உடையாத மொபைல் போன் திரை

சாம்சங் நிறுவனம், ஸ்மார்ட் போன்களில் உடையாத, ஓ.எல்.இ.டி., திரை தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தவிருக்கிறது.

இதற்கான அங்கீகாரத்தை, அமெரிக்க அரசு சார்பில் சான்று வழங்கும், ‘அண்டர்ரைட்டர்ஸ் லேபாரட்டரீஸ்'(Underwriters Laboratories (UL),)  என்ற அமைப்பிடம் பெற்றிருக்கிறது சாம்சங்.

ஓ.எல்.இ.டி., திரையை தயாரிக்கும் இடுபொருட்களில் புதுமையை புகுத்தியிருப்பதோடு, அதன் வெளிப்பாகத்தில் கண்ணாடிக்குப் பதில், வலுவூட்டப்பட்ட புதிய வகை பிளாஸ்டிக்கையும் வைத்திருப்பதால், சாம்சங்கின் தொடு திரைகள் உடையாமல் இருப்பதோடு, வளைத்தாலும் பாதிப்படையாது.

சோதனைகளின் போது, 6 அடி உயரத்திலிருந்து, ‘தொப்’பென்று போட்டாலும் உடையாமல் இருந்ததோடு, ஒரு சுத்தியலால் பலமாக அடித்த பிறகும் சாம்சங்கின், ஓ.எல்.இ.டி., திரை வேலை செய்தது.

மேலும், 71 டிகிரி சென்டிகிரேடு வெப்பம் வரை தாக்குப்பிடிக்கிறது இந்தத் திரை.

balls

Unbreakable Flexible OLED Panel

Samsung Display developed a flexible OLED panel with an unbreakable substrate and an overlay window securely adhered to it. Current-generation flexible display products attach a glass-covered window to their display that often breaks when severely impacted.

“The fortified plastic window is especially suitable for portable electronic devices not only because of its unbreakable characteristics, but also because of its lightweight, transmissivity and hardness, which are all very similar to glass,” said Hojung Kim, general manager of the Communication Team, Samsung Display Company.

Samsung Display has put its new screen through a rigorous third party testing process, Underwriters Laboratories (UL), to verify the claim.

According to UL, the unbreakable display developed by Samsung Display passed the rigorous real-time durability test that is based on military standards set by the U.S. Department of Defense. After a drop test administered at 1.2 meters (nearly 4 feet) above the ground 26 times in succession, and accompanying high (71 degrees Celsius) and low (-32°C) temperature tests, the Samsung unbreakable panel continued to function normally with no damage to its front, sides or edges.

Even in a subsequent 1.8M (nearly 6 feet) drop test – significantly higher than the U.S. military standard – Samsung Display’s unbreakable panel operated normally with no sign of damage.

Source : Dinamalar and Samsung

Advertisements

‘வால்பேப்பர்’ தொலைக்காட்சி!

tv1

எல்.சி.டி., – எல்.இ.டி., வகை திரைகளுக்கு அடுத்து, இப்போது ஓ.எல்.இ.டி.(Organic LED), வகை திரைகள் பிரபலமாகிவருகிறது.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த 2017க்கான ‘சி.இ.எஸ்.,’ எனப்படும் நுகர்வோர்மின்னணு பொருட் காட்சியில் (Consumer Electronics Show) சுவற்றில் ஒட்டக்கூடிய ஓ.எல்.இ.டி வகை ‘வால்.பேப்பர்’திரைகளை’எல்.ஜி.அறிமுகபடுத்தியது. இந்த திரைகள் அல்லது தொலைகாட்சி உண்மையிலேயே சுவற்றில் ஓவியத்தை மாட்டுவது போல, இரு ஆணிகளை அடித்து மாட்டி, கீழ் பகுதியை காந்தத்தின் மூலம் அசையாமல் இருக்க வைத்து விடலாம்

ஓ.எல்.இ.டி., ‘டிவி’க்களில், திரையில் உருவங்களுக்கு ஒளியேற்றம் தேவை இல்லை என்பதால், மின்சார செலவு கணிசமாக குறையும் என்கிறது, எல்.ஜி. பல அளவுகளில் வரும் எல்.ஜி.,யின் வால்பேப்பர், ‘டிவி’ திரைகளின் தடிமன் வெறும், 2.5 மில்லி மீட்டர்களே!

திரையில் காட்சிகளை தோன்ற வைக்கும் மற்ற எல்லா மின்னணு அமைப்புகளும் ஒலி பெருக்கியில் அடக்கி விட்டது, எல்.ஜி., இந்த அமைப்பை, ‘சவுண்ட் பார்’ என்கிறது, எல்.ஜி., திரைக்கு அடிவாரத்தில் சவுண்ட் பாரை வைத்து, அதிலிருந்து மின் கம்பிகளைக் கொண்ட சிறிய பட்டையை, ஒல்லித் திரையுடன் இணைத்துவிடலாம். திரைக்கு இரு ஓரங்களில் நின்று பார்த்தாலும் படம் பிசிறில்லாமல் தெரியும் என, எல்.ஜி., சொல்கிறது.

Source Daily Mail