டைனோசர் காலத்தில் வாழ்ந்த மாபெரும் பென்குவின்கள்

நியூசிலாந்து நாட்டில் வாய்பரா நதி (Waipara River) அருகில் கிடைத்த         61 மில்லியன் வயதான புதைபடிவம் (fossil) ஒரு மாபெரும் விலங்கினுடயது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். தொல்லுயிரியல்  வல்லுனர்களின் (palaeontologist) தொடர் ஆராய்ச்சியில் அது ஒரு மிகப்பெரிய பென்குவினுடைய புதைபடிவம் என்று தெரிந்தது. இந்த பென்குவின் 150 சென்டிமீட்டர் அதாவது ஒரு மனிதனின் உயரமுடையது

3d90393700000578-4252274-the_newly_described_penguin_lived_around_61_million_years_ago_an-a-17_1487848129321

இந்த பென்குவின்கள் டைனோசர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்திருக்கின்றன. ஆனால் டைனோசர் போல் அல்லாது பென்குவின்கள்  குறுங்கோள்களின் (asteroids) தாக்குதலையும், அதனால் விளைந்த காலநிலை மாற்றத்தையும் தாக்குப்பிடித்து வாழ்த்திருக்கின்றன. அதற்கு முக்கிய காரணம் பென்குவின்களின் உணவு நிலத்தில் அல்லாது கடலில் கிடைத்ததால் என்கின்றனர் வல்லுனர்கள்.

இதற்கு முன்பு அண்டார்டிகாவில் கிடைத்த 37 மில்லியன் வயதான 1.6 மீட்டர் உயரமுள்ள பென்குவின் புதைபடிவமே பழமையானது.

Source Daily Mail

ஸீலாண்டியா (Zealandia) எட்டாவது கண்டமாகுமா?

ஏழு கண்டங்கள் மட்டுமல்லாது ஸீலாண்டியா என்ற எட்டாவது கண்டமும் உலகில் இருப்பதாக சொல்கிறார்கள் நியூஸிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். நிக் மார்டிமர் (Nick Mortimer) என்ற ஆராய்ச்சியாளரின் தலைமையில் இயங்கும் எட்டு பேர் கொண்டு குழு இது பற்றிய அறிக்கையை ஜியாலஜிக்கல் சொசைட்டி ஆஃப் அமெரிக்கா(GSA) என்ற அமைப்பு வெளியிடும் இதழில் பதிவிட்டிருக்கிறார்கள்.

C4x00eYWMAAX1z2.jpg

ஸீலாண்டியாவின் ஒரு துளிதான் நியுஸிலாந்து தீவுகள் என்பது அவர்களது வாதம். ஸீலாண்டியா கண்டம் தென் பசிபிக் கடலின் அடியில், ஏறத்தாழ 4.9 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. அளவில் ஆஸ்திரேலியாவில் மூன்றில் இரண்டு பங்கு கொண்டது ஸீலாண்டியா. மொத்த பரப்பளவில் 94% கடலில் மூழ்கியிருக்கிறது (அதாவது இந்தியா அளவுக்கு). மீதியிருக்கும் 6% தான் நியூஸிலாந்து தீவுகள் என்பதை ஆதாரத்துடன் எடுத்து சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் இது பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு விட்டுதான் இந்த முடிவுக்கு வந்ததாக ஆராய்ச்சியாளர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

ஸீலாண்டியா கண்டம் 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேயாவின் நிலப்பரப்பில் இருந்து பிரிந்து கடலில் மூழ்கியிருக்கிறது. 23 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக முழுவதுமாக கடலில் மூழ்கிவிட்டது ஸீலாண்டியா. அதன் மிச்சங்களாக New Zealand,New Caledonia, Norfolk Island, Lord Howe Island Group, Elizabeth and Middleton Reefs  தீவுகள் மட்டுமே பசிபிக் பெருங்கடலில் இப்போது இருக்கின்றன.

Source The Guardian and விகடன்