way to help diagnose malaria, Prof Audrey Odom John and colleagues say.

The prototype breath test detects six different odours or volatile organic compounds to spot cases of malaria.

The researchers tried it on breath samples from 35 feverish children in Malawi, some with and some without malaria. It gave an accurate result in 29 of the children, meaning it had a success rate of 83%.

This is still too low for the test to be used routinely, but the researchers hope they can improve its reliability and develop it into an off-the-shelf product.

Source : BBC

Advertisements

பிரிட்டனில் முதல் முறையாக தோல்வியடைந்த மலேரியா சிகிச்சை: மருத்துவர்கள் கவலை

நோய் மருந்தையும் மீறிய எதிர்ப்புத் திறன்மிக்க மலேரியா நோய் வகைகள் ஆப்ரிக்க கண்டம் முழுவதிலும் வெளியாகி வருவதாக தெரிவித்து புதிய கவலைகளை பிரிட்டன் மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர்.

மலேரியா நோயால் பாதிக்கப்பட்ட நான்கு நபர்களுக்கு பிரிட்டனில் அளிக்கப்பட்ட ஒரு முக்கிய மலேரியா சிகிச்சை முதல் முறையாக தோல்வியடைந்துள்ளளது. இவர்கள் நால்வரும் உகாண்டா, அங்கோலா மற்றும் லைபீரியா ஆகிய ஆப்ரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரிட்டன் திரும்பியவர்கள்.

ஆரம்பத்தில் மலேரியா எதிர்ப்பு சிகிச்சையை அவர்களின் உடல் நல்ல முறையில் ஏற்று வந்தாலும், பின்னர் ஒரு மாதம் கழித்து அவர்களுக்கு மீண்டும் மலேரியா தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

மலேரியா நோயை உண்டாக்கும் ஒட்டுண்ணி மாதிரிகளை கொண்டு நடத்தப்பட்ட சோதனைகளில், மலேரியா நோய் மருந்துக்கு இவ்வகை ஒட்டுண்ணிகள் எதிர்ப்பை உருவாக்கி இருக்கக் கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

Source BBC