செவ்வாய் கிரகத்தில் Igloo

3b92d30500000578-4057680-intense_space_radiation_is_a_significant_problem_for_health_on_l-a-31_1482399958005

கடந்த மாதத்தில் (November 2016)  ஆராய்ச்சியாளர்கள், செவ்வாய் கிரகத்தில் ஒரு பகுதியின்  அடியில் ஒரு பெரிய ஏரி அளவு தண்ணீர் உறைந்திருப்பதை கண்டறிந்தனர். செவ்வாய் கிரகத்தின் (MARS) விண்வெளியில் உள்ள கதிர்வீச்சில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக, செவ்வாய் கிரகத்தின் அடியில் இருந்து எடுக்கப்படும் ஐஸை (ice) வைத்து மேற்பரப்பில் Igloo House உருவாக்க உள்ளனர். இதனால் எதிர்காலத்தில் மக்கள்  விண்வெளியில் வாழ்வதற்கு பூமியில் இருந்து பொருட்களை எடுத்து செல்லாமல், செவ்வாய் கிரகத்தின் இயற்கை வளங்களைப் பயன்படுத்தி வீடுகளை அமைத்துக்கொள்ளலாம்.

வேலை, தூக்கம், பொழுதுபோக்கு, உணவு தயாரித்தல் மற்றும் கிரீன்ஹவுஸ் உட்பட பலவற்றிற்கும் இது உபயோகப்படும். ஒவ்வொரு வீடும் 4 பேர் தங்குவதற்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அறையும்  மனிதன் உயிர் வாழ தேவையான  காற்று அழுத்தம் (pressure) மற்றும் வெப்பநிலையை  கொண்டிருக்கும்.

செவ்வாயின் காற்று மண்டலத்தில் இருந்து பெறப்படும் கார்பன் டை ஆக்சைடை (CO2) உள்புறத்தில் செலுத்துவது (CO2 Insulation pockets), igloo பனியிலிருந்து காக்கும். இயற்கை ஒளி  பனிவீட்டுள் ஊடுருவுவதால் குடியிருப்புகள் இருளில் மூழ்காமல் பிரகாசமாக இருக்கும். மேல் பகுதியில் இருக்கும் தடிமனான பனிஅடுக்கு வெளியில் நிலவும் கடுமையான கதிர்வீச்சில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்.

Source Daily Mail

விண்வெளி வீரர்களுக்குப் புதிய சிற்றுண்டி

nasa-orion-bars-copy

2018 ல் செவ்வாய் கிரகம் மற்றும் அதை தாண்டிய விண்வெளிப்பகுதியில் ஆராய்ச்சிக்காக புறப்படும் ஓரியன் (Orion)  விண்கலத்தில் பயணம் செய்யும் விண்வெளி வீரர்களுக்காக உணவு பார்களை NASAவில் உருவாக்க முயன்று வருகின்றனர்.

1998-ல் உருவாக்கப்பட்ட சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் (The International Space Station) மாட்டிறைச்சித் துண்டங்கள், ஹாம்பர்கர்கள், பழங்கள், எஸ்பரசோ காபி உட்பட 200 உணவுப் பொருட்களை வைத்துக்கொள்ள இடமிருந்தது.

ஆனால் ஓரியன் போன்ற நவீன விண்கலங்கள் மிகவும் சிறியவை என்பதால் ஒரேயொரு உணவு அலமாரி யும் உணவு பண்டங்களைச் சூடாக்கும் ஒரு அவன்(oven)-ம் வைப்பதற்கு மட்டுமே இடம் இருக்கிறது.

சமச்சீரான ஊட்டச்சத்து கொண்ட பிரத்யேகமான முறையில் பாதுகாக்க வேண்டியிராத, அதிகம் பொதியப்பட (பேக்கேஜிங்) வேண்டியிராத உணவுகளுக்கான தொடர்ந்த ஆய்வின் விளைவு இது. இப்போது நாசாவால் உருவாக்கப் பட்டுள்ள புதிய காலை உணவு பார்கள் 700 முதல் 900 கலோரிகளும் சமச்சீரான ஊட்டச்சத்தும் கொண்டவை. இதில் ஆரஞ்ச் க்ரான்பெர்ரி, வாட்டியெடுத்த கடலை(barbecue nut) ஆகியவற்றின் சுவையையும் சேர்ப்பதற்குத் தற்போது விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.

அமெரிக்காவின் விண்வெளி அமைப் பான ஹெச் இஆர்ஏ(HERA) வில் உள்ளவர்களுக்கு இந்த உணவு பார்கள் கொடுக்கப்பட்டு அவர்களிடம் அதன் தோற்றம், ருசி மற்றும் சலிக்காத தன்மை ஆகியவை பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

Source Hindu (tamil)