விண்வெளியில் தூக்கம்

விண்வெளியில் புவியீர்ப்பு விசை சுத்தமாக இருக்காது. இதனால் விண்வெளி வீரர்-வீராங்கனைகளால் நிற்கவோ, நடக்கவோ முடியாது. எப்போதுமே காற்றில் மிதக்கவே செய்வார்கள்.

சர்வதேச விண்வெளி நிலையத்திலும் விண்கலங்களிலும் ஈர்ப்பு விசை சுத்தமாக இருக்காது (Microgravity). இதனால் அங்கே வாழும் விண்வெளி வீரர்-வீராங்கனைகள் தினசரி தூங்க வேண்டுமென நினைத்தால் உறங்கும் பைகளில் (Sleeping bag) உள்ளே நுழைந்து, தங்களைத் தாங்களே கட்டிப் போட்டுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், தூக்கத்திலும் அவர்கள் அலைபாய்ந்துகொண்டே இருப்பார்கள். அது மட்டுமில்லாமல் பூமியில் உறங்குவதைப் போல, விண்வெளியில் இடைத் தொந்தரவு இல்லாமல் தொடர்ச்சியாக உறங்குவது சாத்தியமில்லை.

இதற்கு ஈர்ப்பு விசை இல்லாமல் இருப்பது முதன்மைக் காரணமாக இருக்கலாம். அல்லது எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கும் இயந்திரங்களின் ஓசை, மனம் கிளர்ச்சியடைந்த நிலை, மன அழுத்தம், காலக் குழப்பம் (Space lag) போன்றவை காரணமாக இருக்கலாம். ஏனென்றால், சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒவ்வொரு நாளும் 15 சூரிய உதயம், 15 சூரிய மறைவு நிகழும். விண்ணில் அதிகபட்சமாக ஆறு மணி நேரம்தான் ஒருவரால் தூங்க முடிந்திருக்கிறது. அதேநேரம் இந்தத் தூக்கமே ஒருவருடைய உடல்நிலைக்குப் போதும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஏனென்றால், ஈர்ப்பு விசை இல்லாமல் இருப்பதால் உடல் அதிகக் களைப்பை உணராது.

Source ஹிந்து

Advertisements

காமா கதிர்களை வெளியிடும் நட்சத்திரம்

lmc_p3_light_curve

நாசாவின் பெர்மி காமா கதிர் ஸ்பேஸ் டெலஸ்கோப் (Fermi Gamma-ray Space Telescope)  நடத்திய ஆய்வில் முதன் முதலாக  பிரிதொரு  நட்சத்திர மண்டலத்தில் (Galaxy), ஒரு இரட்டை நட்சத்திர அமைப்பு  (Dual star system) காமா கதிர்களை வெளியிடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. LMC P3 என்று பெயரிடப்பட்ட இந்த இரட்டை நட்சத்திரத்தில்  ஒரு பெரிய நட்சத்திரமும், நொறுக்கப்பட்ட  நட்சத்திர  அடுக்கும்  (Crushed stellar core) ஒன்றுக்கொன்று ஊடாடி தொடர்ச்சியான  காமா கதிர்களை  வெளியிடுவது  கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கு முன் இது போல்  காமா கதிர்களை  வெளியிடும்  (ஐந்து)  நட்சத்திர அமைப்புகள்  நம்முடைய  நட்சத்திர மண்டலத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், LMC P3 வெகு தொலைவில் அதாவது பூமியிலிருந்து 163000 ஒளியாண்டு தூரத்தில் வேறொரு நட்சத்திர மண்டலத்தில் காணப்படுவதாலும், மிகவும்  பிரகாசமாக  காணப்படுவதாலும் இது முக்கியத்துவம்  வாய்ந்ததாகிறது  . LMC P3 வட்டப்பாதையில் (orbit)  சுற்றி வரும்போது வெளியிடும் காமா கதிர்களின் அளவு வேறுபடுகிறது . இது  குறித்த ஆய்வில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

Source NASA

விண்வெளி வீரர்களுக்குப் புதிய சிற்றுண்டி

nasa-orion-bars-copy

2018 ல் செவ்வாய் கிரகம் மற்றும் அதை தாண்டிய விண்வெளிப்பகுதியில் ஆராய்ச்சிக்காக புறப்படும் ஓரியன் (Orion)  விண்கலத்தில் பயணம் செய்யும் விண்வெளி வீரர்களுக்காக உணவு பார்களை NASAவில் உருவாக்க முயன்று வருகின்றனர்.

1998-ல் உருவாக்கப்பட்ட சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் (The International Space Station) மாட்டிறைச்சித் துண்டங்கள், ஹாம்பர்கர்கள், பழங்கள், எஸ்பரசோ காபி உட்பட 200 உணவுப் பொருட்களை வைத்துக்கொள்ள இடமிருந்தது.

ஆனால் ஓரியன் போன்ற நவீன விண்கலங்கள் மிகவும் சிறியவை என்பதால் ஒரேயொரு உணவு அலமாரி யும் உணவு பண்டங்களைச் சூடாக்கும் ஒரு அவன்(oven)-ம் வைப்பதற்கு மட்டுமே இடம் இருக்கிறது.

சமச்சீரான ஊட்டச்சத்து கொண்ட பிரத்யேகமான முறையில் பாதுகாக்க வேண்டியிராத, அதிகம் பொதியப்பட (பேக்கேஜிங்) வேண்டியிராத உணவுகளுக்கான தொடர்ந்த ஆய்வின் விளைவு இது. இப்போது நாசாவால் உருவாக்கப் பட்டுள்ள புதிய காலை உணவு பார்கள் 700 முதல் 900 கலோரிகளும் சமச்சீரான ஊட்டச்சத்தும் கொண்டவை. இதில் ஆரஞ்ச் க்ரான்பெர்ரி, வாட்டியெடுத்த கடலை(barbecue nut) ஆகியவற்றின் சுவையையும் சேர்ப்பதற்குத் தற்போது விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.

அமெரிக்காவின் விண்வெளி அமைப் பான ஹெச் இஆர்ஏ(HERA) வில் உள்ளவர்களுக்கு இந்த உணவு பார்கள் கொடுக்கப்பட்டு அவர்களிடம் அதன் தோற்றம், ருசி மற்றும் சலிக்காத தன்மை ஆகியவை பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

Source Hindu (tamil)